ஒரு பால்ய தோழியுடன் நீண்ட நாட்கள் கழித்து நேற்று பேசினேன். ஒரு இந்திய முதலாளியின் பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்கிறாள். ஒரு பிரபல யுனிவர்சிட்டியில் எம்.எஸ் செய்வதாக சொல்லி வேலைக்கு எடுத்தார்கள். தோழி B.sc.. எம்.எஸ் செய்ய 16 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும் (Only Engineers Qualify). இது ஒன்று தான் வழி என்பதால் ஏகப்பட்ட B.Sc,BCA படித்தவர்கள் இதில் சேருவார்கள். நான்கு வருட ஒப்பந்தம். நான்கு வருட வேலை, வார இறுதியில் கல்லூரி.
வாழ்கை செட்டில்ட்ன்னு வேலைக்கு ஆர்வமா சேர்ந்தாள் தோழி. நாலு வருஷம் கழிச்சு வெளிநாடு போலாமுன்னு பாஸ்போர்ட் மொதக்கொண்டு எடுத்து வெச்சாச்சு. ஒரு எட்டு மாசம் ஆச்சு. வேலை. காலேஜ். வேலை. காலேஜ். மெஷின் லைஃப். ரொட்டீன் லைஃப், படிக்கவே போரடிக்கல? அதே தான் அவளுக்கும். வெளில வரும் போது Work Experience Certificate கிடைக்காதாம். MS படித்ததால், Student Internship ஆகத்தான் கணக்காம். அவள் குரலில் ஒரு வெறுப்பு தொனித்ததை உணர முடிந்தது. பெங்களூர், சென்னை என மாற்றி மாற்றி பணிபுரிவதால் பெரிய அளவில் நட்பு வட்டமும் இல்லை. "நாலு வருஷம் கழிச்சு வெளி நாடு போகணும்ன்னு இப்ப ஆசையே இல்ல டா... நாலு வருஷம் முடிச்சு இந்த சாஃப்ட்வேர் கருமத்த விட்டு வெளிய வந்தா போதும்ன்னு தோணுது"ன்னா.
ஆங்கிலப்படம் பார்க்கும் பழக்கமுள்ள எவரும் பார்த்திருக்கூடிய ஒரு படம் "The Shawshank Redemption". அதிலொரு காட்சி. ஐம்பது ஆண்டுகள் சிறையில் கழித்த ஒருவரை விடுவித்து வெளி உலகிற்கு அனுப்புவார்கள். அவர் அதை தடுக்க எவ்வளோ முயன்றும் முடியாது. வெளியில் சென்ற அவர் ஒரு வாரத்தில் தூக்கு போட்டு செத்துப்போவார். அற்புதமான காட்சி அது. அவரை பற்றி "He was Institutionalized" என்பார் அவர் நண்பர். அவருக்கு அந்த சுவருக்குள் தான் உலகம். அதை தாண்டிய உலகத்தை அவரால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒவ்வாமை உள்ள பொருள் போல அதை தாண்டிய உலகத்தை அவர் மனம் மறுதலித்து விடும்.
இங்கே பெரும்பாலானோரின் வாழ்க்கை முறை அப்படித்தான். அது ஒரு Routine. ஒரு வேளை அதிலிருந்து அவர்களை வெளியில் இழுத்தால் அவர்கள் செத்துப்போவார்கள். நம் சமூகம் அப்படித்தான் வளர்ந்திருக்கிறது. "Settle" என்ற வார்த்தை அதற்கனவே உயயோகப்படுத்தப்படுகிறது. என் கல்லூரி பேராசியர் ஒருவர் அடிக்கடி சொல்லுவார் "Settling business is done at the graveyard. We have to move our asses till then".
இத்தனை இழுவை ஏன் போட்டேன் என்றால், இந்த கேள்விய சொல்லத்தான் "அப்பறம் பாஸ், Life எப்டி போகுது. என்ன பண்ணலாமின்னு இருக்கீங்க?". கிட்டத்திட்ட இதே கேள்வியை, பதங்களை மாற்றி, நிற்கும் பொசிஷனை மாற்றி , சட்டை கலரை மாற்றி பல உருவங்கள் கடந்த சில நாட்களாக என்னிடம் கேட்கின்றன. காரணமில்லாமல் இல்லை. கல்லூரியை முடித்து, கல்லூரி நேர்முகத்தேர்வில் வேலைக்கு எடுத்த ஒரு பன்னாட்டு கம்பேனிக்காரன் கூப்பிடுவான் என காத்திருக்கும் அநேகர் எதிர்கொள்ளும் கேள்வி இது.
எல்லோரும் கேட்பதால் மட்டுமல்லாமல், இது எனக்கு நானே சொல்லிக்கொள்ளும் ஒரு பதிவு, ஒரு Self Note. நான் நதி போல, எதை எதிர்கொள்ளப்போகிறேன் என எனக்கே தெரியாது, பாதை செல்லும் வழியில் அப்படியே போய்க்கொண்டே இருப்பவன். ஆனால், நிஜத்தில் எதற்கும் பணம் வேண்டுமே. அதனால் எதாவது செய்தாக வேண்டும். Travelஇன் மீது அதி தீவிர ஈடுபாடு உண்டு. அதற்கும் பணம் வேண்டும். இரண்டு ஒலிம்பிக்ஸ், ஒரு உலகக்கோப்பை கிரிக்கெட், கால்பந்து, அப்பறம் ஒரு விம்பிள்டன் பார்க்க வேண்டும். அதற்கும் பணம் வேண்டும். 143 நாடுகள் பார்க்க வேண்டிய நாடுகள் என நான் தயாரித்துள்ள பட்டியலில் உண்டு.
திருமணம் என புருவம் உயர்த்தினார் அப்பா. எனக்கானவள் எந்த தேசத்தில், எந்த இனத்தில் பிறந்திருக்கிறாள் என இன்னமும் தெரியவில்லை என்றேன். சிரித்துக் கொண்டார். எங்களுக்குக்காக அதை மட்டும் பண்ணிக்கோ என்றார். "ம்ம்" என்றேன் வெறுமனே.
நமது சமூக சூழலில் ஒருவரின் உட்பட்ச லட்சியமே, ஒரு பிள்ளை பெற்று அவனை இன்ஜினியருக்கோ, டாக்டருக்கோ படிக்க வைத்து, நம் சாதியில் ஒரு பெண்ணை கட்டி வைத்து, அவனுக்கு பிறக்கும் பிள்ளைக்கும் நாம் அவனுக்கு செய்ததையே அவனை செய்ய வைப்பது. இது ஒரு முற்றுப்பெறாத கதை.
நான் இதற்கு முற்றிலும் மாறானவன். எனக்கு மதமில்லை, சாதியில்லை. பொது வாழ்வில் மக்கள் பெருமை என கூறும் எந்த ஒரு அடையாள பாரத்தையும் நான் சுமப்பதில்லை. பொதுபுத்திக்கு விரோதமானவனை நேசிக்கலாம், ஆனால் கட்டிக்கொள்ள சரிப்படாது என்பாள் என் பழைய தோழி ஒருத்தி. சரி தான். இது வரை எந்தப்பெண்ணும் மாற்றிப்பேசியது இல்லை.
ம்ம்... எங்கே விட்டோம். ம், பணம். பயப்படாதீர்கள். சாரு போல அக்கவுண்ட் நம்பர் கொடுக்கும் உத்தேசமில்லை.எந்த ஆசையை எடுத்தாலும், பணத்தில் வந்தே முட்டுகிறது. பேசாமல் ஜனாதிபதி ஆகிவிடலாம். ஆனால், ஒன்றுக்கும் உதவாத இந்த மனசாட்சி கேட்டுத்தொலைக்காது. ஈமு கோழி போல எதாவது கரடி வளர்க்கும் திட்டம் ஆரம்பித்து ஏமாற்றலாம், ஆனால் இங்கும் மனசாட்சி இடிக்கிறது. சரி, எதாவது செய்வோம். ஆனால், இந்த ரொட்டீன் லைஃப் எனக்கு சரிப்படாது. நான் செட்டில் ஆவது சுடுகாட்டில் தான்.
படம் ConAir. "You know what is insane. Working on a damn office from 9 to 5 for 50 years and then settling in a village, waiting for a day to die to save our dignity, that we go reach the rest room in time. That is insane"
என்னிடம் இந்த கேள்வி கேட்கும் அனைவருக்கும் இந்த பதிவின் சுட்டியை கொடுக்கப்போகிறேன். :-)
"மவனே இனிமே கேப்ப?"
No comments:
Post a Comment
போறாது தான் போறீங்க.. இங்க ஒரு தரம் எதுனா சொல்லீட்டு போங்க..