Flipkart

Amazon

Amazon

Saturday, September 10, 2011

கொஞ்சம் காதல் .. கொஞ்சம் Coffee

     காதல்,எல்லாரையும் எப்போதாவது எங்கேயாவது தொட்டுச் சென்றிருக்கும்.அப்படி என் வாழ்க்கையில்,நான் பார்த்த,அனுபவித்த, பங்கெடுத்த காதல்களை கதைகளாக்க உள்ளேன்.இதில் வரும் சம்பவங்கள் உண்மை சம்பவத்தை தழுவியவை.பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.


                            


                                ஒரு ஞாயிறு மாலை. வாங்கி மூன்று மாதமே ஆகி இருந்த  என் நண்பனின் ஸ்விப்டின் ஸ்டீரிங்கில் விரல் பிடித்து இருந்தேன்.நண்பர்களோடு போனால் அலறும் ராப்புகள்,தனியாக செல்கையில் இனிய இளையராஜா என கலந்து பாடும் எம்பி3 ப்ளேயர் இன்று அமைதியாக இருந்தது.இதை இந்திரா நகர் Coffee dayஐ  நோக்கி விரட்டிக்கொண்டு இருக்கும் நான் நரேன், இந்த நூற்றாண்டின் எல்லா இந்திய இளைஞர்களைப் போலவே, ஐ.டி படித்துவிட்டு,பெங்களூருவில் குப்பை கொட்டிக்கொண்டு இருக்கிறேன்.ஐந்து இலக்க சம்பளம்,வார இறுதியில் ஃபாரம் மால் மாதம், ஒரு முறை ஊருக்கு பயணம். இவைகளோடு சின்ன வயதிலிருந்து ஈர்த்த சோசியலிச  நண்பர்கள் வட்டம்.டீ-சர்ட்டின் வெளியே பெரும்பாலும் லெனினும் உள்ளே பெரியாரும் இருப்பார்கள்.ஆனால் இன்று,எல்லாமே வழக்கத்துக்கு மாறாக,உள்ளூருக்குள் காரே எடுக்காதவன்,இன்று காரில்.டீ-சர்ட்டில் லெனினுக்கு பதிலாக “I’m single and so as my Girl friend” என்ற வாசகம்,உள்ளே அவள். நண்பர்கள் “Coffee day” செல்லும் போதெல்லாம் “ஊர்ல அவஅவனுக்கு சோறு தண்ணி இல்ல..இந்த கருமத்த 90 ரூபா குடுத்து குடிக்கணுமா” என டயாலாக் அடித்தவன்,24 கி.மீ தள்ளி இருக்கும் ‘Coffee day”விற்கு செல்கிறேன்.காரணம் அவள் :
அவள்?

                  அவள், யாழினி,என் கல்லூரித் தோழி.கல்லூரி முடித்து 4 ஆண்டுகள் கடந்து விட்டன.கல்லூரி காலத்தில் அவள் என் மிகச்சிறந்த தோழி.நாங்கள் நண்பர்கள் ஆன கதை சுவாரசியமானது.சினிமாக்கள் போல அவள் மீது பூவெல்லாம் விழவில்லை.முதலாம் ஆண்டு,முதல் நாள் எனக்கு அங்கிருந்த சீனியர்கள் பழக்கம் இருந்ததால் அவர்களோடு அமர்ந்து என் வகுப்பு பயிலும் சக மாணவர்களை சீனியர் தோரனையோடு கலாய்த்துக்கொண்டு இருந்தேன். ஒருவருக்கொருவர் அறிமுகமாகாத அந்த முதல் நாள்.என்னிடம் சிக்கியவர்களில் அவளும் அடக்கம்.பின் நானும் அவளோடு படிப்பவன் தான் சீனியரில்லை என தெரிந்த பின் அவ்வப்போது என்னை பார்த்து முறைப்பாள்.நானும் பெரிதாக அதை பற்றி அலட்டிக்கொள்ளவில்லை.வகுப்பில் கவுண்டமணி பாதிப்பில் நான் ஆசிரியர்களை வறுக்கும் கமெண்ட்டுகளின் போது அவள் இதழ்கள் “பொறுக்கி..” என முணுமுணுப்பதை அடிக்கடி யாருமறியாமல் கவனித்திருக்கிறேன்.ஆனாலும் தமிழ் பிடிக்கும் என்பதால் அவள் பெயரை எனக்கு மிகப்பிடிக்கும்.


                         
                      அய்யோ,நீங்கள் தேடுவது புரிகிறது.அவளை நான் இன்னும் வர்ணிக்கவில்லை அல்லவா? அவள்,அழகனாவள்.அவ்வளவே...என் கண்களுக்கு அவள் அழகானவள். எல்லாப் பெண்களின் கண்களிலும் மீன்கள் இருப்பது சாத்தியமில்லையே! “அழகு” என்பது சொந்த சார்பு கோட்பாடு (Relative theory).அவள் எனக்கு மட்டுமே அழகானவள், உங்கள் கருத்து பற்றி எனக்கு கவலை இல்லை. லைலா மஜ்னு கதை படித்து உள்ளீர்களா? லைலாவை வர்ணிப்பர்கள் எல்லோரும் “She’s ugly” என்றே கூறுவார்கள்.லைலா பணக்கார சமூகத்தை சேர்ந்த ஒரு அழகற்ற பெண் அவர்களை பொறுத்த வரை.மஜ்னு ஏழை ஆனால் மிக அழகாக இருப்பான்.அவனை அரசர் கூப்பிட்டு “லைலா அழகற்றவள்..உன் இனத்தில் இத்தனை அழகான பெண்கள் இருக்கையில் நீ லைலா மீது பைத்தியமாக இருக்க காரணம் என்ன?” என வினவினார். அதற்கு மஜ்னு சொன்ன பதில் “லைலாவின் அழகைக் காண உங்களுக்கு மஜ்னுவின் கண்கள் தேவை”. மஜ்னு என்றால் “பைத்தியம்” என பொருள்.”லைலா மீது பைத்தியம்”!

           நினைவுகள் எங்கெங்கோ சுற்றி மஜ்னுவின் மீது நிலைத்த போது 10 கிமீ கடந்திருந்தேன்.சிக்னலில் முன்னால் இருந்த காரை கவனியாமல் மிக அருகில் சென்று க்ரீச்சிட்டு நிறுத்தி   இருக்கிறேன்.வழியும் வியர்வையை கர்சீஃப் எடுத்து ஒற்றினேன்.அலைபேசி கிணுகிணுத்தது.அவள் தான்.
“ம்ம்…தீபாஞ்சலி நகர் சிக்னல்…டென் மினிட்ஸ் ஐ வில் பீ தெர்..”
பீப்… வேறெதுவும் பேசிக்கொள்ளவில்லை.




                     அதன் பின் ஒரு வருடம் அவளோ நானோ பெரிதாக பழக ஒரு சந்தர்ப்பமும் இல்லை.அதன் பின் விதியா இல்லை கல்லூரி நிர்வாகம் செய்த சதியா என தெரியவில்லை,கல்லூரிக்கான மூவர் ப்ராஜக்ட் குழுவில் நாங்கள் இருவரும் இடம் பெற்றோம்.கட்டாயத்தின் பேரில் தான் அலைபேசி எண்களை பரிமாறிக்கொண்டோம்.எல்லா மாணவர்களைப் போலவும் சாட்டிங் தான் எனக்கும் அன்றைய பொழுதுபோக்கு என்பதால் அவளோடும் குறுஞ்செய்தி பரிமாற்றம் தொடங்கியது.முதல் நாள், இன்றும் நினைவிருக்கிறது. நடுவில் நண்பன் ஒருவனுக்கு அனுப்ப வேண்டிய கோபமான ஒரு குறுஞ்செய்தியை அவளுக்கு அனுப்பிவிட்டு வழிந்தேன்.பின் என் நடத்தை அவளுக்கு சுத்தமாக பிடிக்காது என்றும்,ஆனால் நான் பேசுவதை கேட்க மிகப் பிடிக்கும் என்றும்(‘பொறுக்கி’க்கான காரணம்,அவளுக்கு என்னை பொறுக்கி என அழைக்க மிகப்பிடிக்கும்) அவள் வாயிலாகவே அறிந்து கொண்டேன்.நான் அதுவரையில் எதிர்பார்க்கவே இல்லை,எனக்கு யாழ் போன்ற ஒரு தோழி கிடைப்பாள் என.

                    எங்களுக்குள் ரகசியமே இருந்தது கிடையாது.முதல் ஆண்டு காதலிக்க வேண்டுமே என்றே காதலித்தது போல ஒரு பெண்னை காதலித்தேன்.கண்டவுடன் காதல் ரகம்.இன்றும் அவள் அதை சொல்லி சொல்லி சிரிப்பாள்.அந்த பெண்ணிற்காக நான் செய்த கோமாளித்தனங்கள் அப்படிப்பட்டவை.யாழும் நானும் தினமும் மூன்று மணி நேரமாவது போனில் செலவழிப்போம்.நிறைய சண்டைகள்,நிறைய சந்தோஷங்கள்,நிறைய சீண்டலகள்,நிறைய பேச்சு.எதேதோ பேசுவோம், இதைத்தான் திருவள்ளுவர் “Sweet nothings” என்கிறார் போலும்!

              இன்றைய இளைய தலைமுறையின் ஒரே  நம்பிக்கையான அலைபேசி, எங்களுக்கும் வாய்த்து இருந்தது. என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது , எனக்கு பிடித்த பக்கத்து வீட்டு காவ்யா அன்று என்ன உடை அணிந்தாள் என்பது அவளுக்கும், அவளுக்கு பிடித்த டிராவிட்டின் ஆட்டம் எனக்கும் மிக முக்கியமான ஒன்றாக மாறி விட்டது. இவ்வாறு ஒருவரை பற்றி ஒருவர் ஒரு விக்கிபீடியாவே வைத்து இருந்தோம்! 


              என் அம்மாவிடம் பல முறை சொல்லி இருக்கிறேன். ”உன்னை போல ஒரு பெண்ணை என் அப்பா எப்படித்தான் தேர்வு செய்தாரோ என”.ஆனால் யாழ்,எனக்கு தினம் ஒரு முறை என் அம்மாவை நினைவு படுத்தி விடுவாள்.

க்ர்ர்ட்ட்ட்…..

ನೀವು ಸಾಯುವ ಮಾಡುತ್ತೇವೆ ಎಂದು ನಿಮ್ಮ ಮನೆಗೆ ಮಾಹಿತಿ ಹ್ಯಾವ್?

உங்களோடு பேசிக்கொண்டே எவன் ஆட்டோவிலோ மோதி விட்டேன்.சிறிது நேர சண்டைக்கு பின் மீண்டும் காரை விரட்ட தொடங்கினேன்.

                    ம்ம்…எங்கே விட்டேன்,…என் அம்மா,ஒவ்வொரு செய்கையில் அவள் என் அம்மைவை நியாபகபடுத்துவாள்.ஆனாலும்,நான் எப்படி என் அம்மா இருக்க வேண்டும் என நினைத்தேனோ அதே போன்ற ஒரு அம்மா.என் அம்மாவின் upgraded version! எனக்கும் அவளுக்குமான அலைவரிசை பொருத்தம் அலாதியானது.பல நாட்கள் இருவரும் தீடீரென ஒரே நேரத்தில் கால் செய்து “Busy tone” கேட்டு இருக்கிறோம்.ஒரே நேரத்தில் பேசி வைத்தாற் போல ஒரே,சொற்களை உச்சரித்து இருக்கிறோம்.அவள் குரலை கேட்பதற்கென்றே தேர்வு நேரங்களில் தெரிந்த பகுதியை கூட “சொல்லிக்குடு டீ” என அடம் பிடிப்பேன் (அச்ச்சோ இத படிச்சா என்ன திட்டுவா..அவளுக்கு டீ சொன்னா புடிக்காது..பொண்டாடிய மட்டும் தான் டீ சொல்லலாமாம்..அப்படியே என் அம்மா மாதிரி J ) எல்லா மதிய உணவையும் ஹாஸ்டலை துறந்து என்னுடனே அவள் சாப்பிடுவாள்.அவள் ஊட்டி விட்டது போல சில நாள் கனவு கண்டிருக்கிறேன்,ஆனால் கல்லூரி முடியும் வரை அது நடக்கவில்லை J ;-).

                     அவள் குடும்பத்தை பற்றி நிறைய சொல்லி இருக்கிறாள்.அவள் அக்காவின் காதல் அவள் தாத்தா உயிரை குடித்தது என.எல்லா காதல் கதைகளைப்போலவும் அவள் அப்பாவிற்கு ஹார்ட் அட்டாக் அவள் அக்காவினால்.அதனால் நான் காதலிக்க மாட்டேன் என பலமுறை சொல்லி உள்ளாள். இது பெண்களின் ஒரு வகையான உளவியில் கையாடல்,”என்னை காதலிக்க முயலாதே” என்பதன் வேறு வடிவம். ஆனால் அவளை காதலிக்கும் எண்ணம் ஒரு நாள் கூட இருந்ததே கிடையாது. அவளிடம் கூட சொல்லி இருக்கிறேன் “I too had a love story” நூலில் வருவது போல நானும் என் பெட்டர் ஹாப்பும், ஒரே கப்பில் தான் Coffee குடிப்போம். ,அன்று எதாவது சண்டை என்றால் கூட,ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை என்றாலும் கூட ஒரே கப்பில் Coffee.என் காதலியை பற்றிய கனவுகளுக்கும் அவளுக்கும் சம்பந்தமே இல்லை! J
          
               “ஐ லவ் யூ” வார்த்தைகளை ஒவ்வொரு இரவு “Gud night”டின் போதும் உச்சரித்துக் கொண்டாலும் அதன் வெளிப்படையான பொருளை நாங்கள் தொடவே இல்லை.எங்களை பொறுத்த வரை அது ஒரு அன்பின் வெளிப்பாடு,வரை அறுக்க முடியாத ஒரு உறவு என் கல்லூரியின் இறுதி நாள் வரை தொடர்ந்தது.அவள் முதன் முதலில் “ஐ லவ் யூ டா” என உணர்ச்சிவசப்பட்டது என் கவிதைகளை படித்த பிறகு.அட உங்க கிட்ட சொல்லலைல, கணினியோடு,எனக்கு தமிழும் பிடிக்கும்,அதனாலேயே தான் யாழ் என்ற பெயரும். இது இன்றைய இளைய தலைமுறையின் வரம். காதல் என்றால் என்ன என்பதை தெளிவாகவே வைத்து இருப்பது.கல்லூரி முடிந்த சமயம், நான் சென்னையில் ப்ளேஸ் ஆகி இருந்தேன்.அவளுக்கும் அதே நிறுவனத்தில் வேலை கிடைத்திருந்தாலும் அவள் வீட்டில் வேண்டாம் என சொல்லி விட்டதால் வேலைக்கு சேரவில்லை.

                தினமும் 3 மணி நேரம் என இருந்த “கடலை நேரம்”,சுருங்கத்தொடங்கியது. தினம் காலை,மாலை குறுஞ்செய்திகள், வெறும் “Gud mrng”,”gud night,swt drms” சோடு நின்று கொள்ளத்தொடங்கின.வேலைப்பளு, புதிய சூழல் எல்லாம் என்னை அவளை கிட்டத்திட்ட மறக்கவே செய்து விட்டன.சரியாக ஒரு வருடம் கழித்து பெங்களூரு வந்தேன்.போன் நம்பர் மாற்றிய பிறகு அவள் தொடர்பே இல்லை. ஆனால் இரண்டு ஆண்டுகள் முன்பு என் அலுவலகத் தோழி என்னிடம் தன் காதலை வெளிப்படுத்திய போது சம்பந்தமே இல்லாமல் அவள் நினைவு வந்தது.நான் அவளை காதலித்தேனா என்ன?.இந்த ஒரு ஆண்டாக என் வீட்டில் கல்யாண பேச்சு எடுக்கும் போது எல்லாம் அவள் போட்டோக்களை தேடி எடுத்து கணினியில் பார்த்துகொள்ளத்தவறுவதில்லை. என் அனைத்து சோஷியல் வலை தளங்களிலும் தேடி விட்டேன் அவளைக் காணவில்லை.

       நீண்ட நாட்கள் கழித்து நேற்று இரவு தான் அவள் குரலைக்கேட்டேன். தெரியாத ஒரு நம்பரிடமிருந்து வந்த கால்.
“Can I speak to Mr.Naraen”

“ நீங்க..”

“அவர் Friend”

“யாழ்…நீயா…”

“ம்ம்..நீ தானா குரலே மாறிடிச்சு…..எப்படி இருக்க.”

“நல்லா இருக்கேன் யாழ்,நீ எப்படி இருக்க, எங்க இருக்க?”

“நான் இங்க…ஹேய் ஹல்லோ, இப்ப என்னால  பேச முடியாது அவர் கூப்பட்றாரு,நாளைக்கு 5’0 Clock Coffee day வந்துரு”
          இதற்கு அவள் என்னை அழைக்காமலே இருந்திருக்கலாம்.அந்த சனிக்கிழமை இரவு நான் நண்பர்கள் பார்டிக்கும் செல்லவில்லை,தூங்கவும் முடியவில்லை. அவர் என்றாளே “யார் அவர்?” கணவனோ??? :O L .அவள் சொல்லி இருந்த படி பார்த்தால் அவள் வீட்டில் இந்நேரம் நிச்சயம் திருமணம் முடித்து இருப்பார்கள்……எப்போது தூங்கிப்போனேனோ தெரியாது.
      நான் காரை நிறுத்தி விட்டு “Coffee day”விற்க்குள் நுழைகிறேன்.அவள் நிறைய மாறிவிட்டு இருக்கிறாள். சுடிதாரிலேயே பார்த்து பழக்கப்பட்டவளை ஜீன்ஸ்,டீ-சர்ட் சகிதம் பார்ப்பது எனக்கு புதிது.நான் கை அசைத்த படியே உள்ளே செல்ல ஒரு 2 வயது சிறுவனை தூக்குகிறாள், “நரேன் எத்தன தடவ சொல்லி இருக்கேன்”……….

      நான் திடுக்கிட்டு விழித்து விட்டேன்.முகமெல்லாம் வியர்வை, சே கனவு……...மணி 4.23 என்றது என் டிஜிட்டல் கடிகாரம்.இனி எங்கே தூங்குவது?

         நம் எல்லோருக்கும் ஒரு பழக்கம் உண்டு,நாம் அன்று செய்வது சரி என ஒரு எண்ணம்.போன வருடத்தை விட,இந்த வருடம் நாம் முதிர்ச்சி அடைந்து விட்டோம் பக்குவபட்டுவிட்டோம் என ஒரு எண்ணம்.நான் முதலில் ஒரு பெண்ணை பார்த்த உடன் காதலித்த போது நான் செய்வது மிகச்சரி என்று இருந்த எண்ணம்,ஒரே வருடத்தில் கோமாளித்தனமாக மாறியது போலத் தான் ஒரு வேளை இன்று இவள் குறித்த காதலும்… இல்லை இது தான் காதலா என்ன? தலை வலித்தது தான் மிச்சம்,முடிவெடுக்க முடியவில்லை.

           இதோ விக்டோரியா லே-அவுட்டை கடந்து விட்டேன். இன்னும் இரண்டு நிமிடத்தில் அவளை பார்க்கப்போகிறேன்.சினிமா பாதிப்போ என்னவோ தெரியவில்லை.அவளௌம் நானும் சிரித்த சீன்கள் கண் முன் ஒளிர்ந்து மறைந்தன.ஒரு நாள் காய்ச்சலின் போது விடுப்பு எடுத்து இருந்தேன்.அன்று அவள் நடனம் ஆட இருந்தாள்,குறுஞ்செய்தி வழியாக திட்டினாள்.அவள் நடனம் காண,50 கி.மீ பயணித்து என் பைக்கில் நான் வியர்த்து வந்து நின்ற போது ஆடிக்கொண்டே அவள் என்னை பார்த்த பார்வை கண் முன் நிழலாடியது….. இதோ Coffee day வந்து விட்டேன்.மீண்டும் அந்த பார்வைக்குரிய விழிகளைக்காண.

              உள்ளே நுழைந்த எனக்கு ஆச்சரியம்,நீங்கள் நம்பாவிடாலும் கூட நேத்து நான் பார்த்த அதே கனவுக்காட்சி தான் அங்கே நடந்து கொண்டு இருந்தது.அதே ஜீன்ஸ் டீ-சர்ட், அதே போல ஒரு குழந்தை.ஒரே சின்ன வித்தியாசம் அவள் அந்த குழந்தையை “பிரிட்டோ” என அழைத்தாள்.அவள் என்னை நோக்கி சிரிப்பதை பார்த்து ஒரு பெண் வந்து அவள் காதில் ஏதோ சொல்லிவிட்டு அந்த குழந்தையை தூக்கிப் போனாள்.

        வேகவேகமாக அவள் கழுத்தில் தாலியைத் தேடினேன்.”பிரிட்டோ” என்றாளே ஒரு வேளை.., அவள் கரங்களில் மோதிரத்தை தேடிய படியே அமர்ந்தேன்.

                “ஹாய் டா”.அவள் குரல் மாறவே இல்லை.அதே இயல்பான,குழந்தைதனமான வசீகரிக்கும் வளையல் ஓசை போன்ற குரல்,அப்படியே இருந்தது. சுற்றிலும் ஜோடி ஜோடியாக காதலித்துக்  கொண்டு இருந்தார்கள். 10 ரூபாய் காப்பியை இவர்கள் 90 ரூபாய்க்கு விற்றாலும் கூட்டம் வரும் ரகசியம் புரிந்தது.

ஒரு நொடி விட்டு “ஹாய்..எப்டி இருக்க?” என்றேன்.

“நல்லா இருக்கேன் டா..எங்க வேல பாக்கற”

“Yahoo ல டீம் லீடர்..”

அவள் அடுத்த கேள்வி கேட்பதற்க்குள் இடை மறித்தேன்.”யார் குழந்த?” .. “அக்கா பையன் டா” என்றாள். ஆம்,அவள் அக்கா ஒரு கிறித்துவ பையனை காதலித்து திருமணம் செய்துகொண்டு இருந்தாள். அப்பாடா,உலகக் கோப்பை வென்ற போது தோனிக்கு இருந்திருக்கும் அதே சந்தோஷம் எனக்குள்ளும்.

“How about a Coffee?” என்றேன்.

“வாங்கி குடு” என்றாள்.
“அதென்ன எப்போமே பசங்க தான் வாங்கி குடுக்கனுமா..” , சட்டென எழுந்து என் தலையில் குட்டினாள், “நீ மாறவே இல்லடா மெதுவா தான் பேசித் தொலையேன்.. கிளாஸ்ல கத்தற மாதிரியே இன்னமும் கத்திப்பேசற..லூசு” என்றபடியே கவுண்ட்டரை நோக்கி நடந்தாள்.

          அவள் பர்ஸ் அதிர ஆரம்பித்தது.திரும்பி பார்த்தேன்.மூன்றூ பேருக்கு பின்னால் நின்று கொண்டு இருந்தாள்.அவளுக்குபின் இரண்டு பேர்.மெதுவாக அந்த கைப்பையை பிரித்து அவள் அலைபேசியை வெளியே இழுத்தேன்.அவள் இன்னமும் என்னை கவனிக்கவில்லை என்பதை உறுதிசெய்து கொண்டேன்.
4 Unread messages
மனசு :படிக்கலாமா?....
மூளை : சே..அநாகரீகம் டா
மனசு : அவ கிட்ட நமக்கு என்ன…
                      
           எல்லா காதல் கதைகளைப் போலவும் மனசே வெல்ல,அவள் இன்பாக்ஸ் உள்ளே சென்றேன்.யாரோ Pavi என்று இருந்தது.அவளிடம் இருந்து மட்டும் ஒரு 50 குறுஞ்செய்திகள்.

Message 1 :
“Wats his reaction..di”
Message 2 :
“Hey sollitiya..”
Message 3 :
“ Cal me aftr u came out”

          இன்னும் கொஞ்சம் துழாவிப்பார்த்தேன்.அப்படியே அவள் கவுண்ட்டரில் பிஸியாக இருக்கிறாளா என திரும்பி அவ்வப்போது பார்த்துக்கொண்டேன்.
Message 11 :
“Don’t worry yaar..If ur luv is true..he’ll also be waiting for you..
Message 10 :  
“Ask him to come to indra nagar coffee day 2moro evenin..”

          அவள் மொபைலை இருந்தபடியே வைத்துவிட்டு உள்ளுக்குள் குதிக்க ஆரம்பித்தேன்.வாய் விட்டு சிரிக்க வேண்டும்,பீர் அடிக்க வேண்டும்.அவள் இடுப்பை இரு கரங்களில் வளைத்து அந்த வெள்ளரி கன்னகளில் முத்தமிட வேண்டும் ,இங்கேயே அவளை கட்டிப்பிடித்து தூக்கி சுற்ற வேண்டும் என எல்லாம் ஒரே நொடியில் தோன்றியது .முடியாதே,.சுற்றிலும் முட்டாள் ஜனக்கும்பல்,எங்கேயும் காதல் செய்துகொண்டு இருந்தது.

அவள் வந்து கொண்டு இருந்தாள்.திரும்பி சத்தமாக கத்தினேன் "One more cup of Coffeeee….. ” .வேகமாய் தட்டை கீழே வைத்து விட்டு என்னை குட்டினாள்.அவள் ப்ளாஸ்டிக் வளையலை பிடித்து இழுத்தேன்.அவள் கையை உருவ முயற்சிக்கையில் அவள் கன்னம் என் அருகில் வர சட்டென்று யாருமறியாமல் காதருகில் முத்தமிட்டுச் சொன்னேன் :

“ஒரே கப் ல Coffee குடிக்கலாம்”.


                        

                    

Thursday, September 1, 2011

Random கிறுக்கல்கள்

இதையெல்லாம் அப்பப்ப ட்விட்டர் போடலாம்ன்னு இருந்தேன்.நிறையா வந்ததால ப்ளாக் :)



இங்க தான் ஆரம்பிச்சேன்


 SHAN - கூத்தாடி 


எல்லா காதலிகளும் தேவதைகளாம்
உன்னை பார்க்கவில்லை கவிஞர்கள்,
ராட்சஷி.

வலிக்கிறது,உன்னை அடித்த
பின் கண்ணீரை துடைக்கும்
 கை.

உன் இமைகள் பிரியும் நிகழ்வைக்
காண அதிகாலையிலும் பதட்டதோடு
காத்திருக்கின்றன என் விழிகள்.

எல்லா சாலைகளிலும் உன்
கால்தடம் கண்டுபிடித்து நடக்க
எத்தனிப்பாதலோ என்னவோ
அடிக்கடி விழுந்து விடுகிறேன்.

 நீ கோபாமாய் திட்டும்
போதெல்லாம் உன் கண்கள்
கெஞ்சுகின்றன
"மன்னிப்பு கேட்டு தொலையேண்டா"

நீ போடா என் சிணுங்கும்
போதெல்லாம் உன் கைகள்
தானாய் என்னை நோக்கி
நீளுகின்றன.

நீ தூங்கும் வரை நானும்
காத்திருக்க வேண்டி இருக்கிறது.
முதலில் கண்களில் இருந்து
கழட்டி வை அந்த நிலவை.

சை,இன்றும் மறந்து விட்டேன்,
நீ கோபப்பட்டால் எதிர்த்து
கோபப்பட வேண்டும் என நினைத்திருந்தேன்.

என் அலைபேசியின் எல்லா
சிணுங்கள்களிலும் உன் குறுஞ்செய்தியின்
வாசனை.