Flipkart

Amazon

Amazon

Sunday, October 14, 2012

தேடி சோறு நிதம் தின்று - பாடலும் பிண்ணனியும்



தேடி சோறு நிதம் தின்று
பலசின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம்வாடி துன்பம் மிக உழன்று
பிறர்வாட பல செயல்கள் செய்து
நரைகூடி கிழப் பருவம் எய்தி -
கொடும்கூற்றுக்கு இரையென மாயும்
பலவேடிக்கை மனிதரை போலே
நான்வீழ்வேனென்று நினைத்தாயோ?





பாரதியார் இந்தப்பாடலை எப்போது பாடினார் தெரியுமா?

இது பலர் அறிந்த பாடல் , அறியாத விஷயம் என்னவெனில்,

பாரதி, செல்லம்மாவின் தோளில் கையை போட்டுக்கொண்டு தான் தெருவில் அழைத்துச்செல்வார். அவ்வாறு போகும் போது, பெண்களை அடுக்களையில் வைத்து இருந்த அந்த காலத்தில், இப்படி செய்கிறாரே என ஊரில் உள்ளவர்கள் "பைத்தியங்கள் ஊர் சுற்ற கிளம்பி விட்டன" என பரிகாசம் செய்வார்களாம். அப்படி செய்பவர்களை பார்த்து செல்லம்மாள் வருந்துவாரம். தன்னால் தானே கணவருக்கு இந்த அவமரியாதை, என. அவளை சமாதானப்படுத்த பாடப்பட்ட பாடல் தான் இது.


1 comment:

  1. இந்த பாடல் , அவர் "மாயயை பழிப்பது" போல பாடியதாக கேள்வி, மேலும் அதுவே மிக பொருத்தமாகவும் இருக்கிறது என்பது தான் எண்ணம் கூட!

    ReplyDelete

போறாது தான் போறீங்க.. இங்க ஒரு தரம் எதுனா சொல்லீட்டு போங்க..