Flipkart

Amazon

Amazon

Friday, November 9, 2012

குப்பை - ஓர் அறிமுகம்

குப்பை என்ற இந்த Labelலில் வெளிவரும் பதிவுகள் குறித்த குறிப்பு.

மழை , மௌனம் , காதல் இப்படி எதோ ஒன்று கவிதை எழுத கிடைக்காமல் போய் விடாது. நானும் மழையின் நினைவாகவோ, நேற்று படித்த கவிதை தொகுப்பின் நீட்சியாகவோ ஏதோ ஒன்றை கிறுக்கிவிட்டு, ஆகச்சிறந்த பதிவு என அதற்கு பின்னூட்டம் பெறுதல் இன்னும் கைக்கெட்டாத ஒன்றாக மாறிப்போய்விடவில்லை.

ஆனாலும், ஏதோ ஒன்று குறைவதாக, மனதினுள் ஒரு குறை. வட்டியும் முதலும் தொடரை படித்து வந்த பொழுது, அதிலிருக்கும் உண்மை மனதை தாக்கினாலும், அன்றாட மனிதர்களின் ரயில் பயணமொன்றில் நிகழக்கூடிய உணர்ச்சிக்கலவையின் தொகுப்பையே அது பதிவு செய்வதாக ஒரு எண்ணம் இருந்து கொண்டே இருந்தது.

தமிழ் கூறும் நல்லுலகில் விவாததிற்கு பெரிதாக உட்படுத்தப்படுத்தப்படாத சமூக அவலங்களுக்கான காரணிகளின் பட்டியல் மிகப்பெரியது. குழந்தை வளர்ப்பு தொடங்கி, பாலியல் கல்வி வரை இங்கே கூச்சத்தாலோ இமேஜ் போய் விடும் என்ற பயத்தினாலோ விவாதிக்கபடாமல் விடப்பட்ட பல விஷயங்களும், பெரிதென கருதாமையால் விடுபட்ட சில விஷயங்களும் அனேகமுண்டு.

இவ்விஷயங்களை விவாதிக்க போதிய ஞானமோ அறிவோ, இல்லை இதற்கு முன் கோர்ட் படி ஏறி இறங்கிய முன் அனுபவமோ இல்லை எனினும் அவை இத்தொடர் மூலம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், நாளை முதல் நல்லதோர் ஆரம்பம் - டைரி மில்க் இல்லாமலேயே.

முதல் தலைப்பு : குழந்தைகள்

சின்ன பகுதி (Teaser) - நீங்கள் ஒரு கதவை திறந்து கொண்டு ஒரு வீட்டுக்குள் செல்வதாக வைத்துக்கொள்வோம். இப்போது, யாருக்கு யார் கட்டுப்பட்டவர், யாருக்கு யார் உரிமை கொண்டாடலாம்? உங்களையும் வீட்டையும் பாதுகாப்பதால், கதவு உங்களுக்கு உரிமை கொண்டாடலாமா?

அப்படித்தான் குழந்தைகளும், இந்த உலகம் என்னும் வீட்டை அவர்கள்களுக்காக திறந்து விட்ட கதவுகள் நீங்கள்.

- அள்ளுவோம்

1 comment:

  1. நல்லததோர் ஆரம்பம்தான்... .. அள்ள காத்திருக்கிறேம்...

    // நானும் மழையின் நினைவாகவோ, நேற்று படித்த கவிதை தொகுப்பின் நீட்சியாகவோ ஏதோ ஒன்றை கிறுக்கிவிட்டு// என் வலைபதிவையும் இந்த எண்ணத்தில்தான் தொடங்கினேன்... நேரம் கிடைப்பதில்லை..

    நீங்கள் தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்...!!!

    ReplyDelete

போறாது தான் போறீங்க.. இங்க ஒரு தரம் எதுனா சொல்லீட்டு போங்க..