சத்தியமாக இந்த வலைமனையை தொடங்கும் போது திரை விமர்சனம் எழுதும் எண்ணம் கிடையவே கிடையாது.என்னமோ இதில் உலக தலைவர் ஒபாமாவை பார்த்து நான் கேட்கிறேன் என அளந்து விடத்தான் எண்ணி இருந்தேன் ஆனால் இன்று பதிவு போட வேண்டும் என்று நினைத்தது முதல் இன்று பார்த்த படமே மனிதில் சுற்றி வெறுப்பேற்றியதால் இந்த பதிவு.
எத்தனை நீங்கள் பார்க்க வேண்டும் என நான் விரும்புவதால் பெரிதாக கதை சொல்லப் போவதில்லை.முழு கதை படிக்க வேண்டும் என்றால் அதற்க்கென்றே சிலர் விமர்சனம் போடுவார்கள் அங்கே சென்று படித்துக் கொள்ளுங்கள்.
படம் ஆரம்பிக்கும் போது விமலும் சனுக்ஷாவும் ஊரை விட்டு ஓடிப் போகிறார்கள்.விமல் காக்கி உடையில் இருப்பதும் ஒரு இன்ஸ்பெக்டர் அவன் மட்டும் என் கைல கெடச்சான் என வில்லனிடம் புலம்புவதும், நாம் களவாணி பார்ட் - 2 வந்து இருக்கிற உணர்வை தருகிறது.
இந்த பாரா சனுக்ஷாவுக்காகவே எழுதப்பட்டது.கால் கோடி சம்பளம் கேட்கிறார் (மேனேஜர்) என பட்சி பயம் காட்டினாலும், பார்த்தவுடன் கவரும் ரயில் நிலைய குழந்தை போல இருக்கிறார்.பார்த்தவுடன் மனதி பச்சக். யாரோ ஒருவர் விமர்சனத்தில் பக்கத்து வீட்டு பெண் போல இருக்கிறார் என எழுதி இருந்தார்.உங்கள் வீட்டு பக்கத்தில் அப்படி ஒரு பெண் இருந்தால் சொல்லுமையா தலையை அடகு வைத்தாவது திருமணம் செய்து கொள்கிறேன்.ரேணிகுண்டாவை விட இப்போது குண்டாக தெரிகிறார்.ஆனாலும் உங்களுக்கு இங்கே டும் டும் டும் படத்தில் விவேக் சொன்ன வசனத்தை நினைவு கூற விழைகிறேன்.செல்லத்திற்கு சேலை அல்லது தாவணி தவிற பிற உடைகள் அவ்வளவு பொருந்தவில்லை என்பது கூடுதல் தகவல்.கன்னத்தில் ஒரு பரு கொள்ளை அழகு :)
மீண்டு(ம்) படத்திற்கு வருவோம். தாஜ்நூர் என்பவர் இசை,இதை நீக்கி விட்டு படத்தை மறுபடி ரிலீஸ் செய்தால் 100 நாள் ஓடும்.பாடல் எதுவுமே சரிட்யில்லை. பிண்ணனி பரவாயில்லை ரகம். சிங்கம்புலி வரும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன(உதாரணம் : நமீதா போஸ்டர தொட்டுட்டு வா) . பொதுவாக ஒரு படம் ஏ,பி, அல்லது சி கிளாஸ்களில் கைத்தட்டல் வாங்கும். பாக்ஸ்ஸில் உக்காந்து இருப்பவன் கை தட்டும் ஸீனுக்கு 10 ரூபாய் டிக்கெட்காரன் புரியாமல் தலையில் அடித்துக்கொள்வான். ஆனால் இந்த படத்தில் சில சீன்கள், இவர் அவர் என அனைவரையும் விழுந்து சிரிக்க வைத்து விடுகிறது.சட்டய கழட்டிட்டு ஒத்தைக்கு ஒத்த வான்னு இன்ஸ்பெக்ட்டர கூப்டுட்டு அவன் சட்டய தூக்கிட்டு ஓடும் காட்சி அதகளம்.எம்.எஸ் பாஸ்கர் ஓரிரு இரட்டை அர்த்த வசங்கள் பேசினாலும் அனைத்துமே நண்பர்களுக்குள் அடிக்கும் காமெடி போல சட்டென சிரிக்க வைத்து விடுகிறது.மனோ பால பொல்லாதவன் போலவே ஒரு வேடம் பண்ணி இருக்கிறார்.இயக்குனர் சில காட்சிகளில் தடுமாறி இருக்கிறார்.லாஜிக் சில இடங்களில் மிஸ்ஸ்ங் விமல் ஒரே நாளில் சீரியஸ் ஆக கடன் பற்றி வருந்த ஆரம்பிப்பது நெருடல்.ஆனால் லாஜிக் மீறாமல் சினிமாவே இல்லை என்பதால் ஏற்றுக்கொள்ளலாம்.மே மாதம் இந்த படத்தை பார்க்காமல் விட்டால் அவன் பிற படங்களை பார்க்கவே மாட்டன் என்று அர்த்தம்.
எத்தன் - பாடல்கள் இல்லாவிட்டால் சதம் அடித்து இருக்கும்.