Wednesday, February 6, 2013
மா சே துங்கின் வண்ணத்துப்பூச்சி!
வேச'தாரி
புணர்ந்து களைத்த மூன்றாம் ஜாமமொன்றில்
அப்பெயர்தெரியாதவளை உசுப்பிக் கேட்டேன்
"பெண்ணுரிமை குறித்து என்ன நினைக்கிறாய்?"
"நினைத்தவரை புணர்வதும்
நினைத்த வரை புணர்வதும்"
என்றாள்.
மா சே துங்கின் வண்ணத்துப்பூச்சி!
மா சே துங்கின் வண்ணத்துப்பூச்சி ஒன்று
மாண்டு போனது
ஓவென்று அரற்றினார்கள்
அழுது புரண்டார்கள்
கொடியெல்லாம் அரை கம்பத்தில் பறக்க விட்டார்கள்
புரட்சி கீதம் பாடினார்கள்
மௌனமாய் மெழுகுவத்தி ஏந்தி நடந்தார்கள்
நல்ல நகைச்சுவைக்கும் சிக்கனமாய் சிரித்தார்கள்
மகிழ்ச்சியாய் இருந்தவர்களை இரக்கமில்லாதவர்களே என தூற்றினார்கள்
மூன்றாம் நாள் வாடை அடிக்கையில் உறைத்து
புதைக்க மறந்த வண்ணத்துப்பூச்சியை ஜன்னல் வழி வீசி எறிந்தார்கள்
அது குப்பை தொட்டிக்கு அருகே விழுந்தது!
Subscribe to:
Post Comments (Atom)
நன்று.
ReplyDelete// நினைத்தவரை புணர்வதும்
நினைத்த வரை புணர்வதும் //
உண்மையான வரிகள் :-)
மிக அருமை. வேறு வார்த்தை சொல்ல தெரியவில்லை . ஆழமான அர்த்தம்...
ReplyDelete