Flipkart

Friday, January 24, 2014

நாம் ஏன் வாசிப்பதில்லை?

                                  

               அகில உலக தமிழ் பெஸ்ட் செல்லரான என் புக் ஒரு காப்பி கூட விற்கவில்லை. நான் புத்தகமே போடவில்லை என்று அதற்கு ஒரு மொன்னையான சாக்கு சொல்கிறார்கள். ச்சே.... இப்படியெல்லாம் தமிழ் எழுத்தாளர்கள் புலம்பித்தீர்க்க என்ன காரணம்? பொதுவாக நாம் ஏன் வாசிப்பதில்லை? அதிலும் குறிப்பாக தமிழ் இலக்கியம் எனில் அலறி அடித்து பின்னங்கால் புட்டத்தில் பட ஏன் மக்கள் தெறித்து ஓடுகிறார்கள்?

                                  தமிழனை சிந்திக்க விடாமல் மொன்னையான கத்தி ஆக்கியதற்கு பெரும்பாலும் "இணைய மொன்னைகள்" சினிமாவின் அதிலும் குறிப்பாக மசாலா சினிமாவின் பக்கம் கையை நீட்டுவர். ஓரளவு உண்மை தான் எனினும் முழுக்க முழுக்க இது உண்மையல்ல. இது மட்டுமே தமிழக மக்கள் சிந்திக்க மறந்ததற்கு காரணியல்ல.

பொதுவாகவே நாம் மகா சோம்பேறிகள். நமக்கு இன்பம் உடனடியாய் கிடைக்க வேண்டும். இதற்கான பல சான்றுகளை என்னால் தர முடியும்.  நமக்கு ஏன் ஹாக்கியை விட, கால்பந்தை விட க்ரிக்கெட்டின் மீது ஆர்வம் அதிகம் தெரியுமா? சடசடவென விழும் பவுண்டரிகள் தான் முக்கிய காரணம். ஒரு கோல் போடுற வரைக்கும் எவன்யா உட்கார்ந்து பார்ப்பான் புட்பாலை?  20-20யின் பெரிய வெற்றிக்கு இதான் காரணம். ஓவருக்கு இரண்டு பவுண்டரியாவது நிச்சயம். எப்போது பரபரப்பிலேயே இன்பத்திலேயே இருக்கலாம்.

இன்னொரு விஷயம் சொல்லவா? உலகிலேயே மிகக்குறைந்த "செக்ஸ் பொஷிஷன்களை" மட்டும் தனது வாழ் நாளில் ட்ரை செய்பவர்கள் இந்தியர்கள் தானாம். எவ்வளவு சோம்பேறிகள் பார்த்தீர்களா நாம்? ஏனய்யா செக்ஸுக்கு கூட உங்களால் கொஞ்சம் மெனக்கெட முடியாதா?

சரி, இன்னமும் விரிவாய் பேசுவோம். நமது மக்கள் தொகையில் நிறைய ஏழைகள். அடுத்த வேளை சோற்றுக்கு உழைப்பவர்கள். எப்போதுமே உடம்பால் அதீதமாக உழைப்பவர்களின் மூளை சோர்ந்து யோசிக்கும் திறன் குறைதல் இயல்பு. இவர்களை குறிவைத்து நாம் இலக்கியம் படைப்பதில்லை. இவர்கள் கதை மாந்தர்கள் எனினும் இது இவர்களுக்கான புத்தகமல்ல ;-)

 நாம் உண்மையிலேயே Concentrate செய்ய வேண்டியது வளர்ந்து வரும் தலைமுறையினரின் மீது தான். இங்கே பிரச்சனைகள் நாம் குழந்தைகளை செக்கு மாடு போல வளர்ப்பது தான். நாமக்கல் பண்ணைகளிலும் சாரி பள்ளிகளிலும் பின் ஏதோ ஒரு உப்புமா பொறியியல் கல்லூரியிலும் பயிலும் மாணவனுக்கு இலக்கிய பரிச்சயம் அல்லது பொதுவாக வாசிப்பு பரிச்சயம் ஏற்படும் வாய்ப்பு மிகக்குறைவு.

எனக்கு இவ்விடத்தில் ஒரு நீண்ட நாள் சந்தேகம் மீண்டும் வெளிப்படுகிறது.  இலக்கியம்ன்னா என்னா சார்? "சிவகாமி தன் சபதத்தை முடித்துக்கொள்வது" ஏன் இலக்கியத்தில் சேராமல் போய் விடுகிறது. வாசகனிட்ம் உழைப்பை கோரி நிற்பது தான் இலக்கியம் எனில் அமியையும், கி.ராவையும் நாம் புறந்தள்ளி விடமுடியுமா?   சரி, வரலாற்றை விடுந்து சமகால வாழ்வை, மனிதர்களை (அதிலும் சிலர் விளிம்பு நிலை மனிதர்களை) பற்றி பேசினால் தான் இலக்கியமா? எனில் இன்றைய சம காலம் நாளைய வரலாறு ஆயிற்றே???  பொன்னியின் செல்வன் இலக்கியமில்லை எனில் அந்தமான் நாயக்கரும் இலக்கியம் இல்லை தானே?

 ஏதோ ஒரு உணர்வை நமக்கு ஊட்டும், வாழ்கையை பல்வேறு புதிய பரிணாமங்களின் மூலம் அலச்செய்யும் எல்லா புத்தகங்களுமே முக்கியமானவை தான் (இனி இலக்கியம் வேண்டாம் புத்தகமென்றே இருக்கட்டும்).  எழுத்தாளர்கள் தான் புத்தகங்களை வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதை நான் கடுமையாக மறுக்கிறேன். அவர்கள் அதைச்செய்தால் அதில் ஒன்றும் தவறில்லை. ஆனால், அவர்களால் மட்டுமே ஆகக்கூடிய காரியமே அல்ல அது.  வாசகர்களால் மட்டுமே ஓரு புத்தகத்தை பரவச்செய்ய முடியும்.

ஆனால், துரதிஷ்ட்டவசமாக, நமக்கு ஒரு ஒவ்வாமை இருக்கிறது. இலக்கியம் அல்லது பொதுவாக நிறைய வாசிக்கத்தொடங்கியவுடன் ஒரு மமதை வருகிறது. நாம் நம்மை விட நிறைய வாசிப்பவர்களிடம் பழகத்தொடங்குகிறோம். வாசிப்பு குறைந்த நம்முடைய உறவினர், நண்பர்களுக்கு அது வேறு ஏதோ அறிவாளி உலகமப்பா என்ற பிம்பத்தை நாம் தான் ஏற்படுத்துகிறோம். ஒரு வகையில் நாம் அதனை மிகவும் நேசிக்கவும் செய்கிறோம். அங்கே அவர் சொன்னார், இங்கே இவர் சொன்னார்... என கோட்டு போடாமல் ஒரு கோபியை வாழ்வது யாருக்குத்தான் கசக்கும்??

நான் இதுவரை சந்தித்த பலரும் வாசிப்பை அவர்களுக்கு நெருக்கமானவர்களிடம் திணிப்பதே இல்லை (கவனிக்க - அறிமுகம் அல்ல).  இங்கே சில பெயர்களை குறிப்பிட எண்ணி பின் கைவிடுகிறேன். நாம் பார்த்த சினிமாவையோ, பாடலையோ போல புத்தகத்தை வாசகர்கள் அல்லாதவர்களிடம் நாம் பகிர்வதில்லை. பெரும்பாலானவர்கள் சொல்லும் காரணம் அவ்வளவு உழைப்பை தர யாரும் தயாராயில்லை.

 திருப்பூர் புத்தக கண்காட்சியில் வாங்கிய நான் படித்து முடித்த புத்தகங்கள் யாரிடம் இருக்கின்றன என்றே தெரியவில்லை. எல்லாம் நானே வலிய திணித்து "படிச்சுட்டு குடுங்க" என்று கொடுத்தவை. வாசிப்பிற்கு புதியவர்களை இழுப்பது உண்மையாகவே சள்ளை பிடித்த வேலை. சிலருக்கு "அனல் காற்று".. சிலருக்கு "சுஜாதா - சொர்கத்தீவு, என் இனிய இயந்திரா" சிலருக்கு "பொன்னியின் செல்வன்" சிலருக்கு "ராஜேஷ்குமார் - பிகேபி" சிலருக்கு கி.ரா/ சிலருக்கு நேரடி வரலாறு, அரசியல் என ஒவ்வொருவருக்கான வாசிப்புத்தூண்டில் அவர்களுக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டதாக இருக்கும். இதில் மிகச்சில வெற்றிகள், நிறைய நிறைய தோல்விகளுமே எனக்கு கிடைத்துள்ளன.

ஆனாலும், முடிந்தவரை புத்தகங்களை தேடித்தேடி வாசிக்காத என் நண்பர்களிடமே கொடுக்கிறேன். கிட்டத்திட்டா மாஃபியாவுக்கு ஆள் சேர்த்தல் தான். ஆனால், மாஃபியாவுக்கு ஆள் சேரவேண்டுமல்லவா? ஆள் சேர்த்தல் கேவலமில்லையா என்ற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை.
எனக்கு தெரிந்த 100 பேரில் 60 பேர் வாசிப்பதேயில்லை. 20 பேர் நியூஸ் பேப்பர்/இணையம் மட்டும். 13 இந்திய-ஆங்கில பிக்ஷன்ஸ். மீதி உள்ளவர்கள் தான் ஜே.கே.ரவுலிங்க் முதல் ஜெயகாந்தன் வரை கலந்து கட்டி வாசிப்பவர்கள்.  நமது கடைசி காலத்திற்குள் முதல் வட்டத்தினரை கொஞ்சமாவது வாசிக்க வைத்துவிட்டால் போதும். "ருசி கண்ட கிழட்டுப்பூனை தன்னால் முடியாவிட்டாலும் தன் குட்டிகளுக்கு ருசியை காட்டி விடும்".

--  Business oritented/ Academic oriented எழுத்துக்களை  சிலாகித்தும், இலக்கியம் - பிக்ஷன் எல்லாம் குப்பை, இங்க்க்லீஷ் படிச்சாவாது வக்காபுலரி வளரும் (இது சரி எனினும், இது மிகக்கேவலமான நோக்கம் என்பது எனது துணிபு. Vocabulary should be a by-product) என்றும் இன்று கூறிய ஒருவரிடம் ஏன் நாம் வாசிக்கவில்லை என்ற வினா எழ...அவருக்கு சொன்ன பதில் பதிவாக.

கொசுறு - தோழிக்கு (அந்த ஒருவர் - நாம ஆம்பளைங்க கிட்ட எப்ப பாஸ் பேசினோம்) அராத்து தெரியும். அவர் போட்ட டீசர் நல்ல ஓப்பனிங்க் தானே என்றாள். சரி ட்ஹான், ட்வீட்ஸ் எல்லாம் மக்களிடம் இதை எடுத்து செல்லும். ஆனால் பஞ்ச் மட்டுமே வாசிப்பு அல்ல. அது மீண்டும் நம்மை சோம்பேறி தான் ஆக்கும். ஆனா, ஓப்பனிங்குக்கு ஓக்கேன்னேன். அவர் அந்த பார்ல அராஜகம் ஆயிரத்துக்கு பதிலா தற்கொலை குறுங்கதைகள குடுத்து படிக்க சொல்லி இருக்கணும்... :-))))Friday, January 10, 2014

ஜில்லா ஜில்லா ஜில்லா!

ஜில்லா இயக்குனர் வேலாயுதத்துல அசிஸ்டென்ட்டு. சைடு கேப்புல விஜய் அண்ணன்ட்ட கத சொல்லி ஓக்கே ஆனது தான் ஜில்லா. கொஞ்சம் ரீவைண்ட் பண்ணி அந்த சீனுக்கு போவோம்.விஜய் சேரில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருக்காரு. எதிர்ல நம்ம டைரக்ட்டரு.

டை : "அண்ணே ஓப்பன் பண்ணோம்ன்னா"

விஜய் : "பைட் இருக்குல்ல"

டை : "அண்ணே.. நீங்க அப்ப சின்ன பையன்"

விஜய் : "அப்ப சின்ன பைட்டா வைய்யு"

டை : "ண்ணே... கேளுங்க... உங்க அப்பா வேல பாக்கற வீடு ஒரு தாதாவோடது.. உங்க அப்பா அவருக்கு கார் ஓட்டிட்டு போகும் போது கூட டிக்கில ஏறி போறீங்க... அப்ப பாதி வழில வர வில்லன் க்ரூப்பு  கர்பமா இருக்கற அந்த பெரிய மனுஷன் வைஃப..."

விஜய் : "வைஃப்ப..."

டை : "கொல்லப் பாக்குறாங்கன்னு சொல்ல வந்தேன்ணே"

விஜய் :"இந்த இடத்தல கார விட்டு எறங்காமலே ஒரு பைட்டு ஓக்கேயா?"

டை : (மனசுக்குள் "உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்") ண்ணே நீங்க சின்னப்பையன்ணே... கேளுங்க.. அப்ப உங்க அப்பா இறந்துடுறாரு... அந்த பெரிய மனுஷன் உங்கள தத்து எடுத்துக்கறாரு..."

விஜய் : "இங்க நான் அழுகணுமா??"

டை : (அதெல்லாம் ஜனங்க செய்வாங்க...)  அடுத்து நீங்க வளர்ரீங்க... ஓப்பனிங் பைட்டு...  ஒரு ரவுடிய பிண்றீங்க"

விஜய் தலைவா ஸ்டைலில் இரண்டு கையையும் கோர்த்து மூக்கில் விரலை வைத்து ம்ம் என்கிறார். "அந்த பெரிய மனுஷன் கேரக்டர் மோகன்லால் பிக்ஸ் பண்ணிக்கங்க.. மங்காத்தா ஸ்டைல்ல கொஞ்சம் நெகட்டீவ் ரோல்.. டையலாக் எதாச்சும்"

டை : "இந்தா இப்ப வெச்சுருவோம்.. இப்ப உங்கள ஒருத்தன் நல்லவன்னு சொல்ல.. நீங்க தப்பு பண்ணணும்.. ஆனா அத நான் தான் பண்ணுவேன்னு சொல்றீங்க... இப்ப ஓப்பனிங்க் சாங்க்... மாஸா.. "

வி : "மூசிக் இமான் போட்ருங்க"

டை : "அடுத்த சீன்ல காஜல் இன்ட்ரோ.. உங்கப்பா போலீஸ கொன்னதுனால உங்களுக்கு போலீச புடிக்காது... "

வி : "எங்கப்பா செத்துட்டாரா?"

எஸ்.ஏ.சி சைடிலிருந்து கணைக்கிறார்.

டை : "அவர் எங்க (முணுமுணுப்பு).. பர்ஸ்ட்டு சீனே அதான சார்.. இப்ப காஜல் ரோட்டுல ஒரு போலீச அடிக்கற பாத்து உங்களுக்கு லவ் வந்துருது.."

விஜய் : "இப்ப ஒரு சாங்கு..."

டை: " கொஞ்சம் போகட்டுமே... இன்ட்ரோ பாட்டுக்கு தம்மடிக்க போனவங்களே இன்னும் உள்ள வரல.. அடுத்து வீட்டுல அம்மா, மோகன்லால்ல காட்டுறீங்க.. இப்ப நீங்க உங்க தம்பி தங்கச்சி எல்லாம்.."

வி "தம்பி தங்கச்சி.."

டை : " மோகன்லால் பசங்க... போய் பொண்ணு கேக்க காஜல் வீட்டுக்கு போறீங்க.. இங்க ஒரு ட்விஸ்ட்டு.. ஆடியன்ஸ் எதிர்பாக்காத மாதிரி.."

விஜய் எஸ்.ஏ.சியை திரும்பி பார்த்து சிரிக்கிறார்.

டை : "காஜல் போலீஸ்... இப்போ கட் பண்ணா.. சிட்டிக்கு புதுசா வர கமிஷனர் உங்கப்பா அதாவது மோகன்லால கூட்டிட்டு போய் நடு ரோட்ல வெச்சு அவமானப்படுத்தறார்.. நீங்க கோபப்பட்டு அவர் கைய வெட்டீர்றீங்க... இப்ப ஒரு ட்விஸ்ட்டு"

விஜய் : "அந்த கமிஷ்னர் பொண்ணு தான் காஜல் கரெக்ட்டா?"

டை : (மண்ணாங்கட்டி) மோகன்லால் உங்கள போலீஸ் ஆக சொல்றாரு. தப்பு பண்றவனே போலீஸா இருந்துட்டா? " ஃபீல் பண்ணி சிரிக்கிறார் டை.

விஜய் : "அந்த இந்த பொங்கல் நமக்கு..."

டை " நீங்க போலீஸ் ஆனவுடனே... யாரும் மொகன்லால் ஆளுங்கள தடுக்க கூடாதுன்னு தடை போடுறீங்க... இப்ப ஒரு பிரச்சனைல மோகன்லால் ஆளுங்க பண்ண அலப்பறைல ஒரு கேஸ் குடோன் வெடிச்சுடுது...  அந்த ஸ்பாட்டுக்கு போற நீங்க... அங்க எரிஞ்சு கெடக்கற சடலங்கள பாத்து ரைஸ் ஆவறீங்க... ஆஸ்பத்ரில ஒரு அஞ்சு நிமிஷ சென்டிமென்ட் சீன்... இப்ப சிங்கம் ல அனுஷ்கா பீச்சுல வெச்சு கேக்குறா மாதிரி காஜல் உங்கள சீண்டி விடுறாங்க..."

விஜய் வெட்கப்படுகிறார் ..

டை : "அட அந்த சீண்டுறது இல்லங்க...  அடுத்து நீங்க ஸ்டேஷன் போறீங்க அங்க உக்காந்து சிவனோட ஆளுங்க.."

வி : "சிவன்??"

டை "மோகன்லால். அவரோட ஆளுங்க ஒருத்தன வெட்டி கொன்னுட அந்த பொண்ணு கம்ப்ளெய்ன் குடுக்குது...   நீங்க கேக்க மாட்டேங்கற தைரியத்துல  அவனுங்க அந்த பொண்ண அடிக்கறாங்க.. அப்ப நீங்க இத்தன நாள் போடாத காக்கி ட்ரஸ்ஸ போட்டுட்டு வந்து பின்றீங்க... ரெண்டு மூணு ப்ரீஸ் வெக்கறோம்... புருஷன் செத்தத கூட மறந்துட்டு அந்த பொண்ணு.."

வி : "அந்த பொண்ணு..."

டை : (அடேய்ய்..) உங்கள நன்றியோட பாக்குது"

வி: " நன்றியா"

டை : "(பின்ன என்ன பன்றியா?) இப்ப நீங்க போய் மோகன்லால திருத்தறதா சவால் விட்டுட்டு வரீங்க.. இப்ப ஃபேட் அவுட் பண்ணி இன்ட்ரவல் போடுறோம்.."

வெளியில் அய்யய்யோன்னு ஒரு சத்தம் கேட்க ஓடிப்போய் பார்க்கின்றனர்... டீ கொணர்ந்த பையன் காதில் ரத்தம் ஒழுக விழுந்து கெடக்கறான்...

எஸ்.ஏ.சி துள்ளிக்குதிக்கிறார். " நல்ல சகுனம். இத நாம பண்றோம்... "

டை : "மீதி கத"

எஸ் : " அட அதெல்லாம் என்னைக்குய்யா இவனுங்க பாக்குறானுங்க... பேரு தமிழ் நாடுன்னு வெச்சுக்க... "எங்கிட்ட ஒரு தடவ வாங்குனா தமிழ் நாட்டுலையே இருக்க மாட்டான்"ந்னு ஒரு பஞ்ச்ச்சு செரியா??"

டை : 'அம்மா நம்மள தமிழ் நாட்டுல இருக்க விட மாட்டாங்க"

எஸ் " அட.. சரி பாத்துக்கலாம். அப்படியே இந்த மங்காத்தா நடிச்சாங்கள்ள... சம்பத்து, அந்த பையன் எல்லாத்தையும் சேத்துக்க...  அதான் இப்ப எல்லாத்துக்கும் பிடிக்குது..."

கலைகிறார்கள்.

Thursday, January 2, 2014

"பிஃப்டி ஷேட்ஸ் ஆஃப் க்ரே படிச்சுட்டீங்களா ண்ணா"

அந்த பெண்ணுக்கு பதிமூன்று வயது தானிருக்கும். நான் கடைசியாய் அவளை பார்த்த போது தொட்டிலில் இருந்தாள். நீண்ட நாட்கள் க்அழித்து அவளை பார்க்க நேர்ந்தது. பயங்கரமாய் பேசுகிறாள்.

ஜர்னலிஸ்ட் ஆக வேண்டும் என்கிறாள். அவளுக்கு ஓர் அற்புதமான ஆசிரியை அமைந்திருப்பார்கள் போல. நூல்கள் குறித்து அவ்வளவு பேசுகிறாள்.

"பிஃப்டி ஷேட்ஸ் ஆஃப் க்ரே படிச்சுட்டீங்களா ண்ணா"

"இல்லம்மா... இனிமே தான்"

"இந்தியன் ஆத்தர்ஸ் படிப்பீங்களா? டூ ஸ்டேட்ஸ் சேத்தன் பகத்??"

"ம்ம்ம்..."

"எனக்கதுல அந்த பொண்ணு கேரக்ட்டர் தான் சுத்தமா பிடிக்கல"

"ஏன்ம்மா"

"ஐயர் பொண்ணா இருந்துட்டு பீர் குடிக்கறா.."

 நான் இதற்குள் பெண்ணிய விசரணைகள், சமூக விழுமியங்கள், இந்து ஞான மரபெல்லாம் எடுத்துக்கொண்டு வைப்சைட் பேனரில் உள்ள ஜெமோ போல் முகத்தை வைத்துக்கொண்டு பேச ஆரம்பித்தேன்.

"பொண்ணுங்க குடிக்கறது தப்புன்னு எல்லாம் பிரிக்க..."

அடிச்சா பாருங்க சிக்ஸர்.

"அதென்ன பீர் குடுக்கறது... தொப்ப போடும்ல... வைன் குடிக்க வேண்டியது தான..யாரு வேண்டாம்ன்னா.."

கொஞ்சம் வெட்கமாக கூட இருந்தது. ரைட்டர் நேற்று போட்ட ட்வீட் "வாசிப்பின் போதாமையை உணரும் தருணங்கள் அவமானகரமானவை" கண்முன் நிழலாடியது அத்தருணம்.

ஹ்ம்ம்ம்...  எப்படியாச்சும் தமிழ் இலக்கிய உலகிற்குள் இழுத்து வந்துவிட வேண்டும். கைக்காச போட்டோ இல்ல கடன் வாங்கியோ "பொன்னியின் செல்வன்" (இது இலக்கியமான்னு கேக்காதீக..ஸ்டார்ட்டர்)  வாங்கி தரேன் பாப்பாட்ட குடுத்துடு