Flipkart

Amazon

Amazon

Sunday, October 2, 2011

கொஞ்சம் காதல் ,கொஞ்சம் ரத்தம்

     


இந்த கதையை படிப்பதற்கு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது.இதில் உள்ள சில சோதனை முயற்சிகள்.
1)இது கதை அல்ல,ஒரு வாக்குமூலம்.....இது கதை அல்ல
2)மரண வாக்குமூலத்தில் பொய்கள் இருக்காது



                              எனக்கு எதிரில் அமர்ந்து இருந்த அந்த இளைஞன் உதட்டில் வழியும் ரத்தத்தை துடைத்தபடி கோபமாக என்னைப் பார்த்தான். நான் மெல்ல புன்னகைத்தேன், அது அவன் கோபத்தை இன்னும் அதிகப்படுத்தி இருக்க வேண்டும், என் அடி வயிற்றில் இறங்கிய அவன் அடி சொல்லியது அவன் கோபமாக இருக்கிறான் என்று.
சஷீஅவன அடிக்காதஅந்த சிறப்பு போலீஸ் வாகனத்தின் முன்னால் இருந்து ஒரு குரல் வந்தது.

அந்த நிலையிலும் எனக்கு சிரிப்பு வந்தது.முன்னால் இருந்து வந்த குரலுக்கு சொந்தக்காரனை விட இவன் பலசாலி ஆனாலும் அவன் சொல்வதையே இவன் கேட்க வேண்டி இருந்தது.சர்வைவல் ஆப் தெ பிட்டஸ்ட் பொய்யோ?
எனக்கு மிகவும் பழக்கப்பட்ட அந்த  மலையடிவாரத்தில் வேன் நின்றது.
கீழ இறங்குடா
என்ன நடக்கப் போகிறது என எனக்கு நன்றாகவே தெரியும்.இறங்கி நின்றேன்.முன்னால் இருந்து வந்த  அந்த குரலுக்கு சொந்தக்கார தொப்பை இறங்கி வந்தான்.என் முட்டிக்காலை எட்டி உதைத்தான்.
என்ன தொப்பையா சார்.. கால தூக்க முடியல போல..”
கீழே விழிந்திருந்த என் தாடையை நொறுக்கினான்.
த்************”
இந்த நாய்ட்ட என்ன சார் பேச்சு..சுட்டுத்தள்ளுங்க..”
சிரித்தேன்
.

          நான்,இவர்களை பொறுத்தவரை ஹசன் அலி, ஒரு ஜிகாத், நக்ஸலைட் கும்பல்ல இருக்கற ஒரு லோக்கல் தலைவன். ஆனால்  நான் தனஞ்செழியன், தனா. சொந்த ஊரு,ஒசூர் பக்கத்துல உள்ள தோட்டாகிரி,கிராமத்துக்கும் நகரத்துக்கும் மத்திய  நிலையில் உள்ள ஒரு பகுதி.என் அப்பா ஒரு தமிழாசிரியர்.எனக்கு ஒரு தங்கச்சி, இலக்கியா.
                             அம்மா இல்லாட்டியும்,வாழ்க்க பள்ளிப்பருவம் முழுக்க சந்தோஷமாவே போச்சு.மிக நல்ல நண்பர்கள்,அப்பா வேல பாக்கற அதே பள்ளியில படிப்ப முடிச்சேன்.சின்ன வயசுல இருந்தே சினிமா மேல ஆசை,விஸ்காம் படிக்கணும்ன்னு ஆசை.ஆனா,தல கீழா நின்னும் அப்பா அசைஞ்சு குடுக்கல.அப்பா ஆசைப்படி,திண்டுக்கல் பக்கத்துல ஒரு கல்லூரில இன் ஜி சேர்ந்தேன். எல்லா கலர் கனவுகளும் அந்த வினாடி நொறுங்குன மாதிரி இருந்துச்சு.முதல் இரண்டு வருஷத்துல 9 அரியர். எனக்கு புடிக்காத ஒரு விஷயத்த என்னால செய்ய முடியாது. இன்ஜினியரிங்கும் அப்படித்தான்.
                  கல்லூரில என்ன  தான் நல்ல நண்பர்கள் கிடைச்சாலும், ஊர்ல பசங்க கிட்ட பழகுன அந்த மனசு,இவங்க கிட்ட அவ்வளவா ஒட்டல. இந்த வருஷத்துல இருந்து  ஹாஸ்ட்டல விட்டுட்டு ரூம் எடுத்து தங்கலாம்ன்னு நாலு  பேர்  சேந்து முடிவு பண்ணினோம்.என் அப்பன்ட்ட சொல்ல,அந்த ஆள் மேல இருந்த மரியாத நாளாக நாளாக குறைஞ்சுக்கிட்டே வந்துச்சு.
                   வாழ்க்கை வெறுத்து,பல நேரம் வெறுமையா கழியரத நான் உணர்ந்தப்போ அவ என் வாழ்க்கைல வந்தா.மிக இயல்பான ஒரு சந்திப்பு, ஒரு கல்லூரி Cultural Team இரண்டு பேரும் கீ போர்ட் வாசிச்சோம்.ஒரு முக்கியமான விஷயம் கவனிச்சு இருக்கீங்களா? நமக்கு ஒரு பொண்ண புடிச்சு இருந்ததுன்னா, அவ  செய்யற சின்னச்சின்ன சாதாரண விஷயம் கூட பெருசா தெரியும். தெரு நாய் ஒன்ன அவ காப்பாத்துனா உடனே அன்னை தெரசா மாதிரி பீல் பண்ணி பேசுவோம். இப்படி நடக்கறதுக்கு காரணம், காதல்.
                 தெருவுல ஒருத்தன் தெரியாம கால மிதிச்சா அவன் குடும்பத்தையே தெருவுல இழுக்கர நான், கடிக்கர கொசுவ தடவி குடுத்தத பாத்து என் நண்பர்கள் கொஞ்சம் வெறி ஆகத்தான் செஞ்சாங்க. பழகுன ஒரு வாரத்துக்குள்ளேயே எதோ ரொம்ப நாள் பழகுன மாதிரி,கைல வெச்சு இருந்த சிகரெட்ட புடுங்கி கீழ எறிஞ்சா. நானே கவல படாத என் கிழிஞ்ச சட்டைய கேட்டு வாங்கி தெச்சு குடுத்தா. அட அவ யாருன்னு உங்களுக்கு நான் சொல்லல, அவ சின்ன வயசு இருந்து சென்னைல வளர்ந்த பொண்ணு, இவ ஸ்கூல் முடிக்கற நேரம்,இவங்க அப்பா கடனுல மூழ்க,அவ சித்தப்பா வீட்ல தங்கி இந்த மொக்க காலேஜுல படிக்கறா.அவ தான் எங்க காலேஜ் ஃபிகர். அவ கூட பழகறதுல ஒரு கர்வம் எனக்குள்ள.இருக்காத பின்ன, செர்ரி பழத்த பாத்து இருக்கீங்களா? அவள பாத்தா செர்ரி சிவப்பு இல்லம்பீங்க.


                   மாசம் ஒரு தடவ தான் அந்த ஆள பாக்க வீட்டுக்கு போவேன்,அதுவும் என் தங்கச்சிக்காக. மூணாவது வருஷம் முடியறப்ப என் தங்கச்சி பத்தாவது முடிச்சா. நல்ல மார்க், அவளுக்கு டாக்டர் ஆகனும்ன்னு ஆசை. அந்த ஆள் கோபத்தையும் மீறி, நான் அவள ஒரு பெரிய ஸ்கூல்ல, எங்க வீட்ல இருந்து 15 கி.மீ,அதுல சேத்து விட்டேன்.
அந்த ஆள்ட்ட சொன்னேன்என் அம்மா உயிரோடு இருந்தா இப்படித்தான் செஞ்சு இருப்பாங்க
அவன் சொன்னான்லட்சுமி,இப்படி பண்ணி இருக்க மாட்டா
என் வாழ்க்கைல நான் செஞ்ச முதல் தப்பு அதான்.
              கல்லூரியில் வாழ்க்கை மிக சுவாரசியமாக சென்று கொண்டு இருந்தது. என்னோட அரியர் எல்லாம் ஒரே அட்டம்ப்ட்ல க்ளியர் பண்ணிட்டேன். அவளோடு இருந்த இரண்டு வருஷம் தான் என் வாழ்க்கைல மறக்க முடியாத காலம். நான்காம் ஆண்டு தொடக்கத்தில் ஒரு நாள், எங்களுக்குள் சண்டை.. முடிவில் நடந்தது இது.
அவள் : “இனி நான் உன் கூட பேச மாட்டேன்…”
நான் : “எவ்ளோ நேரம்
அவள் ,கொஞ்சம் குனிந்து சிரிக்க ஆரம்பித்துஒரு அர மணி நேரம்என்றாள்.வாய் விட்டு சிரித்தோம், எவ்வளவு நேரம் என்றே தெரியவில்லை. கல்லூரியில் இருக்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் என்னை வந்து கட்டிப்பிடித்து கொண்டாள்.
“I love u டாஉன்ன விட்டுட்டு என்னால இருக்க முடியாது..நீ வேணும் டா என் லைஃப் Fullaa”..

           Life ஒரு பொண்ணு வந்தா என்ன நடக்கும்? ம்ம்அதே தான்.. காதல், இப்பவும் சொல்ல்ரேன் அந்தத் ************** நான் வெறுத்தாலும் சொல்றேன், அந்த காலகட்டம் தான் என் வாழ்க்கையோட Golden Era. என் வாழ்க்கைலயே நான் அழுததுக்கு காரணமான ஒரே பொண்ணு, நான் கொண்டாடின ஒரே பொண்ணு அவ தான்…. தூங்கவே மாட்டோம்.. தினமும் அம்பானி குடும்பத்தை வாழ வைக்க பேசிக்கொண்டே இருப்போம்.
                  கடைசி ஆண்டு,அவள் அப்பா கொஞ்சம் செழிக்க தொடங்கி இருந்தார். நம்ம தான் சனியன கட்டிபுடிச்சிட்டு பொறந்து தொலச்சிட்டமே, திரும்பவும் வாழ்க்கை இருட்ட நோக்கி நகர ஆரம்பிச்சுது, அந்த சம்பவத்துக்கு அப்பறம்.
அந்த சம்பவம் , என் தங்கச்சி , அந்த *** மு** வேற எப்படி சொல்ல சொல்றீங்க அந்த ஓடுகாலிக்கழுதையபொண்ணுங்களுக்கு எப்பவுமே ஒரு பழக்கம் இருக்கு,பெரும்பாலான பொண்ணுங்க எவன் ஏமாத்தறானோ அவனத்தான் நம்பறாங்க, ஏமாறாங்க.அந்த ஆள் என்ன வெறுப்போட ஒரு பார்வ பார்த்தோட சரி.கல்லூரியோட இலையுதிர் காலம் நெருங்கிகிட்டு இருந்துச்சு.இது Placement Season. என் கூடப் பொறந்த ******** பண்ண வேலையால என்னால எதுலயுமே கவனம் செலுத்த முடியல.ஆனா,அப்பவும்  அவ தான் சரி பண்ணா என்னைய.வேலையும் கிடைச்சுது.
              இறுதி ஆண்டு Project அஹ் எவ்வளவோ முயற்சி செஞ்சும் நாங்க ரெண்டு பேர் சேர்ந்து செய்ய முடியல.கொஞசம் இடைவெளி விட்டோம் எங்களுக்குள்ள, எங்க எதிர்காலத்துக்காக.திரும்பவும் நான் வீட்டுப்பக்கம் போகவே இல்ல,அந்த ஆள் நான் கேக்காமலே பணத்த போட்டு விட்டாரு.
              இறுதி ஆண்டு தேர்வு முடிஞ்சதும் அவ சென்னை போனா (அவ பேர உங்க கிட்ட சொல்லல? இல்லங்க வேண்டாம்அவ பேரு மட்டுமாது எனக்கு சொந்தமானதா இருக்கட்டும்).பசங்க பண்ர தப்பு ஒரு பொண்ண கண்மூடித்தனமா நம்பறது தான்.சில பசங்க எதுக்கு எடுத்தாலும் சந்தேகப்படுவாங்க. என்ன மாதிரி சில கிறுக்குக் **ங்க என்ன பண்ணாலும் ஏன்னே கேட்டுக்க மாட்டாங்க , அவ மேல இருக்கற நம்பிக்கைல. ஆனா என்ன மாதிரி ஆளுங்களுக்கு இவள மாதிரி **&&%^% தான் வந்து அமையறாளுங்க.
              என்ன நடந்திருக்கும்ன்னு உங்களுக்கு தெரியும்.அதே தான்.காசுக்காக போய்ட்டா ஒருத்தன் கூட.காதல் வேற கல்யாணம் வேறயாம். அப்ப கட்டில்ல?, பணத்துக்காக என் தேவத தே&^%^&* மாறுவான்னு நான் நினைச்சு கூட பாக்கல.
             வேலைக்கு போகல.இன்னும் அந்த ஆள் பணம் போட்டான் என் அக்கவுண்ட்ல,நேரம் காலம் தெரியாம குடிச்சேன்.என் அரும தங்கச்சி திரும்பி வந்தா, வயத்துல அந்தத் &^%*$ குடுத்த குழந்தையோட. நான் தான் சொன்னனே இந்த பொண்ணுங்க எல்லாம் முட்டாள் &$*@*$ங்க ந்னு.எங்கயோ போய்ட்டான் ஏமாத்தீட்டு.அவன் ஃபோட்டோ கைல இருந்துச்சு, பார்ல கிடச்ச புது நண்பர்களோட சுத்தினேன்.
அவன வெட்டி சரிக்கறோம் டா…”
ஆமாம், அவன வெட்டினோம்.ஏமாத்தீட்டு போனவன எங்க புடிச்சோம்ன்றீங்களா? அவரு பெரிய புடுங்கி,வல வீசி தேடுறதுக்கு,நாய் இன்னொரு பொண்ண &^% தேடிக்கிடு இருந்துச்சு.
                  இந்தியாவுல காசு இல்லன்னா சட்டம் இருக்குன்னு அர்த்தம்.இத எனக்கு சொல்லி குடுத்தவன் Zahir.என்னோடு சிறையில்  நிமிடங்கள் பல கழித்தவன்.அவன் தீவிரமாய் ஜன நாய்கத்தை எதிர்க்கும் ஒரு இயக்கத்தை சேர்ந்தவன் ,உங்கள் பாஷையில் தீவிரவாதி., னால் அவன் சிறை வந்தது ஒரு சப்பை வழக்குக்கா, தீவிரமான வழக்குகளில் இருந்து தப்பிக்க அவர்கள் செய்யும் ஒரு சின்ன கைங்கர்யம் இது. .எனக்குள்ள ரௌத்திரத்த ஊர  வெச்சான். என் தங்கச்சிய கசக்குனவன் கைய வெட்டுனதுக்கே மூணு வருஷம் ஜெயில்ல போட்டங்களே, அவனும் நானும் சேர்ந்து என் தேவதைய தொட்டவன சுட்டோம்.ஆனா அந்த கேஸ் இன்னிய வரைக்கும் சபைக்கு வரவே  இல்ல.அவள விதவையா பாத்தேன்.உள்ளுக்குள்ள இருந்த வெறிக்கு தீனி போட்டேன்.


                    இந்த மாதிரி அடுத்தவங்கள பத்தி கவலயே படாத,முட்டாள் சுய-நல மக்களையும் அவங்க வளர்ப்புல இருக்கற சின்ன களைகளையும் (குழந்தைகளையும்) கொல்லலாம் , அது தப்பில்லங்கற எண்ணம் வளர ஆரம்பிச்சுது. நிறைய பயிற்சி,உடம்பும் மூளையும் மரத்து போச்சு.நடுவுல அந்த ஆள் செத்துப்போனதா செய்தி வந்துச்சு,நான் போகல. எனக்கு கணக்கு தெரிஞ்ச வரையில 234 பேர கொன்னு இருக்கேன்.அட தொகுதிக்கு ஒருத்தர் பாருங்க.ஆறு வருஷம் கழிஞ்ச பிறகு, என்ன புடிச்சாங்க, கடுமையான சண்டையல,அவங்க ஆளுங்க 34 பேர பலி குடுத்து.
                  கூட்டிட்டு போய் கோர்ட்ட்ல  வெச்சு கொஞ்சுவாங்க ந்னா நினைக்கறீங்க? அதான் இந்த மலை அடி வாரம்.எனக்கு தெரியும் என்னோட முடிவு இது தான்ன்னு. துவே லேட்டு. எனக்கு ஒரு கடைசி ஆச இருந்துச்சு, காரணமே இல்லாம அவ புருஷன கொன்னுட்டேன் அந்த ^%&&%&*(*(^^ இப்ப எப்படி இருக்கான்னு தெர்ல..அவ சுகமா இருந்துற கூடாது…. அவ பண்ணதுக்கு அவ அனுபவிக்கனும்.

“34 பேரு செத்திருக்காங்க டா உங்களப்புடிக்க, ********** ”
செத்தா கவர்மண்ட் 3 லட்சம் தருதுன்னு தான அவங்க ****** கால ** வேல பாக்கறீங்க
அவன் பிஸ்ட்டலை எடுத்தான். CZ 75 மாடல் .
ஒரே தோட்டா, 53 ரூபா..என்னா ஆட்டம் போட்டு இருப்ப..”
ஜிகாத் அதர்சன் கோ நஹிதும் முஜே மார் சக்தே ஹோ” என்றேன்சாவதற்கு முன் இதை சொல்ல கற்றுக்கொடுத்து இருந்தார்கள்.
அந்தத் **** ** இருந்த இந்த நெஞ்சிலயே சுடுங்க டா…”
ச்ச்ச்சட்..  நெற்றிப் பொட்டில் ஒரு நிமிட வலி.

ச்சட்….. L

No comments:

Post a Comment

போறாது தான் போறீங்க.. இங்க ஒரு தரம் எதுனா சொல்லீட்டு போங்க..