Flipkart

Amazon

Amazon

Wednesday, February 6, 2013

மதத்தலைவர்கள் : புறவாசல்


 நண்பர்களே இது கொஞ்சம் முக்கியமான தருணம், தமிழகம் இன்று எதை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது?

                                 மத உணர்வுகளை புண்படுத்துகிறது என விஸ்வரூபத் தடையை அடிப்படையாக நினைத்து ஒவ்வொரு படத்திற்கு எதிராகவும் வரிந்து கட்டி நிற்கின்றனர், மத வெறி பிடித்தவர்கள். வருங்காலத்தில் பச்சை நிற சட்டோயோ, காவி நிற சட்டையோ அல்லது வெள்ளை நிஜாரோ வில்லன் அணிந்து வந்தால் அது கூட என்னை புண்படுத்துகிறது என இவர் துள்ளிக்குதிக்க வாய்ப்புள்ளது. யார் இவர்கள்? இந்தியா என்ற மிகப்பெரிய ஜன நாயக நாட்டின் பிரதமர் கூட ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நியாமாகவோ இல்லாமலோ ஒரு தேர்தல் வைத்து தானே தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஆனால், இவ்வளவு பெரிய மதங்களின் அதுவும் பல்வேறு நாடுகளில் பல்வேறு கலாச்சாரங்களில் (இந்து - இந்தியா,நேபால் மற்றும் உலமெங்கும், கிறஸ்தவம் - உலகெங்கும் , இஸ்லாம் - உலகெங்கும்) பரவியுள்ள மதங்களின் தலைவர்களாக தங்களை தாங்களே அழைத்துக்கொள்ள இவர்கள் யார்?  நான் ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவன், என் மதத்தின் தலைவன் என்று அழைக்கப்படும் ஒருவன் மீகக்கீழானவன் என நான் கருதும் பட்சத்தில் அவனை எப்படி நீக்குவது. தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என்பது போல், மதச்சின்னம் இட்டவன் எல்லாம் மதத்தலைவனா?

          எல்லா மதங்களை பின்பற்றும் நண்பர்கள் பலர் நமக்கு உள்ளனர். மதம் சார்ந்த எல்லா முட்டாள்தனங்களையும் அழிக்க வேண்டியது நம் கடமை தான் எனினும் அதில் முதன்மையானது, மதம் சார்ந்த அரசியல் அழிப்பு. அது இந்துத்வா ஆனாலும் சரி, அல்லது இஸ்லாமிய/கிறிஸ்துவ மத சார்ந்த அரசியல் ஆனாலும் சரி. அது அழிக்கப்படவேண்டியதே. சில புல்லுருவிகள் மதத்தை பின்பற்றும் நண்பர்களின் தலைவனாக தங்களை புறவாசல் வழியில் வந்து நிறுவிக்கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

     இந்த மூன்றாம் தர தலைவர்களை, அரசாங்கமும் மதத்தை பின்பற்றும் மக்களும் முற்றிலும் புறக்கணிக்க வேண்டும். ஏதோ, அந்த மதமே இவர்கள் பின்னால் நிற்பது போன்ற தோற்றம் கலையப்பட வேண்டும்.

     தில் இருந்தால், உங்கள் மதத்தில்/ஜாதியில் உள்ள மக்கள் அனைவரையும் ஜன நாயக ரீதியில் ஓட்டுப் போட வைத்து தேர்தல் நடத்தி நீங்கள் தலைவர் என நிரூபியுங்கள். ராமதாஸ் தானே என் ஜாதிக்கு நான் தலைவன் என்று சொல்லிக்கொள்வது போலத்தான் நீங்களும், உங்களை மக்கள் தலைவனாக மட்டுமல்ல மனிதனாக கூட ஏற்கவில்லை. உங்களை கொண்டாடவில்லை, ஏற்றுக்கொள்ளவில்லை, வேறு வழியின்றி சகித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

                 

No comments:

Post a Comment

போறாது தான் போறீங்க.. இங்க ஒரு தரம் எதுனா சொல்லீட்டு போங்க..