Flipkart

Amazon

Amazon

Wednesday, November 9, 2011

சாலையோர தேவதைகள்


டிஸ்கி : 

   வழக்கம் போல இதுவும் ஒரு உண்மைக்கதையே, பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. :) மற்ற கதைகளை பிரபலமான இடுகைகளில் பார்க்கவும்.



                        ரிச்சர்ட் அந்த ஹாலுக்குள் நுழையும் போது நான்  பேசிக்கொண்டிருந்தேன். அன்று  என் வாழ்வின் முக்கியமான நாட்களுள் ஒன்று. “சாலமன் பாப்பையாதலைமையிலான பட்டி மன்றம் ஒன்றில் பேசிக்கொண்டு இருந்தேன். என் அணியில் நான் தான் கடைசி, எனக்குப் பின் தீர்ப்பு தான். எதிர்பாராத விதமாக வர வேண்டிய பேச்சாளர் ஒருவர் வர முடியாமல் போக கடைசியாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான நானே பேச வேண்டியதாகிவிட்டது. இப்போது பேசிக்கொண்டு இருப்பது ஒரு மணி நேரத்தில் தயார் செய்தது. தலைப்பு கொஞ்சம் எளிது தான்காதல் திருமணமா அல்லது நிச்சயிக்கப்பட்ட திருமணமா?” இந்தக் காலத்தில் எது செல்லும்?. அது என்ன கருமமோ தெரியவில்லை பல ஆண்டுகளாக இதே தலைப்பில் ஓட்டிக்கொண்டு இருக்கிறார்கள். நான் காதலின் பக்கம். அட, இங்கே எல்லோருமே காதலின் பக்கம் தான். சில தவறான தேர்வுகள் நம்மை காதலை வெறுக்க வைத்து விடுகின்றன.

                   “ராஜா சொன்னாரு பெத்தவங்க பாத்து கல்யாணம் செஞ்சு வெச்சா எதாவது பிரச்சனைன்னா அவங்க பாத்துப்பாங்களாம். ஏன் சார், ஆரம்பிக்கும் போதே ஏன் சார் பிரச்சனைய பத்தி பேசரீங்க?. காதல்ன்னு ஒரு விஷயம் இல்லன்னா நம்ம சமுதாயத்துல இருந்து ஜாதி மதத்தை ஒழிக்கவே முடியாம போயிடும் சார். அரேஞ் பண்ணப்பட்ட தி\ருமணம்  ஒரு வியாபாரம் சார். அந்த மாதிரி திருமணங்கள்ல ஒண்ணே ஒண்ணு வரதட்சனை இல்லாம நடந்துச்சுன்னு சொல்லுங்க பாப்போம்?”

                   மேலும் சில வினாடிகள் நான் பேசிவிட்டு அமர்ந்தேன். பாப்பையா எங்கள் பக்கமே தீர்ப்பு சொன்னார்.அது எங்களுக்கு ஏற்கனவே தெரிவிக்கபட்டு விட்டதால் சலனமடைய ஏதுமில்லை.

                  இப்போதெல்லாம் பட்டிமன்றங்களில் நான் அதிகம் பேசுவதில்லை. இது எங்கள்நேயம்குழந்தைகள் காப்பகத்திற்காக  நான் ஒருங்கிணைத்த நிகழ்வென்பதால்  வேறு வழியின்றி பேச வேண்டியதாகிவிட்டது. பட்டிமன்றங்கள் அவளை நியாபகப்பசுத்தி விடுவதால் அதை தவிர்த்து ஓடுகிறேன். கூட்டம் கலையும் வேளையில் ரிச்சர்ட் என்னிடம் வந்தான்.

நாம கொஞ்சம் அவசரமா வெளிய போணும் டாஎன்றான்.

           அவசர அவசரமாய் விருந்தினர்களை அனுப்பிட்டு வந்து அவன் பல்சரில் தொற்றும் வரை அவன் காரணம் சொல்லவில்லை. ரிச்சர்ட் என்னோடு இதே நேயத்தில்வளர்ந்தவன். இருவருக்கும் எனக்கும் பல ஒற்றுமைகள். ஒரே கல்லூரியில் பொறியியல் படித்தோம். நாங்கள் தான் நேயத்தில் இருந்து முதன்முதலில் பொறியியல் சேர்ந்தவர்கள், திடீர் என அடித்த ஒரு யோகத்தில் ஒரு தொண்டு நிறுவனம் ஸ்பாண்சர் செய்ததில் பொறியியல் பொரியல் ஆக்கப்பட்டோம் J .ஆனாலும் எனக்கு அந்த கருமத்தில் ஈடுபாடே வரவில்லை. ஒரு எழுத்தாளான் ஆ வேண்டுமென்பது சிறு வயது கனவு J.அதற்கான முயற்சியில் இருக்கிறேன். இன்னும் எங்கே போகிறோம் என்று அவன் சொல்லவே இல்லை.

மாப்ளஎங்க போறோம்”, நேயம் சொல்லிக்கொடுக்காத உறவு முறையை கல்லூரி சொல்லிக்கொடுத்து இருந்தது.

ம்ம்ம்சொல்றேன்டேய், அதுக்கப்பறம் கவிய பாத்தியா?”, ரிச்சர்ட் வண்டியை லாவகமாக வளைத்தபடியே கேட்டான்.

இல்லடா, சரியா அடுத்த வாரத்தோட மூணு வருஷம் முடியுதுசொல்லிவிட்டு ரோட்டை வெறித்தேன்.

ஒரு பைத்தியக்காரப் பெண் அரைகுறை ஆடையுடன் குப்பை தொட்டியை கிளறிக்கொண்டு இருந்தாள். ரிச்சர்ட்டின் தோளைத் தொட்டேன்.

மாப்ள அப்டி நிறுத்து”,அவனும் அவளை பார்த்து விட்டு இறங்கினான்.

அவளுக்கும் எங்கள் வயது தான் இருக்கும்.அழுக்குகளை துடைத்துவிட்டு பார்த்தால் அழகாகவே இருந்தாள். நல்ல வேளை , அவள் கருவுற்றிருக்கவில்லை. எந்தப் பெண்ணாய் இருந்தாலும் பாழடிக்க இங்கு ஒரு கூட்டமே இருக்கிறது. மனிதம் என்பது வெறும் வார்த்தையாய் போய் விட்ட காலம் இது. இருவருமாய் சேர்ந்து அவளை தூக்கி நிறுத்தினோம்.அவள் கைகளை உதறி பிடிவாதம் காட்டினாள். ரிச்சர்ட் பாக்கெட்டில் இருந்த ஒரு மிட்டாயை வைத்து அவள் பிடிவாதத்தை தளர்த்தினான்.

எங்கள்  நேய நண்பர் ஒருவரை அழைத்து அவளை ஒப்படைத்து விட்டு கிளம்பினோம்.

ரிச்சர்ட், எங்க தான் டா போறோம்? எதுக்கு இப்படி அவசர அவசரமா கூட்டிட்டு வர?”

கார்த்திக் , அந்த பொண்ண பத்தி என்ன நினைக்கற?”, அவன் கேட்டு விட்டு ரோட்டில் கவனத்தை செலுத்தினான். நாங்கள் இது போன்று பல முறை பேசியுள்ளோம். பேச பேச ஒரு நாள் தீர்வு பிறக்கும் என நம்பும் சராசரி அரசியல் பேசும் குடிமகன்கள் தான் நாங்களும். ஆனால் பேசுவதோடு நின்று விடாமல் இது போன்று செயல்கள் மூலமும் அதை நிஜமாக்குகிறோம்.

அவள இத்தன நாள் இந்த நாய்ங்க கெடுக்காம இருந்ததே பெரிய விஷயம். இந்த ரோட்ல நடக்கற ஒருத்தனுக்கு கூட அவ மானத்த மறக்க ஒரு துணி குடுக்கணும்ன்னு தோணல இல்ல. ஆனா, போற வரப்போ ஓரக்கண்ணால பாக்க மட்டும் செய்வானுங்க. அரபு நாடு மாறி அறுக்கணும் டா.”

நீ எழுதி விகடன்ல வந்த ஹைக்கூ ஞாபகம் இருக்கா டா

ம்ம்ம்….. சாலை ஓரங்களில் இருக்கும் எதுவும் சரியாய் பராமரிக்கப்படுதில்லை பூங்காக்களும் தேவதைகளும் கூட .. இதோட அந்த மாதிரி ஒரு பொண்ணோட புகைப்படம் இருக்கும்

அதே தான், நாம வாழ்க்கைல எவ்வளவோ பேத்த கடந்து வந்தாலும் சில முகங்கள் மட்டும் தான் நமக்கு மனசுக்கு நெருக்காமானதா மாறிடுது இல்ல

ரிச்சர்ட் சம்பந்தமே இல்லாமல் பேசினான். இதற்கும் அந்த பெண்ணுக்கும் என்ன சம்பந்தம் என கேட்க நினைத்து விட்டுவிட்டேன்.



ரோட்ல எத்தனையோ பேர் அவள கடந்து போனாங்க. யாருக்குமே அவ மானத்த காப்பாத்த ஒத்த துணி குடுக்கணும்ன்னு தோணல இல்ல. இவள மட்டும் இல்ல தெருவோர பைத்தியக்கார பொண்ணுங்க, பேப்பர் பொறுக்கர பசங்க , பசில மயங்கி கெடக்கறவங்க , நம்மள மாதிரி குப்பைத்தொட்டி குழந்தைங்க. . . . . “ , அவன் அதை சொல்லும் போது கலங்கிவிட்டிருந்தான். ஆம், நாங்கள் பிறந்த உடன் தூக்கி எறியப்பட்டோம். நாங்க பொறந்த உடனே   இந்த தருதலைங்களால எந்த பிரயோஜனமும்  இல்லைன்னு முடிவு பண்ணி குப்பத்தொட்டில வீசிட்டாங்க. அங்க இருந்து காப்பாத்தி எங்கள வளர்த்தது நேயம் தான். இன்றைய மனிதம் மனிதர்களிடம் காணப்படுவதில்லை. அவை என்றோ , குழி தோண்டி ஆழ புதைக்கப்பட்டு விட்டன.

அவன் விட்ட இடத்திலிருந்து  தொடர்ந்தான். “இவங்க , இவங்க யாருக்குமே அக்கறை இல்ல. இவங்க அக்காவையோ தங்கச்சியோ இல்ல அம்மாவையோ இல்ல அவங்களையோ அந்த இடத்தில வெச்சு பாக்க அவனுங்க ரெடியா இல்ல. அவனுங்க தங்கச்சிக்கு இப்படி ஒரு நெலம வந்தா உட்டுட்டு ஓடுனாலும் ஓடிருவானுங்க டா , ####### மவனுங்க “.


டேய்…”,நான் அவன் தோளைத் தொட்டேன்


.”அடங்கு மச்சான்,எல்லாமே தெரிஞ்சது தான”. 

நாங்கள் கெட்ட வார்த்தை பேசுவது மிக மிக அரிது .இந்த சமூகத்தின் மீதான கோபம் எப்பவாவது அப்படி வெளிப்படும்.

சரி டா, கவிய பாத்தியா அதுக்கு அப்பறம்”, அவன் மீண்டும் கவியை நினைவூட்டினான்.



கவி ~ கவிதா

கவிதா, அழகான பெயர் . அவளும் ஒரு கவிதை தான். என்னை அவள் சந்தித்தது ஒரு பட்டிமன்றத்தில் தான். மது, என் வாழ்வில் வந்த தேவதை. அவள் அணிவதாலேயே அந்த சுடிதார் அவ்வளவு அழகு என்பேன் நான். அவள் கண்களும் விரல்களும் என்னை அவளுக்கு அடிமையே ஆக்கிவிட்டிருந்தன.

காதலில் முக்கியமான பிரச்சனை என்னன்னா  நீங்க அந்த பொண்ணையோ , அந்தப் பொண்ணு அந்தப் பையனயோ Impress பண்ணிகிட்டே இருப்பாங்க ஏன்னா இப்ப அவங்களுக்கு Choice இருக்கு. இவங்க புடிக்கல்லன்னா இன்னும் ஒருத்தன். அதானல இம்ப்ரெஸ் பண்ண வேண்டிய கட்டாயத்துல இருக்காங்க . ஆனா கல்யாணத்துக்கு அப்பறம் தான் சுயரூபம் தெரிய வருது . தங்களின் உண்மையான முகத்த தாங்கிக்க முடியாம தான் விவாகரத்த நோக்கி ஓடுறாங்க. என் கவிதை ஒண்ணு.

உன் மீது இருக்கும் கோபத்தை
உன்னைத்தவிர அனைவரிடமும்
காட்டினேன்.

இது திருமணத்துக்கு முன்னாடி. ஆனா, திருமணம் முடிஞ்ச பின்னால் இது தலைகீழ் ஆகி விடுகிறது. எனவே, யாரும் காதலிக்கும் போது யாரும் இம்ப்ரெஸ் பண்ண முயற்சிக்காதீங்க”.


அரங்கில் கைத்தட்டல் எழ நான் அமர்ந்தேன். நான் இம்ப்ரெஸ் பண்ண வேண்டாம்ன்னு சொன்னாலும் அது தான் அவள இம்ப்ரெஸ் பண்ணுச்சு.
அவள்கவிதாஅழகான என் கவிதா J. எனக்கும் காதலுக்கும் பல மைல் தூரம். இங்கே எனக்கான வேலைகள் நிறைய இருக்கிறது என்றேன் . அவள் கேட்ட பாடில்லை . பல முறை அவள் முயன்ற பின் அவளிடம் தோற்றேன்  நான்முழு விருப்பத்தோடு தான் தோற்றேன்.

காதல் வந்த பின் எல்லோருக்கும் சிரிப்பு தானாய் வந்து ஒட்டிக்கொள்ளும். அதே போலத் தான் எனக்கும் , காதல் என வந்துவிட்ட பிறகு அதில் முழுமையாக இருக்க வேண்டும் என அவளுக்கு பிடித்த எல்லாவற்றையும் செய்தேன். எல்லா காதலர்களைப் போல இல்லாவிட்டாலும் ஓரளவாவது ஊர் சுற்றினோம். பேச பேச   குறையாத காதல். வேலை நேரம் மற்றும் நேயத்தில் நான் ஆற்றும் பணி நேரம் போக மீதி எல்லா நேரமும் அவளோடு தான்.


              இரண்டு வருடம் , என் வாழ்வின் மறக்க முடியாத இரண்டு வருடங்கள். எனக்கு யாரும் இல்லை என்ற குற்ற உணர்ச்சி சுத்தமாக மறைந்த அந்த இரண்டு வருடங்கள். எனக்கான உலகமாய் அவள் மாறிய இரண்டு வருடங்கள். என் காதலை பத்தி ரிச்சர்டுக்கும் , குருவுக்கும் மட்டும் தான் தெரியும். குரு, 15 வயது சிறுவன், குருவுக்கு மூளை வளர்ச்சி இல்லை. என்னால் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ள முடியும் அவனிடம். நாம் சிரித்தால் சிரிப்பான், அழுதால் அழுவான் அவன் கண்ணாடி போல.

இரண்டு வருடங்களின் முடிவில் முதன் முதலாக நான் அழுது அவன் பார்த்தான். எனக்கு , கவியை பார்க்கும் முன் காதல் என்பது ஒரு வடிகட்டிய முட்டாள் தனம் என்றே தோன்றியது


                                  தன் ரத்தத்தை சோறாக்கி என்னை பெற்றுப்போட்டவளே வேணாம்ன்னு தூக்கி போட்டுட்டு போய்ட்டா காதல் எம்மாத்திரம்ன்னு கேட்டவன் நான். அவனவன் சோத்துக்கு அலையும் போது, படுக்க இடமின்றி சாக்கடையோரம் படுக்கும் போது, காதலெல்லாம் என்றவன் நான். அவள் என்னை எவ்வளோ மாத்தினா!! எல்லாத்தையும் மாத்திட்டு நீ மாறிட்டன்னு வேற சொல்றா! நான் என்ன செய்ய?


அன்று நாங்கள் வழக்கமாக சந்திக்கும் அதே பார்க். ஆனால் வழக்கத்திற்கு மாறாக அன்று இருவரும் இறுக்கமாக அமர்ந்திருந்தோம். நான்  றுக்கமாக இருப்பது க்கு எப்போதுமே பிடிக்காது.

என்ன ஆச்சு இப்போ

கார்த்திக்..”, அவள் என் பெயரை கூப்பிடும் அந்த ஒரு வினாடிக்காகவே உயிரையும் தரலாம். என் பெயரின் அழகே அவள் உச்சரிக்கும் போது தான் தெரிகிறதுகார்திக் தான் என் பெயர் ஆனால் அவள் உச்சரிக்கையில் ஒரு  க்சேர்த்து, சே கொள்ளை அழகு போங்க.


ம்ம்ம்சொல்லு டா செல்லம்” 

                  நான் கொஞ்சம் சாதரணமாக தெரிய முயன்றேன். இது போன்ற வார்த்தைகள் இறுக்கத்தை குறைக்க உதவலாம்.

கார்திக் நீ ரொம்ப நல்லவன் டா”, அவள் வேறொரு புறம் வெறித்தபடியே சொன்னாள். அவள் இப்படி ஆரம்பித்தால் என்ன பேசுவாள் என எனக்கு நன்றாக தெரியும். அவள் சரியான சுயநலவாதி. இன்றைய ஹை-டெக் இளைய தலைமுறையின் தழுவல் அவள். சிறு வயதிலிருந்தே பணம் வந்த வழி அவளுக்கு தெரியாததால் அது போகும் வழியும் அவளுக்கு கவலை தரவில்லை. எப்போதும் தன்னைப்பற்றித்தான் அதிகம் யோசிப்பாள். ஆனால் அது எனக்கு அவ்வளவு பெரிய பிரச்சனையாக தெரியவில்லை அன்று வரை. ஆம் , அன்று வரை அவள் சுய-நலம் என்ற வார்த்தைக்குள் நானும் அவளும் மட்டுமே இருந்தோம். ஆனால் , அன்று முதல் நான் இல்லை.




 நான் இன்னமும் ஒரு புன்னகையோடு அவளை பார்த்துக்கொண்டு இருந்தேன். எனக்கு தெரியாது அவள் இப்போது என்னை வார்த்தைகளால் கொல்லப்போகிறாள் என்று.

ஆனா, நீ ரொம்ப வித்தியாசமானவன் டா, நீ ரொம்ப பெருசா யோசிக்கற , நீ கண்டிப்பா எல்லாத்துக்கும் எதாவது செய்வ

ஏய்லூசா நீ? என்னமோ முக்கியமா பேசனும்ன்ன, இப்படி ஒளர்ற?”

இல்ல..கார்த்திக் , நான் ரொம்ப குறுகலா யோசிக்கறேன்.” அவள் சொல்லிவிட்டு நிமிர்ந்து பார்த்தாள்.

                அவளுக்கு என்னை இது போல சீண்ட ரொம்ப பிடிக்கும். நான் மட்டும் இல்ல டா உன்ன எந்த பொண்ணுமே கட்டிக்க மாட்டா, பேசாம கல்யாணமே பண்ணிக்காத என ஒரு ஆயிரம் முறை சொல்லி இருப்பாள். ஆனால், அன்று வரை அவள் விளையாட்டுக்கு பேசுவதாகத்தான் இருவரும் நினைத்தோம்.


கார்த்திக் , நம்ம ரெண்டு பேருக்கும் ஒத்து வராது கார்த்திக். நான் உன்ன மாதிரி யோசிக்க முடியாது. நீயே யோசிச்சு பாரு, சுயமரியாதை கல்யாணம் , பசங்களுக்கு ஜாதி போட மாட்ட.. யாரு வீட்ல இதெல்லாம் ஒத்துப்பாங்க?”


இதெல்லாம்  தெரிஞ்சு தான கவி..”, 

 நான் பேச பேச யாரோ என் காலை இழுத்தார்கள். ஒரு சிறுமி , 6 வயதிருக்கும் , கிழிந்த உடையுடன் .

அங்கிள் சாப்டு மூணு நாள் ஆச்சுண்ணா

அவள் கண்களில் நிறைய பயம் தெரிந்தது. அவளை ஆராய்ந்தேன் . பின் சுற்றிலும் பார்த்தேன் . அவளுக்கு அண்ணாவை யாரோ பழக்கபடுத்த முயற்சிக்கிறார்கள். அங்கிள் இயல்பாய் வருகிறது.

அம்மா எங்கம்மா?”

அம்மாஅம்மா..” அந்த சிறுமியின் கண்களில் நீர் சுரக்க ஆரம்பித்தது

அதற்க்குள் ஒரு பெண் அங்கே இருந்து ஓடி வந்தாள்.

சார், புள்ள மேல இருந்து கைய எடுங்க சார்.. யார் சார் நீங்க

ஃரப்ப்………….. கேட்ட பெண்ணின் கன்னத்தில் பளீரென ஒரு அறை விட்டேன்.

நான் இந்த ஏரியா எஸ். யார் கொழந்த?”

சார்என் கொழந்த தான் சா…”, மறுபடியும் ஒரு அறைக்கு பின் அவள் உண்மையை சொன்னாள்.

சார்..பாப்பாவோட அம்மா இறந்துட்டாங்க சார்.. அவங்க சித்தப்பா தான் எங்கிட்ட வித்துட்டாரு

இனி நான் இந்த ஏரியாவுல உன்னப் பாத்தேன்தூக்கி உள்ள போட்டுடுவேன் புரியுதா? போ” , அவள் விழுந்தடித்து ஓடினாள்

அவள் சித்தப்பாவை தேடுவதில் புண்ணியமில்லை, பாசத்தை கட்டாயப்படுத்தி வரவைக்க முடியாது.


கவியிடம் திரும்பினேன்.

ம்ம்ம்சொல்லு..”

அவள் பேசவில்லை. தன் நிச்சய பத்திரிக்கையை எடுத்து நீட்டினாள். நான் ஒன்றும் பேசவில்லை. சிறிது நேரம் அந்த பத்திரிக்கையை வெறித்தேன்.

பாப்பா உன் பேர் என்னம்மா”, சிறுமியிடம் கேட்டேன்.

அஞ்சலி, அங்கிள்”, அவள் இன்னும் மிரட்சியிலிருந்து மீளவில்லை.

கவியிடம் திரும்பினேன்.

இருக்கலாம், என்னால உன்ன மாதிரி பொண்ணுங்கள சந்தோஷமா பாத்துக்க முடியாம போகலாம். ஒரு வேள எனக்கு கல்யாணம் கூட நடக்காம போகலாம், ஆனா எனக்கு எப்பவும் குழந்தைங்க இருப்பாங்க, அஞ்சலியையும் சேர்த்து சொல்லிவிட்டு அஞ்சலியை தூக்கி கொண்டு நடந்தேன்

அவள் கொடுத்த பத்திரிக்கை அங்கேயே விழுந்து விட்டது.


              அன்றிறவு தான் குருவிடம் புலம்பிக்கொண்டு இருந்தேன்.

போய்ட்டா டா…. அவ சுய நலவாதி ந்னு எனக்கு தெரியும் ஆனா அதுல எனக்கும் ஒரு இடம் இருந்துச்சுன்னு நினைச்சேன். நான் தெளிவானவனாம், வித்தியாசமானவனாம் , அப்பறம் ஏதோ சொன்னாளே, ம்ம்ம் நானே தப்பா எல்லாம் யோசிக்க மாட்டேன் அவளுக்கு தெரியுமாம். என்ன கட்டிக்க அவளுக்கு தகுதி இல்லையாம். எல்லா மயிரும் தெரிஞ்சு தான் டா காதலிச்சா….”



சட்டென்று அவன் அழுவதைப்பார்த்து நான் பேசுவதை நிறுத்தினேன். அப்போ அப்போ, என் கண்களை தொட்டுப்பார்த்தேன். சே நான் அழுதிருக்கிறேன். இங்கே எத்தனையோ சிறுவர்களின் மரணத்தில் கட்டுப்படுத்த முடிந்த கண்ணீர் கேவலம், காதலுக்காக ஒரு பெண்ணுக்காக…..என்னை எனக்கே பிடிக்கவில்லை. பிறந்தது முதல் என் அம்மாவைப்பற்றி நான் கவலைப்பட்டதே இல்லை. ஆனா, அன்னைக்கு நான் கண்ணால் கூட பார்த்திராத அம்மா மடில படுத்து அழணும்ன்னு தோணுச்சு. ஒரு பெண்ணால் ஒரு ஆணை இந்த அளவுக்கு நொறுக்க முடியுமா? என்னால் நம்பவே முடியவில்லை. எத்தனையோ சோதனைகளை கடந்து இருக்கிறேன். பல நாட்கள் பட்டினியில் சுருண்டு படுத்து அழுது இருக்கிறேன். ஆனால், மனதளவில் இப்படி ஒரு வலி தர, பெண்களால் மட்டுமே முடிகிறது.


அதன் பின் ஆறு மாதம் டிசாவில் என்.ஜி. பணி செய்ய சென்றேன். எத்தனை முறை கண்ணீர் விட்டாலும் அவள் உருவம் அழியவில்லை என் கண்களில் இருந்து. நிறைய முறை அழுது தீர்த்தாகிவிட்டது. எத்தனை தூக்கமில்லா இரவுகள்?

நிகழ்வுக்கு வந்தேன்.

டேய்….சொல்லு டா…”

இல்ல மச்சான் பாக்கல

ஒரு வேள, கவிதாவ நீ இப்ப பாத்த பொண்ணு நிலமைல பாத்தா?”

டேய், வாய மூட்றா”, அந்த நினைப்பே என் உடம்பின் எல்லா செல்களையும் நடுங்கச்செய்து விட்டிருந்தது. ஆண்களின் பிரச்சனையே இது தான், தன்னை ஒரு பெண் காலில் போட்டு மிதித்தாலும் அவள் கால்களுக்கு வலிக்கக்கூடாது என வேண்டிக்கொண்டு இருப்பர்.


இப்ப எங்க டா போறோம்”, கேட்டேன்.

வா உனக்கே தெரியும்

 நாங்கள் போய் சேர்ந்த இடம் ஒரு பழமையான வீடு. சிட்டியில் இருந்து 32 கி.மீ வந்து இருக்கோம். உள்ளே நுழைந்தோம்.

சார்….” , அவன் கூப்பிட்டான்.

வந்தது கவியின் அப்பா!

என்னை அவருக்கு தெரியும் கவியின் நண்பனாக.

என்னப்பா கல்யாணத்துக்கு வரலைன்னு: கேப்பாருன்னு எதிர்பார்த்தேன்.
ஆனா, அப்படி ஒண்ணும் நடக்கல.

நல்லாயிருக்கியா தம்பி

ம்ம்ம்…”

சித்த இருங்க தோ வந்துட்றேன்…” அவர் உள்ளே போனார்.

இங்க எதுக்கு டா…. யார் வீடு இது…” அவனிடம் கிசுகிசுத்தேன்.

அவங்க பரம்பர வீடு டா….”

 சில பரஸ்பர விசாரிப்புகளுக்கு பின்னும் கவியை பற்றி ஒரு வார்த்தை கூட அவர் பேசவில்லை. நானே கேட்டேன்.

கவி எப்படி இருக்காங்க”, வாழ்க்கைல முதல் தடவ அவள் பேருக்கு நான் மரியாத குடுக்கறேன்.

அவர் மாற்றி மாற்றி இருவரையும்  பார்த்து விட்டு உள்ளே போனார்.

உள்ற வாங்க தம்பி

போனோம். உள்ளே, கவி. .  . கவி , இதயம் ஒரு இரும்புக்குண்டாய் கணக்க ஆரம்பித்தது.

நான் தலையைப் பிடித்துக்கொண்டு பின்னே சாய்ந்தேன். எப்போதும் துள்ளியபடி இருக்கும் அவள் கால்கள் துண்டிக்கப்பட்டு இருந்தன.

நிச்சயதார்த்தம் நடக்கறத்துக்கு 2 நாள் முன்னாடி ஒரு விபத்துல, உங்கள கூப்பட முயற்சி பண்ணினோம் தம்பி நீங்க ஊர்ல இல்ல..”


பல விஷயங்கள நம்ம சொல்லாமலே புரிஞ்சுக்குவோம் அப்படி ஒரு விஷயம். அந்த கல்யாணம் நின்னு போச்சு.

அவளைப் பார்த்தேன். அந்த கண்களில் சுத்தமாக ஒளியில்லை. என்னைப் பார்ப்பதை தவிர்த்து வேறு பக்கம் வெறித்தாள்.

ஹேய்கவி..இங்க பாரு” … அவள் திரும்பவில்லை. கண்களில் நீர் மட்டும் வழிந்து கொண்டு இருந்தது. என்னை பார்க்காமலேயே பேசினாள்.
உன்ன கஷ்டப்படுத்தனும்ம்ன்னு நான் கூப்பிடலஉங்கிட்ட மன்னிப்பு கேக்கணும்ன்னு தோணுச்சு..எங்க இப்ப கேக்கலைன்னா கேக்க முடியாமலே போயிடுமோன்னு தான்…” சொல்லச் சொல்ல அழ ஆரம்பித்தாள்.

நான் அவள் தலையை வருடினேன். அதை மெல்ல என் பக்கம் திருப்பி அவள் கண்களுக்குள் பார்த்தேன். அவள் என் பார்வையை தவிர்க்க முயன்றாள். எத்தனையோ பேருக்கு ரத்தம் கொடுத்து இருக்கிறேன். பல துரதிஷ்ட்டமான விபத்துக்களை பார்த்து இருக்கிறேன்.ஆனா கவிய அப்படி பாக்கும் போது, செத்துட்டேன்.

மெல்ல எழுந்து அவள் அப்பாவை பார்த்து சொன்னேன்.

கவி ஒரு முற சொன்னா சார் … இந்த ஜென்மத்துல எனக்கு கல்யாணம் நடக்காதுன்னு, நிஜம் தான் ஆனா எனக்கு எப்பவும் குழந்தைங்க உண்டு , கவியையும் சேத்து……”