உறக்கமற்ற இந்த இரவை கடப்பது
அத்தனை சுலபமாய் இருப்பதில்லை
அவசர சிகிச்சை பிரிவில் நண்பனை சேர்த்து விட்டு
சிகரெட் புகையும் விரல்களோடு விழித்துக்கிடந்தது போலவோ
காதலில் விழுந்து திளைத்திருந்த நாட்களில்
அலைபேசியோடு மோகித்து கிடந்தது போலவோ
இருப்பதில்லை
வாதை நிறைந்த நிராகரிப்பை தாங்கிக்கொண்டு
செய்ய ஏதுமற்று வெறுமையாய் தூக்கத்தை எதிர் நோக்கி காத்திருக்கும்
இந்த இரவு.
எல்லோரும் உறங்குகிறார்கள் என்ற நினைவே வாதை தருகிறது.
இல்லை எங்கோ யாரோ விழித்திருப்பார்கள், வெறுமையோடு, வாதையோடு.
No comments:
Post a Comment
போறாது தான் போறீங்க.. இங்க ஒரு தரம் எதுனா சொல்லீட்டு போங்க..