வழக்கம் போல இதுவும் ஒரு உண்மைக்கதையே, பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. :) மற்ற கதைகளை பிரபலமான இடுகைகளில் பார்க்கவும்.
ரிச்சர்ட் அந்த ஹாலுக்குள் நுழையும் போது நான்
பேசிக்கொண்டிருந்தேன் .
அன்று என்
வாழ்வின் முக்கியமான நாட்களுள் ஒன்று . “ சாலமன் பாப் பையா ” தலைமையிலான பட்டி மன்றம் ஒன்றில் பேசிக்கொண்டு இருந்தேன் . என் அணியில் நான் தான் கடைசி , எனக்குப் பின் தீர்ப்பு தான் . எதிர்பாராத விதமாக வர வேண்டிய பேச்சாளர் ஒருவர் வர முடியாமல் போக கடைசியாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான நானே பேச வேண்டியதாகிவிட்டது . இப்போது பேசிக்கொண்டு இருப்பது ஒரு மணி நேரத்தில் தயார் செய்தது . தலைப்பு கொஞ்சம் எளிது தான் “ காதல் திருமணமா அல்லது நிச்சயிக்கப்பட்ட திருமணமா ?” இந்தக் காலத்தில் எது செல்லும் ?. அது என்ன கருமமோ தெரியவில்லை பல ஆண்டுகளாக இதே தலைப்பில் ஓட்டிக்கொண்டு இருக்கிறார்கள் . நான் காதலின் பக்கம் . அட , இங்கே எல்லோருமே காதலின் பக்கம் தான் . சில தவறான தேர்வுகள் நம்மை காதலை வெறுக்க வைத்து விடுகின்றன .
“ ராஜா சொன்னாரு பெத்தவங்க பாத்து கல்யாணம் செஞ்சு வெச்சா எதாவது பிரச்சனைன்னா அவங்க பாத்துப்பாங்களாம் . ஏன் சார் , ஆரம்பிக்கும் போதே ஏன் சார் பிரச்சனைய பத்தி பேசரீங்க ?. காதல்ன்னு ஒரு விஷயம் இல்லன்னா நம்ம சமுதாயத்துல இருந்து ஜாதி மதத்தை ஒழிக்கவே முடியாம போயிடும் சார் . அரேஞ் பண்ணப்பட்ட தி \ ருமணம்
ஒரு வியாபாரம் சார் . அந்த மாதிரி திருமணங்கள்ல ஒண்ணே ஒண்ணு வரதட்சனை இல்லாம நடந்துச்சுன்னு சொல்லுங்க பாப்போம் ?”
மேலும் சில வினாடிகள் நான் பேசிவிட்டு அமர்ந்தேன் . பாப்பையா எங்கள் பக்கமே தீர்ப்பு சொன்னார் . அது எங்களுக்கு ஏற்கனவே தெரிவிக்கபட்டு விட்டதால் சலனமடைய ஏதுமில்லை .
இப்போதெல்லாம் பட்டிமன்றங்க ளில் நான் அதிகம் பேசுவதில்லை . இது எங்கள் “ நேயம் ” குழந்தைகள் காப்பகத்திற்காக நான்
ஒருங்கிணைத்த நிகழ்வென்பதால்
வேறு வழியின்றி பேச வேண்டியதாகிவிட்டது . பட்டிமன்றங்கள் அவளை நியாபகப்பசுத்தி விடுவதால் அதை தவிர்த்து ஓடுகிறேன் . கூட்டம் கலையும் வேளையில் ரிச்சர்ட் என்னிடம் வந்தான் .
“ நாம கொஞ்சம் அவசரமா வெளிய போணும் டா ” என்றான் .
அவசர அவசரமாய் விருந்தினர்களை அனுப்பிட்டு வந்து அவன் பல்சரில் தொற்றும் வரை அவன் காரணம் சொல்லவில்லை . ரிச்சர்ட் என்னோடு இதே “ நேயத்தில் ” வளர்ந்தவன் . இருவருக்கும் எனக்கும் பல ஒற்றுமைகள் . ஒரே கல்லூரியில் பொறியியல் படித்தோம் . நாங்கள் தான் நேயத்தில் இருந்து முதன்முதலில் பொறியியல் சேர்ந்தவர்கள் , திடீர் என அடித்த ஒரு யோகத்தில் ஒரு தொண்டு நிறுவனம் ஸ்பாண்சர் செய்ததில் பொறியியல் பொரியல் ஆக்கப்பட்டோம் J . ஆனாலும் எனக்கு அந்த கருமத்தில் ஈடுபாடே வரவில்லை . ஒரு எழுத்தாளா ன் ஆக வேண்டுமென்பது சிறு வயது கனவு J . அதற்கான முயற்சியில் இருக்கிறேன் . இன்னும் எங்கே போகிறோம் என் று அவன் சொல்லவே இல்லை .
“ மாப்ள … எங்க போறோம் ”, நேயம் சொல்லிக்கொடுக்காத உறவு முறையை கல்லூரி சொல்லிக்கொடுத்து இருந்தது .
“ ம்ம்ம் … சொல்றேன் … டேய் , அதுக்கப்பறம் கவிய பாத்தியா ?”, ரிச்சர்ட் வண்டியை லாவகமாக வளைத்தபடியே கேட்டான் .
“ இல்லடா , சரியா அடுத்த வாரத்தோட மூணு வருஷம் முடியுது ” சொல்லிவிட்டு ரோட்டை வெறித்தேன் .
ஒரு
பைத்தியக்காரப்
பெண் அரைகுறை ஆடையுடன் குப்பை தொட்டியை கிளறிக்கொண்டு இருந்தாள் . ரிச்சர்ட்டின் தோளைத் தொட்டேன் .
“ மாப்ள அப்டி நிறுத்து ”, அவனும் அவளை பார்த்து விட்டு இறங்கினான் .
அவளுக்கும்
எங்கள் வயது தான் இருக்கும் . அழுக்குகளை துடைத்துவிட்டு பார்த்தால் அழகாகவே இருந்தாள் . நல்ல வேளை , அவள் கருவுற்றிருக்கவில்லை . எந்தப் பெண்ணாய் இருந்தாலும் பாழடிக்க இங்கு ஒரு கூட்டமே இருக்கிறது . மனிதம் என்பது வெறும் வார்த்தையாய் போய் விட்ட காலம் இது . இருவருமாய் சேர்ந்து அவளை தூக்கி நிறுத்தினோம் . அவள் கைகளை உதறி பிடிவாதம் காட்டினாள் . ரிச்சர்ட் பாக்கெட்டில் இருந்த ஒரு மிட்டாயை வைத்து அவள் பிடிவாதத்தை தளர்த்தினான் .
எங்கள் நேய
நண்பர் ஒருவரை அழைத்து அவளை ஒப்படைத்து விட்டு கிளம்பினோம் .
“ ரிச்சர்ட் , எங்க தான் டா போறோம் ? எதுக்கு இப்படி அவசர அவசரமா கூட்டிட்டு வர ?”
“ கார்த்திக் , அந்த பொண்ண பத்தி என்ன நினைக்கற ?”, அவன் கேட்டு விட்டு ரோட்டில் கவனத்தை செலுத்தினான் . நாங்கள் இது போன்று பல முறை பேசியுள்ளோம் . பேச பேச ஒரு நாள் தீர்வு பிறக்கும் என நம்பும் சராசரி அரசியல் பேசும் குடிமக ன்கள் தான் நாங்களும் . ஆனால் பேசுவதோடு நின்று விடாமல் இது போன்று செயல்கள் மூலமும் அதை நிஜமாக்குகிறோம் .
“ அவள இத்தன நாள் இந்த நாய்ங்க கெடுக்காம இருந்ததே பெரிய விஷயம் . இந்த ரோட்ல நடக்கற ஒருத்தனுக்கு கூட அவ மானத்த மறக்க ஒரு துணி குடுக்கணும்ன்னு தோணல இல்ல . ஆனா , போற வரப்போ ஓரக்கண்ணால பாக்க மட்டும் செய்வானுங்க . அரபு நாடு மாறி அறுக்கணும் டா .”
“ நீ எழுதி விகடன்ல வந்த ஹைக்கூ ஞாபகம் இருக்கா டா ”
“ ம்ம்ம் ….. சாலை ஓரங்களில் இருக்கும் எதுவும் சரியாய் பராமரிக்கப்படுதில்லை பூங்காக்களும்
தேவதைகளும் கூட .. இதோட அந்த மாதிரி ஒரு பொண்ணோட புகைப்படம் இருக்கும் ”
“ அதே தான் , நாம வாழ்க்கைல எவ்வளவோ பேத்த கடந்து வந்தாலும் சில முகங்கள் மட்டும் தான் நமக்கு மனசுக்கு நெருக்காமானதா மாறிடுது இல்ல ”
ரிச்சர்ட்
சம்பந்தமே இல்லாமல் பேசினான் . இதற்கும் அந்த பெண்ணுக்கும் என்ன சம்பந்தம் என கேட்க நினைத்து விட்டுவிட்டேன் .
“ ரோட்ல எத்தனையோ பேர் அவள கடந்து போனாங்க . யாருக்குமே அவ மானத்த காப்பாத்த ஒத்த துணி குடுக்கணும்ன்னு தோணல இல்ல . இவள மட்டும் இல்ல தெருவோர பைத்தியக்கார பொண்ணுங்க , பேப்பர் பொறுக்கர பசங்க , பசில மயங்கி கெடக்கறவங்க , நம்மள மாதிரி குப்பைத்தொட்டி குழந்தைங்க . . . . . “ , அவன் அதை சொல்லும் போது கலங்கிவிட்டிருந்தான் . ஆம் , நாங்கள் பிறந்த உடன் தூக்கி எறியப்பட்டோம் . நாங்க பொறந்த உடனே
இந்த தருதலைங்களால எந்த பிரயோஜனமும்
இல்லைன்னு முடிவு பண்ணி குப்பத்தொட்டில வீசிட்டாங்க . அங்க இருந்து காப்பாத்தி எங்கள வளர்த்தது ‘ நேயம் ’ தான் . இன்றைய மனிதம் மனிதர்களிடம் காணப்படுவதில்லை . அவை என்றோ , குழி தோண்டி ஆழ புதைக்கப்பட்டு விட்டன .
அவன்
விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தான் .
“ இவங்க , இவங்க யாருக்குமே அக்கறை இல்ல . இவங்க அக்காவையோ தங்கச்சியோ இல்ல அம்மாவையோ இல்ல அவங்க ளையோ அந்த இடத்தில வெச்சு பாக்க அவனுங்க ரெடியா இல்ல . அவனுங்க தங்கச்சிக்கு இப்படி ஒரு நெலம வந்தா உட்டுட்டு ஓடுனாலும் ஓடிருவானுங்க டா , ####### மவனுங்க “.
“ டேய் …”, நான் அவன் தோளைத் தொட்டேன்
.” அடங்கு மச்சான் , எல்லாமே தெரிஞ்சது தான ”.
நாங்கள் கெட்ட வார்த்தை பேசுவது மிக மிக அரிது . இந்த சமூகத்தின் மீதான கோபம் எப்பவாவது அப்படி வெளிப்படும் .
“ சரி டா , கவிய பாத்தியா அதுக்கு அப்பறம் ”, அவன் மீண்டும் கவியை நினைவூட்டினான் .
கவி ~ கவிதா
கவிதா ,
அழகான பெயர் . அவளும் ஒரு கவிதை
தான் . என்னை அவள் சந்தித்தது ஒரு பட்டிமன்றத்தில் தான் . மது , என் வாழ்வில் வந்த தேவதை . அவள் அணிவதாலே யே அந்த சுடிதார் அவ்வளவு அழகு என்பேன் நான் . அவள் கண்களும் விரல்களும் என்னை அவளுக்கு அடிமையே ஆக்கிவிட்டிருந்தன .
“ காதலில் முக்கியமான பிரச்சனை என்னன்னா
நீங்க அந்த பொண்ணையோ , அந்தப் பொண்ணு அந்தப் பையனயோ Impress பண்ணிகிட்டே இருப்பாங்க ஏன்னா இப்ப அவங்களுக்கு Choice இருக்கு . இவங்க புடிக்கல்லன் னா இன்னும் ஒருத்தன் . அதானல இம்ப்ரெஸ் பண்ண வேண்டிய கட்டாயத்துல இருக்காங்க . ஆனா கல்யாணத்துக்கு அப்பறம் தான் சுயரூபம் தெரிய வருது . தங்களின் உண்மையான முகத்த தாங்கிக்க முடியாம தான் விவாகரத்த நோக்கி ஓடுறாங்க . என் கவிதை ஒண்ணு .
உன்
மீது இருக்கும் கோபத்தை
உன்னைத்தவிர
அனைவரிடமும்
காட்டினேன் .
இது
திருமணத்துக்கு
முன்னாடி . ஆனா , திருமணம் முடிஞ்ச பின்னால் இது தலைகீழ் ஆகி விடுகிறது . எனவே , யாரும் காதலிக்கும் போது யாரும் இம்ப்ரெஸ் பண்ண முயற்சிக்காதீங்க ”.
அரங்கில்
கைத்தட்டல் எழ நான் அமர்ந்தேன் . நான் இம்ப்ரெஸ் பண்ண வேண்டாம்ன்னு சொன்னாலும் அது தான் அவள இம்ப்ரெஸ் பண்ணுச்சு .
அவள்
– கவிதா – அழகான என் கவிதா J . எனக்கும் காதலுக்கும் பல மைல் தூரம் . இங்கே எனக்கான வேலைகள் நிறைய இருக்கிறது என்றேன் . அவள் கேட்ட பாடில்லை . பல முறை அவள் முயன்ற பின் அவளிடம் தோற்றேன்
நான் . முழு
விருப்பத்தோடு
தான் தோற்றேன் .
காதல்
வந்த பின் எல்லோருக்கும் சிரிப்பு தானாய் வந்து ஒட்டிக்கொள்ளும் . அதே போலத் தான் எனக்கும் , காதல் என வந்துவிட்ட பிறகு அதில் முழுமையாக இருக்க வேண்டும் என அவளுக்கு பிடித்த எல்லாவற்றையும் செய்தேன் . எல்லா காதலர்களைப் போல இல்லாவிட்டாலும் ஓரளவாவது ஊர் சுற்றினோம் . பேச பேச
குறையாத காதல் . வேலை நேரம் மற்றும் நேயத்தில் நான் ஆற்றும் பணி நேரம் போக மீதி எல்லா நேரமும் அவளோடு தான் .
இரண்டு
வருடம் , என் வாழ்வின் மறக்க முடியாத இரண்டு வருடங்கள் . எனக்கு யாரும் இல்லை என்ற குற்ற உணர்ச்சி சுத்தமாக மறைந்த அந்த இரண்டு வருடங்கள் . எனக்கான உலகமாய் அவள் மாறிய இரண்டு வருடங்கள் . என் காதலை பத்தி ரிச்சர்டுக்கும் , குருவுக்கும் மட்டும் தான் தெரியும் . குரு , 15 வயது சிறுவன் , குருவுக்கு மூளை வளர்ச்சி இல்லை . என்னால் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ள முடியும் அவனிடம் . நாம் சிரித்தால் சிரிப்பான் , அழுதால் அழுவான் அவன் கண்ணாடி போல .
இரண்டு
வருடங்களின் முடிவில் முதன் முதலாக நான் அழுது அவன் பார்த்தான் . எனக்கு , கவியை பார்க்கும் முன் காதல் என்பது ஒரு வடிகட்டிய முட்டாள் தனம் என்றே தோன்றியது .
தன் ரத்தத்தை சோறாக்கி என்னை பெற்றுப்போட்டவளே வேணாம்ன்னு தூக்கி போட்டுட்டு போய்ட்டா காதல் எம்மாத்திரம்ன்னு கேட்டவன் நான் . அவனவன் சோத்துக்கு அலையும் போது , படுக்க இடமின்றி சாக்கடையோரம் படுக்கும் போது , காதலெல்லாம் என்றவன் நான் . அவள் என்னை எவ்வளோ மாத்தினா !! எல்லாத்தையும் மாத்திட்டு நீ மாறிட்டன்னு வேற சொல்றா ! நான் என்ன செய்ய ?
அன்று
நாங்கள் வழக்கமாக சந்திக்கும் அதே பார்க் . ஆனால் வழக்கத்திற்கு மாறாக அன்று இருவரும் இறுக்கமாக அமர்ந்திருந்தோம் . நான்
இ றுக்கமாக
இருப்பது எ னக்கு எப்போதுமே பிடிக்காது .
“ என்ன ஆச்சு இப்போ ”
“ கார்த்திக் ..”, அவள் என் பெயரை கூப்பிடும் அந்த ஒரு வினாடிக்காகவே உயிரையும் தரலாம் . என் பெயரின் அழகே அவள் உச்சரிக்கும் போது தான் தெரிகிறது .
கார்திக் தான் என் பெயர் ஆனால் அவள் உச்சரிக்கையில் ஒரு “ க் ” சேர்த்து , சே கொள்ளை அழகு போங்க .
“ ம்ம்ம் … சொல்லு டா செல்லம் ”
நான் கொஞ்சம் சாதரணமாக தெரிய முயன்றேன் . இது போன்ற வார்த்தைகள் இறுக்கத்தை குறைக்க உதவலாம் .
“ கார்திக் நீ ரொம்ப நல்லவன் டா ”, அவள் வேறொரு புறம் வெறித்தபடியே சொன்னாள் . அவள் இப்படி ஆரம்பித்தால் என்ன பேசுவாள் என எனக்கு நன்றாக தெரியும் . அவள் சரியான சுயநலவாதி . இன்றைய ஹை - டெக் இளைய தலைமுறையின் தழுவல் அவள் . சிறு வயதிலிருந்தே பணம் வந்த வழி அவளுக்கு தெரியாததால் அது போகும் வழியும் அவளுக்கு கவலை தரவில்லை . எப்போதும் தன்னைப்பற்றித்தான் அதிகம் யோசிப்பாள் . ஆனால் அது எனக்கு அவ்வளவு பெரிய பிரச்சனையாக தெரியவில்லை அன்று வரை . ஆம் , அன்று வரை அவள் சுய - நலம் என்ற வார்த்தைக்குள் நானும் அவளும் மட்டுமே இருந்தோம் . ஆனால் , அன்று முதல் நான் இல்லை .
நான்
இன்னமும் ஒரு புன்னகையோடு அவளை பார்த்துக்கொண்டு இருந்தேன் . எனக்கு தெரியாது அவள் இப்போது என்னை வார்த்தைகளால் கொல்லப்போகிறாள் என்று .
“ ஆனா , நீ ரொம்ப வித்தியாசமானவன் டா , நீ ரொம்ப பெருசா யோசிக்கற , நீ கண்டிப்பா எல்லாத்துக்கும் எதாவது செய்வ ”
“ ஏய் … லூசா நீ ? என்னமோ முக்கியமா பேசனும்ன்ன , இப்படி ஒளர்ற ?”
“ இல்ல .. கார்த்திக் , நான் ரொம்ப குறுகலா யோசிக்கறேன் .” அவள் சொல்லிவிட்டு நிமிர்ந்து பார்த்தாள் .
அவளுக்கு என்னை இது போல சீண்ட ரொம்ப பிடிக்கும் . நான் மட்டும் இல்ல டா உன்ன எந்த பொண்ணுமே கட்டிக்க மாட்டா , பேசாம கல்யாணமே பண்ணிக்காத என ஒரு ஆயிரம் முறை சொல்லி இருப்பாள் . ஆனால் , அன்று வரை அவள் விளையாட்டுக்கு பேசுவதாகத்தான் இருவரும் நினைத்தோம் .
“ கார்த்திக் , நம்ம ரெண்டு பேருக்கும் ஒத்து வராது கார்த்திக் . நான் உன்ன மாதிரி யோசிக்க முடியாது . நீயே யோசிச்சு பாரு , சுயமரியாதை கல்யாணம் , பசங்களுக்கு ஜாதி போட மாட்ட .. யாரு வீட்ல இதெல்லாம் ஒத்துப்பாங்க ?”
“ இதெல்லாம்
தெரிஞ்சு தான கவி ..”,
நான் பேச பேச யாரோ என் காலை இழுத்தார்கள் . ஒரு சிறுமி , 6 வயதிருக்கும் , கிழிந்த உடையுடன் .
“ அங்கிள் சாப்டு மூணு நாள் ஆச்சுண்ணா ’ ,
அவள் கண்களில் நிறைய பயம் தெரிந்தது . அவளை ஆராய்ந்தேன் . பின் சுற்றிலும் பார்த்தேன் . அவளுக்கு அண்ணாவை யாரோ பழக்கபடுத்த முயற்சிக்கிறார்கள் . அங்கிள் இயல்பாய் வருகிறது .
“ அம்மா எங்கம்மா ?”
“ அம்மா … அம்மா ..” அந்த சிறுமியின் கண்களில் நீர் சுரக்க ஆரம்பித்தது .
அதற்க்குள் ஒரு பெண் அங்கே இருந்து ஓடி வந்தாள் .
“ சார் , புள்ள மேல இருந்து கைய எடுங்க சார் .. யார் சார் நீங்க ”
ஃரப்ப் …………..
கேட்ட பெண்ணின் கன்னத்தில் பளீரென ஒரு அறை விட்டேன்.
“ நான் இந்த ஏரியா எஸ் . ஐ யார் கொழந்த ?”
“ சார் … என் கொழந்த தான் சா …”, மறுபடியும் ஒரு அறைக்கு பின் அவள் உண்மையை சொன்னாள் .
“ சார் .. பாப்பாவோட அம்மா இறந்துட்டாங்க சார் .. அவங்க சித்தப்பா தான் எங்கிட்ட வித்துட்டாரு ”
“ இனி நான் இந்த ஏரியாவுல உன்னப் பாத்தேன் ,
தூக்கி உள்ள போட்டுடுவேன் புரியுதா ? போ ” , அவள் விழுந்தடித்து ஓடினாள் .
அவள் சித்தப்பாவை தேடுவதில் புண்ணியமில்லை , பாசத்தை கட்டாயப்படுத்தி வரவைக்க முடியாது .
கவியிடம்
திரும்பினேன் .
“ ம்ம்ம் … சொல்லு ..”
அவள்
பேசவில்லை . தன் நிச்சய பத்திரிக்கையை எடுத்து நீட்டினாள் . நான் ஒன்றும் பேசவில்லை . சி றிது நேரம் அந்த பத்திரிக்கையை வெறித்தேன் .
“ பாப்பா உன் பேர் என்னம்மா ”, சிறுமியிடம் கேட்டேன் .
“ அஞ்சலி , அங்கிள் ”, அவள் இன்னும் மிரட்சியிலிருந்து மீளவில்லை .
கவியிடம்
திரும்பினேன் .
“ இருக்கலாம் , என்னால உன்ன மாதிரி பொண்ணுங்கள சந்தோஷமா பாத்துக்க முடியாம போகலாம் . ஒரு வேள எனக்கு கல்யாணம் கூட நடக்காம போகலாம் , ஆனா எனக்கு எப்பவும் குழந்தைங்க இருப்பாங்க , அஞ்சலியையும் சேர்த்து ” சொல்லிவிட்டு அஞ்சலியை தூக்கி கொண்டு நடந்தேன் .
அவள் கொடுத்த பத்திரிக்கை அங்கேயே விழுந்து விட்டது .
அன்றிறவு
தான் குருவிடம் புலம்பிக்கொண்டு இருந்தேன் .
“ போய்ட்டா டா …. அவ சுய நலவாதி ந்னு எனக்கு தெரியும் ஆனா அதுல எனக்கும் ஒரு இடம் இருந்துச்சுன்னு நினைச்சேன் . நான் தெளிவானவனாம் , வித்தியாசமானவனாம் , அப்பறம் ஏதோ சொன்னாளே , ம்ம்ம் நானே தப்பா எல்லாம் யோசிக்க மாட்டேன் அவளுக்கு தெரியுமாம் . என்ன கட்டிக்க அவளுக்கு தகுதி இல்லையாம் . எல்லா மயிரும் தெரிஞ்சு தான் டா காதலிச்சா ….”
சட்டென்று
அவன் அழுவதைப்பார்த்து நான் பேசுவதை நிறுத்தினேன் . அப்போ அப்போ , என் கண்களை தொட்டுப்பார்த்தேன் . சே நான் அழுதிருக்கிறேன் . இங்கே எத்தனையோ சிறுவர்களின் மரணத்தில் கட்டுப்படுத்த முடிந்த கண்ணீர் கேவலம் , காதலுக்காக ஒரு பெண்ணுக்காக ….. என்னை எனக்கே பிடிக்கவில்லை . பிறந்தது முதல் என் அம்மாவைப்பற்றி நான் கவலைப்பட்டதே இல்லை . ஆனா , அன்னைக்கு நான் கண்ணால் கூட பார்த்திராத அம்மா மடில படுத்து அழணும்ன்னு தோணுச்சு . ஒரு பெண்ணால் ஒரு ஆணை இந்த அளவுக்கு நொறுக்க முடியுமா ? என்னால் நம்பவே முடியவில்லை . எத்தனையோ சோதனைகளை கடந்து இருக்கிறேன் . பல நாட்கள் பட்டினியில் சுருண்டு படுத்து அழுது இருக்கிறேன் . ஆனால் , மனதளவில் இப்படி ஒரு வலி தர , பெண்களால் மட்டுமே முடிகிறது .
அதன்
பின் ஆறு மாதம் ஒடிசாவில் என் . ஜி . ஓ பணி செய்ய சென்றேன் . எத்தனை முறை கண்ணீர் விட்டாலும் அவள் உருவம் அழியவில்லை என் கண்களில் இருந்து . நிறைய முறை அழுது தீர்த்தாகிவிட்டது . எத்தனை தூக்கமில்லா இரவுகள் ?
நிகழ்வுக்கு வந்தேன்.
“ டேய் …. சொல்லு டா …”
“ இல்ல மச்சான் பாக்கல ”
“ ஒரு வேள , கவிதாவ நீ இப்ப பாத்த பொண்ணு நிலமைல பாத்தா ?”
“ டேய் , வாய மூட்றா ”, அந்த நினைப்பே என் உடம்பின் எல்லா செல்களையும் நடுங்கச்செய்து விட்டிருந்தது . ஆண்களின் பிரச்சனையே இது தான் , தன்னை ஒரு பெண் காலில் போட்டு மிதித்தாலும் அவள் கால்களுக்கு வலிக்கக்கூடாது என வேண்டிக்கொண்டு இருப்பர் .
“ இப்ப எங்க டா போறோம் ”, கேட்டேன் .
“ வா உனக்கே தெரியும் ”
நாங்கள்
போய் சேர்ந்த இடம் ஒரு பழமையான வீடு . சிட்டியில் இருந்து 32 கி . மீ வந்து இருக்கோம் . உள்ளே நுழைந்தோம் .
“ சார் ….” , அவன் கூப்பிட்டான் .
வந்தது
கவியின் அப்பா !
என்னை
அவருக்கு தெரியும் கவியின் நண்பனாக .
“ என்னப்பா கல்யாணத்துக்கு வர லைன்னு : கேப்பாருன்னு எதிர்பார்த்தேன் .
ஆனா , அப்படி ஒண்ணும் நடக்கல .
“ நல்லாயிருக்கியா தம்பி ”
“ ம்ம்ம் …”
“ சித்த இருங்க தோ வந்துட்றேன் …” அவர் உள்ளே போனார் .
“ இங்க எதுக்கு டா …. யார் வீடு இது …” அவனிடம் கிசுகிசுத்தேன் .
“ அவங்க பரம்பர வீடு டா ….”
சில
பரஸ்பர விசாரிப்புகளுக்கு பின்னும் கவியை பற்றி ஒரு வார்த்தை கூட அவர் பேசவில்லை . நானே கேட்டேன் .
“ கவி எப்படி இருக்காங்க ”, வாழ்க்கைல முதல் தடவ அவள் பேருக்கு நான் மரியாத குடுக்கறேன் .
அவர்
மாற்றி மாற்றி இருவரையும்
பார்த்து விட்டு உள்ளே போனார் .
“ உள்ற வாங்க தம்பி ”
போனோம் .
உள்ளே , கவி. . . கவி , இதயம் ஒரு இரும்புக்குண்டாய் கணக்க ஆரம்பித்தது.
நான்
தலையைப் பிடித்துக்கொண்டு பின்னே சாய்ந்தேன் . எப்போதும் துள்ளியபடி இருக்கும் அவள் கால்கள் துண்டிக்கப்பட்டு இருந்தன .
“ நிச்சயதார்த்தம் நடக்கறத்துக்கு 2 நாள் முன்னாடி ஒரு விபத்துல , உங்கள கூப்பட முயற்சி பண்ணினோம் தம்பி நீங்க ஊர்ல இல்ல ..”
பல விஷயங்கள நம்ம சொல்லாமலே புரிஞ்சுக்குவோம் அப்படி ஒரு விஷயம். அந்த கல்யாணம் நின்னு போச்சு.
அவளைப்
பார்த்தேன் . அந்த கண்களில் சுத்தமாக ஒளியில்லை . என்னைப் பார்ப்பதை தவிர்த்து வேறு பக்கம் வெறித்தாள் .
“ ஹேய் … கவி .. இங்க பாரு ” … அவள் திரும்பவில்லை . கண்களில் நீர் மட்டும் வழிந்து கொண்டு இருந்தது . என்னை பார்க்காமலேயே பேசினாள் .
“ உன்ன கஷ்டப்படுத்தனும்ம்ன்னு நான் கூப்பிடல … உங்கிட்ட மன்னிப்பு கேக்கணும்ன்னு தோணுச்சு .. எங்க இப்ப கேக்கலைன்னா கேக்க முடியாமலே போயிடுமோன்னு தான் …” சொல்லச் சொல்ல அழ ஆரம்பித்தாள் .
நான்
அவள் தலையை வருடினேன் . அதை மெல்ல என் பக்கம் திருப்பி அவள் கண்களுக்குள் பார்த்தேன் . அவள் என் பார்வையை தவிர்க்க முயன்றாள் . எத்தனையோ பேருக்கு ரத்தம் கொடுத்து இருக்கிறேன். பல துரதிஷ்ட்டமான விபத்துக்களை பார்த்து இருக்கிறேன்.ஆனா கவிய அப்படி பாக்கும் போது, செத்துட்டேன்.
மெல்ல
எழுந்து அவள் அப்பாவை பார்த்து சொன்னேன்.
“ கவி ஒரு முற சொன்னா சார் … இந்த ஜென்மத்துல எனக்கு கல்யாணம் நடக் காதுன்னு , நிஜம் தான் ஆனா எனக்கு எப்பவும் குழந்தைங்க உண்டு , கவியையும் சேத்து ……”
VIDEO