Flipkart

Saturday, February 23, 2013

குப்பை : Bullying - வார்த்தை வன்புணர்ச்சி

 இது எனது 50ஆவது பதிவு, இந்த வலைதளத்தில். ஆதரளவளித்த பதிவுலக நண்பர்கள் , ட்விட்டர்கள் மற்றும் அனைவருக்கும் நன்றி :)
                           டிஸ்கி : மிகுந்த யோசனைக்கு பின் எழுதிய பதிவு இது. பதிவுலகம், நிஜ உலகம் என எந்த முகமூடியும் போட்டுக்கொள்ளாமல், என் மெய் உலக நண்பர்களையும் என் முகமறிந்தே இணையத்திலும் தொடர விட்டிருக்கிறேன். ஆகவே, என் கருத்துக்கள் எந்த அளவு என் மெய் உலக வாழ்க்கையையும் பாதிக்கும் என இதற்கு முந்தைய பதிவுகளும் எனக்கு உணர்த்தி உள்ளன. இப்பதிவு, சில மெய் உலக நண்பர்களை காயப்படுத்தலாம். ஆனால், இதற்கான இன்றைய தேவை, என்னை எழுத வைக்கிறது. பெயர்கள் இருக்காது. ஆனால், உங்கள் மனசாட்சி உங்களை ஏளனமாய் நோக்கலாம், என்னை மன்னித்து விடுங்கள். ஏன் இந்த டிஸ்கி எந தெரியாதவர்கள் ஏன் எனக்கேட்டு என்னை சங்கடப்படுத்தவேண்டாம்.
சம கால உலகின் மிக முக்கிய Psychological and social பிரச்சனைகளில் ஒன்றான Bullyingயையும், அது இந்தியாவில், இந்திய கலாச்சாரத்தில் ஊன்றியுள்ள ஆழமான வேரையும் இக்கட்டுரை விவரிக்கிறது.
          சமர்ப்பணம் : ஏதோ ஒரு பெண்ணின் வயிற்றில் பிறந்த அனைவருக்கும்

"எனக்கு கமலை பிடிக்காது"

"ஏன்"

"அந்தாள் பர்சனல் லைப் சரியில்ல. ஒரு பொண்டாட்டிய வெச்சு வாழ தெரியல, கௌதமிய....."

"காந்தி  விஷயத்துல வீக் ஆமே, அப்ப்டியா?"

"எனக்கு அப்பவே தெரியும் இவளுக்கு எல்லாம் கல்யாணம் சரி பட்டு வராதுன்னு"

"ஏ.ஆர் ரகுமான் சரியான ஹெட்வெயிட் பா"

"இளையராஜா ஒரு நவபாப்பான், திமிர் பிடித்தவர்"

இவ்வாறான பிரபலங்களை பற்றிய ஏசுதல்ளில் தொடங்கி,

"அந்தா போகுது பாரு, அந்த பச்ச சுடி, லெஃப்ட் ல இருந்து செகண்டு, செம பிட்டு, நம்ம சீனியர் ஒருத்தரே முடிச்சிருக்காரு, ரூமுக்கு கூட்டிட்டு போயி, உம்ம்"

"கூப்பட கூப்பட அவ பாட்டுக்கு போறா மச்சி, தேவடியா, எவனாவது பளபளப்பா வந்தா தான் போய் ஊ..."

               தான் கூப்பிட்டா.ல் நிற்காமல் செல்லும் பெண் வரை தொடந்து நாம் அவர்களை கீழும் நம்மை மேலும் வைக்க பயன்படுத்துவது, தனி நபர் தாக்குதல். இதில் பெரும்பான்மையானோர் தேர்ந்தெடுப்பது அவர்களது அந்தரங்க வாழ்க்கை - செக்ஸ் லைஃப்.

"ரஜினிக்கும் கமலுக்கும் சண்டை

அந்த சண்டையில கிழிந்து டா

ஸ்ரீதேவி புண்டை"

                  இந்த வாய்ப்பாட்டு பாடலை, 90களில் தனது பால்யத்தில் இருந்தவர்கள் யாரும் கேட்காமல் இருக்க முடியாது. சிறுவர்கள் மத்தியில் கூட அவ்வளவு பிரபலம் இந்த பாடல். பிறந்தது முதல் இன்று வரை தமிழ் சமூகத்தில் நான் பார்த்து கவலையுறும் ஒரு விஷயம் இது. பிரபலங்கள் குறித்த வசைபாடலை கேள்விக்குட்படுத்தும் கீச்சு ஒன்றை சமீபத்தில் இட்டேன்.

"நம்மால் நேரில் புணர முடியாதவர்களை, வார்த்தையால் புணர்ந்துவிடுகிறோம்"

                 சினிமாவில் நாம் பார்த்து ஏக்கமுறும் பெண்களை, அடைய விரும்பும் பெண்களை, ரசிக்கும் பெண்களை, நம்மால் அவர்களது யோனிகளை நெருங்க முடியாது என்று உணர்ந்து வார்த்தைளால் நம் இச்சையை தீர்த்துக் கொள்கிறோம். பொது வாழ்க்கையும் சினிமாவிற்கும் அர்த்தம் தெரியாதவர்களா நாம்? சினிமாவிற்கு வந்த யாரும் பொது வாழ்க்கைக்கு வந்து விடவில்லை. அவர்களது அந்தரங்கத்தை பேசுவது, ஒருவர் கழிவறைக்குள் எட்டிப்பார்ப்பது போன்றது என்பது நமக்கு உரைப்பதே இல்லை.


                   ஓர் அரசியல்வாதியே ஆனாலும், பொது வாழ்க்கையிலேயே இருந்தாலும், அவர் அந்தரங்கத்துக்கும் பொது வாழ்க்கைக்கும் முடிச்சிட்டு கேவலப்படுத்துவது தவறு. கற்பழிப்பு குற்றச்சாட்டு, பாரலுமன்றத்தில் நீலப்படம் பார்த்தல் ஆகிய பொதுவெளி அல்லது மற்றவர்களை பாதிக்கும் சம்பவங்களை விட்டு விட்டு மற்றபடி வேறு எந்த ரீதியிலும் மற்றவர்களை பாதிக்காத அந்தரங்கத்தை கிசுகிசுவாக பேசுவது  அநாகரீகம் என்ற உணர்வு நமக்குள் எழ வேண்டும்.

              அவ்வாறு எழாததன் விளைவு தான் கலைஞரையும் குஷ்பூவையும் வைத்து ரிப்போர்ட்டர் கக்கிய வாந்தி. இது இப்போதில்லை, பெரியார் இருந்த போதே அவர் மீது வாரி இறைத்த சேர் இறைத்தவர்கள் ஏராளம். ஆனால், இப்பண்பை வெற்றிகொண்டான், எஸ்.எஸ்.சந்திரன் போன்ற திராவிடஅரசியல் மேடை பேச்சாளர்களும், பெண்களை தாக்கி, வார்த்தையாலேயே நிர்வாணப்படுத்தி அதை வளர்த்தார்கள் என்பதும் உண்மை. விகடன் இப்போது வெளியிட்டுள்ள டைம் பாஸ் பத்திரிக்கை, மஞ்சள் பத்திரிக்கை என்றே சொல்லலாம். அதில் இவற்றை தவிர வேறு ஏதுமே இல்லை.


இதில் முக்கியமாக கவனிக்கப்படவேண்டியவை இரு விஷயங்கள் :

1. ஒருவனை தாக்க, அவனை தொழில் ரீதியாக, கருத்து ரீதியாக விமர்சிக்க முடியாத போது, அவனது தனி வாழ்க்கையை தாக்குதல்

2. ஒரு ஆணை தாக்குகையில் அதை அவன் சம்மந்தப்பட்ட பெண்ணின் மூலம் செய்தல் அல்லது பெண்ணை விமர்சிக்க ஆரம்பித்தாலே, அவளை ஒழுக்கம் கெட்டவளாக காட்ட முனைவது.

                  கொஞ்சம் யோசித்து பார்த்தால், நாம் அனைவரும் தினம் தினம் இதை கடந்து வருவதையும், சில நேரம் கொஞ்சமும் லஜ்ஜையின்றி அதை செய்தும் வந்திருக்கிறோம். குடும்பத்துக்குள் பேசிக்கொள்ளுங்கள் என்று சொன்னால் கூட சினிமா குறித்து பேசத்துவங்கி, அதில் இருக்கும் கிசுகிசுக்களில் கொணர்ந்து நிறுத்துகிறோம். நம்மை பார்த்து வளரும் குழந்தை வேறு எப்படி வளரும்???


இந்த கட்டுரை எழுத தொடங்கிய போது, நண்பர் ஒரு ட்விட்லாங்கர் போட்டார். http://www.twitlonger.com/show/l4lobs

                அதில் ஒரு முக்கியமான கேள்வி எழுப்பி இருந்தார். ஒருவனை விமர்சிக்க/ கருத்து ரீதியாக எதிர்கொள்ள முடியாத இச்சமூகம் அவனை வம்புகளாலும், வசைகளாலும் தனி நபர் தாக்குதல்களாலும் எதிர்கொள்ளும் ஒரு சமூகம் உருப்பட எதாவது வாய்ப்புள்ளதா? எந்த அறிவுள்ள பண்பட்ட ஒரு சமூகமாவது இதை அனுமதிக்குமா? உங்கள் அனைவருக்கும் ஒன்றே ஒன்றே நினைவு படுத்துகிறேன். நீங்கள் செய்வதைப்போல, எவனோ ஒருவன் உங்கள் தாயையும், உங்கள் மனைவியையும் இதே சுடு சொற்களால் தாக்குவான். அதற்கு அதை ப்ரமோட் செய்த விதத்தில் சமூகத்தில் ஒரு அங்கமான நீங்களும் பொறுப்பு.

                           இரண்டாவதுக்கு வருவோம். பெரும்பாலும், ஓர் ஆணை திட்ட அவன் தாயை/மனைவியை தாக்குவதில் தொடங்கி, இப்படி தனி நபர் தாக்குதல் நடத்தும் பழக்கம் வரை அனைத்தும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவை. இது பெண்களுக்கு என மட்டும் நாம் கட்டமைத்து வைத்திருக்கும் "Chasity" அல்லது புனிதத்தன்மையில் தொடங்குகிறது.
"பொம்பள குடிச்சா தப்பு" "பொம்பள இப்படி தான் நடக்கணும்". இவ்வாறான கருத்துக்களை எம்.ஜி.ஆர் தொடங்கி ரஜினி வரை அத்தனை சினிமாக்களும் நமக்கு திரும்ப திரும்ப போதித்து வருகின்றன. அவள் ஒழுக்கங்கெட்டவள் என நிறுவி விட்டால் போதும் என்ற எண்ணம் குழந்தைகள் மனதில் சிறு வயதிலேயே ஆழப்பதிகிறது. எல்லா கல்லூரிகளிலும் ஒரு அழகிய பெண் "அவ தேவடியா மச்சி" என குறிக்கப்படாமக் இருந்திருக்கவே முடியாது. அவளை தன்னால் அடைய முடியவில்லை, அவளோடு பேச முடியவில்லை என்ற இயலாமையின் வெளிப்பாடு இது.                      பெண்களுக்கு எதிரான இந்த மன நிலையை இங்கே சுட்ட காரணம், இவை இரண்டும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடயவை. சமூக சீர்திருத்தம் செய்த நிறைய பேர் தொடாத ஒரு ஏரியா இது. பெண்களை இரண்டாம் தர குடிமக்களாக கருதுவதில் எந்த மதமும் ஒன்றுக்கொன்று சளைத்தல்ல. ஹிஜாப் அணிவிக்கும் இஸ்லாமிற்கும், பீரியட்ஸை தீட்டாக கருதும் இந்து மதத்துக்கும் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை.

                  இச்சமூகம் இதே நிலையை எவ்வித மாற்றமும் இன்றி இப்போதுள்ள இதே மன நிறைவோடு தொடருமானால், "ஆமாம் அவ நைட்டு ஒம்போது மணிக்கு வெளிய வந்தா அதான் நான் ரேப் பண்ணினேன்" போன்ற வாதங்களை கோரஸாக கேட்கும் வாய்ப்பு சீக்கிரமே ஏற்படும்.

பின் இணைப்பு :

சமீபத்தில் அ.முத்துகிருஷ்ணன் எழுதிய கட்டுரை ஒன்றும்,  டான் அசோக்கின் கட்டுரையும் இதே பொருள் குறித்து பேசுகின்றன.

குறிப்பு :

                       நண்பர்கள் தயவு செய்து, இதில் அச்சிலேற்றமுடியாத வார்த்தைகளை பயன்படுத்தியதற்காக மன்னிக்கவேண்டும். எல்லாம் தெரிந்த வார்த்தைகள் தானே? அச்சில் பார்த்தால் மட்டும் குடியா மூழ்கிவிடப் போகிறது என்ற எண்ணம் மட்டுமல்ல அதை அப்படியே இட காரணம். இப்பதிவின் நோக்கம், இவ்வார்தைகளை உபயோகப்படுத்துபவர்களை உலுக்க வேண்டும் என்பதற்காக.

11 comments:

 1. இயலாமையின் வெளிப்பாடு

  ReplyDelete
 2. அனைத்தும் அப்பட்டமான உன்மைகல்

  ReplyDelete
 3. வித்தியாசம் ஏதுமில்லை

  ReplyDelete
 4. கொஞ்சம் யோசித்து பார்த்தால், நாம் அனைவரும் தினம் தினம் இதை கடந்து வருவதையும், சில நேரம் கொஞ்சமும் லஜ்ஜையின்றி அதை செய்தும் வந்திருக்கிறோம்

  வாஸ்தவமான வார்த்தைகள் ... நம்மாலே இப்படி இருக்க வாய்க்கலியே என்ற எண்ணம், கையாலகததனதையே சுய ஒழுக்கம் ஆக்கும் கேவலம்

  ReplyDelete
 5. உண்மை தான் நண்பரே....சில நேரங்களில் நாம் செய்யும் பரிகாசம் நம் முகத்திரையை கிழிப்பதறியாமல் செயல்படுவது நிதர்சனம்!!!

  ReplyDelete
 6. அறிவின் மீதான சுய பரிசோதனையும்... பழமைவாத கலாச்சாரத்தில் ஊறிய அர்த்தமற்ற நல்லொழுக்க நடத்தைகளை கேள்விகேட்காமல் ஏற்றுக்கொள்ளாத மனோபாவமும் தான் மனிதனை முழுமையாக்கும்.

  -ரகு.சி

  ReplyDelete
 7. //பெண்களை இரண்டாம் தர குடிமக்களாக கருதுவதில் எந்த மதமும் ஒன்றுக்கொன்று சளைத்தல்ல. ஹிஜாப் அணிவிக்கும் இஸ்லாமிற்கும், பீரியட்ஸை தீட்டாக கருதும் இந்து மதத்துக்கும் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை.//

  சவுக்கடி கொடுத்துட்டிங்க.. பளார் பளார்

  ReplyDelete
 8. சவுக்கடிங்க.. பளார் பளார்

  ReplyDelete
 9. நீ என் நண்பன் என்று நான் பெருமை கொள்ள இன்னொரு பதிவு உன்னிடம் இருந்து, என்ன சொல்ல, கெட்ட வார்தைலாம் ஒகே, அது தெரிஞ்சுது தானே, நீயே சொன்னது போல், இந்த வார்த்தையைக் கூட தனக்கு தெரிந்ததாக பெண்கள் வெளிப்படையாக காட்ட முடியாது, காட்டினால், நீ சொன்னது போலவே அழைக்கப் படுவார்கள்;-))
  அருமையான பதிவு ஷைலேஷ் :-))

  ReplyDelete
 10. அருமையான பதிவு வாழ்த்துக்கள் கூத்தாடி! :)

  ReplyDelete

போறாது தான் போறீங்க.. இங்க ஒரு தரம் எதுனா சொல்லீட்டு போங்க..