Flipkart

Amazon

Amazon

Tuesday, October 28, 2014

ஜில் கதைகள் - 5


தீபாவளிக்கு முந்தைய நாள் அனைவரையும் கலாச்சார உடை அணிந்து வரச்சொன்னபோதே சிறு மூளையில் ஒரு எல்.ஈ.டி மினுக்கத் தொடங்கி விட்டது. ஜில்லு புடவை கட்டும் ஸ்டைலை நினைத்துப் பார்த்தாலே, குண்டலினியானது விளக்கொன்று தலைகீழ் எரிந்தாற் போல், கீழ் நோக்கிப்பாயும்.
அடுத்த நாளில் இருந்து லீவ் போட்டிருந்ததால் முதுகுத்தோல் உரியுமளவு வேலை. மதியமே முடித்துவிட்டு கிளம்புவதாய் ப்ளான். வந்த போதே பதினொன்றரை இருக்கும். காலியாய் கிடந்த லிப்ட்டில் ஏறி பதினொன்றை அழுத்தி விட்டு, அசுவாரசியமாய் முத்தமிட்டுக்கொண்டிருந்த அலுமினியக்கதவுகளை பார்த்துக்கொண்டிருந்தேன்.
பண்டிகை காலமென்பதால் ஆபீஸே காலி. இல்லையென்றால் இந்த நேரத்துக்கெல்லாம், மல்லிகையை மூக்கினுள் வைத்து வாசம் காட்டுவார்கள். திருவிழாக்கூட்டமிருக்கும். முதல் தளத்தில் யாரோ நிறுத்தியிருந்தார்கள். கதவு விலகியடவுடன் ஏசி விரைத்த தரையை பார்த்துக்கொண்டு ஏதோ யோசித்துக்கொண்டிருந்தேன். அதை உடைத்துக்கொண்டு அப்சரஸின் கால்கள் லிப்டினுள் மிதந்தன. நான் கண்ணை மேலே நிமிர்த்தவே இல்லை. கடவுளின் காலை காண உங்களுக்கு வாய்ப்பு கிட்டினால் என்ன செய்வீர்கள்? நீங்கள் எப்படியோ... நிமிர்ந்து முகமிருக்கிறதா எனப் பார்க்க எனக்கு தோன்றவில்லை.
ஜில் என் மோவாயை நிமிர்த்தினாள்.
"என்ன டா ஆச்சு உன் போனுக்கு?"
"தொலைஞ்சுடுச்சு"
அவள் மார்புக் கச்சை மீது வெறித்திருந்த விழிகளில் மொத்த கவனமும் இருக்க, வாய் அனிச்சையாய் முணுமுணுத்தது.
"நாயே நிமிர்ந்து தொல டா, யாராச்சும் வந்து தொலைய போறாங்க"
Irresistible என்ற வார்த்தைக்கு உங்களுக்கு அர்த்தம் புரியாவிடில் அன்று என் நிலையை விளக்க என்னால் வேறு வார்த்தைகளே தேட முடியாது. வெளிர் நீல நிறத்தில் பட்டுப்புடவை. இடப்பக்கத்தில் இருந்து பார்த்தால் விடைத்து நிற்கும் முயல்குட்டிகளுக்கு கீழே ஸ்கீயிங்க், பனிச்சறுக்கு சாகசம் நடக்கும் க்ளிஃப். குழந்தையின் மேலுதடு போல இருக்கும் அவள் காது மடல்களில் தொங்கும் நீல நிற ஜிமிக்கி. She is goddess of beauty, I say. அலுவலகமாய் இல்லாதிருந்தால், இனி லட்சோபலட்சம் ஆண்டுகளுக்கு கவிஞர்கள் உவமையாய் எடுத்தாளும் ஒரு மகத்தான காதல், கலவி சித்தித்திருக்கும். சிவனும் சக்தியும் புணர்ந்த போது அண்டம் அதிர்வதாய் ஊர்ப்பக்கம் வாய்ப்பாட்டு உண்டு. அதை மாற்றக்கிடைத்த ஒரு வாய்ப்பை வீண்டித்த கோபத்தில் லிப்ட்டை ஓங்கி உதைத்தேன்.
"என்னாச்சு?" பதற்றம் துளியுமில்லாத செக்ஸியான குரலில் வினவினாள் ஜில் (அல்லது எனக்கப்படி தோன்றியதா?)
ஒரே வினாடி. பார்வைகள் சந்தித்து மீண்டன. இரண்டு கோள்கள் மோதியது போல. ப்ளாக் ஹோல் என்பதை நாமெல்லாம் கற்பனையில் செய்து பார்த்திருப்போமே, அதன் உச்ச நொடியைப்போல.
அனிச்சையாய் நெருங்கி இருவரும் முத்தமிட ஆரம்பித்தோம். பெரு-நெருப்பென ஆக்ரோஷமாய் தொடங்கி, இடுப்பில் புரண்டு கொண்டிருந்த விரல்களில் வியர்வை பட்டவுடன் மெல்ல குழந்தையின் முகர்தல் போல மாறி தொடர்ந்தது. வைனில் ஊறவைத்த ஸ்ட்ராபெர்ரியை போல இருந்தன அவள் உதடுகள். ஸ்ட்ராபெர்ரி மார்கிரிட்டா மாக்டெய்லின் சுவை. முத்தம் முடிந்த பிறகும், பெருமூச்சு கழுத்தில் பட உடல் உரச வியர்வை பெருக்கெடுக்க நின்றிருந்தோம்.
மூச்சின் நெடி வியர்வை கலந்து வெப்பமாய் கழுத்தறுகே ஊர்ந்தது. நெடிய பாறை மீதெரும் வெய்யில் போல நேரம் மெல்லமாய் கரைந்து கொண்டிருந்தது.
பதிமொன்றாம் மாடி.
பிரிந்ததிருந்த அலுமினியக்கதவுகளின் ஊடாக ஒரு உருவம் உள்ளே
"எக்ஸ்க்யூஸ் மீ" என்றபடி நுழைந்தது.
ஒரு கணம் என்னை கண்டு திடுக்கிட்டு, "What are you staring at?" என்றவனை பார்த்து விஷமமாய் புன்னகைத்தபடியே வெளியேறினேன். ஜில் பத்தாவது ப்ளோரில் வேலை செய்கிறாள் 

No comments:

Post a Comment

போறாது தான் போறீங்க.. இங்க ஒரு தரம் எதுனா சொல்லீட்டு போங்க..