Flipkart

Amazon

Amazon

Wednesday, August 15, 2012

சுதந்திர தினம் - அட வெக்கம் கெட்டவங்களா!


               ஆகஸ்ட் 15 ஒட்டி சுதந்திர தின வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கும். என் மனதில் உள்ள இந்திய விடுதலை குறித்த கேள்விகள், புரிதல்கள் குறித்த பதிவு இது!

ஒரு மனிதனை எழுத்து எந்த அளவு மேம்படுத்தும் என்பதற்கு ஆகச்சிறந்த உதாரணம் நான். சின்ன கதைகளில் தொடங்கி, கௌதம நீலாம்பரன் மூலம், வரலாற்று கதைகளுக்கு அறிமுகமாகி பின் கல்கி , சாண்டில்யன் என பரிமாணங்கள் பெற்று விளங்கியது என் வராலாற்று ஆர்வம். வாசிக்கும் பழக்கம் உள்ள எல்லா மனிதனுக்கும் தோன்றும் ஒரு ஆவல் என்னிடமும் இருந்தது. நான் பிறந்த நிலத்தின் வரலாற்றை அறிந்து புரிந்து கொள்வதே அது.



     மீண்டும், நான் நூல்களையே நாட வேண்டி இருந்தது. இதில் ஒரு சங்கடம், வரலாற்றை பொருத்தவரை , அது நிகழ்ந்த படி ஆவணங்களின் படி எழுதப்படவேண்டும். எழுத்தாளரின் ஆதாரமில்லாத கேள்வி ஞானத்தையோ அல்லது அவரது கோணத்தையோ திணிக்கக்கூடாது. ஆனால், அரசியல் என்பது சூழ்ச்சி ,பொய், போலி எனப் பல அகழிகளை அடக்கியது. இவைகளை நடந்தபடியே ஆவணங்களாக ஏற்றுக்கொண்டால் அது தவறாகி விடக்கூடும். இந்தக் கட்டுரையை இதற்கு மேல் படிக்கிறீர்களோ இல்லையோ, “காந்திக்கு பிறகான இந்தியாஎன்ற ராமச்சந்திரா குகாவின் நூலை நிச்சயம் படித்து விடுங்கள், இந்தியா குறித்த ஒரு தெளிவை பெறுவீர்கள்.

     நான் சிந்திக்க ஆரம்பித்த நாள் முதலாக என்னை உறுத்திக்கொண்டு இருந்த கேள்வி, இந்தியா ஏன் ஒரு நாடாக இருக்கிறது? ஆம், நீங்கள் சரியாகத்தான் படித்திருக்கிறீர்கள். இந்தியா எப்படி ஒரு நாடாக இருக்கிறது. இல்லை, நான் இந்திய இறையாண்மைக்கு எதிராக ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை. என் வியப்பை வெளிப்படுத்துகிறேன், அவ்வளவே. கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். உலகில் உள்ள எல்லா நாடுகளுக்கும் பொதுவான பல அம்சங்கள் இருக்கும். ஒரே மொழி பேசும் மக்கள் இருப்பார்கள், ஒரு விதமான கலாச்சாரம், பாரம்பரியம் உள்ள மக்கள் இருப்பார்கள் அல்லது மிக நெருக்கமான தொடர்புகளுடைய இனக்குழுக்கள் இருக்கும், ஒரு மதத்தை சார்ந்த நாடாக இருக்கும், நில அமைப்பு ஒரே போல இருக்கும்.

     இதில் எதுவுமே இந்தியாவில் இல்லை, காஷ்மீர் ஆப்பிளுக்கும், ராஜஸ்த்தான் பாலைவனத்திற்க்கும் என்ன சம்மந்தம்? போஜ்புரி மக்களுக்கும் நமக்கும் நக்மாவை தவிர வேறு என்ன தொடர்பு? பெரும்பாலனவர்கள் இந்த கேள்விகளை எழுப்பி விடை கண்டு இருப்பீர்கள். விடை காணதவர்களுக்காக இந்தப் பதிவு.

      நமது மாணவர்களுக்கு வரலாற்றை வெறுக்க வைக்கும் ஒரு கருவியே, இந்த கல்வித்திட்டம். என்னைப் பொருத்தவரை, எப்போது நடந்தது , எங்கு நடந்தது என்பது அல்ல வரலாறு. ஏன் நடந்தது? எதற்காக? எப்படி? அதன் விளைவுகள் என்ன? என்பதே வரலாறு. ஆனால், அப்படி ஒரு வரலாற்றை கற்பிக்க முடியாது. ஏன் என்கிறீர்களா? அது தானே சிக்கலே, அப்படிப்பட்ட வரலாறு உங்களுக்கு அரசியல் தெளிவை ஏற்படுத்திவிடுமே! ஏற்படுத்தினால் என்னவா? என்னய்யா நீர் சரியான மங்குனியாய் இருக்கிறீர். அப்படி ஒரு நிலை வந்தால் புரட்சி செய்ய புறப்பட்டு விடுவீர்களே!

     சுலபமாக புரிய வேண்டுமேனில், ஆங்கிலேயன் செய்தது இது தான். மாவை பிசைந்து, புரோட்டா செய்து, அதை துண்டு துண்டாக பிச்சுப் போட்டு வைத்தான், அவன் சாப்பிடுவதற்காக. ஆனால், உலகம் முழுவதும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக எழுந்த குரல்களும், காலனி ஆதிக்கதிலிருந்து படிபடியாக பல நாடுகள் பெற்ற விடுதலையும், இரண்டாம் உலகப்போரில் இந்தியாவின் உதவியும் சேர்ந்து இந்தியாவிற்கு விடுதலையை பெற்றுத்தந்தன.




     என்ன செய்து கொண்டிருக்கிறோம் நாம்? விடுதலையை வீணாக்கிக் கொண்டு இருக்கிறோம். ஆரம்பத்தில் நேருவுக்கும் வின்ஸ்ட்டன் சர்ச்சிலுக்கும் நிகழ்ந்த உரையாடல் இது :

சர்ச்சில் : இந்தியாவிற்கு கட்டுப்பாடற்ற ஜன நாயகம் சரிப்பட்டு வராது நேரு, பணமுள்ள ஜமீன்கள் பணத்தை வைத்து ஓட்டை வாங்கி விடுவார்கள். பணத்தை வாங்கிக்கொண்டு பாமரர்களும் ஓட்டுப் போட்டு விடுவார்கள்.
நேரு : அதற்காகவே நான் அப்படி செய்யப் போகிறேன். அப்போதாவது, பாமரர்கள் ஜமீனுக்குள் சந்தோஷமாக நுழைவார்களே.

என்ன தான் இப்படி சொல்லி விட்டாலும் நேருவின் மனதுக்குள்இந்தியர்கள் திருந்திவிடுவார்கள்என்ற நம்பிக்கை இருந்திருக்க வேண்டும்.


அது நடந்ததா என்பதை , 1947 இல் விடுதலை அடைந்த போது இருந்த பிரச்சனைகளையும் அதன் காரணிகளையும், சுதந்திரத்துக்கு பிறகு அவை எடுத்துள்ள பரிணாமத்தையும் பார்த்தால் விளங்கி விடும். சுதந்திரம் பெற்ற வேளையில் ஜின்னாவை சரியாக கணிக்காத பாவத்திற்காக பாகிஸ்தானை பிரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இந்த பிரிவினை பிரச்சனை 50கள் வரை தொடர்ந்தது. சரி, காஷ்மீரப் பிரச்சனை தவிர (காஷ்மீர் பத்தி ஒரு தனி பதிவு எழுதணும்.) இப்போது நாம் ஒரு நாடு. இதில் என்னென்ன பிரச்சனைகள். வரிசைப்படுத்தலாமா? அட, இங்கே நாடே ஒரு பெரிய பிரச்சனை. ஏன் என்கிறீர்களா?
ஒரு பக்கம் ட்சி, மறு பக்கம் வெள்ளம் என எந்த ஒரு நாடும் எதிர்கொள்ளாத பிரச்சனை நமக்கு. நம் நிலவியல் அப்படி. ஒவ்வொரு ஊருக்கும் பல விதமான பிரச்சனைகள். தீண்டாமைக்கொடுமை, பெண் சிசுக்கொலை என அறிவு புகட்டலால் தீர்க்க வேண்டிய பிரச்சனைகள், வேலைவாய்ப்பு இன்மை, வேளாண்மைக்கு தேவையான வசதிகள் இல்லாமல் போதல் என பணத்தாலும், மூளையாலும் தீர்க்க வேண்டிய பிரச்சனைகள், இதைத் தவிர இவற்றை சரியாக கையாளததால் ஏற்படும் உள் நாட்டு தீவிரவாதம். இவை எல்லாம் நாளைய பிரச்சனைகள் என்று நேருவுக்கு தெரியும். இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டுக்கு முதல் பிரதமாராக நேருவை விட சிறந்த ஆளை காட்ட முடியாது. ஆனால், குறைகள் இல்லாத மனிதர்கள் ஏது? விடுதலை என ஆங்கிலேயர்கள் முடிவு செய்ததும், இந்தியாவை காங்கிரஸ் கையில் கொடுத்து விட்டார்கள். எனில், பல காங்கிரஸ்காரர்கள் இன்றும் இந்தியா காங்கிரஸ்ஸின் காலனி என எண்ணிக்கொள்கிறார்கள்.

65 ஆண்டுகள் முடிவடைந்து விட்டது. நக்சல்களை நசுக்க முடியும் நம்மால், நக்சல்களின் உருவாக்கத்திற்க்கான காரணத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை. தீண்டாமையை, ரெட்டை டம்ளர் முறையை ஒழிக்க முடியவில்லை. பணம் வெள்ளையனை விட்டு விட்டு, இந்திய பணமுதலைகளிடம் தஞ்சம் புகுந்துள்ளது. அம்பானிக்கு சலுகை கொடுக்கிறோம், மல்லையா திவாலானால் 20 ஆயிரம் கோடி கொட்டி தாங்கிப் பிடிக்கிறோம், ஆனாலும் தினமும் தெருவில் கண்களில் பசியோடு குழந்தைகள் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.


சரி, நான் அடுக்காவிட்டாலும் உங்களுக்கே இந்தியாவின் பிரச்சனைகள் நன்றாக தெரியும். இதை எல்லாம் சரி செய்ய எனக்கு ஆசை. இந்தியப் பிரதமராக எனக்கு ஆசை. ஆனால் முடியாது. ஏன் தெரியுமா? முதலில் மொழிப் பிரச்சனை, இந்தியாவெங்கும் உள்ள ஆங்கிலம் போன்ற பொது மொழி தெரியாத மக்களுக்கு, புதிதாய் ஒருவனை எடுத்துச்செல்ல இயலாது. மிகத் தெளிவாய் குறித்துக்கொள்ளுங்கள், உங்கள் மாநில காங்கிரஸ்/பாஜக கட்சிகள் ஆங்கிலத்தை பெரிதாக மக்களிடம் எடுத்து செல்லாத காரணம் இது தான். ஒரு புதிய கட்சி இங்கு உதயமாக வாய்ப்பே இல்லை, ஆங்கிலம் இல்லாமல்.

பிறகு, இடம் குறித்த பிரச்சனைக்கு வருவோம். அரசியல் அரிச்சுவடி படித்தவர்களுக்கு புரியும், பொதுத்தேர்தலை கூட புறக்கணிக்கும் கட்சி இருக்கும். உள்ளாட்சி தேர்தலை எந்த கட்சியும் புறக்கணிக்காது. பஞ்சாயத்துக்கள் தான் இந்தியாவின் தூண்கள். அவை அணு அணுவாய் சேர்ந்து தான் இந்த பெரிய தேசத்தை கட்டமைக்கின்றன.

 நாளை உங்களைக் கொல்ல ஒருவன் திட்டம் போட்டு இருக்கிறான் என்றால் இப்போது கையில் கடிக்கும் கொசுவை அடித்துவிட்டுத்தானே அவனை பற்றி யோசிப்பீர்கள்? அதே தான். இங்கே, ஒழுகும் குடிநீர் குழாயை ஒட்டவைப்பதிலேயே நம் நேரம் செலவிடுகிறோம், தண்ணீர் தீர்வதை பற்றிய அக்கறை நமக்கு இல்லை. கோக் , பெப்சிக்கு நிலத்தடி நீரை உறிஞ்சி கொட்டிக்கொடுக்கிறோம். குடங்களை வைத்துக்கொண்டு சாலை மறியல் பண்ணுறோம். எல்லாருக்கும் உணவும் கல்வியும் அளிக்க துப்பு இல்லை, சாட்டிலைட்டில் கூட ஊழல் பண்ணூகிறோம். கல்வியை அரசுடைமை ஆக்க முதுகெலும்பு இல்லை, சாரயாத்தை அரசு உடைமையாக்கி கட்சிகாரனுக்கு லீசுக்கு விடுகிறோம்.  அன்னா ஹசாரே, ராம்தேவ் போல ஸ்டன்ட் அடிப்பவர்கள் பிரபலம் ஆவதை பார்த்த உடனே யாரும் சொல்லலாம், உண்மையாவே நல்லது பண்ணனுமின்னு நினைக்கற யாரும் இங்க அரசியல் பண்ண முடியாதுன்னு. இத்தனை ஊழல்களுக்கு அப்பறமும், காங்கிரஸ், பாஜக வே ஆட்சி அமைக்கறத பாக்கற யாரும் சொல்லலாம் பண முதலைகள் தர்ற காசு இல்லாம போஸ்ட்டர் அடிக்கவோ, குவார்டர் குடுத்து கூட்டம் சேத்தவோ முடியாதுன்னு, கல்வி நிறுவனங்கள அரசு உடைமை ஆக்க முடியாதுன்னு, ஊழல் பண்றவங்கள திருத்த (தடுக்க இல்ல) முடியாதுன்னு, ஜீன்ஸ் போட்டுக்கிட்டு அரசியல் பேச முடியாதுன்னு, அம்பானி பணத்த அடிமட்ட மக்களுக்கு குடுக்க முடியாதுன்னு, உங்களுக்கு புரியாதுன்னு, இன்னும் சிம்ப்ளா இந்தியா விளங்காதுன்னு.


இந்த நாட்டுக்கு நல்லது செய்யணுமின்னு தான் நானும் நினைக்கிறேன். ஆனா விட மாட்டேங்குறாங்கஎன்பது பல பேரின் வாதம் இங்கே. அதுல நீங்களும் தான சார் இருக்கீங்க! உங்களுக்காக கீழே ஒரு ஸ்பெஷல் படம் J
கடைசியா ஒரு கேள்வி : அட வெக்கம் கெட்டவங்களா இதுக்கு எதுக்கு டா வெள்ளையும் சொள்ள்யுமா அலையணும்










கிடக்கறது எல்லாம் கிடக்கட்டும்! கிழவிய தூக்கி!!!













1 comment:

போறாது தான் போறீங்க.. இங்க ஒரு தரம் எதுனா சொல்லீட்டு போங்க..