இதை படிக்கும் முன் மக்கள் பயத்தை போக்க அவர் பத்திரிக்கைகளுக்கு
அளித்த நீண்ட விளக்கத்தை படித்து விட்டு வாருங்கள். அதை படித்த உடன் என் மனதில் எழும்
சில “Common-sense” உடைய எவனும் புரிந்து கொள்ளக்கூடிய சில கேள்விகள்.
அதே போல உதயகுமார்
(மக்கள் போராட்ட குழு ஒருங்கிணைப்பாளரின் விளக்கத்தையும் படிக்குமாறு கேட்டுக்கொண்கிறேன்.
அதற்கு முன் அப்துல்
கலாம் “அணு” விஞ்ஞானி அல்ல, அவர் ஒரு Aeronautical Engineer.இதை உணர மீடியாக்கள் முன்வர
வேண்டும்.அவரை அணு விஞ்ஞானி என அழைக்காதீர்கள்.அவரே அப்படி சொல்லிக்கொண்டதில்லை. அதற்காக
அவர் அணுவை பற்றி பேசக்கூடாதென நான் சொல்லவைல்லை. எனக்கு கேள்வி கேட்க உரிமை இருக்கும்
போது விளக்கமளிக்க அவருக்கும் உரிமை/பொறுப்பு உண்டு.
விளக்கம் படித்த
உடன் எழுந்த கேள்விகள் சில :
1)இதை அப்துல்
கலாம் யாருடைய வற்புறுத்தலும் இல்லாமல் செய்தார் என நம்ப என்ன முகாந்திரம்?? (போராட்டத்திற்கு
பின்னால் “சக்திகள்” இருப்பது உண்மை எனில் இதற்கு பின்னாலும் எதாவது அப்படி இருக்க
வாய்ப்பு இருக்கவே செய்கிறது).
2)அணு கழிவுகள்
(Nuclear waste) 75% மறு – சுழற்சி (Reuse) செய்யப்படும் என கூறி இருக்கிறார். மீதி
25% அங்கேயே அடைக்கப்படுமாம், அது வெளிவர வாய்ப்பே இல்லையாம்.
சார் இது உங்களுக்கே கொஞ்சம்
ஜாஸ்தியா தெரியல? அந்த கழிவுகள் என்னைக்கா இருந்தாலும் ஒரு நாள் எதாவது பண்ணி தான சார்
ஆகனும்? சாதாரண ப்ளாஸ்டிக்கே அழிய 1000 ஆண்டுகள் ஆகும் போது அணுக்கழிவுகளின் தாக்கம் எத்தனை நாள் இருக்கும்ன்னு
உங்களுக்கு தெரியாதா?
3) சரி ஜப்பான்
புக்குஷிமா முதலாம் தலைமுறை அணு மின் நிலையம் அதனால போச்சு . நம்ம கல்பாக்கம் அணு மின்
நிலையத்தில் உள்ள குளறுபடிகள் உங்களுக்கு தெரியாதா?
அங்கே World
Nuclear Association http://www.world-nuclear.org/
வழி காட்டுதல் படயா எல்லாம் நடக்கிறது?
அங்கே இறந்த ஊழியர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை ஏன் வெளியிடப்படவில்லை?
எத்தன பேருக்கு அங்க என்னென்ன வியாதி வருதுன்னு வெளி உலகத்துக்கு தெரியாம மறைக்க வேண்டிய அவசியமென்ன?
4) சார்.,
Controlled chain reaction இருப்பதால் பாதிப்பில்லை. குளிரூட்ட பயன்படுத்திய நீரில்
5 செண்டிகிரேட் தான் பெப்பம் அதிகம் இருக்கும் அதில் கடலுக்கு செல்வதால் பாதிப்பில்லை
என்கிறீர்களே, என்ன சார் நியாயம் இது? ஒரே இடத்தில் இருந்த்து திரும்பத்திரும்ப நீரை
குளிரூட்டப்பட்டால் 5+5+5+…. இன்னா சார்?
5) சரி போகட்டும்…இந்த
மின்சாரம் கிடைச்சு திருநெல்வேலி முன்னேற போகுதுன்னு சொன்னீங்களே அதத்தான் எந்னால தாங்கிக்க
முடியல.
சார் உங்களுக்கு
தெரியுமோ தெரியாதோ எனக்கு தெரியல.இந்தியாவை நடத்துவது பிரலாக்காலும் அம்பானிக்களும்
தான், அதும் நேரடியாக்கூட இல்ல.நிரா ராடியா போன்ற தரகர்கள் மூலமாக
.
இத நீங்களே பாருங்க
அம்பானியின் Antilia
வீடு மட்டும், தொழிற்சாலை இல்லங்க வீடு மட்டும் ஒரு மாசத்துக்கு பயன்படுத்திய மின்சாரம்
6,37,240 யூனிட்டுகள். அதாவது எங்க வீட்ல 7000 மாசத்துக்கு (!!!) பயன்படுத்தற அதே அளவு.
இதன் மதிப்பு 70,69,488 ரூபாய்கள் மட்டுமே. இதுல சார் உரிய நேரத்துக்கு கட்டிடறார்ன்னு
சொல்லி (!!!) அவருக்கு 40000 தள்ளுபடி வேற!
நீங்களே சொல்லுங்க
இதுல வர்ர மின்சாரத்த அந்த பகுதி மக்களுக்கு இலவசமா தர நீங்க தயாரா?
இந்தியா முன்னேற
இது வேணும். அட போங்க சார் கமெடி பண்ணிகிட்டு. இந்த பணம் ஸ்விஸ்க்கு இல்ல போகப்போகுது.
6) இரண்டாவது
முறையாக தமிழத்தையே திரும்ப தேர்வு செய்து எங்களுக்கு இந்த அறிய வாய்ப்பை வழங்க
என்ன காரணம்?
7) அப்பறம் சார்,
என்னமோ சொன்னீங்களே..ம்ம்…அய்யோ மறந்துட்டனே..ம்ம்ம் ஜெர்மனி…சார் அந்தம்மா ஜப்பான
பாத்துட்டு பயந்து போய் தான் அப்படி ஒரு முடிவையே
எடுத்துச்சு.
8) அந்த 10000 பேருக்கான வேலை வாய்ப்பு உறுதி என்னாச்சு???
இது எல்லாத்துக்கும் அப்பறம்,
அணு மின்சாரம் நமக்கு வேணும் தான. நான் இல்லன்னு சொல்லல.அதை,இந்த இளிச்ச வாய் தமிழனுங்க
இருக்கற இடத்துல போய் தான் கட்டணுமா? . இதை எல்லாம் பேசிட்டு மேடம் க்யூரி மாதிரி எங்கள
தியாகம் பண்ன சொல்றீங்க (என்ன ஜெஸ்ஸி ட்ரை பண்ற??). நீங்க இலங்கை தமிழர் விவகாரத்துல
வாய தொறக்காதது பத்தி நான் ஒண்ணும் கேக்க போறதில்ல. ஏன்னா அப்ப நீங்க அரசியல்வாதி இல்ல.
கடைசியா என்ன தான் பண்ணலாம்ன்னு கேக்கறீங்களா?
ஒண்ணும் பெருசா பண்ண வேணாம்.இந்த மின்சாரம் அந்த பகுதி மக்களுக்கு இலவசமா வழங்கப்படும்,மிச்ச
மீதி கார்ப்பரேட் நிறுவனங்களுக்குன்னு அறிவிங்க போதும். ஏன்னா எப்படி இருந்தாலும் கட்டுனது கட்டி ஆச்சு . இனி அத ஊத்தி மூடுறத விட்டுட்டு பாதிப்புகள எப்படி கொறைக்கலாம்ன்னு யோசிப்போம்.
ஆனா இதை படிக்கும் எல்லாரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரே ஒரு விஷயம் என்னன்னா...இந்த மின்சாரம் உங்களயோ என்னயோ இந்தியாவையோ முன்னேத்த இல்ல..சத்தியமா இல்ல... கார்ப்பரேட் செக்டாருக்கு..அவங்க லாபத்துல கொழிக்கத்தான் நாம இங்க கரடியா கத்தறோம்!
டிஸ்கி : கடைசியா
உங்களையும் அரசியல்வாதி ஆக்கிட்டாங்களே சார்.
என்னை பொறுத்த வரை இதை மூடுவது சரியான தீர்வா என தெரியவில்லை.சத்தியமாக,தெரியவில்லை. ஆனால் என்றாவது ஒரு நாள் இது அப்பகுதி மக்களுக்கு ஊறு விளைவிக்கும் என்பது மட்டும் புரிகிறது. ஏன் எனில் ஆதரிப்பர்கள் யாரும் அங்கிருந்து அனுபவிக்கப்போவதில்லை. இதற்க்கு காட்டமாக பதில் எழுதும் முன்னால் , உங்கள் மகனை அணு உலையில் வேலைக்கு அனுப்ப தயாரா என்றும் சொல்லுங்கள்?
அவரை யாரோ தூண்டிவிட்றாங்க, அவர் அரசியல்வாதி என்ற அணுமானத்திற்கு யாராலும் பதில் சொல்ல முடியாது...
ReplyDeletei can't accept ur 2nd point...
99% of Nuclear fuel are said to be reused...
http://www.thehindu.com/todays-paper/article2604964.ece
4ஆவது pointல் என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியல...
அதான் 5c வெப்பம் உயர்ந்த நீரை கடலில் சேர்த்து விட்றாங்க...
அப்பறம் என்ன 5+5+5...
இங்கு தயாரிக்கப்படும் மின்சாரம் அனைத்தும் அம்பானிகளுக்கு கொடுக்கப்படும் என்ற கருத்தை ஏற்க முடியாது...
அவர் தன் கருத்தை சொல்லியிருக்கிறார்...
யார் என்ன கருத்து சொன்னாலும் இது அரசியலா என பார்க்கும் எண்ணம் இங்கு இருக்கிறது...
அதற்கு பதில் யாரலும் சொல்ல இயலாது...
@erk
ReplyDelete2 வது பாய்ண்ட் அவர் சொன்னது தான் 75% ந்னு
Source : மானங்கெட்ட தினமலர்
ஒரு முறை எந்த இடத்தில் நீர் வெளியேற்றப்படுகிறதோ அதே இடத்தில் இருந்தே மீண்டும் குளிரூட்ட நீர் எடுக்கப்படும்.
மின்சாரம் அனைத்தும் அம்பானிக்கேன்னு சொல்லல, ஆனால் இதில் பெரும் பங்கு மின்சாரம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கே என்பதை மறுக்க இயலுமா?
பி.கு : உங்க வீட்ல மின் கட்டணம் சரியா கட்டுனதுக்காக எதாவது தள்ளுபடி கிடைச்சு இருக்கா?????
“இனி அத ஊத்தி மூடுறத விட்டுட்டு பாதிப்புகள எப்படி கொறைக்கலாம்ன்னு யோசிப்போம்”. நல்ல யோசனை ! படித்தவர்கள் நிறைந்த தமிழகத்தில் போராட்டம் நடத்துவதற்கு எல்லா வேலைகளும் முடியும் வரை ஏன் காத்திருந்தார்கள் என்பது புதிராக இருக்கின்றது !
ReplyDeleteஅணுமின் நிலையத்தை மூடுவதற்கு வாய்ப்பில்லை என்பதை தெரிவித்ததற்கு நன்றி ...
ReplyDeleteஅப்துல் கலாமை அணுவிஞ்ஞானி இல்லை என்பதை உங்களைப் போன்ற சில பேர் கூறுகிறார்கள் ,எதன அடிப்படையில் அப்படி கூறுகிறீர்கள் ?
அவர் பட்டம் பெறவில்லை என்பதனால் அவருக்கு அவ்வளவு விஷயம் தெரியாது என்றே முடிவெடுத்து விடுகிறார்கள் சில மேதாவிகள் ,நமக்கே சில விஷயங்கள் புரிகிற போது ,அணுகுண்டு சோதனை உட்பட பல அனுபவம் பெற்ற ஒருவரை ,விஷயம் தெரியாதவர் என சொல்வது எந்த விதத்திலும் சரியல்ல ..
@udanpirappae சார், அவருக்கு விஷயம் தெரியாதுன்னு நாங்க சொல்ல ஆனா அவர் "அணு" விஞ்ஞானி இல்லை. அது தவறான வார்த்தை பிரயோகம்.
ReplyDeleteநல்லா யோசிச்சு பாருங்க, இவரை விட அணுவைப்பற்றி தெரிந்தவர்கள் பலர் அரசில் இருக்க (இவருக்கு தெரியாதுன்னு நான் சொல்லல இவரை விட அதிகம் தெரிஞ்சவங்க இருக்காங்கன்னு தான் சொல்ல்றேன்) இவரை கூப்பிட்டு மக்களிடம் பேச சொல்ல காரணம் என்ன???. இவருக்கு இருக்கும் நற்பெயரை அரசு ப்யன்படுத்திக்கொள்ளப்பார்க்கிறது.
நீங்க சொல்லி கேக்கலைன்னா யார் சொன்னா கேப்பாங்களோ அவங்கள விட்டு சொல்ல வெக்கறது.இது எப்படி நியாயம்?
அதே போல அணு விஷயத்தில் எதோ ஒன்று மறைக்கபடுவதாக நம்புகிறேன்.
@shan அவர்களே ,இன்று போராடும் கிராமத்து மக்களில் பல பேர் ,அணுமின் நிலையத்தில் வேலை கிடைத்தால் போராட்டத்தில் இருந்து விலகுவோம் என்று கூட ஒரு பேச்சு நிலவியது , உங்களுக்குத் தெரியுமா ?
ReplyDeleteபடிச்சு வாங்குற பட்டம் மட்டுமே விஞ்ஞானினு சொல்ற நினைப்பு இன்னும் பல பேர்ட்ட இருக்கு போல ..அதான் அப்துல் கலாமையும் மட்டம் தட்டுகிறது
எல்லா விசயத்திலும் ஆபத்து இருக்கிறது ,எதில்தான் ஆபத்து இல்லை ,தமிழ்நாட்டைத் தவிர வேறெந்த மாநிலத்திலும் அணுமின் நிலையம் இல்லையென்றால் மட்டுமே,நாம் எதிர்ப்பு தெரிவிப்பது முறை !(என் தனிப்பட்ட கருத்து இதுவே )
@udanpirappe :
ReplyDeleteதயவு செஞ்சு நான் அவர மட்டம் தட்டுறதா நினைக்காதீங்க. அவர் மீது எனக்கு மரியாதை உண்டு :)
வேலை!!!! இதையும் நான் குறிப்பிட்டு இருந்தே 30க் பேருக்கு வேலை என்னாச்சு என கேட்டு இருந்தேன். ஆனால், வேலைக்காக மட்டுமே இந்த போராட்டம் இல்லை. ஆனால் சொன்னபடி வேலை தருவதும் அவர்கள் கடமை என்பதை மறுக்க இயலாது அல்லவா?
சார்,இதில் சில மறைக்கப்பட்ட உண்மைகள் புதைந்து கிடக்கிறது சார். கல்பாக்கம் பணியாளர்களுக்கு Long term analyisis செய்யப்படவில்லை. இங்கே வேலை கிடைத்தாலும் செய்யாமல் இருப்பதே புத்திசாலித்தனம். ஏன் நாட்டுக்க்காக தியாகம் செய்யக்கூடாதா என கேட்காதீர்கள். இது நாட்டுக்காக அல்ல , ஏ.சி அறையில் கொழிக்கும் பண முதலைகளுக்காக.
@shan அவர்களே ,,என்ன லாஜிக் இது ,வேலையையும் கொடுக்கணும் ,இழுத்து வேற மூடனும் ..நான் கல்பாக்கத்தில் வேலை செய்யும் ட்விட்டர் ஒருவர் மூலம் விசாரித்தேன் ..இதையும் திடீரென ஆதாயத்திற்காக கிளப்பி விடுகிறார்கள் என சொல்கிறார்
ReplyDeleteஅவரும் நியாமாக பேசக் கூடியவர்தான் // நாடும் வளர ஆசைதான் ,ஆனா நாமதான் எதையுமே செய்ய விடமாட்டோமே