இந்த ட்விட்டர் ஒன்றும் மாய உலகமல்ல! 140 எழுத்துக்களுக்குள் உங்கள்
கருத்தக்களை அடக்கும் வித்தையை கற்றால் இந்த களிற்றை எளிதில்
வசப்படுத்தி விடலாம்.
ஏ.ஆர் ரஹ்மான் பாட்டு கூட முதல் தடவை கேட்கும் போது பிடிக்காது. எனவே
ரெண்டே நாள்ல அக்கெளன்ட்ட டீ ஆக்டிவேட் பண்ணீறாதீங்க. பழக பழக
ட்விட்டர் இனிக்கும்.
ட்விட்டருக்கு வரும் புதியவர்கள் (தமிழ்
ட்வீட்ஸ் படிக்க விரும்புபவர்கள்) கடைபிடிக்க வேண்டிய சில ரூல்ஸ், அடிப்படை
ட்விட்டர் விதிகள் மற்றும் சில விளக்கங்கள் :
டைம் லைன் (Time line) : இது தான் உங்கள் ட்விட்டர் ஹோம் பேஜ். இதில்
நீங்கள் தொடரும் நபர்கள் அனைவரின் கீச்சுக்களும் நேரவாரியாக இடம் பெறும்
(லேட்டஸ்ட் பர்ஸ்ட்)
பாலோயிங்க் (Following) : நீங்கள் தொடருபவர்கள் , இவர்களின் கீச்சுகள்
தான் உங்கள் டி.எல் (அதாவது டைம் லைனில்) இடம் பெறும்.
பாலோயர்ஸ் (Followers) : இவர்கள் உங்களை தொடருபவர்கள்.
லிஸ்ட் (List) : பல பேர் உபயோகப்படுத்தாத வசதி இது. இது கூகுள்
ப்ளஸ்ஸில் வரும் லிஸ்ட் போலத்தான் அதாவது. நீங்கள் ஒரு 1000 பேரை பாலோ செய்வதாக
வைத்துக்கொள்வோம். அதில் ஒரு 10 பேர் ஒரு வகையான நகைச்சுவை ட்வீட் செய்பவர்கள்,
ஒரு 30 பேர் சச்சின் போன்ற பிரபலங்கள் என்றால் நீங்கள் இவர்களை உங்கள் லிஸ்ட்டின்
மூலம் வகை படுத்தி வைக்கலாம். இதன் இன்னொரு முக்கியமான வசதி, ஒரு வேளை நீங்கள்
ஒரு குறிபிட்ட லிஸ்ட்டை மட்டும் உங்கள் டி எல் ஆக பார்க்க விரும்பினால் அதையும்
செய்யலாம்.
@கனெக்ட் : நீங்கள் ஒருவரின் கீச்சுக்கு பதில்
அனுப்ப விரும்பினால் அவரது ஹேண்டில் (@ க்கு பின்னால் வருவது ஹேண்டில் இது
ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும் www.twitter.com/koothaadi யில் @koothaadi
என்பது ஹேண்டில் SHAN – கூத்தாடி என்பது பெயர் ) போட்டு அனுப்பலாம் ,
இதை எல்லோரும் பார்க்க முடியும். இதற்கு பெயர் தான் மென்ஷன்! (குறிப்பிடுதல்)
ரீ ட்வீட் (மறு கீச்சு) : நீங்கள் பாலோ செய்யும்
நபர் செய்யும் ஒரு கீச்சு உங்களை மிகம் கவ்ர்ந்தால் அது உண்மையாகவே பிறரை சென்றடைய
வேண்டும் என நீங்கள் நினைத்தால் ரீட்வீட் செய்யுங்கள். இது உங்களை தொடர்பவர்களை
சென்று அடையும்.
ஃபேவரிட் : நீங்கள் என்றாவது மீண்டும் பார்க்க
விரும்பும் கீச்சுக்களை ஃபேவரிட் செய்து கொள்ளலாம் இது புக் மார்க் போன்றது.
# டேக் : இது தேடுதலை எளிமையாக்க
அறிமுகபடுத்தப்பட்ட்து. இந்த # ஐ அடுத்து வரும் வார்த்தை குறித்து தேட இதை
கிளிக்கினால் போதும் . இது தமிழ் போன்ற பிற மொழிகளுக்கு பொருந்தாது எனினும் வாட்ச்
இல்லாத போதும் இடது கையை பார்க்கும் பழக்கம்
போல தொற்றிக்கொண்டு விட்டது.
Block வசதி : உங்களை ஒருவர் தொல்லை படுத்தினால் அவரை உங்கள்
தொடர்பிலிருந்து துண்டிக்க இது.
செக்கீயூரிட்டி : சிலரது கீச்சுக்கு அருகில் ஒரு
பூட்டு சிம்பள் வரும். அதாவது இவர்களை தொடர வேண்டும் எனில் கிட்ட்த்தட்ட பிரண்ட்
ரிக்வெஸ்ட் போல இவர்களது அனுமதி பெறுதல் அவசியம். என்னை பொறுத்த வரை புதிய ட்விட்டர்கள்
தங்கள் கீச்சுகளுக்கு பூட்டுப்போடுதல் நன்றன்று!
வெரிபைடு சிம்பள் : இது உண்மையான அக்கெளண்ட்
என்பதை குறிக்கும் , பிரபலமானவர்களுக்கு வழங்கப்படும்.( https://support.twitter.com/groups/31-twitter-basics/topics/111-features/articles/119135-about-verified-accounts
)
டைரக்ட்டு மெசேஜ் (Direct
Message or DM) : இது சேட்(Chat) போல
1 ட்விட்டருக்கும் பேஸ்புக்குக்கும் உள்ள
முக்கிய வித்தியாசம் , Follow எனப்படும் தொடருதல் வசதியாகும். இது கிட்டதிட்ட, முக நூலில்
உள்ள சப்ஸ்கிரைப் போன்றது.
2. ஒருவர் உங்களை தொடர்ந்தால் நீங்கள் போடும்
அனைத்து ட்வீட்டுகளும் (கீச்சுகளும்) அவரது டைன்லைனில் வரும் என்பதை நினைவு
வெய்யுங்கள்
3. நீங்கள் தமிழில் கீச்ச விரும்பினால் அழகி போன்ற எதேனும் ஒரு
ட்ரான்ஸ்லிற்ரேஷன் மென்பொரும் உங்களுக்கு உபயோகப்படும்.
4. புதிதாய் தமிழ் ட்விட்டர் உலகிற்கு
வருபவர்கள் வார இதழ் வாசற்படி மூலமாகவே பெரும்பாலும் வருகிறார்கள்.
5. நீங்கள் விரும்பினால் நட்பை
உருவாக்கிகொள்ளுங்கள் ஆனால் அந்தரங்க விஷயங்களை அவசரப்பட்ட்டு வெளியிட வேண்டாம்.
6. ஒருவரது கீச்சுக்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் ரீட்வீட்
செய்யுங்கள். ஆள் யாராய் இருந்தாலும் பரவாயில்லை.
7. நீங்கள் பின் தொடரதா நபரின் ப்ரோபலை நீங்கள்
கடக்க நேர்ந்து அது உங்களுக்கு பிடித்து இருந்தால் அதை பின் தொடருங்கள் . அவர்
உங்களை தொடர்கிறாரா இல்லையா என்ற குறுகிய எண்ணம் வேண்டாம்.
8 உங்களை புதிதாய் ஒருவர் பின் தொடர்ந்தால்
அவருக்கு ஒரு நன்றி கூறுங்கள் . அவர் ப்ரோபைல் உங்களை கவர்ந்தால் அவரை பின்
தொடருங்கள்.
9 Hi this user is making nasty things about you... போன்ற மெசேஜ்ஜுகள் எதாவது கண்டால் கிளிக்க வேண்டாம் அது ஸ்பாம், உங்கள் அக்கவுண்ட்டை ஹாக் செய்ய செய்த வித்தை!
9 Hi this user is making nasty things about you... போன்ற மெசேஜ்ஜுகள் எதாவது கண்டால் கிளிக்க வேண்டாம் அது ஸ்பாம், உங்கள் அக்கவுண்ட்டை ஹாக் செய்ய செய்த வித்தை!
முக்கியமான கடைசி பாய்ன்ட் , யாராவது கீச்சுவது
உங்கள் நம்பிக்கைக்கு, கருத்துக்கு எதிராக இருந்தால் , கருத்தை எதிர்த்து
கீச்சுங்கள் , அதை சொல்பவரை எதிர்க்காதீர்கள். ஆரோக்கியமான விவாதம் தான் நமது மன்மோகன் சிங்
போன்ற மே(பே)தை ஆளும் ஜனநாயகத்துக்கு பெருமை!