Flipkart

Amazon

Amazon

சுயம்

"சுயம்" எழுதுமளவு நான் எதையும் சாதித்துவிடவில்லை என்ற காரணத்தினாலேயே இத்தனை நாட்களாக, என்னைப்பற்றியோ என் மெய் நிகர் உலக பிரஸ்தாபங்களை பற்றியோ எதுவும் எழுதாமல் தவிர்த்து வந்தேன். பல நேரங்களில், கருத்து மோதல்களின் போது, என்னுடைய பிரஞ்ஞை வெளிப்படும் போதெல்லாம், அடிப்படை இயல்பில் எனது கருத்துக்களை பற்றிய விளக்கமொன்றை கொடுக்க வேண்டியதாகி விடுகிறது. சில நேரங்களில் எனது குறைபாட்டுடைய மொழி இதற்கொரு காரணமாய் அமைந்து விடுகிறது. பல நேரங்களில் யாரையும் நொந்து கொள்ள முடியாத இந்த "தவறான புரிதல்" நட்பு முறிதலுக்கோ, என்னைப்பற்றிய தவறான "கருத்து ரீதியான முத்திரை"க்கோ வழி நடத்திச்செல்கிறது.

எனவே, இனி என்னுடைய பொதுவியல் கருத்துக்கள் குறித்து நண்பர்கள் தெளிவடையும் வண்ணம் இந்த பக்கம் எழுதப்படுகிறது. இதற்கு மேல் இங்கு எழுதப்பட்டிருப்பது, எனது சுய பிரஸ்தாபங்களல்ல. மாறாக, எந்த முகத்திரையும் இல்லாமல், என் கருத்துக்களும், அதற்கான தர்க்க நியாயங்களும், சில சமயம் தர்கமல்லாத பையித்தியக்காரத்தனமான "நானல்லாத நானும்" தான்.

முதலில் எனது ட்விட்டரில் இருந்து ஆரம்பிப்போம். சுயவிவரக்குறிப்பெழுதும் இடத்தில் மிகச்சொற்ப வார்த்தைகளுக்குள், என்ன சொல்லி இருக்கிறேன் என்று பார்ப்போம்.



இதிலிருக்கும் ஒவ்வொரு வார்த்தையும் தேர்ந்தெடுத்து கோர்க்கப்பட்டவையே. தமிழ் கூறும் நல்லுலக வலையுலக மக்களுக்காய் இவற்றை தமிழில் ஒரு முறை மொழிபெயர்த்து விடுவோம்.

அதற்கு முன்னதாக, இங்கு தமிழில் இல்லாமல் ஆங்கிலத்தில் சுயவிவரக்குறிப்பறிக்க காரணம், இடமின்மையன்றி வேறில்லை. இந்த 140 எழுத்துக்களுக்குள் என்னைப்பற்றிய எச்சரிக்கையை என்னை பின் தொடர்பவர்களுக்கு விட்டுவிட தமிழில் வார்த்தைகள் எனக்குச்சிக்கவில்லை.

      மீண்டும் சுயத்துக்கு வருவோம். ட்விட்டரில் கூறி இருப்பது இது தான்.

 மனிதன் ↔ நாத்திகன் ↔ பிஞ்சு எழுத்தாளன் ↔  தர்க்கம் கடந்த பிரஞ்ஞை உடையவன் ↔ சமூகத்தில் பொதுவாய் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்துக்களை மறுதலிக்கும் இயல்புடையவன் ↔ சர்ச்சைகளில் ஆர்வமுடையவன் ↔ இது கொஞ்சம் கடினமான வார்த்தை விரிவான விளக்கத்தில் பார்ப்போம் ↔ மார்க்ஸிய கம்யூனிச சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டவன் ↔ மனிதன் பிழை இழைக்கக்கூடியவன் என்ற நம்பிக்கை உடையவன் ↔ சமகாலத்திய புத்திசாலி.

              இதில் சில வார்த்தைகள் ஆணவமாகவோ, திமிராகவோ உங்களுக்கு படுமாயின் எந்த ஒரு விருப்பு வெறுப்பும் இல்லாமல் உங்களிடம் அதற்காக என் மன்னிப்பை கோருகிறேன்.  இதில் பல விடயங்களை நான் அடையாமல் கூட இருக்கலாம்.  நான் அடிப்படையில் என்னவாக இருக்கிறேன் என்பதைத்தாண்டி என்னவாக ஆக விரும்புகிறேன் என்பதன் பிரதிபலிப்பு அதில் பிம்பமாய் மிளிரலாம். "புத்திசாலி" போன்ற வார்த்தைகளில் எனது அகந்தை அகவுவதாய் நீங்கள் நினைக்கலாம். ஆனாலும், எந்த வித கர்வமும் இல்லாமல் எழுதப்பட்ட வார்த்தைகளே அவை. என்னை பின் தொடர்ந்து எவரும் எரிச்சலடைந்து விடக்கூடாதே என்ற முன்னெச்சரிக்கையுணர்வே அதற்கு காரணம்.

Human - மனிதன் என்று குறிப்பிடக்காரணமென்ன? நாங்களெல்லாம் என்ன மிருகங்களா? என்றெல்லாம் பொங்கி விட வேண்டாம். இந்த வார்த்தையை முதலாகப்போட காரணம், இங்கே தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள மனிதர்கள் பயன்படுத்தும் அபத்தமான அடையாளங்களே!

         நான் இன்ன ஜாதிக்காரன், நான் இன்ன மதத்துக்காரன் என்பதில் தொடங்கி நான் தமிழன், நான் இந்தியன் என எதையும் பெருமையான முதல் அடையாளமாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதைக்காட்டவே இந்த மனிதன் அடையாளம்.

பழைய கீச்சு ஒன்று - "ஜாதி ஜட்டி மாதிரி, எவ்வளவு காஸ்ட்லியாக இருந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளாதீர்கர்ள். அசிங்கம்"

Atheist - Baron d'Holbach வின் பிரபலமான கூற்று ஒன்று உண்டு "All children are born Atheists; they have no idea of God."

Budding Writer - :-) Self Explanatory

Mystic - Google this ;-) சில நேரஙகளில் ஜென் நிலையிலோ பைத்தியக்கார நிலையிலோ இருப்பதை இப்படி குறிப்படுவது ஒரு பேஷனாகிவிட்டது என நீங்கள் குற்றம் சாட்டினாலும் "பூக்களையும் கற்களையும் ஒரே" போல பாவிக்கும் குணத்தை வேறெப்படி தான் குறிப்பிடுவது?

Transgressive - பொதுவாக மக்கள் ஏற்றுக்கொள்ளும் கருத்துக்களையும், பொது மன நிலையையும்  அவை Sheeple மன நிலை எனகருதி  அதிலிரந்து பெருமபாலும் வேறுபட்ட ஒரு கருத்து நிலைச்சார்பை எடுப்பவன்.


Controversy lover –  இதை நானாக என்னை குறித்துக்கொள்ளும் சொல்லாக பயன்படுத்தவில்லை எனினும் பல நேரங்களில் நான் அவ்வாறே அடையாளப்படுத்தப்படுகிறேன். அவ்வாரு அடையாளப்படுத்தப்படுதல் குறித்த வருத்தம் ஏதுமின்றியே இருந்து வந்திருக்கின்றேன். இது வரை எந்த ஒரு புரட்சியாளனுமே கலகக்காரனாகவே அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறான். எந்த ஒரு புரட்சியையும் நான் செய்து விடவில்லை எனினும், எனது கருத்துக்கள் பொது ஜன இயல்பிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு கோணத்தை முன் வைக்கிறது. இதைத்தான் Transgressive என முன்பே குறிப்பிட்டு இருந்தேன்.

எந்த ஒரு விவாதமும் ஒரு தெளிவில் கொண்டு விடும் (அது பிரஞ்ஞை உடைய ஒருவருடன் அமையுமானால்) என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவன் ஆதலால் விவாதங்களில் சர்ச்சையும் ஒரு பகுதி என்பதை ஏற்றுக்கொண்டு அதனோடே  பயணப்பட்டு வந்திருக்கிறேன்.

Syncretic naturalist –  syncretic என்ற வார்த்தையை எதிர்மறை இயல்புகளுடைய இரண்டு கருத்துக்களை ஒரு ஒத்திசைவோடு ஏற்பவன் என அர்த்தப்படுத்தலாம். நேச்சுரலிஷ்ட் என்பதன் அர்த்தம் “இயற்கை”யில் நம்பிக்கையை உடையவன். இயற்கையை கடவுளாக ஆராதிப்பவன் என்ற்ய் அர்த்தப்படுத்தலாம். இந்த இரு வார்த்தைகளை கோர்ப்பதன் மூலம் இன்றைக்கு நாம் உருவாக்கி வைத்திருக்கும் இன்றைய செயற்கை உலகையும் இணைத்து இயைந்த ஒரு உலகை வருங்காலத்தில் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை கொண்டவன்.

Marxist –  எனது இந்த நிலை தற்போது வெகுவாக மாறி வருவதால், இது குறித்து எதுவும் சொல்லும் தகுதியற்றவனாகிறேன்.

Fallibilist – மனிதன் தன்னுடைய நம்பிக்கைகளிலும் கண்டுபிடிப்புகளிலும் தரவுகளிலும் தவறு செய்ய வாய்ப்பிருக்கிறது ஆதலால் எதுவுமே வரையறுக்கப்பட்ட ஒன்று என நிறுவ முடியாது என்பதென் திண்ணமான எண்ணம்.

Contemporary intellect – சமகாலத்திய புத்திசாலி அல்லது சமகாலம் குறித்த பிரஞ்ஞை உடையவன். ஆனால் இது கர்வத்தினால்  குறிப்பிடப்பட்டதன்று, மாறாக தமிழகத்தில் அறிவை தானாக முன் வந்து வெளிப்படுத்தும் சில அறிவுஜீவிகளை கிண்டல் செய்ய குறிப்பிடப்பட்டது.


சில பொது கருத்து நிலைச்சார்புகள் :
·         தூக்கு தண்டனைக்கு எதிரானவன் – அதன் காரணம் சில நேரங்களில் உயிரின் மீதான மனித அபிமானமாய் இருந்தாலும் பல நேரங்களில் “எய்தவனை விட்டு விட்டு அம்பை நோவது” போல மூளைகளை விட்டுவிட்டு கசாபை தூக்கில் போடுவது, எந்த பயனையும் deterrent ஆகக்கூடத்தராது. அதைத்தவிர டெல்லி ரேப் போன்ற சில வழக்குகளில் மரணம் என்ற ஒற்றை நொடி முற்றான விடுதலையை குற்றவாளிக்குத்தருவது  எந்த வகையில் தண்டனையாகும். அதற்கு காயடித்தல் (Castration) செய்யலாமே ;-)
யாரையுமே திருத்த முடியாது என்னும் சலிப்பு எல்லோரையும் போல வந்து போனாலும், என்னைச்சார்ந்தவர்களை மட்டுமேனும் என் அலைவரிசைக்கேற்ப மாற்ற முடியும் என்று நம்புகிறேன்.

சில உறுதி மொழிகள்

https://www.facebook.com/SHAN4Luv/posts/632832070063347?stream_ref=10

No comments:

Post a Comment

போறாது தான் போறீங்க.. இங்க ஒரு தரம் எதுனா சொல்லீட்டு போங்க..