Flipkart

Amazon

Amazon

Tuesday, May 1, 2012

பைத்தியகாரர்களுக்கு மட்டும்!


              விடியற்காலை மூன்று மணிக்கு என்றாவது எழுந்ததுண்டா? தூக்கமில்லாத பின்னிரவுகளை அனுபவத்ததுண்டா. நிச்சயம் ஆம் என்பீர்கள்? எல்லோருக்கும் ஒரு உறக்கம் இல்லாத இரவின் நினைவு நிச்சயம் இருக்கும். காய்ச்சல் அடிக்கும் போது, புதிதாய் அடித்த துளியூண்டு சரக்கு வயிற்றை பிசையும் போது, காதலி பிரியும் போது , மேனேஜர் பதவி உயர்வு பெறும் போது இப்படி பல முறை எவ்வளவு தேடினாலும் தூக்கம் தவிர எல்லாம் கிடைக்கும். அந்த நிமிடங்களை ஆழ்ந்து அலசினீர்கள் என்றால் அதில் வரும் கனவுகளை உணரலாம் (காய்ச்சல் அடிக்கும் போது இதை உணர்வது எளிது,இரவில் மட்டும் தான் பகலில் சிரமம்). சமீபத்திய ஒரு இரவில் எனக்கு ஏற்ப்பட்ட ஒரு ரசமான கனவின் தொகுப்பு இது. இந்த வார்த்தைகளில் கோர்வையோ தர்க்கமோ எதிர்பாத்து படிக்க வந்திருந்தால் என்னை தயவு செய்து மன்னித்து விட்டு திரும்பி விடவும். இது தர்க்கத்தை தாண்டிய ஒரு பதிவு. இது குழந்தைகள் அல்லது பைத்தியக்கார்ர்களுக்கானது. நீங்கள் இரண்டுமில்லை என்றால் (மேதாவியாகவே இருப்பினும் திரும்பிவிடவும்)

           ஒரு மைதானத்தில் தனியாக நின்று கொண்டு இருக்கிறேன். திடீரென யாரோ எங்கிருந்தோ ஓலமிடும் ஓசை கேட்கிறது. மைதானம் குளிர் பிரதேசமாக மாறி இருக்கிறது. சுற்றும் முற்றும் திரும்பிப்பார்க்கிறேன். எங்கிருந்தோ ஓநாய்கள் பூட்டப்பட்ட ஒரு வண்டி வருகிறது. அதில் அமர்ந்திருப்பவனை என்னால் அடையாளம் காண முடியாவிட்டாலும் நிச்சயம் அவனை எனக்கு தெரியும் என்ற உணர்வு மேலிடுகிறது. அவன் என் அருகில் வண்டியை நிறுத்துகிறான். இப்போது ஓநாய்கள் எழுந்து நிற்கின்றன இடம் நிறம் மாறுகிறது. இப்போது எங்கு இருக்கிறேன் என தெரியவில்லை, இந்த இடம் நெரிசல் மிகுந்த சாலை போல் இருக்கிறது. எல்லோரும் எதையோ தேடிக்கொண்டு இருந்தார்கள். எல்லோரும் பரபரப்பாக எதையோ செய்து கொண்டு இருந்தார்கள். ஒரு குழந்தை அழும் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டு இருந்தது. எங்கிருந்தோ ஒரு பெரிய வாகனம் வருவது தெரிந்து. அந்த வாகனத்தின் முகப்பில் ஒரு பூவின் படம் வரையப்பட்டு இருந்தது. அந்த வாகனத்தை தவிர மற்ற இடங்களில் எல்லாம் வெள்ளை ஓளி பரவ ஆரம்பித்தது. அந்த வாகனம் என்னை நோக்கி வந்தது. அது என்ன காரணத்தாலோ ஒரு நிமிடத்தில் கரைந்து போனது. ஒரு பாடையில் பிணத்தை தூக்கிக்கொண்டு இரண்டு பேர் மட்டும் நடந்து வந்துகொண்டு இருந்தார்கள். அந்த பிணத்தின் மீது வீசப்பட்ட பூக்கள் பறந்து வந்து என் மேல் விழுந்தது. அந்த பாடையில் படுத்திருந்த பெண் திடீரென எழுந்து ஓலமிடத்தொடங்கினாள். அவள் கதறலை அவர்கள் பொருட்படுத்தியதாக தெரியவில்லை. அவள் மார்பில் அடித்துக்கொண்டு கதறினாள். அவள் கதறல் ஓசையை கேட்க முடியாமல் காதை பிடித்துக்கொண்டு கண்களை இருக்க மூடிக்கொண்டேன்!




            கண்ணை திறந்த போது காது நரம்புகளின் பின் பொறுக்க முடியாத வலி இருந்தது. என்னை சுற்றிலும் மருந்துகளின் வாசனை அடித்தது. அந்த வெள்ளை அறை முழுவதும் ரத்தம் திட்டுதிட்டாய் உரைந்து இருந்தது. யாரோ ஒருவன் அங்கே சுவற்றின் மூலையில் அமர்ந்து என்னை சைகையில் எதோ செய்யுமாறு கூறினான். அவன் சொல்வதை புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அவன் எதற்க்காகவோ என்னை எச்சரிக்கிறான் என்றூ புரிந்தது. சட்டென சுற்றிலிம் இருள் கவிந்தது, தூரத்தில் வரும் ஒரு ரயிலின் ஓசை அந்த நிசப்த்த்தை பிளந்து துல்லியமாக கேட்டது. அந்த ஓசை மெதுவாக அருகே வருவது போல தோன்றியது. ஒரு தண்டவாளம் தெரிந்தது. இப்போது ரயில் மறைந்து அதில் ஒரு பெண் தெரிந்தாள். எங்கேயோ நீண்ட நாள் பார்த்து பழகியது போல ஒரு முகம், ஆனால் பெயரோ முகமோ இப்போது நினைவில் இல்லை. அவள் அழைக்க எண்ணி வாயை திறந்தேன் நாக்கு உலர்ந்துவிட்டு இருந்தது. தொண்டையில் ஆரம்பித்து காது முடிய ஒரு நரம்பு பிய்த்து எடுத்தது போல் வலித்தது. மீண்டும் ஒரு வெளிச்சம் யாரோப்போட்ட ஒரு பெரிய கோலத்தின் மத்தியில் நின்று கொண்டு இருந்தேன். சொட்டுச்சொட்டாக அந்த கோலத்தின் மத்தியில் ரத்தம் விழுந்தது. ரத்த்த்துளிகள் பின் பெரிதாய் விழுந்து என்னையும் நனைத்தது. பின் நீட்வீழ்ச்சி போல விழுந்தது. பின் அந்தத் துளிகள் நின்றது. நான் சுத்தமாக நனையவில்லை. என்னை சுற்றிலும் வெப்பம் அதிகரிப்பது போல் உணர்ந்தேன். தோழி ஒருத்திக்கென நான் வைத்திருந்த ஒரு காலர் ட்யூன் ஒலித்தது. பின் அவளது பரிச்சயமான குரல் கேட்டது. இப்போது சுற்றிலும் இருட்டை தவிர எதும் இல்லை. எதேதோ வார்த்தைகள் ஒளிப்பிழம்பாய் தோன்றின.



            பைத்தியக்காரன் சுவர் ஓவியம், இலை, விட்டில் பூச்சி, மது , காதல் , இரக்கம் ,வியர்வை , அரிசி , மண் , பச்சை , காற்று , காயம் , நீர் , க்ரந்தம் , வார்த்தை , ஓசை , வெளிச்சம் , இன்பம் , வெறுமை என எண்ண முடியாத வார்த்தைகள் என்னை சுற்றித்தோன்றி மறைந்தன. திடுக்கிட்டு விழித்தேன் . வியர்வை வழிந்து கொண்டு இருந்தது. உடம்பு கொதிப்பது வியர்வையை வழிக்கும் போது தெரிந்தது. தலை விண்னெண்று வலித்தது. என் மொபைலை எடுத்து மணி பார்த்தேன். 2:20 AM.
இங்கே அனைவருக்குள்ளும் பல கேள்விகள் பைய்தியகாரத்தனத்தோடு உயிர்ப்போடு தான் உள்ளது. பாதை ஓரத்தில் ஒரு பித்தனை கண்டு  நாம் விலகி ஓடுவது அவன் மீது இருக்கும் பயத்தினால் அல்ல, ஒவ்வொரு இழவு வீட்டிலும் நாம் அழுவது இறந்தவர் பற்றிய நினைப்பினால் மட்டும் அல்ல, தனியாக உறங்க வேண்டிய மின்சாரம் அற்ற இரவுகளில் உறக்கம் தொலைப்பது நாம் மட்டுமல்ல.  
          நான் முன்னரே சொன்னது போல இந்த பதிவு பைத்தியகார்களுக்கானது. மேதாவிகள் இது வரை படித்திருந்தால் நான் பொறுப்பல்ல.

No comments:

Post a Comment

போறாது தான் போறீங்க.. இங்க ஒரு தரம் எதுனா சொல்லீட்டு போங்க..