https://twitter.com/Koothaadi/status/563979307324669954
https://twitter.com/lakschumi/status/564172264070189056
இந்த குறிப்பிட்ட ட்வீட் பற்றி நேற்று @shilphacharles ஓடு கடும் சண்டை. அவளது பாயிண்ட் 'இந்தச் சமூகம் இப்படி பெண்களை வைத்திருக்கிறது'
மிக validஆன பாயிண்ட். 70களில். இப்போதும் கூட படிக்க இயலாத கைக்குள்ளேயே வாழும் பெண்களுக்கு.
ஊருக்கு உபதேசம் செய்வதும், சொந்த வாழ்க்கையில் மண்ணாந்தையாய் வாழ்வதும் நம் கலாச்சாரம். இங்கே எத்தனை பேர் நியூமராலஜி லூசுத்தனம் என தெரிந்து தன் பிள்ளைகளுக்கு நியூமராலஜி படி பெயர் சூட்டி இருப்பார்கள்?
இந்த சின்ன ட்விட்டர் ஸ்பேசை sample space ஆக வைத்து பாருங்கள். 10% வருமான வரி வரம்புக்குள் வரும் திருமணமாகாத பெண்களை typical நம் சமூக பெண்கள் எனக்கொள்வோம். இதில் எத்தனை பேர் நான் சொன்ன மாப்பிள்ளைகளை திருமணசந்தையில் பெற்றோர் வாங்கித்தர காத்திருக்கிறார்கள்?
திருமணமான எத்தனை பெண்கள் சந்தைக்கு போகாமல் தானாய் தன் கணவனை தேர்ந்தெடுத்தார்கள்? இவர்களெல்லாம் இந்த சமூகம் தரும் அடையாளத்தை, சலுகைகளை, பாதுகாப்பை வாங்கிக்கொண்டு அடமானமாய் தன் உரிமைகளை வைக்கிறார்கள். Emotional blackmail, caste, relatives - and related perks இதையெல்லாம் பெற்றுக்கொண்டு உரிமை அடகு வைக்கும் போது அதற்கெதிராய் பேச மட்டும் செய்தால் அது அயோக்கியத்தனமில்லையா?
ஆண்கள் - ? அவர்கள் சதவீத அளவில் கொஞ்சம் மேல். சந்தைக்கு போகாமலிருப்பவர்கள், பெண்களைவிட சற்றே அதிகம். ஆனால் மீதமிருப்பவர்கள் - சந்தைக்காரர்களுக்கு அதோடு ஜாதிப்பற்றும், ஆணாதிக்கமும் இருக்கும். - சந்தைக்கு செல்லும் பெண்டிருக்கு இதுகள் தான் வாய்க்கும். and they deserve it.
Showing posts with label பெண்கள். Show all posts
Showing posts with label பெண்கள். Show all posts
Sunday, February 8, 2015
Monday, June 9, 2014
ட்விட்டரை விட்டு பெண்கள் ஓடுவது ஏன் - ட்விட்டர் - பெண்ணியம்?
ட்விட்டருக்கு போய் மாமாங்கம் இருக்கும். மோடி வெற்றி குறித்த அலசல் கட்டுரை ஆரம்பித்த இடத்திலேயே நிற்கிறது. போன வாரம் பேஸ்புக்கில் சோனியா அக்காவோடு லேசாக வழக்கம் போல சண்டை போட்டிருந்தேன். எதிர்வினை ஆற்றுபவர்களை பொதுவாக திட்டுவதற்கு. அவர்கள் இன்று ஒரு சுட்டியை பகிர்ந்திருந்ததை பார்க்க முடிந்தது "இப்ப என்ன என்ன செய்ய சொல்ற" என தம்பி மாதவன் ஸ்லாங்கில். அவசர அவசரமாய் இதை எழுதுகிறேன். படிக்கவும், வேலையும் தலைக்கு மேல் கிடக்கிறது.
ட்விட்டரில் அஜித் - விஜய், ராஜா - ரகுமான், நீயா நானா டாபிக்குகளோடு பெண்ணியம் குறித்த சண்டையும் பேமஸ். /// பெரும்பாலும் இது போல் இணையவெளியில் பெண்கள்/பெண்ணியம் பற்றி பொருமுபவர்களுக்கு சொல்லெண்ணா பல துயரங்கள் இருக்கும். வீட்டில் பெண்டாட்டியிடம் வாங்கிய விளக்குமாற்றடியின் ஈரம் காய்வதற்குள் "அவன கொல்லாம விடமாட்டேண்டீ" என கவுண்டர் பாய்வாறே, அது போல.... /// - இப்படித்தான் இதை பகடியாய் எழுதலாம் என துவங்கினேன். எரிச்சலாய் இருக்கிறது. என்னோடு பேசும் பல பெண்கள் என்னிடம் சொல்லும் ஒரே விஷயம் இது தான். எங்களுக்கு எல்லோரிடமும் எல்லாவற்றையும் உன்னிடம் பேசுவது போலவே பேசிவிட வேண்டும் என்று ஆசை தான். ஆனால், என்ன செய்ய. அவர்கள் ஆண்களாயிற்றே.
ஏன் நான் ஆணில்லையா? என்பேன். "ம்ஹூம்...சொல்லப்போனால் அவர்கள் தான் ஆண்களில்லை" என்பார்கள். நேற்றும் சேர்த்து இந்த பிரச்சனை எப்படி தொடங்குகிறது என்று பார்ப்போம். பெரும்பாலும் இது போல இவர்களின் வெறிக்கு இலக்காவது சோனியா (@raajakumaari) தான் என்பதால், நான்கைந்து வருட ட்விட்டர் குப்பை கொட்டிய அனுபவத்தில் சொல்கிறேன். இது முழுக்க முழுக்க குழு மனப்பான்மையால் வருவது.
நான் ஒரு ஜாதி வெறி பிடித்த கவுண்டனை திட்டுகிறேன் என வைத்துக்கொள்வோம். கவுண்டன் என தன்னை எண்ணும் ஒவ்வொருத்தனும் சம்மந்தமே இல்லாமல் என் மேல் பாய்வார்கள். அதே தான் இங்கும் பிரச்சனை. ஒரு குறிப்பிட்ட செயலை செய்யும் ஆண்கள் மேல் குறிப்பிட்டு போடப்படும் ட்வீட்டோ ஸ்டேட்டஸோ, சிலரால் தனக்கானதாக கருதப்பட்டு அதனால் வன்மம் வளர்ந்து, குழு மனப்பான்மை அதை ஊதி விட்டு.... உஸ்ஸ்...
இது சம்மந்தப்பட்ட சில பல ட்வீட்டுகளை தேடிப்பார்ட்ட போது கடும் ஆயாசம் தான் ஏற்பட்டது. உலக அரசியல், இஸ்ரேலிய போர் நிறுத்தம் எல்லாம் பேசி விட்டு, எதிர்வினை என வரும் போது தனிமனித தாக்குதலை எடுப்பதில் தமிழர்கள் கில்லாடிகள். ராஜா, ரகுமான் ஹெட்வெயிட் என தொடங்குவது , "இவ என்ன பெரிய இவளா" "இத சொல்ல இவ யாரு" என நீள்கிறது.
என்னுடைய தோழிகள் பெரும்பாலும் டாம்பாய்க்கள். ஒரு முறை பீச்சில் நானும் என் தோழி ஒருத்தியும் நடந்து செல்கையில் நான்கு பேர் இருந்த கும்பலில் ஒருத்தன் என் தோழியின் மாரை பார்த்து பால் குடித்தால் நன்றாய் இருக்கும் என்றான். நான் செயல்பட ஆரம்ப்பிப்பதற்குள் அவள் ரிடார்ட் என்ன தெரியுமா? "உங்கம்மா கிட்ட நின்னு போச்சா?" என பரிதாபமய் உதடு குவித்து கேட்டுவிட்டு சகஜமாகி என் தோளில் கை போட்டு என்னோடு வேறேதோ பேசிக்கொண்டு நடந்து விட்டாள்.
எத்தனை பெண்களை இப்படி இருக்க வைக்க முடியும்? தமிழ் இணையவெளி என்றாலே என்னால் பெண்களை ட்விட்டரில் சேருங்கள் என சொல்ல முடியவில்லை. கெட்ட வார்த்தைகள் பிரச்சனை இல்ல. என் தோழிகள் அனைவரிடமும் நான் ஆண்களோடும் பேசும் அதே வார்த்தைகள் தான். கேனக்கூதி உட்பட. பிரச்சனை தனி மனித தாக்குதல் தான். மிக்சர் தின்னுதல் எனத்தொடங்கும். இங்கே பேசுபவர்கள் கணவர்கள் எல்லாம் மிக்சர் தின்கிறார்களாம். சரி, இப்போது உங்கள் மனைவி, நீங்களிங்கே டைப்புகையில் யாரோடு பக்கோடா கொறிக்கிறாள் என்ற கேள்வியை தொண்டையோடு முழுங்கி விட்டு, கடக்க வேண்டி இருக்கிறது.
இங்கு பேசிக்கொண்டிருந்த பெண்கள் ஒதுங்கிவிட்டார்கள் அல்லது தங்கள் வட்டத்தை சுருக்கிக்கொண்டு விட்டார்கள். ஆக எரிச்சலாய் இருக்கிறது. அவர்கள் பேசுவது சுத்த அபத்தம் என உங்களுக்கு தோன்றினால் கூட அதை கருத்து கொண்டு எதிர்கொள்ள முடியாதா ஐயா? என்னவோ போங்க :-( ஆனால் ஒன்று புரிகிறது. நீங்கள் எல்லாம் ஏன் உங்கள் மனைவி தங்கை தோழிகளை தமிழ் ட்விட்டருலகில் நுழைய விடவில்லை என. இணையத்துக்கான முகமூடிகள் விதவிதமான டிசைனிலானவை.
தொடர்புடைய பதிவுகள் :
தோழர் மே 17 உமரின் ட்விட்லாங்கர் : http://t.co/Yc3KOzluwW
ட்விட்டரில் அஜித் - விஜய், ராஜா - ரகுமான், நீயா நானா டாபிக்குகளோடு பெண்ணியம் குறித்த சண்டையும் பேமஸ். /// பெரும்பாலும் இது போல் இணையவெளியில் பெண்கள்/பெண்ணியம் பற்றி பொருமுபவர்களுக்கு சொல்லெண்ணா பல துயரங்கள் இருக்கும். வீட்டில் பெண்டாட்டியிடம் வாங்கிய விளக்குமாற்றடியின் ஈரம் காய்வதற்குள் "அவன கொல்லாம விடமாட்டேண்டீ" என கவுண்டர் பாய்வாறே, அது போல.... /// - இப்படித்தான் இதை பகடியாய் எழுதலாம் என துவங்கினேன். எரிச்சலாய் இருக்கிறது. என்னோடு பேசும் பல பெண்கள் என்னிடம் சொல்லும் ஒரே விஷயம் இது தான். எங்களுக்கு எல்லோரிடமும் எல்லாவற்றையும் உன்னிடம் பேசுவது போலவே பேசிவிட வேண்டும் என்று ஆசை தான். ஆனால், என்ன செய்ய. அவர்கள் ஆண்களாயிற்றே.
ஏன் நான் ஆணில்லையா? என்பேன். "ம்ஹூம்...சொல்லப்போனால் அவர்கள் தான் ஆண்களில்லை" என்பார்கள். நேற்றும் சேர்த்து இந்த பிரச்சனை எப்படி தொடங்குகிறது என்று பார்ப்போம். பெரும்பாலும் இது போல இவர்களின் வெறிக்கு இலக்காவது சோனியா (@raajakumaari) தான் என்பதால், நான்கைந்து வருட ட்விட்டர் குப்பை கொட்டிய அனுபவத்தில் சொல்கிறேன். இது முழுக்க முழுக்க குழு மனப்பான்மையால் வருவது.
நான் ஒரு ஜாதி வெறி பிடித்த கவுண்டனை திட்டுகிறேன் என வைத்துக்கொள்வோம். கவுண்டன் என தன்னை எண்ணும் ஒவ்வொருத்தனும் சம்மந்தமே இல்லாமல் என் மேல் பாய்வார்கள். அதே தான் இங்கும் பிரச்சனை. ஒரு குறிப்பிட்ட செயலை செய்யும் ஆண்கள் மேல் குறிப்பிட்டு போடப்படும் ட்வீட்டோ ஸ்டேட்டஸோ, சிலரால் தனக்கானதாக கருதப்பட்டு அதனால் வன்மம் வளர்ந்து, குழு மனப்பான்மை அதை ஊதி விட்டு.... உஸ்ஸ்...
இது சம்மந்தப்பட்ட சில பல ட்வீட்டுகளை தேடிப்பார்ட்ட போது கடும் ஆயாசம் தான் ஏற்பட்டது. உலக அரசியல், இஸ்ரேலிய போர் நிறுத்தம் எல்லாம் பேசி விட்டு, எதிர்வினை என வரும் போது தனிமனித தாக்குதலை எடுப்பதில் தமிழர்கள் கில்லாடிகள். ராஜா, ரகுமான் ஹெட்வெயிட் என தொடங்குவது , "இவ என்ன பெரிய இவளா" "இத சொல்ல இவ யாரு" என நீள்கிறது.
என்னுடைய தோழிகள் பெரும்பாலும் டாம்பாய்க்கள். ஒரு முறை பீச்சில் நானும் என் தோழி ஒருத்தியும் நடந்து செல்கையில் நான்கு பேர் இருந்த கும்பலில் ஒருத்தன் என் தோழியின் மாரை பார்த்து பால் குடித்தால் நன்றாய் இருக்கும் என்றான். நான் செயல்பட ஆரம்ப்பிப்பதற்குள் அவள் ரிடார்ட் என்ன தெரியுமா? "உங்கம்மா கிட்ட நின்னு போச்சா?" என பரிதாபமய் உதடு குவித்து கேட்டுவிட்டு சகஜமாகி என் தோளில் கை போட்டு என்னோடு வேறேதோ பேசிக்கொண்டு நடந்து விட்டாள்.
எத்தனை பெண்களை இப்படி இருக்க வைக்க முடியும்? தமிழ் இணையவெளி என்றாலே என்னால் பெண்களை ட்விட்டரில் சேருங்கள் என சொல்ல முடியவில்லை. கெட்ட வார்த்தைகள் பிரச்சனை இல்ல. என் தோழிகள் அனைவரிடமும் நான் ஆண்களோடும் பேசும் அதே வார்த்தைகள் தான். கேனக்கூதி உட்பட. பிரச்சனை தனி மனித தாக்குதல் தான். மிக்சர் தின்னுதல் எனத்தொடங்கும். இங்கே பேசுபவர்கள் கணவர்கள் எல்லாம் மிக்சர் தின்கிறார்களாம். சரி, இப்போது உங்கள் மனைவி, நீங்களிங்கே டைப்புகையில் யாரோடு பக்கோடா கொறிக்கிறாள் என்ற கேள்வியை தொண்டையோடு முழுங்கி விட்டு, கடக்க வேண்டி இருக்கிறது.
இங்கு பேசிக்கொண்டிருந்த பெண்கள் ஒதுங்கிவிட்டார்கள் அல்லது தங்கள் வட்டத்தை சுருக்கிக்கொண்டு விட்டார்கள். ஆக எரிச்சலாய் இருக்கிறது. அவர்கள் பேசுவது சுத்த அபத்தம் என உங்களுக்கு தோன்றினால் கூட அதை கருத்து கொண்டு எதிர்கொள்ள முடியாதா ஐயா? என்னவோ போங்க :-( ஆனால் ஒன்று புரிகிறது. நீங்கள் எல்லாம் ஏன் உங்கள் மனைவி தங்கை தோழிகளை தமிழ் ட்விட்டருலகில் நுழைய விடவில்லை என. இணையத்துக்கான முகமூடிகள் விதவிதமான டிசைனிலானவை.
தொடர்புடைய பதிவுகள் :
தோழர் மே 17 உமரின் ட்விட்லாங்கர் : http://t.co/Yc3KOzluwW
குப்பை : Bullying - வார்த்தை வன்புணர்ச்சி
http://www.koothaadi.in/2013/01/blog-post_8.html
http://www.koothaadi.in/2013/02/blog-post_1259.html
Sunday, July 7, 2013
பாமக - விசி - திராவிடம் - ஜாதி - கலப்பு மணம் - எதிர்காலம் : மற்றுமொரு பக்கம் 8 :
** தலைப்பை போலவே கட்டுரை முழுக்க என் புரிதலில் அடிப்படையிலான அவதானிப்புகளால் ஆனாது. ஜாதிய வரலாற்றை, அடக்குமுறையை ஒரே கட்டுரையில் சொல்லி விட முடியாதது போல, எதிர்காலத்தையும் ஒரே கட்டுரையில் அடக்கி விட முடியாது. இக்கட்டுரை நீண்ட ஒரு விவாதத்திற்கு அடிகோலும்.
** இதற்கு முன் ஆழி செந்தில் நாதன் அவர்கள் எழுதிய இது தொடர்பான கட்டுரையை படித்தேன். அதில் அவர் சொன்ன விஷயங்களை எழுத வேண்டும் என் நினைத்திருந்தேன். அவற்றை தவிர்க்கிறேன்.
** இது வெறும் திவ்யா- இளவரசன் விவகாரம் வாயிலாக ஜாதிய அமைப்பை, வரும்காலத்தை ஆராய்வதல்ல. அதனால் தான் இவ்விகாரத்தின் சூடு அடங்கி எழுதுகிறேன்.
1. காதல் மட்டுமே ஜாதியை ஒழிக்கும் என நான் முற்றாக நம்பியது கிடையாது. ஜாதிக்கு எதிரான சமூக, அரசியல் நிலைப்பாடு தான் அதை ஒழிக்கும் என்றே நம்பி வந்திருக்கிறேன்.
2. தமிழகம் முழுவதும் ஜாதி ரீதியான விவகாரங்களை ஆராய்ந்தால், ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரியான அனுபவம் கிடைக்கும். அவற்றும் இருக்கும் பொதுத்தன்மையை மட்டும் பார்ப்போம்.
3. திராவிட இயக்கம் இப்போது முற்றாக தோய்ந்து விட்டது. திமுக கட்சியான பிறகு செய்ய வேண்டிய சமரசங்களில் முக்கியமானதாக பகுத்தறிவு மாறிப்போனது. அனைத்து ஜாதி அர்ச்சகர், தமிழ் பூசைகள் எல்லாம் நல்ல திட்டங்கள் தாம் பெயரளவில். ஜாதி ஒழிப்பென்ற அளவில் அவர்களால் எதையும் செய்ய முடியவில்லை. அடிப்படை காரணம் முக்கியமானது. எல்லா ஊர்களிலும் ஜாதியின் அடிப்படையில் தான் சீட் ஒதுக்க வேண்டி உள்ளது. உள்ளாட்ச்சி, சட்டமன்றம், பாராலுமன்றம் என எதுவும் இதுக்கு விதிவிலக்க. இங்கே Mutual dependency வருகிறது. ஜாதிக்காரனுக்கு சீட்டு குடுத்தா தான் ஜெயிப்பான், ஜெயிச்சா தான் பவர், பவர் இருந்தா தான் எதையுமே செய்ய முடியும்..ஆனா ஜாதிக்காரன் எப்படி ஜாதிய ஒழிக்க விடுவான்??
4. மேற்கண்ட பாயிண்ட்டால் எந்த கட்சியும் ஜாதியை ஒழிக்க முன்வராது. புதிய அரசியல் கட்சி ஆகாது. நாம் சிறுபான்மையினர் ஐயா.
5. அந்தப்பக்கம் என்ன நடக்கிறது? பாமக மட்டுமல்ல, அனைத்து சமுதாய பேரியக்கம் என்ற பெயரில் ஒன்று சேர்ந்த எல்லோருமே கேவலமான நோக்கம் உடையவர்கள். இது தலித் - தலித்தல்லாதோர் என்ற பிரிவு ஏற்படுத்த முனைப்புடன் செய்யப்பட்டது. இதில் வட நாட்டு ஹிந்து முஸ்லீம் கலவரம் தூண்டப்பட்ட அதே பார்முலா இருக்கலாம். If you know what I mean...
6. இப்போது Exogamy, மூலம் ஜாதியை உடைத்தல் தான் வரும்காலத்தில் சரியாக வரும் என எண்ணத்தோன்றுகிறது.
7. ஒரு பக்கம் சிறுவர்கள் முதற்கொண்டு எல்லோருக்கும் ஜாதி வெறி ஊட்டுகிறார்கள், பல்வேறு வழிகளில். நண்பர் ஒருவர் 2 வயது குழந்தை படம் போட்டு ஏதோ புஜ்ஜிமா **வை (ஜாதிப்பெயர்) என பேனர் பார்த்ததாக சொன்னார்.. :-(
8. ஜாதி ரீதியான மூளை சலவை Castration போன்றது. இவர்கள் காதலிக்க மாட்டார்கள் அல்லது சொந்த ஜாதி பெண்களை காதலிப்பார்கள்.
10. ஆனால், பெண்ணை வெறும் சதையாக பார்க்கும் மனோபாவம் தான் இவர்களுக்கிருக்கும் என்பதால், இப்படி ஜாதிக்குள் இறுகும் சமூகத்தை சேர்ந்த பெண்கள் மிகவும் துன்பமான வாழ்க்கையிலேயே உழலுவார்கள்.
11. எதிர்காலத்தில் காதல் - கலப்பு மணத்திற்கு பாதுகாப்பு கொடுக்கும் வலுவான இயக்கம் வேஆண்டும். ஒரு காலத்தில் திகவில் எல்லோரும் சொந்தம் போல பழகினார்கள். இப்போது திக அல்லாத, பகுத்தறிவை தாண்டி - சுதந்திரம் - காதல் என்ற வெளிப்பார்வையில் ஒரு புது அமைப்பு தேவை. இந்த அமைப்பு நண்பர்களாகவும், உறவாகவும், பாதுகாப்பாகவும் செயல்பட வேண்டும்.
12. எல்லோரும் சமூகத்தை திருத்தி விட கிளம்ப முடியாது. ஆனால், Doing your bit is enough. ஒரு ஜாதி வெறி பிடித்த எச்சில்கலை நாய்க்கு இருக்கும் அதே கர்வம் நமக்கும் இருக்க வேண்டும்.
13. மீண்டும் அந்தப்பக்கம். குழந்தைகள் முதல் வளர்க்கப்படும் ஜாதிபற்று, வெறும் ஜாதிக்காரர்கள் மட்டும் கலந்து கொள்ளும் விழாக்கள் அமைத்து அதில் பேசி வெறியாக்கப்படுகிறது. வெள்ளை சட்டை, பந்தா, இத்தியாதிகள். 15 வயது வரை இப்படி வளர்ந்த ஒருவனை எப்படி திருத்துவது??
14. வரும்காலத்தில் திருமணம் தாண்டி, நட்பு, உறவு என எல்லாமே ஜாதிக்காரன் தான் என ஆக்க ஒவ்வொரு ஜாதிக்கூட்டமும் முயன்று வருகிறது. இதன் வருங்காலம் மிக மோசமாய் இருக்கும்.
15. அரசியல் ரீதியில் ஒன்றூம் செய்ய முடியாது, எல்லா ஜாதி தலைவர்களையும் திருத்துவதோ, நாடு கடத்துவதோ சினிமாவில் முடியலாம், நிஜத்தில் ம்ஹூம். இப்போது ஒரே வழி காதல், நட்பு உறவில் ஜாதியை ஒழிக்கணும். அதற்கு காதல் மணம் புரிந்தவர்கள் தங்கள் பிள்ளைக்கு NO CASTE போட முன் வரணும் அவர்கள் பொருளாதாரம் அதற்கு இடம் தரணும் அல்லது அதற்கேற்ற ஒரு ரிசர்வேஷன் வரணும்.
16. இப்போது காதலிச்சா வெட்டுவாங்கன்னு பயம் இருக்கு. அந்த பயம் அகலணும். சட்டம் மூலமா ;-) ஒரு பயம் காதல பிரிக்க நெனைக்கற ஜாதி கும்பலுக்கு வரணும்., காதலிக்கறவங்களுக்கு ஒரு பாதுகாப்புணர்வு வரணும்.
17. Emotional blackmails can be tackled with emotional blackmails again and if not can be ignored.
பல அவதானிப்புகள் சிதறி இருக்கலாம். மன்னிக்கவும்.
படம் : சிறு வயதில் சாதி உணர்வு :-(
Wednesday, May 8, 2013
ஸ்ருதிஹாசன் - Maxim : மற்றுமொரு பக்கம் - 6
18+ - படத்தை மட்டும் பார்த்துவிட்டு லைக்கை அமுக்கி தொலைக்காதீர்கள் :
மேக்சிம் இதழில் ஸ்ருதி இருப்பது போல வந்த ஸ்டில் உண்மையா உடான்ஸா என தெரியவில்லை. இது தொடர்பாக விசாரிக்க மேக்சிம் அதிபரை தொடர்பு கொண்ட போது, அவரது அழகான செக்ரட்ரி எடுத்தார். (போனை) பேசிக்கொண்டே இருந்த போது, படுபாவி ஏர்டெல்காரன், காசு இல்லன்னு கட் பண்ணி உட்டுட்டான். மேக்சிம் இதழை அவ்வப்போது இணையத்தின் மூலம் காண்பவன் (கவனிக்க வாசித்தவன் அல்ல) என்ற முறையில் அது உண்மை என்றே தோன்றுகிறது. ஓக்கே, சீரியஸ் மோடுக்கு வருவோம்.
இதற்கிடையே இணைய வெளியில் வலம் வந்ததில், ஸ்ருதியின் படங்கள், வேறு எதற்கோ எடுக்கப்பட்ட ஸ்டில்கள் போல தெரிகிறது. இதனிடையே, MAXIM ஸ்டில்கள் பேஸ்புக்கில் எங்கு வெளியானாலும் அங்கு சென்று ஒரு க்ரூப் சென்று "அய்யகோ கமல் மகளா இப்படி" "இந்திய கலாச்சாரம் இழவு கொட்டுகிறதே" என மானாவாரியாக கமெண்டுகிறாரக்ள். பார்க்கவே பரிதபமாய் இருக்கிறது.
சில நாட்கள் முன்பு, நண்பர் ஒருவர் பூனம் பாண்டேவோ, சன்னி லியோனோ நினைவில்லை. அவர்களின், சின்ன வயசு போட்டோ என்று ஒரு படத்தை பகிர்ந்து அதனோடு இப்படி மானத்தை கெடுத்துக்கொண்டு வாழ்வோம் என அந்தப்பெண் அந்த வயதில் எதிர்பார்த்திருப்பாளா? எல்லா உயிரும் கவுரவமாகவே வாழ விரும்புகிறது என பதிவிட்டு இருந்தார்.
எனக்கு உண்மையிலேயே இது குறித்து எழுத எரிச்சலாய் இருக்கிறது ஐயா. ஆறு மாசம் இருக்கும். கி.ராவின் பேட்டி ஒன்று ஆ.வியில் வெளியானது. நினைவிருக்கிறதா? "எப்பப்பாத்தாலும் அதப் பத்தியே நெனச்சுக்கிட்டு இருந்தா அது வியாதி இல்லாம வேறென்ன?" என கேட்டிருப்பார் கி.ரா. பாக்கியராஜிடம் "ஏன் முருங்கக்காய் மேட்டர்களை தொடுகிறீர்கள்" என எப்போது கேட்டாலும் சொல்வார், "அட, எத மறைச்சு மறைச்சு வெக்குறமோ, அதுல தானங்க சுவாரசியம் ஜாஸ்தி".
இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலான இளைஞர்களின் கவலை சுய இன்பத்தால் ஆண்மை குறையுமா என்பது தான் என்பது உங்களுக்கு தெரியுமா? கூகுள் தேடலில் Mastrubation and impotency என்ற வார்த்தைகள் எத்தனை முறை இந்தியாவில் தேடப்பட்டுள்ளது என அறிவீர்களா?
விஷயத்திற்கு வருகிறேன். மொத்தமாய் ஸ்ருதி மேட்டரிலும், மற்ற கலாச்சாரத்தை கெடுக்கும் பார்த்து புலம்புபவர்களுக்கு பொதுவாய் ஒன்ற் சொல்கிறேன். காண்பிப்பது அவர்கள் உரிமை. புடிச்சிருந்தா பாருங்க. இல்ல நான் ஒழுக்க சீலர்ன்னா, ஸ்ரோல் பண்ணி போய்கிட்டே இருங்க, Family Safety ஆப்ஷன் Enable பண்ணி வெச்சுக்குங்க.
ஸ்ருதி மேட்டரில் புலம்புபவர்கள் இரண்டு ரகம். 1. கமல் பெண்ணாச்சே என புலம்புபவர்கள். 2. இந்திய கலாச்சாரம் இஸ்துகுச்சே என கூவுபவர்கள். முதலாம் ரகத்தினருக்கு ஒரே பதில் தான், "இது சப்ப மேட்டருங்க. கமல் கிட்ட கேட்டா கூட இதத்தான் அவர் சொல்வார். ஸ்ருதி என்ன செய்யவும் கமலின் அனுமதி தேவையில்லை. அவர் என்ன செய்ய வேண்டும் என தேர்ந்தெடுக்க அவருக்கு அனுமதி உண்டு." இந்த வாதத்தை நியாப்படுத்த என்னிடம் காரணம் உண்டு. ஒரு பேட்டியில் Sharon Stone Basic Instictஇல் நடித்ததை போல நடிப்பீர்களா என ஸ்ருதியிடம் கேட்டதற்கு அவர் கமல் முன்னிலையிலேயே "ஓ! யெஸ்" என்றார். கமலும் அதை ஆமோதிக்கவே செய்தார்.
இரண்டாவது ரகத்திற்கு வருவோம். ஒரு உளவியல் தியரி இருக்கிறது, சத்தம் போட்டு பேசுபவர்களின் பக்கம் பெரும்பாலும் நியாயம் இருக்காது. இந்த ஒழுக்கவியாதிகள் இப்படி பேச காரணம் "இதோ பாருங்கள், எல்லோரும் தப்பு செய்கிறார்கள். அய்யோ, என்னை விட அதிகமாய் செய்கிறார்கள். இவர்களோடு ஒப்பிடுகையில் நான் செய்த தப்பு ஒண்ணுமே இல்லை. நான் இவர்களை விட நல்லவன்" என காண்பித்துக்கொள்ளத் தான். இன்னொரு படம் பார்த்தேன், பிஜேபி பார்னை பேன் செய்யச் சொல்லி கையெழுத்து இயக்கம் நடத்துகிறதாம். பார்னை பேன் செய்வது வரவேற்கத்தக்க முடிவு தான். ஆனால், முதலில் அதை பாராளுமன்றத்தில் செய்ய வேண்டும் போலிருக்கிறதே! ஒரு கோட்டின் அருகில் பெரிய கோடை வரைந்து முந்தைய கோடை சிறிதாக்கும் அதே டெக்னிக். என்னைய விட அவன் கெட்டவன்! இந்த நல்ல பெயர் இங்கு எல்லோருக்கும் முக்கியமாய் படுகிறது. வள்ளுவரே காமத்துப்பால் எழுதிய பின்பும், காமசூத்ரா எழுதிய காமத்தை ரகசியமாய் வைத்து இளைஞர்களை காவு கொடுத்துக்கொண்டு இருக்கிறது.
மேக்சிம் போன்ற இதழ்கள் பெண்களை பொருளாக, உடைமையாக்க எடுத்துக்கொள்ளும் அதே சிரத்தையை Chasity என்ற பெயரில் இந்த பொங்குபவர்களும் எடுத்துக்கொள்கிறார்கள்.
உங்களில் எத்தனை பேர் பெண்களை அல்லது அழகையே ரசிக்காதவர்கள்? மனைவியை தவிர மற்ற பெண்களை, காமமற்ற தோழியாகவோ, தங்கையாகவோ, தாயாகவோ பார்ப்பவர்கள்?? பார்ன் பாக்காதவர்கள்? ஏதோ ஒரு பெயர் தெரியாத பெண்ணை கண்களால் புணராதவர்கள்? இதோ இப்போதே உடலை காட்டிவிட்டாள் என்பதற்காக ஒரு நடிகையை "தே..." என வார்த்தையால் வன்புணர்ந்திருப்பீர்களே? இரண்டாம் ஜாமத்தில் உழைத்து பணி முடித்து செல்லும் பெண்ணை "இவல்லாம்" என கமெண்ட்டே நீங்கள் அடித்ததில்லையா நியாயமாரே? குழந்தைக்கு பால் வாங்க நூறு இரு நூறுக்கு பேரம் பேசிக்கொண்டிருக்கும் சாலையோர வனிதையரை பார்த்தும் பார்க்காமல் தானே கடந்து போகிறீர்கள்?? எல்லாம் கிடக்கட்டும் தலைவலி என ஒதுங்கும் மனைவியை இழுத்து புணராதவர்கள் மட்டும் கையை உயர்த்துங்கள் பார்ப்போம்?
மானம் குறித்து முன்பு சொன்னேனே, அந்த சன்னி லியோன் போட்டோ. அதற்கிட்ட பின்னூட்டம் தான் நான் உங்கள் எல்லோருக்கும் சொல்லவிரும்புவது. லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் ஏதோ அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிகழ்வு போல் ஆகிவிட்டது. உழைப்பவர்களை ஏய்ப்பத்தை எல்லா மட்டங்களிலும் நாம் நிகழ்த்தி வருகிறோம். லஞ்சம் கொடுப்பதற்கு உங்களுக்கு கூசாத போது, சாதி சாயத்தை உடல் முழுக்க பூசிக்கொள்ள உங்களுக்கு கூசாத போது, உடலை காட்டி நடிப்பது கேவலமான பிழைப்பு கிடையாது ஐயா. விபச்சாரி கூட உழைப்புக்கு ஊதியம் வாங்கும் போது, ஊதியம் போக லஞ்சம் வாங்க, கடமையை மீறும் அல்லது, அதை ஊக்கவிக்கும் நம்மை விட ஸ்ருதியும், பூனம் பாண்டேவும், சன்னி லியோனும் ஆயிரம் மடங்கு நேர்மையானவர்கள், நல்லவர்கள் தாம்!
பின் குறிப்பு : அழகை ரசியுங்கள். இது அழகல்ல, ஆபாசம் எனில் தவிர்த்து விட்டு செல்லுங்கள். நீங்கள் புலம்ப, புலம்ப இது என்ன மேட்டர்ன்னு தெரியாவதவன் கூட வந்து பாப்பான். உங்க பிரச்சனை அந்த பொண்ணு காட்றதா? இல்ல பசங்க பாக்குறதா?
Wednesday, February 6, 2013
மா சே துங்கின் வண்ணத்துப்பூச்சி!
வேச'தாரி
புணர்ந்து களைத்த மூன்றாம் ஜாமமொன்றில்
அப்பெயர்தெரியாதவளை உசுப்பிக் கேட்டேன்
"பெண்ணுரிமை குறித்து என்ன நினைக்கிறாய்?"
"நினைத்தவரை புணர்வதும்
நினைத்த வரை புணர்வதும்"
என்றாள்.
மா சே துங்கின் வண்ணத்துப்பூச்சி!
மா சே துங்கின் வண்ணத்துப்பூச்சி ஒன்று
மாண்டு போனது
ஓவென்று அரற்றினார்கள்
அழுது புரண்டார்கள்
கொடியெல்லாம் அரை கம்பத்தில் பறக்க விட்டார்கள்
புரட்சி கீதம் பாடினார்கள்
மௌனமாய் மெழுகுவத்தி ஏந்தி நடந்தார்கள்
நல்ல நகைச்சுவைக்கும் சிக்கனமாய் சிரித்தார்கள்
மகிழ்ச்சியாய் இருந்தவர்களை இரக்கமில்லாதவர்களே என தூற்றினார்கள்
மூன்றாம் நாள் வாடை அடிக்கையில் உறைத்து
புதைக்க மறந்த வண்ணத்துப்பூச்சியை ஜன்னல் வழி வீசி எறிந்தார்கள்
அது குப்பை தொட்டிக்கு அருகே விழுந்தது!
Tuesday, January 8, 2013
வன்புணர்வு - உடை - சமூக வக்கிரம்
இந்திய/தமிழ்ச் சூழலில் இக்கட்டுரை எழுப்பப்போகும் எனக்கான எதிர்வினைகளை நங்கு உணர்ந்தே இதை எழுத தொடங்குகிறேன். நிறைய எழுத இருந்தாலும், நேர பற்றாக்குறையால் பெரும்பாலான சொற்கள் எழுதாமலேயே கிடக்கின்றன. அதற்கு முன்னதாக மீனா கந்தாசாமி அவுட்லுக்கில் எழுதிய இக்கட்டுரையையும், நீண்ட நாள் கழித்து நான் எந்த விவாதமுமின்றி ஒத்துக்கொள்ளும் வகையில் ஜெமோ எழுதிய இதையும் படித்து விடுங்களேன்.
நண்பர் @Alexxious ஒரு கீச்சிட்டிருந்தார்.
“வன்புணர்வுக்கு காரணம் உடை என்கிறவன் ஆண் குறியால் சிந்திக்கிறான் !!”
நைச்சியமானதோரு முள் குத்தல். இந்த சமூகமும் அதன் மனிதர்களும் வெளித்தோற்றத்தில் மாறிய அளவுக்கு உட்புறம் மாறவில்லை. அழுக்கு பிடித்த அசிங்கமான கருத்தியலை அனைத்து மட்டத்திலும் நாம் காண முடிகிறது.
இரவு பதினோரு மணிக்கு ரோட்டில் சென்று கொண்டிருந்த போது, எதிரே விருட்டென கடந்த ஒரு ஸ்கூட்டியை “தேவடியா, எங்க போய் சுத்தீட்டு வருதோ” என்றான் நண்பன் ஒருவன். அவள் யாரென்று சொல்ல யார் அவனுக்கு உரிமை அளித்தது? அவள் மருத்துவமனையில் இருக்கும் அவள் தாயாரைக்காண செல்லலாம், குடும்ப சூழ்நிலை காரணமாக கால் சென்டரிலோ வேறு எங்கோ வேலைக்கு செல்லலாம், இவ்வளவு ஏன், அவள் பப்பிற்கு கூட செல்லட்டுமே. அவளைத் தேவடியாளாக்க உங்களுக்கோ எனக்கோ என்ன உரிமை இருக்கிறது?
வேசிகள் குறித்த குறுங்கவிதை தொகுப்பு புத்தகமொன்றை எழுதிக்கொண்டிருக்கிறேன். அதில் ஒரு சின்ன ஹைக்கூ இது.
“எங்களை விட நீங்கள் ஒன்றும் மோசமில்லை தான்
நாங்கள் உடம்பை விற்கிறோம்
நீங்கள் ஆன்மாவை”
பெண் என்பவள் பலவித கட்டுப்பாடுகளுக்கு ஆட்பட்டவள் என்ற மன நிலை, சிறு வயது முதலே புகட்டப்பட்டு வரும் சமூகமிது. இதில் எந்த பேதமுமில்லை. பல பெண்களே, இந்த கட்டுரையின் பின்னூட்டத்தில் நாங்கள் எப்படி ஆண்களுக்கு இணையாக முடியும் என்று கேட்டாலும் கேட்பார்கள். அப்படித்தான் நாம் வளர்க்கப்பட்டு இருக்கிறோம்.
பெண்களே பெண்களுக்கு எதிரி என்ற கூற்றை மெய்பிப்பது போல, எந்ததாயும் தன் பெண்ணை ஒரு “ஆணாக” வளர்க்க முன்வருவது இல்லை. அடக்கம், ஒழுக்கம், கற்பு என்ற பெயரில் பல ஆண்டுகளாக பெண்கள் சுரண்டப்பட்டு வருகிறார்கள். எத்தனை பேர் ஆண்களின் கற்பு குறித்து விலாவாரியாக பேசுகிறார்கள்?
இவன் உயர்ந்த சாதிக்காரன் இவன் இவளை கற்பழித்திருக்க மாட்டான் என உச்ச நீதிமன்றமே குற்றவாளிகளை விடுதலை செய்கிறது (பன்வாரி தேவி வழக்கு). பல ஆண்டுகளாக பெண்கள் சுரண்டப்படுபவர்களாவே இருக்கிறார்கள், அதுவும் ஜாதி ரீதியில் இது மிகக்கொடுமையானது. ஆனால், இக்கட்டுரை ஜாதி ரீதியை தவிர்த்து விட்டு இன்ன பிற வகைகளை பற்றியே பேசுகிறது. ஏன் எனில், கணவன், அப்பா என பலரால் ஆதிக்கத்துக்கு ஆளாக்கப்படும் படித்த பெண்களுக்கே கூட அது ஆதிக்கம் என்றே புரிவதில்லை.
ஒரு பக்கம் “பெண்கள் என்றால் துணி துவைச்சு போட்டு, ஆணுக்கு பணிவிடை செய்யணுமின்னு” ஆர் எஸ் எஸ் தலைவரும், இன்னொரு பக்கம் மாணவி அண்ணான்னு சொல்லி கதறி இருந்தால் விட்டு இருப்பார்கள், அவள் மீதும் தப்பு இருக்குன்னு ஒரு கிறுக்கு புடிச்ச சாமியாரும் சொல்லும் போது எந்த மதமும் பெண்கள் மீதான அடக்குமுறையில் இருந்து சளைத்ததல்லன்னு தெளிவாகவே அறிய முடியும். மதுரை ஆதினம், எல்லா பெண்களும் ஹிஜாப் அணிய வேண்டும் என்றதும், பாண்டிச்சேரி அரசு போட்ட சட்டங்களும் மொத்தமாக அறிவார்ந்த ஒரு சமூகத்தை குழியில் போட்டு புதைக்கக்கூடியவை.
நேரமின்மையால் சொல்ல வந்த கேள்வி பதில்களை பட்டியலிட்டு விடுகிறேன். பின்னூட்டத்தில் வந்து காறி உமிழும் அறிவு ஜீவிக்களுக்கு பதில் அளிக்கப்படும்.
ஏன் பாலியல் ரீதியான சுரண்டல்கள் பல தளத்தில் நடக்கும் போது, ஆடை கட்டுப்பாடு பற்றி அதிகம் எழுத வேண்டும்?
ஏன் எனில் இங்கு இருப்பவர்கள் எல்லோரும் அறிவு ஜீவி பட்டத்தை தலையில் சுமப்பவர்கள். ஒரு அறிவார்ந்த சமூகத்தின் அடிப்படை அறிவு, ஆணும் பெண்ணும் எப்போதும் சமம் என்பது. இத்தகைய அறிவு ஜீவிக்களே, பெண்களுக்கு கட்டுப்பாடு (ஆடையாகட்டும் எதாகட்டும்) விதிக்கலாம் என்ற எண்ணத்தில் பேசினால், பாமரர்களுக்கு (??!!) எப்படி விளங்க வைப்பது. குடிப்பது தவறென்றால், யார் குடித்தாலும் தவறு தான், பெண்கள் குடித்தால் அதகத்தவறு என்பவன் கூட இன்னமும் பழமை மன நிலையில் இருப்பவன் தான்.
உங்கள் வீட்டுப்பெண்களுக்கு இப்படித்தான்…?
என் வீட்டுப்பெண் அம்மா, மனைவி, மகள் என யாராக இருந்தாலும், அவர்கள் உடை விஷயத்தில் என் தலையீடு இருக்காது. அறிவார்ந்த ஒரு மனிதனின் செயல்பாடு இது தான்.
எதார்த்தத்தில் நீங்கள் சொல்வது சாத்தியமா?
ஒரு காலத்தில் எதார்த்ததில் சாத்தியமில்லாமல் இருந்த பல விஷயங்கள் இன்று சாத்தியம். இது இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னால் மேலாடை அணிய அனுமதிக்கப்படாத பெண்களில் இருந்து செல்போன் வரை எல்லாவற்றிக்கும் பொருந்தும். மாற்றம் நிச்சயம் நிகழும்,அதை நோக்கிய நகர்வின் வேகம் அதில் பங்கெடுக்கும் நபர்களின் கூட்டுத்தொகையை பொருத்தது.
ஆனால், இன்று மினி ஸ்கர்ட் போட்டு என் பெண்ணை வெளியே அனுப்ப முடியுமா?
இன்று ஒரு பெண்ணை இரவிலோ, அல்லது மினி ஸ்கர்ட் போட்டோ அனுப்ப முடியாது என்ற எதார்த்த நிலையை நானும் ஒப்புக்கொள்கிறேன். இங்கே மிக கவனமாக கவனிக்க வேண்டியது, ஆடை குறித்த விவாதத்தில் இரண்டு வகையினர் ஆடை கட்டுப்பாடு குறித்து பேசுகிறார்கள். முதல் தரப்பினர், ஆடை கட்டுப்பாட்டை ஒரு தற்காலிக நிலைப்பாடாக்கி, சமூக மாற்றத்தை முதன்மையாக கோருகிறார்கள். அவர்கள் குறித்து நமக்கு பிரச்சனை இல்லை. அது தான் நமது கருத்தும். இரண்டாவது தரப்பு, பெண்கள் தனக்கு கீழானவர்கள் என்ற அடி மன பழமைவாத புழுப்பிடித்த சாக்கடையிலிருந்து அள்ளித்தெளிக்கும் முத்துக்கள் தான் பிரச்சனையே!
ஒரு பெண் ஆடை குறைவாக அணிந்தால் Provoke ஆகாதா?
Slut walk என்று ஒரு போராட்டம் இருக்கிறது தெரியுமா? ஒரு பெண் நிர்வாணமாகவே வந்தாலும் அவளைத்தொட எந்த ஒரு ஆணுக்கும் அனுமதி இல்லை என்ற கருத்தை வலியுறுத்துவது அது. அதை அப்படியே நான் வழி மொழிகிறேன். ஒரு பெண் எப்படி இருந்தாலும், அவள் உங்கள் மனைவியாகவோ, ஏன் வேசியாகவோ இருந்தாலும் கூட வன் புணர்ச்சி செய்ய உங்களுக்கு உரிமையில்லை. அப்படி செய்பவன் ஆணே இல்லை என்ற கருத்தை வளரும் ஆண் தலைமுறையின் மனதில் விதைக்க வேண்டும்.
ஆடை கட்டுபாடு கற்பழிப்புகளை குறைக்குமே?
அது ஒரு தற்காலிக மன நிலை எனில் பிரச்சனை இல்லை என முதலிலேயே சொல்லியாயிற்று, ஆனால், இது கற்பழிப்புகளின் எண்ணிக்கையை குறைக்கும் என்பது முட்டாள்தனம். 13 வயது, 5 வயது சிறுமியை எல்லாம் Provoked ஆ வா கற்பழிச்சாங்க??? உங்களை பொறுத்த வரை பெண்களை எல்லாம், "இதப்போட்டுக்க" என உத்தரவிடுவது சுலபம். ஆனால், ஆண்களுக்கு கற்றுத்தருவது கடினம். அதுதானே?
இது ஒரு பெரிய சமூக மாற்றம் தான் ஒத்துக்கறேன். அதுக்காக ஊரெங்கும் கொசு என கொசு வலை போர்த்திக்கொண்டு அலைய முடியாது. கொசு ஒழிப்பு தான் ஒரே வழி.
மீண்டும் மீண்டும் சொல்கிறேன். இப்போதைய நிலையில் தற்காலிக தீர்வாக ஆடை கட்டுப்பாட்டை முன் வைப்பவதற்கும், ஆர் எஸ் எஸ் ப்ஓல, அவர்களையும் சூழ்நிலையையும் பயன்படுத்தி மீண்டும் பெண்களை வீட்டுக்குள் தள்ளும் முட்டாள்களுக்கும் வேறுபாடு உண்டு. புரிந்து கொள்ளுங்கள்.
Sunday, December 23, 2012
ஆடை குறைப்பு - எதிர்வினை - விவாதம்
எனது பாலியல் வன்முறைகளும் பசப்பல்களும்! கட்டுரையை படித்த நண்பர் கணேஷ் வசந்த் ஆற்றிய எதிர்வினை இது.
அன்புள்ள கணேஷ் வசந்த்,
ஜெயமோகன் தளத்தை நிறைய வாசிப்பதாலோ என்னவோ, இப்படி தொடங்கவே வருகிறது. ஆனால், பயப்படாமல் படியுங்கள், அவரைப்போல மெலோ ட்ராமாவோ, உங்களை இனி மேல் சந்திக்க விரும்பவில்லை போன்ற எச்சரிக்கைகளோ விடுக்கப்போவதில்லை.
எனது காமம் குறித்த கட்டுரையை நீங்கள் படிக்கவில்லை என்ற முடிவிற்கே நான் வர வேண்டியுள்ளது. ஏன் எனில் அதில் நான் பதிலளித்த பல கேள்விகளை நீங்கள் மீண்டும் எழுப்பி உள்ளீர்கள். கற்பழிப்பு குறித்தும் அதற்கான தண்டனை குறித்தும் நாமிருவம் சற்றேறக்குறைய ஒரே மன நிலையில் இருப்பதாக படுகிறது. எனவே ஆடை சுதந்திரத்தை பற்றி மட்டுமே இப்பதில் கட்டுரை பேசக்கடவுது.
முதலில் ஒன்றை தெளிபடுத்திக்கொள்வோம். பெண்களின் உடை பற்றி கருத்து சொல்லும் உரிமை நம்மிருவருக்கும் இருப்பதால் தானே இந்த விவாதமே நடக்கிறது. ஆனால், கருத்தை தெரிவிக்கும் உரிமையும், கருத்தை திணப்பதும் வேறு வேறு என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் என்றே நம்புகிறேன். சானியா, விளையாடும் உடை எனக்கு ஆபாசமாக படுகிறது என்று நான் சொன்னால் அது என் கருத்து. அதையே “சானியா இந்த உடை அணிந்து விளையாடக்கூடாது என்றோ, இந்த உடையைத்தான் அணிய வேண்டும்” என்றோ கூறுவது கருத்து திணிப்பு. அதை நான் நேரடியாக அவரிடம் சொன்னாலும், அறிக்கையாக வெளியிட்டாலும் அது திணிப்பே தான். எனவே, கருத்து சொல்ல உங்களுக்கு பூரண உரிமை உண்டு. நீங்களே சொன்னதைப்போல உங்கள் வீட்டு பெண்ணே ஆனாலும் திணிக்க உரிமை இல்லை.
“இன்னொரு ஹைதர் அலி காலத்து வசனம் வச்சிருக்காங்க, “பெண்களோட ஆடைல இல்ல குறை அதை பார்க்கும் ஆண்கள் கண்ணில் தான் இருக்கிறது குறை”ன்னு, இந்த வசனத்த ஆட்டோல எழுதிப்போடும் நாளை ஆவலோடு நான் எதிர்பார்கிறேன்! இத ஒரு வாய்ப்பா எடுத்துக்கிட்டு பெண்களுக்கு ஒரு விசயத்த சொல்ல விரும்புறேன், நீங்க சொன்னாலும் சொல்லாட்டியும் ஆண்களோட கண்கள் காமப்பார்வைன்கிற குறை அதிகம் உள்ள கண்களே, இது ஒரு அசிங்கமான குணம்தான், சந்தேகமே இல்ல”
இல்லை, கணேஷ் இதை அப்படி எடுத்துக்கொள்ளக்கூடாது. இது இயற்கை. இது இல்லாமல், எதுவுமே இல்லை. பெண் இதே போல ஆணை பார்ப்பதில்லை என்பதெல்லாம் பொய் கணேஷ். கடந்த வாரம் உலகம் அழிந்தால் என்ன செய்வீர்கள் அதற்கு முந்தைய நாள் என்ற கேள்வியை “18-21” வயதுள்ள பெண்களிடம் கேட்க நேர்ந்தது. அவர்களின் விடையில் “டேட்டிங்க்” தவறாமல் இடம் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான பெண்களின் மொபைலில் சூர்யாவின் சட்டையற்ற படம் வால்பேப்பராக இருந்ததை சாட்சியாக பார்த்த அனுபவம் உண்டு. அவர்களுக்கு அதை வெளிப்படுத்தும் ஸ்பேஸ் இல்லை.
இந்தப்பார்வையை இரண்டு வெவ்வேறு கோணங்களில் இருந்து ஆராய்வோம்.முதலில், இயற்கை விதியின் படி ஆண் மீது பெண்ணும், பெண் மீது ஆணும் கவர்ச்சி கொள்வது இயல்பு. இந்த இயல்பே, எந்த ஒரு இனத்தின் (மனித/மிருக) பெருக்கத்திலும் பங்கு வகிக்கிறது. இரண்டாவது வரலாற்று ரீதியானது. நமது வரலாற்றில் பல்லாயிரக்காண ஆண்டுகளுக்கு தாழ்த்தப்பட்ட மக்கள் மேல் ஆடை அணியவே (ஆண்/பெண்) உரிமை மறுக்கப்பட்டனர் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்றே நம்புகிறேன். (இங்கே மீண்டும் ஒரு விஷயத்தை எல்லோரும் குறித்துக்கொள்ளுங்கள், சென்ற கட்டுரையும், அதற்கான வசந்தின் எதிர்வினையும் மேல் மட்ட/ நடுத்தர – பொதுவெளியில் நடமாடும் பெண்களை குறித்தே எழுதப்பட்டது. பழங்குடியின/தலித்/இலங்கை இவை எல்லாம் இதில் சற்றும் தொடர்பில்லாதவை.)
மேற்கத்திய கலாச்சாரம் மாறிய அளவிற்கு இந்தியாவில் கலாச்சாரம் மாறாத (வளராத என்றே நான் குறிப்பிடுவேன்) தற்கு ஏகப்பட்ட காரணிகள் உண்டு. அதில் நாம் காலனியாக இருந்தது, நமது பொருளாதார நிலைமை, இஸ்லாமிய இந்துத்வா பழமைவாதிகள் போன்றவை முக்கியமானவை. இவை பெண்ணை ஆணிலிருந்து வேறுபடுத்தி ஆணாதிக்க மனோ நிலையை வளர்த்தவை. இதில் ஹிஜாப் பற்றியேல்லாம் நான் பேச ஆரம்பித்தால், ஹைதர் அலி காலத்திலிருந்து தோண்டி எடுத்து என்னை திட்டுவார்கள் என்பதால், அதை விட்டு விட்டு பெரும்பான்மை சூழலை கவனிப்போம்..
உங்கள் ஆடை கட்டுப்பாடு குறித்த காரணங்களுக்கான எதிர்வினையாற்றும் முன், ரவிக்கை முகலாயர்கள் கொண்டுவந்தது என்பதனை நினைவில் கொள்க. நீங்கள் சொல்லும் அனைத்தும் நிதர்சனம் குறித்த உங்கள் கவலைகளின் பரிணாமம் என்றே பார்க்கிறேன். ஆனால், நீங்களும் மாற்றம் நிகழும் போது அதில் ஒத்திசைவோடு பங்கேற்பீர்கள் என்றே நம்புகிறேன். அதே போல சினிமா பார்த்து விட்டு அதில் போடும் உடைகள் தான், “சுதந்திர உடைகள்” ந்னு நினைக்கும் மனப்பாங்கு உள்ளவர்களை விட்டுவிடலாம்.
காரணிகளில் வராத இது :
“ஆனா இந்த மாதிரி அசிங்கமான குணம் ஆண்களுக்கு இருக்குங்கிறது நிச்சயமா பெண்களுக்கு தெரியும்னு நான் நம்புறேன்! பெண்களுக்குள்ள சிறப்பு குணம் அது! ஆனா அப்பிடி தெரிஞ்சும், பெண்கள் ஆடைக்குறைப்ப செய்யறது... ஆணோட மோசமான பார்வைய அங்கீகரிக்கிறது மற்றும் தூண்டுவது மாதிரியான செயல்தானே? இது ஒரு தப்பான தூண்டுதல்ன்னு நெனைக்கிறேன். “
இஸ்லாமியர்களிடம் ஹிஜாப் (பர்தா) குறித்து நியாயம் கேட்டால், ஒரு பெண்ணின் முகமே பாலியல் ரீதியாக உணர்ச்சிகளை தூண்டக்கூடியது என்பார்கள். நான் சொல்கிறேன், குரலே பாலியல் ரீதியில் ஒரு ஆணை தூண்டக்கூடியது. ஸ்ரேயா கோஷலின் குரலில் “மாஜா மாஜா” பாடல் கேட்டு இருக்கிறீர்களா? (சில்லுன்னு ஒரு காதல்). அதைக்கேட்ட பின்னும் குறியில் ஏதேனும் மாற்றம் ஏற்படாவிட்டாலும் கூட மனதிலாவது காமத்தின் சாயல் படிந்தே தீரும் எந்த ஒரு ஆணுக்கும். ஒரு பெண் சிரிப்பதை பார்த்தால் கூட காம உணர்வு ஏற்படும் தான். இது உடை விஷயத்தில் மற்ற எதனையும் விட அதிகம் என்பதை உங்கள் வழி நின்று நானும் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், “சேலை” தான் உலகின் மிக செக்ஸியான (பாலியல் ரீதியில் ஒரு ஆணை கவர்ந்திழுக்கக்கூடிய உடை) “சேலை” தான் என்கிறேன். இது குறித்த மேலதிக தகவல்களை நீங்கள் லக்கி போன்ற ஆன்றோர்களை கேட்டும் தெளிவடையலாம். நிச்சயம் ஒரே விடீயோக்களை லைக் செய்திருக்கும் எங்கள் கருத்து மாற வாய்ப்பில்லை. எனவே, ஒரு பெண் உங்களை ஆடை குறைப்பு செய்து தான் தூண்ட வேண்டும் என்பதல்ல, ஒரு களுக் சிரிப்பில், கொஞ்சல் பார்வையில் சாய்த்து விடலாம். நீங்கள் சொல்வது போல, 99 சதவீத பெண்கள் தங்களை ஆண்கள் பார்க்க வேண்டும் என விரும்புவார்களே தவிர, தங்கள் அந்தரங்கத்தை ஆண்கள் பார்க்க வேண்டும் என கடைவிரிக்க மாட்டார்கள். அந்த உடை அவர்களின் சவுகரியம் கருதியே. இன்னொன்று, அப்படியே அப்பெண்கள் (மிகச்சொற்பமான எண்ணிக்கையில்) “காட்டுவதற்காகவே” உடையணிந்ததாய் உங்களுக்கு தெரிந்தால், “அதை பார்ப்பது” ஆண்களின் இயல்பே. இயற்கை நியதி அது. பிம்பம்கள் புணரப்படுவது (மனதளவில் நீங்கள் குறிப்பிட்ட நிலை) இயற்கையே.
இனி நீங்கள் ஏன் பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடு தேவை என்றீர்கள் என்பதையும், அதற்கு நீங்கள் அடுக்கும் காரணங்களையும் அவறிற்கான பதிலையும்/ எதிர் கேள்வியையும் பார்ப்போம்.
1. நீங்கள் கோவிலில் பூசாரியை எப்படிப்பார்க்கிறீர்கள்? கிண்டலாகவாகவா? முதல் பட்டன் கழட்டி விடும் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே ரீதியிலான கிண்டலோ/கேலியோ/எரிச்சல் மனப்பான்மையோ எதிர் பாலினத்திடம் இருந்து கிடைக்கிறதா? கேலியும் கிண்டலும் அளவு மீறாம இருக்கற வரைக்கும் பிரச்சனை இல்ல. கிண்டல் வேற, Bullying வேற, ரேப் வேற
2. இது தான் உண்மை நிலவரம். ஒத்துக்கறேன். ஆனா, இதை மாற்றணுமின்னு தானே கரடி மாதிரி கத்திகிட்டு இருக்கேன். எதார்த்தம் இது தான்னு நானும் நீங்களும் பேசுவது மாதிரியே, நாளைக்கு உங்க பையனும் என் பையனும் பேசிக்க கூடாதுன்னு ஆசைப்படுறேன் அது தப்பா? சமூகம் அப்படி பாக்குதுன்னு பழிய தூக்கி போடாதீங்க. யாருங்க சமூகம்? நீங்களும் நானும் மாறுற மாதிரி நம்மள உள் அடக்கிய இந்த சமூகம் மாறமால போயிடும். கலிலியோ சொன்னப்ப ஒட்டுமொத்த சமூகமும் அவருக்கு எதிராத்தான் இருந்துச்சு. உலகம் தட்டைன்னு எழுதி கொடுத்த அப்புறம் தான் அவருக்கு மரண தண்டனையில இருந்தே விடுதலை கிடைச்சுது. சமூகம் சொன்னதுனால் உலகம் தட்டையா என்ன? நாம் பேசுவது இன்றைய சமுதாயத்தை பற்றி மட்டும் அல்ல, வரும் காலத்தின் இந்த சமுதாயத்தின் போக்கையுன் குறித்தே என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, நான் அடுத்த வீட்டு பெண் பற்றி மட்டுமல்ல, என் மனைவி, என் மகள் என அனைவரையும் உத்தேசித்தே பேசுகிறேன்.
3. நீங்கள் சந்தித்த பெண்களை போன்றவர்களை நானும் சந்தித்தே உள்ளேன். இன்றைய சூழ் நிலையில் பெரும்பான்மை பெண்களுக்கான அரசியல்/சமூக அறிவு மெருமளவில் வளரவில்லை. இது குறித்து எந்த பெண்ணும் பின்னூட்டத்தில் என்னை கேள்விகேட்க மாட்டார். ஏன் என்பதற்கு ஒரு சிறிய காரணம், இங்கே வந்து இந்த தலைப்பை படிக்கும் பெண்களில் பெரும்பாலானோர் தங்கள் தோழிகளில் பலருக்கு இவற்றில் உள்ள ஞானத்தின் அளவை அறிந்திருப்பர். இவர்கள் பேசும் போது கூட “மொக்க போடாதடீ” என்ற பதிலே இவர்களுக்கு கிடைத்திருக்க கூடும். ஒரு வேளை பெண்கள் குறித்த என் புரிதல் தவறாகவும் இருக்கலாம். அப்படி இருந்தால் , இந்த பத்திக்காக நான் நிபந்தனையற்ற மன்னிப்பை கோருகிறேன்.
4. “அந்த மாதிரி ஆடை” – இது ஒரு சமூக நோய்கூறு மன நிலை வசந்த். என் மனதளவில் சொல்லுகிறேன். அந்த உடையில் ஆசிரியரையும், மருத்துவரையும் நான் ஏற்பேன். எவ்வித தயக்கமும் இல்லாமல். இத்தனைக்கும் என் தாய் ஒரு ஆசிரியை. உங்களுக்கு தெளிவாகவே விளக்குகிறேன். நீங்கள் நெருங்கிய ஒருவரின் சிகிச்சைக்காக மேற்கத்திய நாடு செல்கிறீகள் என்று வைத்துக்கொள்வோம். அங்கே இருக்கும் மருத்துவரின் ஆடையை பார்த்துவிட்டு திரும்ப வந்துவிடுவீர்களா? இதற்கு பதிலாக கலாச்சாரத்தை இழுக்காதீர்கள். இந்த கலாச்சாரத்தின் பெரும் பகுதி வழக்கொழிந்த குப்பை. கொஞ்சமே கொஞ்சம் இருக்கும் நல்ல விசயங்களுக்காக மொத்த கலாச்சார குப்பையும் சுமக்க முடியாது. நீங்கள் இதை படிக்குமாறு மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். அடுத்து, பன்னாட்டு நிறுவனங்கள். வசந்த், அது நம்மை அடிமையாக்கும் ஒரு முயற்சி தான். ஆண்களுக்கு கூடத்தான் “பார்மல்” பேண்ட் சர்ட் அணிந்து வர வேண்டும் என்ற விதி உள்ளது. அதன் அர்த்தம் நமது டீ-ஷர்ட் நம்மை ஆபாசமாக காட்டுகிறது என்பதா? சரி, ஒரு நிறுவன கழிவறையில் டன் கணக்கில் காண்டங்கள் கண்டுஎடுத்ததை இக்கட்டுரையில் குறிப்பிட்டேனே? எதிர் வினையை எதிர்பார்க்கிறேன்.
5. வசதி – ஆண்கள் ஆடை குறைப்பு – என்ன வசந்த் நம்ம இருவத்தி நாலு மணி நேரமும் ட்யூட்டிலயேவா இருக்கோம்? இல்ல, வாக்கிங்க் போறப்பையோ, பக்கத்து தெருவுக்கோ லுங்கில இல்லாம , டை கட்டிட்டு தான் போறீங்களா? டூர் போகும் போது எல்லாம் டீ-ஷர்ட் ஜீன்ஸா இல்ல பார்மல் டக்-இன்னா?
இதை விட வசதியான உடை உடுத்தும் பெண்கள்//// இத கேட்டா எனக்கே டென்ஷன் ஆகுது வசந்த். பெண் வேஷம் போட்ட நடிகர்களோட பேட்டிய படிங்க அந்த உடைகளின் சிரமம் புரியும்.
அடுத்து தன்னம்பிக்கை. உடைக்கும் தன்னம்பிக்கையும் சம்மந்தம் இருக்குன்றத ஒத்துக்குவீங்கறத நம்புறேன். புது உடை நமக்கு தன்னம்பிக்கை அளிப்பது போல. மீண்டும், நீங்க தடுமாறுறத நான் தான் இயற்கைன்னு ஒத்துக்கறேனே. நீங்க தடுமாறுறீங்கன்ற காரணத்துக்காக உடைகளை ஏன் மாற்றணும். நான் சொன்னது போல ஒரு பெண்ணின் பார்வை, சிரிப்பு கூட என்னை தடுமாற வைக்கும் (உண்மை தானே?) அப்போ சிரிக்கவும், பேசவும் கட்டுப்பாடு விதிச்சிடலாமா?
அடுத்து பெண்கள் ஏன் பெண்களுக்கான உடை சுதந்திரத்தை ஆதரிக்கிறார்கள். இது இருக்கட்டும். நான் கேட்கிறேன். உங்களுக்கு, இந்த பார்மல் பேண்ட் போட்டுட்டு வேலைக்கு வான்னு சொன்னப்ப கொஞ்சம் சங்கடமா இல்ல. சரி, நாளைக்கே உங்க கம்பேனி “கோட்-சூட்” போட்டுட்டு கோபி ஸ்டைல வந்தாத்தான் உள்ள விடுவோம்ன்னு சொன்னா போராட மாட்டீங்க?
சரி, பெண் ஆணை ஈர்க்கை முயற்சிப்பதற்காக உடை அணிகிறாள் என்ற உங்கள் வாதிற்காக கேட்கிறேன். ஆண் ஒரு பெண்ணை ஈர்க்க தனது திறமைகளை வெளிப்படுத்தி வழியும் போது, அதை பெரிய தவறென பார்க்காத நீங்கள், ஒரு பெண் ஒரு ஆணை வசீகரிக்க முயல்வதில் ஏன் குற்றம் காணுகிறீர்கள்? நீங்கள் ஆர்ம்ஸ் ஏற்றிக்காட்டுவது எதற்கு? எதிர்த்த வீட்டு மாமாவின் அன்பை பெறவா? பெண் ஒரு ஆணை கவர முயற்சிப்பதும் இயற்கை என்ற ரீதியிலேயே நான் பார்க்கிறேன். இது தேவை இல்லாத/ சிறு பிள்ளைத்தனமான ஒரு கவர்ச்சி முயற்சியே ஆனாலும் அது இயற்கையின் நியதி என்றே பார்க்கிறேன் நான்.
நீங்கள் சொல்வது போல, சில நோய்க்கூறு மன நிலை உடைய ஆண்கள் பெண்களின் இந்த உடையை ஒரு குறையாக சொல்லிவிடக்கூடாது என்ற உங்களது கவலையை ஒப்புக்கொள்ளும் அதே சமயத்தில் , இதற்கான தீர்வாக தலைமுறை வழியாக மெல்ல ஒரு மாற்றத்தை ஆண்கள் மனதில் ஏற்படுத்தாமல் ஆடை கட்டுப்பாட்டை அதற்கு தீர்வாக சுட்டுவது ஏமாற்றத்தையே அளிக்கிறது.
இதற்கு மாற்றுத்தீர்வாக பாலியல் கல்வி, Value based education , பெண்-ஆண் இடையேயான புரிதல் வளர்த்தல், இரண்டு பேருக்கும் ஆன்மா ஒன்று தான்- கூடு தான் வேறு என அறிய வைத்தல் என பல அடுத்த தலைமுறைக்கான தீர்வுகளை பேசி இருந்தேன். அது குறித்து நீங்கள் பேசாததும் வருத்தமே அளிக்கிறது. எனக்கு நான் வருங்காலத்தில் செய்ய வேண்டியதை சொல்வதாகவும், நீங்கள் நிகழ் காலம் குறித்த உங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துவதாகவுமே படுகிறது.
நீங்கள் என்னை மேற்கத்திய பித்தன் என்றே தூற்றினாலும் கூட கவலையில்லை. அப்படிப்பட்ட கட்டடற்ற ஒரு உடை சுதந்திரத்தை தான் நான் விரும்புகிறேன். “கோவா”வில் நுழைந்த போது முதலில் எனக்கு தோன்றிய கேள்வி “இவர்களுக்கு எல்லாம் எப்படி மூடு வரும்” என்பதாகத்தான் இருந்தது. சற்று நாட்களில் என்னால் மார்பை , பால் கொடுக்க பயன்படும் உறுப்பின் உபரிச்சதையாக என்னால் பார்க்க முடிந்தது. கண், காதை பார்ப்பதைப்போல.
இப்படி பார்க்கும் ஒரு தலைமுறையைத் தான் நான் உருவாக்க முயற்சிக்க வேண்டுமே அன்றி, கட்டுப்பாடுகளை விதிக்கலாகாது, நீங்கள் சொல்லும் கட்டுபாடு ஒரு வேளை இடைக்கால ஒரு தீர்வாக அமையுமேயன்றி முற்றான தீர்வாகாது. நிதர்சனம், சமூகம் என்ற போர்வையில் நான் சாதியையோ, தீண்டாமையோ நியாப்படுத்தினால் உங்களுக்கு வரும் கோபம் போன்றதே, இந்த விசயத்தில் உங்களுக்கு நிகழ்ந்த எதிர்வினைகளும். தயவு செய்து, நிதர்சனத்தை பேசும் போது, இப்போது நிதர்சனம் இப்படி இருக்கிறது. வருங்காலத்தில் இவையெல்லாம் செய்ய வேண்டும் என்பதை பட்டியலிடும் பொதும், அதன் தொலை நோக்கை ஆராய்ந்து பாருங்கள். மற்றவரின் இடத்திலிருந்தும்.
நன்றி
கூத்தாடி
நன்றி
கூத்தாடி
Subscribe to:
Posts (Atom)






