Flipkart

Friday, January 10, 2014

ஜில்லா ஜில்லா ஜில்லா!

ஜில்லா இயக்குனர் வேலாயுதத்துல அசிஸ்டென்ட்டு. சைடு கேப்புல விஜய் அண்ணன்ட்ட கத சொல்லி ஓக்கே ஆனது தான் ஜில்லா. கொஞ்சம் ரீவைண்ட் பண்ணி அந்த சீனுக்கு போவோம்.விஜய் சேரில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருக்காரு. எதிர்ல நம்ம டைரக்ட்டரு.

டை : "அண்ணே ஓப்பன் பண்ணோம்ன்னா"

விஜய் : "பைட் இருக்குல்ல"

டை : "அண்ணே.. நீங்க அப்ப சின்ன பையன்"

விஜய் : "அப்ப சின்ன பைட்டா வைய்யு"

டை : "ண்ணே... கேளுங்க... உங்க அப்பா வேல பாக்கற வீடு ஒரு தாதாவோடது.. உங்க அப்பா அவருக்கு கார் ஓட்டிட்டு போகும் போது கூட டிக்கில ஏறி போறீங்க... அப்ப பாதி வழில வர வில்லன் க்ரூப்பு  கர்பமா இருக்கற அந்த பெரிய மனுஷன் வைஃப..."

விஜய் : "வைஃப்ப..."

டை : "கொல்லப் பாக்குறாங்கன்னு சொல்ல வந்தேன்ணே"

விஜய் :"இந்த இடத்தல கார விட்டு எறங்காமலே ஒரு பைட்டு ஓக்கேயா?"

டை : (மனசுக்குள் "உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்") ண்ணே நீங்க சின்னப்பையன்ணே... கேளுங்க.. அப்ப உங்க அப்பா இறந்துடுறாரு... அந்த பெரிய மனுஷன் உங்கள தத்து எடுத்துக்கறாரு..."

விஜய் : "இங்க நான் அழுகணுமா??"

டை : (அதெல்லாம் ஜனங்க செய்வாங்க...)  அடுத்து நீங்க வளர்ரீங்க... ஓப்பனிங் பைட்டு...  ஒரு ரவுடிய பிண்றீங்க"

விஜய் தலைவா ஸ்டைலில் இரண்டு கையையும் கோர்த்து மூக்கில் விரலை வைத்து ம்ம் என்கிறார். "அந்த பெரிய மனுஷன் கேரக்டர் மோகன்லால் பிக்ஸ் பண்ணிக்கங்க.. மங்காத்தா ஸ்டைல்ல கொஞ்சம் நெகட்டீவ் ரோல்.. டையலாக் எதாச்சும்"

டை : "இந்தா இப்ப வெச்சுருவோம்.. இப்ப உங்கள ஒருத்தன் நல்லவன்னு சொல்ல.. நீங்க தப்பு பண்ணணும்.. ஆனா அத நான் தான் பண்ணுவேன்னு சொல்றீங்க... இப்ப ஓப்பனிங்க் சாங்க்... மாஸா.. "

வி : "மூசிக் இமான் போட்ருங்க"

டை : "அடுத்த சீன்ல காஜல் இன்ட்ரோ.. உங்கப்பா போலீஸ கொன்னதுனால உங்களுக்கு போலீச புடிக்காது... "

வி : "எங்கப்பா செத்துட்டாரா?"

எஸ்.ஏ.சி சைடிலிருந்து கணைக்கிறார்.

டை : "அவர் எங்க (முணுமுணுப்பு).. பர்ஸ்ட்டு சீனே அதான சார்.. இப்ப காஜல் ரோட்டுல ஒரு போலீச அடிக்கற பாத்து உங்களுக்கு லவ் வந்துருது.."

விஜய் : "இப்ப ஒரு சாங்கு..."

டை: " கொஞ்சம் போகட்டுமே... இன்ட்ரோ பாட்டுக்கு தம்மடிக்க போனவங்களே இன்னும் உள்ள வரல.. அடுத்து வீட்டுல அம்மா, மோகன்லால்ல காட்டுறீங்க.. இப்ப நீங்க உங்க தம்பி தங்கச்சி எல்லாம்.."

வி "தம்பி தங்கச்சி.."

டை : " மோகன்லால் பசங்க... போய் பொண்ணு கேக்க காஜல் வீட்டுக்கு போறீங்க.. இங்க ஒரு ட்விஸ்ட்டு.. ஆடியன்ஸ் எதிர்பாக்காத மாதிரி.."

விஜய் எஸ்.ஏ.சியை திரும்பி பார்த்து சிரிக்கிறார்.

டை : "காஜல் போலீஸ்... இப்போ கட் பண்ணா.. சிட்டிக்கு புதுசா வர கமிஷனர் உங்கப்பா அதாவது மோகன்லால கூட்டிட்டு போய் நடு ரோட்ல வெச்சு அவமானப்படுத்தறார்.. நீங்க கோபப்பட்டு அவர் கைய வெட்டீர்றீங்க... இப்ப ஒரு ட்விஸ்ட்டு"

விஜய் : "அந்த கமிஷ்னர் பொண்ணு தான் காஜல் கரெக்ட்டா?"

டை : (மண்ணாங்கட்டி) மோகன்லால் உங்கள போலீஸ் ஆக சொல்றாரு. தப்பு பண்றவனே போலீஸா இருந்துட்டா? " ஃபீல் பண்ணி சிரிக்கிறார் டை.

விஜய் : "அந்த இந்த பொங்கல் நமக்கு..."

டை " நீங்க போலீஸ் ஆனவுடனே... யாரும் மொகன்லால் ஆளுங்கள தடுக்க கூடாதுன்னு தடை போடுறீங்க... இப்ப ஒரு பிரச்சனைல மோகன்லால் ஆளுங்க பண்ண அலப்பறைல ஒரு கேஸ் குடோன் வெடிச்சுடுது...  அந்த ஸ்பாட்டுக்கு போற நீங்க... அங்க எரிஞ்சு கெடக்கற சடலங்கள பாத்து ரைஸ் ஆவறீங்க... ஆஸ்பத்ரில ஒரு அஞ்சு நிமிஷ சென்டிமென்ட் சீன்... இப்ப சிங்கம் ல அனுஷ்கா பீச்சுல வெச்சு கேக்குறா மாதிரி காஜல் உங்கள சீண்டி விடுறாங்க..."

விஜய் வெட்கப்படுகிறார் ..

டை : "அட அந்த சீண்டுறது இல்லங்க...  அடுத்து நீங்க ஸ்டேஷன் போறீங்க அங்க உக்காந்து சிவனோட ஆளுங்க.."

வி : "சிவன்??"

டை "மோகன்லால். அவரோட ஆளுங்க ஒருத்தன வெட்டி கொன்னுட அந்த பொண்ணு கம்ப்ளெய்ன் குடுக்குது...   நீங்க கேக்க மாட்டேங்கற தைரியத்துல  அவனுங்க அந்த பொண்ண அடிக்கறாங்க.. அப்ப நீங்க இத்தன நாள் போடாத காக்கி ட்ரஸ்ஸ போட்டுட்டு வந்து பின்றீங்க... ரெண்டு மூணு ப்ரீஸ் வெக்கறோம்... புருஷன் செத்தத கூட மறந்துட்டு அந்த பொண்ணு.."

வி : "அந்த பொண்ணு..."

டை : (அடேய்ய்..) உங்கள நன்றியோட பாக்குது"

வி: " நன்றியா"

டை : "(பின்ன என்ன பன்றியா?) இப்ப நீங்க போய் மோகன்லால திருத்தறதா சவால் விட்டுட்டு வரீங்க.. இப்ப ஃபேட் அவுட் பண்ணி இன்ட்ரவல் போடுறோம்.."

வெளியில் அய்யய்யோன்னு ஒரு சத்தம் கேட்க ஓடிப்போய் பார்க்கின்றனர்... டீ கொணர்ந்த பையன் காதில் ரத்தம் ஒழுக விழுந்து கெடக்கறான்...

எஸ்.ஏ.சி துள்ளிக்குதிக்கிறார். " நல்ல சகுனம். இத நாம பண்றோம்... "

டை : "மீதி கத"

எஸ் : " அட அதெல்லாம் என்னைக்குய்யா இவனுங்க பாக்குறானுங்க... பேரு தமிழ் நாடுன்னு வெச்சுக்க... "எங்கிட்ட ஒரு தடவ வாங்குனா தமிழ் நாட்டுலையே இருக்க மாட்டான்"ந்னு ஒரு பஞ்ச்ச்சு செரியா??"

டை : 'அம்மா நம்மள தமிழ் நாட்டுல இருக்க விட மாட்டாங்க"

எஸ் " அட.. சரி பாத்துக்கலாம். அப்படியே இந்த மங்காத்தா நடிச்சாங்கள்ள... சம்பத்து, அந்த பையன் எல்லாத்தையும் சேத்துக்க...  அதான் இப்ப எல்லாத்துக்கும் பிடிக்குது..."

கலைகிறார்கள்.

2 comments:

  1. //வி: " நன்றியா"

    டை : "(பின்ன என்ன பன்றியா?)// Ha ha ha! ROFLMAX thala! :D

    ReplyDelete
  2. வி : வழக்கம் போல தாவுறது பறக்குறது எல்லாம் இருக்குல ?

    டை : ஐயோ !!!!

    ReplyDelete

போறாது தான் போறீங்க.. இங்க ஒரு தரம் எதுனா சொல்லீட்டு போங்க..