பொறுப்பு துறப்பு (Disclaimer) : மனிதர்களுக்கு மட்டும் கீழிருக்கும் கட்டுரை. மிருகங்கள் தயவு செய்து படிக்க வேண்டாம்.
நான் வாழும் காலகட்டத்தின் மிக முக்கியமா பதிவுகளை படித்துக்கொண்டிருப்பதாக உணர்கிறேன். இந்தச் சுட்டிகளை படித்தபின் , நான் பெரும்பாலும் உன்னிப்பாக கவனிக்கும் @paviraksha ட்விட்டரில் சொன்னது. படித்ததில் நானும் அப்படித்தான் உணர்ந்தேன்.
சுட்டிகள் -
இது தருமபுரி சம்பவத்தினூடாக ஜாதி வெறியை சாடுவது.
இது ஜாதி குறித்த புரிதலின் இடை நிலையில் இருப்பவர்களுக்கு புரியும்படி வாசகர் கடிதம் ஒன்றுக்கான முத்துக்குமாரசாமியின் பதில்.
நீங்கள் ஜாதி குறித்த ஆரம்ப கட்ட புரிதலில் இருப்பவர் என்றால், அம்பேத்கர் நூல்களின் வழியாக சிலவற்றை அறிந்து கொள்ளுதல் நலம். தேவி பாலா சொல்வதைப்போல, இந்த ஜாதி வெறியர்கள் கற்றுக்கொண்டு தான் இருக்கிறார்கள். செய்த தவறை மீண்டும் செய்யாமல், திட்டமிட்டு புதிய தவறை செய்திருக்கிறார்கள். தருமபுரியில் வீடுகள் கொளுத்தப்பட்டது கலவரமல்ல. திட்டமிடப்பட்ட தாக்குதல். "ஆள விட்டுட்டு ஐயிட்டத்த தூக்குங்க" என விவேக் நகைச்சுவை பாணியில் தெளிவாக அனைவரிடமும் சொல்லப்பட்டு இருக்கு. இது கிட்டத்தட்ட, காஷ்மீரத்த கைப்பற்ற புனித போர் "ஜிகாத்" இட வந்த பதான்கள் வந்த நோக்கம் மறந்து கொள்ளையில் ஈடுபட்டத நினைவூட்டுகிறது. இதன் வீரியம் என்ன?? எதற்காக இந்த திட்டம்??
1. இந்த மக்கள் மீண்டு எழ இன்னமும் இரண்டு தலைமுறைகள் ஆகும்.
2. இனி இந்த சுத்துப்பட்டியில் எவனுக்கும் ஜாதி இந்து பெண்ணை காதலிக்கிற தைரியம் இருக்காது. (மூன்று சம்பந்தமில்லாத காலனிகளை தாக்கியதன் சூழ்ச்சி அதுவே)
3.இந்த கருமாந்திரம் புடிச்ச காதல் தேவையா என்ற பேச்சு பரவலாக எழுந்து வருகிறது. மிகமிக ஆபத்தானதொரு கண்ணோட்டமிது.
4. பெரிதாக நடவடிக்கையயும், கவன ஈர்ப்பையும் சம்பாதிக்காமலேயே நினைத்த காரியங்கள நிறைவேற்றியாச்சு. இதன் மூலம், ஜாதி வெறியை பரப்ப, ஒரு கருத்து வெளி உருவாக்கப்பட்டு இருக்கிறது.
மிகத் தெளிவான திட்டமிடலும், அடுத்த கட்ட நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர் ஜாதி வெறியர்கள். உள்ளுக்குள் காட்டு மிராண்டியாக இருந்தாலும் வெளியில் அறிவுவெளிகளில் இவர்கள் பிரச்சாரம் செய்து ஈர்க்குமளவு வந்து விட்டார்கள் என்பது வெட்கக்கேடான விஷயம்.
தருமபுரி உண் மை அறியும் குழுவின் அறிக்கை - சுட்டி
இணையத்திலும், பொதுவிலும் வெளிப்படையாக ஜாதி பிரச்சாரம் செய்யுமளவுக்கு வளர்ந்து விட்டது இவர்கள் திமிர். இதில் பெரிய காமெடி, இவர்கள் அம்பேத்கார், பெரியார் படங்களை தங்கள் பேனர்களில் பயன்படுத்துவது. ஏதோ, செய்தது தவறே இல்லை என்பது போலவும், உயிரோடு விட்டதே தியாகம் என்பது போலவும் இவர்களது வாதங்கள் விஷம் தோய்ந்தவை. இதே நேரத்தில், விழுப்புரத்தில் கார்த்திக் (அருந்ததியர்) - கோகிலா (தலித்) காதலித்ததால் கோகிலா கொல்லப்பட்டு இருக்கிறார். இந்தச்சம்பவம் தலித்துகளுக்கு உள்ளேயே ஜாதிவெறி இருக்கிறது பாருங்கள் என இந்தத வெறியர்கள் பேச நல்லதொரு வாய்ப்பாக அமைந்து விட்டது. இந்த சம்பவமும் கண்டிக்கத்தக்கதே. ஜாதி வெறி எந்தச் சமூகத்தில் எந்த வடிவில் இருந்தாலும் எதிர்க்கபட வேண்டும். அதை மூடி மறைத்தல் ஆகாது. ஆனால், கண்டிப்பதற்கு பதில் நீங்கள் எதை தின்கிறீர்களோ அதையே நானும் தின்பேன் என்பதாக இருக்கிறது ஜாதி வெறியர்களின் நியாயம்.
கட்டுரையின் மிக முக்கியமானதொரு இடத்தில் நிற்கிறோம். இன்று என்ன நிலைமையில் ஜாதி வெறி தமிழகத்தை பொருத்தவரை இருக்கிறது. நாம் எந்த நிலையில் இருக்கிறோம். என்ன செய்ய வேண்டும்.
சமீபத்திய சில சம்பவங்கள் : (இவை எல்லாம் கூகுளின் மூலம் திரட்டப்பட்டது. முழுவதும் படிக்க கூகுளில் தேடவும்)
வேளாளக் கவுண்டர் மாநாட்டில் கலப்பு மணத்தை தடை செய்து தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள்.
நம் குல இளைஞர்களையோ, இளம் பெண்களையோ, வேறு சாதியினர் கலப்பு மணம் செய்தால் (செய்து ஏமாற்றினால் என்கிறார் அது ஒரு கோர்த்த வார்த்தையாகவே தெரிகிறது) கொலை செய்வோம்(வெட்டிட்டு வாங்க நாங்க பாத்துக்கறோம்) என சித்திரா பௌர்ணமி விழாவில் வெளிப்படையாகவே எச்சரிக்கிறார் காடு வெட்டி குரு. அருகில் அன்பு அண்ணன் ராமதாஸ் அமைதியாய் கண்டும் காணாதது போல் உட்கார்ந்திருக்கிறார்.
தலித் அல்லாதோர் இயக்கம் என்றொரு இயக்கத்தை சாதி இந்துக்கள் தென் தமிழகத்தில் துவங்குகிறார்கள். இப்போதிதை கொங்கு சமூகத்தை சேர்ந்தவர்கள் இதை கையில் எடுத்து பரப்புகிறார்கள்.
தலித்துக்கள் சமைத்த உணவை பால்வாடியில் உண்ண மறுத்து நாயக்கர் சமூக குழந்தைகளை புறக்கணிக்க வைக்கிறார்கள் நாயக்கர்கள்.
தலித் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் எங்கள் குழந்தைகள் படிக்காது என பள்ளியை விட்டு வெளியேறுகிறார்கள் நாடார் பெற்றோர்கள்.
தலித்துக்களுக்கு வழிபாட்டு உரிமை மறுத்து அவர்கள் வழிபடுவதை தாங்க முடியாத ரெட்டிகள் காட்டில் குடியேறுகிறார்கள்.
காடுவெட்டி குரு பேசும் ஒரு காணொளி --
ஒரு குட்டி கேள்வி : பிறகெதற்கு அந்த இட ஒதுக்கீடு. வேண்டாம் என்று கூறலாமே? பாவம் இல்லாதப்பட்டவர்களுக்காக கொண்டுவந்தது தானே அது. "வன்னியரை" பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று ஏன் கூறீனீர்கள்??
ஜாதி வெறியர்களின் நிலை :
1. சிற்றரசையும், செகுடந்தாளி முருகேசனையும் கொன்ற ஜாதி வெறியர்களோ, கீழ்வெண்மணியில் இருந்த பதட்டக்காரர்களோ இப்போது இல்லை.(இந்த சம்பவங்களை தெரியாது என்றால் கூகுளில் தட்டுங்கள், 21ஆம் நூற்றாண்டில் பேருந்தில் பயணம் செய்தார் சமமாக கொல்லப்பட்டவர் சிற்றரசு) இப்போதிருக்கும் ஜாதி வெறியர்கள் அவர்களை விட மிக மிக மோசமானவர்கள். Insomnia படத்தில் வரும் கொலையாளி, தான் செய்த கொலையை ஒரு ஆக்சிடென்ட் என்பான். ஆனா, மிக நிதானமான முறையில் 10 நிமிடங்கள் எடுத்து அக்கொலையை செய்திருப்பான். ஒரு சைக்கோ. அதே தான், இன்றைய அனைத்து ஜாதி வெறியர்களும் (எந்த ஜாதியாக இருந்தாலும் சரி), புத்திசாலி சைக்கோக்கள்.
2. ******* பேரவை என்ற அமைப்பு ஒன்று கடந்த மாத தொடக்கத்தில், கலப்பு திருமண எதிர்ப்பு இயக்கம் ஒன்றை நிகழ்த்தியது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் இது போன்ற பிற்போக்கு செயல்பாடுகள் நடந்த வண்ணம் உள்ளன. இதில் பல தலைவர்கள் காதலை கண்டித்து பேசுவதோடு அல்லாமல், காதலித்தால் வெட்டுங்கள் என்ற ரீதியிலும் பேசுகிறார்கள்.
3. சென்ற ஆண்டு நடந்த பரமக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒரு உண்மையை விளக்கியது. அதாவது, கலவரம் ஆரம்பித்த காரண இரண்டு 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தத்தம் ஜாதி குறித்து சண்டை இட்டதே. தற்போது, தர்மபுரியில் அடுத்த தலைமுறையை உருவாக்க, ஒன்பதாம் வகுப்பு சிறுவர்களை வன்முறையில் ஈடுபட வைத்துள்ளார்கள் என உண்மை அறியும் குழுவின் அறிக்கை கூறுகிறது (கூட படிக்கும் தலித் மாணவிகள் அவர்களை பார்த்து உள்ளார்கள்)
4. இன்று தலித் அல்லாதோர் இயக்கம் என ஒரு போஸ்ட்டரை முக நூலில் பார்ததேன் - சரியில்லை, இது ஒன்றிணைப்பாய் தெரியவில்லை.
5. வீர அவர்கள், வீர இவர்கள் என்றெல்லாம் இணையத்திலும் மற்ற ஊடகங்களிலும் (ஜூவிக்களில் ஜாதி வெறியகளின் பேட்டி வரும் இரண்டு பக்கம் தள்ளிப் பார்த்தால், அவர்தம் கட்சியின் விளம்பரம் ஒன்று வரும். புரிகிறதா?)
6. இவர்கள் கட்சி ஆரம்பித்து கூட்டம் சேர்த்து மலிவான ஜாதி அரசியல் நிகழ்த்துகிறார்கள் என அனைவருக்கும் தெரியும். ஆனால், காதை தீட்டிக்கொள்ளுங்கள், கீழ் நிலையில் பெரும்பாலான ஜாதிக்கட்சிகள் இந்துத்வா போர்வையில் திரியும் லோக்கல் ரவுடிகள் (சின்னச்சின்ன பொறுக்கிகள் - பெரிய கொலை வழக்கெல்லாம் இருக்காது. அடிதடி ம்ம்ம்) துணையுடனே இருக்கிறார்கள். இவர்கள் சில பல கட்சிகளுக்கு ஒன்றாக வேலை பார்ப்பார்கள். உதாரணமாக சில ஜாதி-மதக் கட்சியின் ஆட்களாக நீங்கள் அறிந்தவர்கள் எல்லாம் கூட்டாக சேர்ந்து ஒரு கோவில் திருவிழா போன்ற விஷயத்தை ஒரு லோக்கல் ஏரியாவில் முன்னெடுப்பார்கள். பின்னாளில் பந்த் நடத்தும் போதோ , ஆர்ப்பாட்டம் நடத்தும் போதோ பல தலைகளை நீங்கள் பல்வேறு கட்சி போராட்டங்களில் பார்த்த நினைவிருக்கலாம்.
7. இவர்கள் கலப்பு திருமண எதிர்ப்பு பேசுவதன் பிண்ணனி இஸ்ரேல் பாணி லாஜிக் தான் (யூதர்களை பெரும்பான்மை ஆக்க, யூதர்கள் - ஆராபியர்கள் கலப்பை அனுமதிக்க கூடாது. அராபியர்கள் இருக்கவே கூடாது)
8. இந்த இழிவான ஜாதி அரசியல் நடத்தும் கட்சிகள், 6அவது புள்ளியில் சொன்னது போல கூட்டம் தேற்றி, அதன் மூலம் சீட்டுப் பெற்று, ஆட்சி அதிகாரத்திலும் உட்கார்ந்து விட்டார்கள்.
9. மிக மிக முக்கியமான விஷயம், பள்ளியில் தாழ்த்தப்பட்ட மாணவர்களோடு உட்கார, உணவருந்த மறுத்தல், மேற்குறிப்பிட்ட படி பல வழிகளில் இளைய சமுதாயத்தினரிடம் ஜாதி வெறியை வளர்த்தல். இதற்கு நானே சாட்சி, என் நண்பன் ஒருவன், தன் ஜாதி சார்ந்த ஒரு கலப்பு மன எதிர்ப்பு ஸ்டேட்டஸை "லைக்" பண்ணி இருந்தது எனக்கு பெரிய ஆச்சரியம்/அதிர்ச்சி. அவனுக்கு வயது 20.
நாம் எங்கே இருக்கிறோம் - என்னென்ன செய்ய வேண்டும் :
1. முதலில் செய்ய வேண்டிய விஷயம், தலித் மக்களுக்குள் இருக்கிற ஜாதி வெறியை அடக்குவது/ஒழிப்பது. இது சிறிதாவது இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. பறையரையும், அருந்ததியினரையும் பிற தாழ்த்தப்பட்டவர்கள் அவமதிப்பது கண்கூடு.
2. இந்த ஜாதி வெறியர்களுக்கு எங்கே இருந்து வந்ததிந்த திமிர்? இந்திய அரசியலமைப்புச்சட்டம், தனக்கான துணையை தேர்ந்தெடுக்கும் உரிமையை, அடிப்படை உரிமை எனக் குறிப்பிடுகிறது. அதை மறுக்கும் வகையில் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசுகிறார்கள் என இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். முக்கியமாக பா.ம.க மற்றும் பல்வேறு ஜாதி இயக்கங்கள் (ஜாதிக்கட்சிகள் அனைத்தும் தான்) கலப்பு மன எதிர்ப்பை வலுவாக முன்னெடுக்கின்றன. சரத்குமார் இன்னமும் அந்த அளவு வரவில்லை. நல்லது.
3. ஜாதி ரீதியிலான வன்முறையை தூண்டும் பேச்சுக்களை பேசியது யார் என்றாலும், பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க அரசு முனைய வேண்டும். காடு வெட்டி குரு , ஜெ.,வை பார்ப்பன வெறி பிடித்தவர் எனக் கூறி விட்டு தனிமனித தாக்குதல், ஜாதி வெறி ஆகியவற்றை அப்பட்டமாய் காட்டியிருப்பார், பாருங்கள்.
4. ஜாதிக் கட்சிகளை, திராவிடக்கட்சிகள் சீந்தாமல் விட வேண்டும். அவர்களுக்கு வருவது கும்பல், கூட்டமல்ல.
5. மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் ஜாதியை முழுவதுமாக விளக்கி, அதன் முட்டாள் தனங்களையும் தீமைகளையும் பட்டியலிட வேண்டும். இன்று பார்ப்பனர்கள், பார்ப்பனீயத்தை எழுத்து வடிவம் தவிர வன்முறை வடிவில் செய்வதில்லை. ஆனால், அதை செய்வது ஒரு காலத்தில் பார்ப்பனீயத்தால் பாதிக்கப்பட்ட, இன்றைய ஜாதி இந்துக்கள். வரலாற்றை, இளைஞர்களுக்கு எடுத்துரைத்தல் வேண்டும்.
6. ஒருவன் தன் வாழ்நாளில் குழந்தைப்பருவம் முதல் கேட்டறியும் ஒன்றையே பின்பற்றுபவனாக பெரும்பாலும் உள்ளான். தாய்மொழியை படித்தல், பெற்றோரின் மதத்தை தழுவதல் எல்லாம் இதன் வகையே. எத்தனை பேர் கிறிஸ்த்துவத்தை படித்து அது வேண்டாம் என இந்துவாக இருப்போம். அப்பா இந்து, நீயும் இந்து. ஜூடோயிசம், புத்த மதம் எல்லாம் படித்தா வேண்டாம் என்கிறோம்? சோ, இங்கு ஒருவன் ஆரம்பத்தில் கற்பிக்கப்படுவதை அப்படியே பிடித்துக்கொள்கிறான் என்பது தெளிவாகிறது. எனவே, இந்த லிஸ்ட்டில் ஜாதியை சேர்க்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஜாதி வெறி, விஷ விதை குழந்தைகள் மனதில் வளர் இளம் பருவத்தில் தூவப்படக்கூடாது. சிறு வயதில் ஒருவன் மனதில் இந்த விதை விழுந்துவிடுமாயின் பின் அவனை மாற்றுவது கடினம்.
7. மன்றல் போன்ற நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்த்தப்பட வேண்டும். சேவ் தமிழ்ஸ் போன்ற இயக்கங்கள் ஜாதி மறுப்பை முன்னெடுக்க வேண்டும்.
8. ஜாதி வெறியை தூண்டும் விதமாக பொதுவெளியில் பேச நீதிமன்றத்தின் மூலம் Influential ஆட்களுக்கு தடை வாங்க வேண்டும். (கலப்பு திருமண எதிர்ப்பு - ஜாதி வன்முறையை தூண்டும் விதமாக பேசுபவரக்ள்). இங்கே நமது அரசியலமைப்புச் சட்டம், கலப்புமனத்திற்கு சில சலுகைகளை அளிக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எல்லாரும் தன் துணை தேர்ந்துஎடுக்கும் உரிமை - அடிப்படை உரிமை.
9. எல்லாருக்கும் தெரியும், தலித்துகள் கூட்டமாக வாழும் போது தாக்கப்படுவதில்லை என்று. தர்மபுரியில் தலித் இயக்கங்களின் அளவும் செயல்பாடும் வெகு குறைவு. ஜாதி ஒழிப்பை உறுதி செய்யும் அதே வேளையில், சமூக பாதுகாப்பையும் இவர்களுக்கு உறுதி செய்ய வேண்டும்.
10. அறிவூட்டுதல் மாணக்கருக்கு, அதன் மூலம் அவர்களுக்கு சமூக நீதி என்றால் என்ன என உணரவைத்தல். இது மிக ம்இக முக்கியமான பணி. இல்லையெனில், விஷமரமான ஜாதீயத்தை வேறோடு வெட்டாமல், கிளைகளை மட்டும் வளர வளர வெட்டுவது போலாகும்.
11. விவசாயம் தான் தாழ்த்தப்பட்ட மக்களின் அடி நாதம், அதை மேம்படுத்த நடவடிக்கை வேண்டும் (தனிக்கட்டுரை வரும்)
எனக்கு நன்றாக தெரியும், என் காலத்தில் ஜாதி ஒழிக்கப்படாது என்று. ஆனாலும், சிறு துரும்பையாவது கிள்ளிப்போட்ட திருப்தி எனக்கு. மிக மெல்ல நிச்சயம் அது ஒழிக்கப்படும்.
குறிப்பு : இந்தக்கட்டுரை, இணையவெளியில் வரும் நபர்கள் சிறிது சாதீயம் குறித்த முன்னறிவுடன் வருவார்கள் என்ற எண்ணத்தில் எழுதப்பட்டது.
----- கிளறுவோம்