Flipkart

Amazon

Amazon

Tuesday, February 5, 2013

2100 இல் செய்திகள் - காமெடி கும்மி!

Disclaimer : இதில் வரும் அனைத்தும் முழுக்க முழுக்க கற்பனையே. நீங்களை புண்பட்டுக்கொண்டால், சங்கம் பொறுப்பேற்காது. இதற்கு தடை கோரி கோர்ட்டுக்கெல்லாம் சென்று இதை நிறைய பேரை படிக்க வைப்பேன் என நீங்கள் அடம் பிடித்தால் எனக்குத்தான் லாபம்!


                             
 ===> ஸ்ருதி ஹாசனின் மகனும், கமல் ஹாசனின் பேரனுமான நடிகர் சந்திர ஹாசனின் படத்திற்கு "பொந்து" அமைப்புகள் எதிர்ப்பு. மாறுவேடப்போட்டிக்காக ராமன் வேஷமிட்ட குழந்தை ஐஸ்க்ரீம் சாப்பிடுவது மனதை புண்படுத்தியதாக புகார்.

         இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய பொந்து அமைப்பின் தலைவரும் ஓரே உறுப்பினருமான மாகன் ஐஸ்க்ரீம் முட்டை கலந்த  ஒரு ஆபாசமான உணவு, இதை ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம் என ஆவேசமாக கதறினார்.

===> பூந்தென்றல் படத்தின் ஸ்டில்களை தஸ்லாமிய அமைப்புகளிடம் போட்டுக்காட்டிய படத்தின் இயக்குனர், படத்தின் ஸ்டில்களை சிறு மாற்றங்களோடு அனுமதித்த கருணை உள்ளங்களுக்கு நன்றி கூறினார்.

       இது குறித்து அவர் கூறியதாவது : மொத்தம் இருந்த 203 ஸ்டில்களில் ஓரத்தில் பச்சை கலர் தெரிந்தது, வெள்ளை சட்டை போட்ட ஒருவர் முத்தம் கொடுத்தது போன்ற மத உணர்வுகளை புண்படுத்தும் சீன்கள் மட்டும் நீக்கப்பட்டன. நாளை, பொந்து அமைப்புகள் படத்தை பார்வையிட வருவதால், காவி வண்ணத்தை அங்குலம் அங்குலமாக அலசும் டெக்னிகல் வேலை நடைபெற்று வருகிறது.

===> பெருக்கல் குறியை தவறாக பயன்படுத்துகிறார்கள், கணித ஆசிரியர்கள் பாடம் நடத்த, தத்தோலிக்க தருத்தவை எதிர்ப்பு.

           இது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டார், தருத்தவை தலைவர். கணித ஆசிரியர் சங்கத்தை அணுகிய போது, அவர்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மதத்தை சேர்ந்தவர்களாக இருப்பதால், சங்கத்தை கலைத்துவிட்டதாகவும், தானே இந்த சேரை தூக்கிச்செல்ல வந்ததாகவும் தெரிவித்தார்.

===> மலாலாவை பார்த்து தன் பெயர் மலாலா என்ற பெண் வீட்டில் இருந்து எட்டிப்பார்ததற்காக தலிபான்களால் சுடப்பட்டார். இது குறித்து எதிர்ப்பு தெரிவித்த பாக்கிஸ்தான் பிரதமர் "இது மிகவும் துரதிஷ்டமானது" என்றார். பின்னர் உள்ளே சென்றவர் பதட்டத்துடன் திரும்பி வந்து, " நான் துரதிஷ்டம் என குறிப்பிட்டது, அந்தப்பெண் எட்டிப்பார்த்ததை, துப்பாக்கி சூட்டை அல்ல, திரித்து விடாதீர்கள் அய்யா," என கண்ணீர் மல்க வந்திருந்த இரண்டு மூன்று பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.

===> மலாலா விவாகரம் குறித்து அதிருப்தி தெரிவித்த தமிழகத்தை சேர்ந்த 241 அமைப்புகளும் ஒரே குரலில் "இது போன்ற செயல்கள் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியவை" என்றன.

       இது குறித்து பேட்டி அளித்த பைய காணம் புதின் "இது மிகவும் கொடூரமான செயல், இது போன்ற செயல்களை குல்லா ஒரு போதும் மன்னிக்கமாட்டார். இதை போன்ற அதிகப்பிரங்கித்தனங்களை நிறுத்திக்கொள்வதே இதற்கெல்லாம் தீர்வு. சினிமாக்கள் மக்களை அளவுக்கு மீறி கெடுக்கின்றன, அந்த பெண் எட்டிப்பார்த்ததை வன்மையாக கண்டிக்கிறேன்" என்றார்.

===> தூத்துக்குடியில் நுழைய பீமதாசுக்கு தடை விதிப்பு : எதிர் ஜாதிகளின் சதி என பீமதாஸ் பரபரப்பு புகார்.

          பேட்டி (அவர் வாய்ஸில்) : " நான் கேக்குறேன். எதுக்கு பண்ற நீ காதல் திருமணம். நீங்க எங்க ஜாதி பொண்ணுங்கள கூட்டிட்டு போய் ஏமாத்துவ, நாங்க.." இதற்கு மேல் இவர் பேசியது வழக்கமாக இவர் உளறுவது தான் என்பதால், வாசகர்கள் பழைய பேப்பரை எடுத்து படிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

===> கூடங்குளம் கழிவுகளை மதுரையில் கொட்ட மக்கள் எதிர்ப்பு. முன்னாள் ஜனாதிபதி ஒருவர் இதனால் எந்தப்பிரச்சனையும் வராது என பேட்டி.

===>  அழகன் என்னும் படத்தில் சொட்டையர்களை கிண்டல் பண்ணும் விதமாக காட்சி. சீப்புக்காட்சி அல்ல சீப்பான காட்சி என சொட்டையர் சங்க தலைவர் பீமதாஸ் பரபரப்பு புகார்.

===> நெல்லையில் ஆறு வயது சிறுமி கற்பழிப்பு (மன்னிக்கவும், டெல்லியில் நடந்தால் போட்டுக்கலாம் என பொறுப்பாசியர் சொன்னதால், இந்த செய்தி அழிக்கப்படுகிறது)

===> அடுத்த பிரதமராக எல்லா தகுதியும் பூகுல் பூந்தியின் மகன், சின்ன பூந்திக்கு உள்ளது, திக்கற்ற குஜய் சிங் பேட்டி.

===> காதலர் தினத்திற்கு தடை கோரி பொந்து முக்கள் குட்சி முதலமைச்சரிடம் மனு. கலாவை ...இது... கலாச்சாரத்தை கெடுப்பதாக புகார்.

               இது குறித்து கூறிய பாகன் "என்ன மசுருக்கு காத்லீக்கிறீங்க. அவனவன் சாதியில் பாத்து வைக்கறத கட்டிக்கிட்டு மூடிகிட்டு இருங்க. நீங்க லவ் பண்ணி கட்டிகிட்டா, எங்க பொழப்பு எப்படி ஓடும், சங்கம் என்ன புடுங்கறத்துக்கா வெச்சிருக்கோம்" என்றார் ஆவேசம் தணியாமல்.

==> காதல் திருமணம் செய்ததால், விருதாசலத்தில் கலவரம். 1000 பேர் கொண்ட ஆயுதங்களடங்கிய கும்பல், ஐந்தாறு கிராமங்களில் இருந்த நிராயுதபாணிகளை கொளுத்தியது (மீண்டும் படிக்கவும், இது கலவரம், தாக்குதல் அல்ல - பொ.ஆ)

 இது குறித்து கையில் தீப்பந்தத்துடன் பேட்டியளித்த பீமதாஸ் : இதுக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை (ஓடிக்கொண்டே ஒரு வீட்டில் தீ கொளுத்துகிறார், பின்னால் திரும்பி எலேய் மண்ணெண்ண என குரல் கொடுக்கிறார்) பின் நம்மிடம் திரும்பி "ஆங்.. எங்க விட்டேன், ம்ம் இதுக்கும் எங்களுக்கும் சம்மந்தமில்லை, குலித்துகள் அவர்களுக்குள்ளாகவே அடித்துக்கொண்டனர்" என்றார்.

                நல்லெண்ண, வேப்பெண்ண, கடலெண்ண, இந்த மதம் புடிச்ச நாயிக புண்பட்டா எனக்கென்ன :)



No comments:

Post a Comment

போறாது தான் போறீங்க.. இங்க ஒரு தரம் எதுனா சொல்லீட்டு போங்க..