Flipkart

Amazon

Amazon

Monday, May 30, 2011

கல்விக் கட்டணம் கரையில!

இந்தியா உலகின் மிகப்பெரிய ஜன நாயக நாடு.இதில் நம்மில் பலர் பெருமை கொண்டும் வருகிறோம்.ஒரு அரசு அல்லது மன்னனின் தலையாய கடமை தனது மக்களின் அடிப்படை தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்வதே ஆகும்.அடிப்படை தேவை என்பது உணவு,உடை,இருப்பிடம் ஆகியவற்றை மட்டும் குறிக்காது.காலத்திற்கேற்ப மாறு படுத்தினால், இவற்றுடன் கல்வி,சமூக பாதுகாப்பு,பேச்சு எழுத்து போன்ற உரிமைகளையும் ஒரு அரசு தன் மக்களுக்கு ஜாதி,மத,இன,மொழி,நிற போன்ற எந்த பாகுபாடும் இல்லாமல் வழங்க கடமைப்பட்டுள்ளது.



“எண்ணும் எழுத்தும் கண்கள்” என்ற வள்ளுவர் வாக்குப்படி கல்விவை அடிப்படை தேவை ஆகிவிட்டது.அனைத்து குழந்தைகளுக்கும் கல்விச் செல்வத்தை வழங்குவது அரசின் கடமை,மேலை நாடுகளில் தனியார் பள்ளிகள் பல இருப்பினும் மக்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் தான் சேர்க்க விரும்புவர், காரணம் தரம்.ஐரோப்பியர்கள் தூக்கி எறிந்த கல்வி முறையான மெக்காலே கல்வி முறையை பின்பற்றித் திரிகிறோம்.




தற்போதைய ஹாட் டாபிக், “சமச்சீர் கல்வி”. கலைஞர் கொண்டு வந்த பாவத்துக்காக அது தற்போது பெட்டியில் முடங்கிய படம் போல ஆகி விட்டது.அந்த புத்தகங்களில் தவறுகள் பல இருப்பதாக பலர் சுட்டிக் காட்டுகின்றனர்.இந்த வருடம் அதை மறு ஆய்யு செய்து தவறுகளை திருத்த நேரம் இல்லாததால்,பழைய முறை பின்பற்றப்படும் என அரசு அறிவித்துள்ளது.இதில் தவறுகளை சுட்டிக் காட்டும் கல்வியாளர்கள் கடந்த அரசிடம் ஏன் இதை இடித்துரைக்கவில்லை என தெரியவில்லை.
ஆனால், நாம் உண்மையிலேயே கவலை கொள்ள வேண்டிய விஷயம் இவைகள் அல்ல.சமீபத்தில் ஒரு செய்தி, கோவையை சேர்ந்த ஏழை பட்டதாரி பெண் சங்கீதா தன் குழந்தைக்கு கோவையில் உள்ள ஒரு பெரிய பள்ளியில் (பெர்க்க்ஸ்) 13,500 ரூபாய் யூ.கே.ஜி பீஸ் கட்ட முடியாததால் தீயிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இது என்னுள் கோபத்தையும்,வெறுப்பையும் ஒரு சேர எற்ப்படுத்தியது. சங்கீதா பேசாமல் நாக்கையோ மூக்கையோ அறுத்து புரட்சி தலைவி ஜெய்த்தத்ற்கு வாழ்த்து சொல்லி இருந்தால் அரசு வேலயாவது கிடைத்திருக்கும்.


மனைவியை காப்பாற்றும் முயற்சியில் அடைந்த தீக்காயங்களுடன் சங்கீதாவின் கணவர் தர்மராஜ்

நம் நாட்டில் தொழிலாளர்கள் தனியார் மயத்தை எதிர்த்து போராடி வருவதை பல காலம் பார்த்து இருபீர்கள். அதன் காரணம் நிலையின்மை மற்றும் தனியார் நிறுவனகங்கள் லாப நோக்கில் செயல் படுவதே. உதாரண்த்துக்கு, வங்கித் துறையை எடுத்துக்கொள்ளுங்கள், ஒரு வங்கி வராக்கடன் போன்ற பல காரணங்களால் திவால் ஆனால், அது ஒரு தனியார் வங்கியாக இருக்கும் பட்சத்தில் இழுத்து மூசி விட முடியும். ஆனால் அரசு அப்படி செய்யாது. அரசு மக்கள் நலனை,அந்த வங்கியில் பணம் போட்டவர்கள் நலனை , பணியாளர்கள் நலனை கருத்தில் கொள்ளும்.எனவே தான் பெரும்பாலான பணியாளர்கள் தனியார்மயத்தை எதிர்க்கிறார்கள்.











ஆனால்,உண்மையாலுமே தனியார் மயம் எதிர்க்கப்பட்டு இருக்க வேண்டிய துறைகள் மருத்துவம் மற்றும் கல்வி.ஒரு அரசாங்கம் எல்லா வேறுபாடுகளையும் தாண்டி வழங்க வேண்டியது இவைகளைத்தான். கல்விக்கு தனியார் பள்ளி மற்றூம் கல்லூரிகள் பல பெயர்களில் மறைமுக கட்டணம் வசூலிக்கின்றன.பல கல்லூரிகல் மற்றூம் பள்ளிகளில் ஸ்பெஷல் பீஸ் எதற்கு எனக் கேட்டால் உங்கள் பிள்ளை ஒழுங்கா படிக்க வேண்டாம என மிரட்டல் பதிலே கிடைக்கிறது. சேர்ப்பதற்கு தரும் நன்கொடை தொகையே பலருக்கு நக்கு தள்ள வைத்து விடும்.இதில் நாம் விரும்பி தான் நன்கொடை தருகிறோம் என எழுதி கையெழுத்தும் வாங்கி விடுவார்கள்.கல்வித்துறையில் பண முதலைகள் பணம் பண்ண விட்டது பெரும் குற்றம். நம் அனைவருக்குமே தெரியும், கல்வி சேவை என்பதைத் தாண்டி வியாபாரம் என மாறி பல ஆண்டுகள் ஆகின்றன என்று.

இதற்கான தீர்வு தான் என்ன?.இதற்க்கான தீர்வு கொஞ்சம் கசக்கும்.அரசே எல்லா பள்ளிகளையும் எடுத்து நடத்த வேண்டும்.இது கொஞ்சம் கடினமான முடிவு பல எதிர்ப்புகளை சந்திக்க வேண்டி இருக்கும்.அரசையே நடத்தும் முதலாளி வர்க்கம் இதை கடுமையாய் எதிர்க்கவே செய்யும். ஆயினும் நாளைய நலன் கருதி எடுக்க வேண்டிய முடிவு இது. காசுக்காக சாராய தொழிலை எடுத்து நடத்தும் அரசால் கல்வித்துறையை நடத்த முடியாதா?.இப்போது இருக்கும் அனைத்து பள்ளிகளியும் அரசே கையகபடுத்த வேண்டும், இழப்பீட்டு தொகையை பள்ளி நிர்வாகிகளுக்கு தந்து விடலா.இதானல் பெரிய செலவோன்றும் ஏற்படப் போவதில்லை. சி.பி.ஸ்.இ , மெட்ரிக், ஸ்டேட் போர்ட்டுகள் என பிரிந்து கிடக்கும் கல்வி முறையை ஒழுங்கு படுத்தி ஒரே முறை ஆக்க வேண்டும். இதை செயல் படுத்ட வேண்டியது மத்திய அரசு. மேலும் இதில் அரசியல்வாதிகளின் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்வதும் மிக அவசியம்.மாணவர்கள் கல்விக்கு ஆகும் செலவை அவர்கள் தாய்-தந்தையர் வருமானத்தை பொறுத்து அரசே மானியமாக ஏற்க வேண்டும்.பல இலவசங்கள் கொடுக்கும் ஒரு அரசால் இதை செய்ய முடியாதா.கல்விமுறை வேலைவாய்ப்பை பிரதான படுத்தி இல்லாமல் குழந்தைகளின் அறிவு மற்றும் சிந்திக்கும் திறனை வளர்ப்பதாய் இருக்க வேண்டும்.இதை நிறைவேற்றினால் அந்த தலைவனை நாளைய தலைமுறை நிச்சயம் போற்றும்.
அம்பானியின் பிள்ளை படிக்கும் அதே பள்ளியில் குப்பன் சுப்பனுடைய பிள்ளைகளும் படிக்கிற காலம் வருமாயின் அன்று இந்தியா வல்லரசு ஆகிவிட்டது என்றே பொருள்.அதுவே உண்மையான சமச்சீர் கல்வி!

6 comments:

  1. கமண்ட்ஸ் ப்ளீஸ்

    ReplyDelete
  2. . காசுக்காக சாராய தொழிலை எடுத்து நடத்தும் அரசால் கல்வித்துறையை நடத்த முடியாதா?.//

    அதேதான் எம் கேள்வியும்..

    நல்ல விரிவான அலசல்..

    வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. Great Post.

    காசுக்காக சாராய தொழிலை எடுத்து நடத்தும் அரசால் கல்வித்துறையை நடத்த முடியாதா?.//- Valid Question

    கல்விமுறை வேலைவாய்ப்பை பிரதான படுத்தி இல்லாமல் குழந்தைகளின் அறிவு மற்றும் சிந்திக்கும் திறனை வளர்ப்பதாய் இருக்க வேண்டும்- // Most parents dont think in this perspective

    ReplyDelete
  4. @both
    நன்றி சகா! நடந்தால் நல்லா இருக்கும் :)

    என் பள்ளி கல்லூரி வாழ்க்கை முழுவது நண்பர்கள் பலர் விவாதித்தது இது தான்.

    இன்னும் விடை தான் கிடைக்கவில்லை

    ReplyDelete
  5. காசுக்காக சாராய தொழிலை எடுத்து நடத்தும் அரசால் கல்வித்துறையை நடத்த முடியாதா?

    கடையில் கிடைக்கும் 30 சரக்கில்
    10 திமுக உடையது 10 அதிமுக உடையது
    மீதி 10 பினாமி உடையது..
    பின்பு ஏன் எடுத்து நடத்தகூடாது..

    ReplyDelete

போறாது தான் போறீங்க.. இங்க ஒரு தரம் எதுனா சொல்லீட்டு போங்க..