Flipkart

Amazon

Amazon

Monday, November 19, 2012

குப்பை 3 - காமம்

போடா போடி படத்தில் ஒரு வசனம், "சினிமாவுல ஒருத்தன் அனுஷ்க்காவ கட்டி புடிச்சு ஆடுனா ரசிக்கலாம், அதே என் பொண்டாட்டின்னா ரசிக்க முடியாது?". டேய் என்ன தான் சொல்ல வற? இதே கேள்வியே நயன்தாராவை வெச்சு, உனக்கு பாக்குற பொண்ணு கேட்டா? அதென்ன பொண்ணுங்களுக்கு மட்டும் தான் கற்பா? நீ ஆடுனா, ஆட்டுனா ஓக்கே வா? -- இந்த பத்தி இந்த கட்டுரை குறித்த ஒரு ஹிண்ட் :)

தமிழ் இணைய உலகம் எதற்கெல்லாம் பயன் படுத்தப்படுகிறது தெரியுமா? இங்கே இஸ்ரேலின் அரசியல் முதல் தமிழகத்தில் நிலவும் மின்வெட்டிற்கு  காரணம் மைனாரிட்டி தி.மு.கவா அல்லது ஜெ.,வா என்பது வரைக்கும் விவாதித்து அறிவிக்க மேதாவிகள் பலர் உண்டு. அப்படியே கொஞ்சம் கூகுள் பக்கம் சென்று "தமிழ்" என டைப்பி தேடுங்கள், உங்கள் நாக்கு தள்ளிப்போகுமென்பது நிஜம்.

தமிழ் என்ற மொழியை தேடினாலே, காமக்கதைகள் அடங்கிய சுட்டிகள் பல முதல் பக்கத்தை நிரப்பும். அட, என்ன இருந்தாலும் வெள்ளக்காரிய பாக்காம தமிழ்ல படிக்கணுமின்னு ஆர்வம் வளர்ந்திருக்கே என நான் ஒரு புறம் மகிழ்ச்சிக்கூத்தாடினாலும், ச்சே அத ஏன் டா தமிழோட லிங்க்கு பண்ணுறீங்கன்னு கேக்காம இருக்க முடியல. பொது வெளி இணையத்தில் , யாரும் காமம் குறித்து வெளிப்படையா விவாதிக்க முன்வருவதே இல்லை. ஆனா, எல்லாருக்குள்ளும் காமம் அரைத் தூக்கத்தில் இருக்கும் மிருகமாய் புரண்டு கொண்டே தான் இருக்கிறது.

இங்கிலாந்திலோ, ஆஸ்திரேலியாவிலோ, லாஸ் வேகாஸிலோ இன்ன பிற ஆடை குறைந்த இடங்களிலோ, எந்த ஒரு ஆணோ பெண்ணோ எல்லா நேரங்களிலும் காமத்தை சுமந்து திரிவது கிடையாது. எல்லாவற்றையும் இலைமறை காய் மறையாக ஒளித்துப் பேசுகிறேன் பேர்வழி என குழம்பும் இந்திய கலாச்சார குட்டையில், ஒரு கண்களில் எந்த நேரமும் காமம் துருத்திக்கொண்டே நிற்கிறது . இங்கே இலை மறை காய் மறையாக பேசப்படுவதாலேயே, அப்படி என்னத்தான்யா மறைக்கறானுங்க என எட்டிப்பார்க்க தோணுது பல பதின்வயதினருக்கு. இங்கே தான் பெண்களை தனியாக அனுப்ப மனம் பதறுகிறோம். எதேச்சையாகவோ, கட்டு மீறியோ , கழுத்துக்கு கீழ் பார்க்காமல் ஒரு விடலையால் மூன்று நொடிக்கு மேல் பேச முடியவில்லை. கடவுளை பார்த்துக்கூட பேசிவிடுவான் போலிருக்கிறது, ஒரு பெண்ணின் கண்ணைப் பார்த்து பேச முடியவில்லை.

கி.ரா நவம்பர் மாத முதல் விகடனில் ஒரு பேட்டியில் இப்படி கேட்டு இருப்பார். "ஒருத்தன் இருவத்து நாலு மணி நேரமும் அதப்பத்தி நெனச்சுகிட்டு இருந்தா அது வியாதி தான?".  இங்க வெளிப்படையா எதையும் பேசக்கூடாது, ஆனா உள்ளுக்குள்ள என் கண்றாவி வேணுமின்னா இருக்கலாம். சமீபத்தில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் அடைத்துக்கொண்ட கழிவறையை கிளறிய போது, டன் கணக்கில் காண்டங்கள் இருப்பது தெரிந்தது.

இது மேற்கத்திய கலாச்சார தாக்கம், அது இது என்றெல்லாம் இங்குள்ள சில கலாச்சார குப்பை பாதுகாவலர்கள் கூச்சல் போடக்கூடும். அதை எல்லாம் காதுலையே வாங்கதீங்க. இதற்கு முழுக்காரணம், நமது வழக்கொழிந்த கலாச்சார சம்பிரதாயங்கள் தாம்.  "திருமணத்திற்கு முன் பெண்கள் உறவு வெக்கலாம்"னு சொன்ன குஷ்பூவ பார்த்து கண்டிச்ச , கண்ணடிச்ச எல்லாரையும் கேக்குறேன். அவங்க சொல்லாட்டி கூட, அது இங்க இல்லையா? இன்னோருத்தன் பொண்டாட்டிய மனசால நினைச்சா கற்பு போகும்ங்கற ரீதில கணக்கெடுத்த உத்தம புருஷர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுல தான் இருப்பாங்க.

ஒருவன் தான் பால் குடிக்கும் உறுப்பை எப்படி அறிகிறான். அந்தப்பெயராலா? இல்லை. அது உறவுக்கு முன்னால் விளையாடுவதற்காக படைக்கப்பட்டதென்றே அவன் முதன் முதலில் அறிகிறான். அப்போது தவறு இருப்பது உங்களிடம் தானே? நீங்கள் அவனுக்கதை சொல்லிக்கொடுக்க தவறியதால் தானே, அது இன்னதென்று அறிய அவன் புத்தகங்களையோ/நண்பர்களையோ/இணையத்தையோ நாட வேண்டி இருந்தது?

பாடலில், சினிமாவில் ஆபாசம் என்று கதறுபவர்களை பார்த்தால் சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை. அய்யா கனவான்களே, எல்லாருக்கும் (13 வயது முதல்) இணையும் தெரிகிறது, அலைபேசி தெரிகிறது, பலான படம் போடும் தியேட்டர்கள் தெரிகிறது. இதிலெல்லாம் கெடாத ஒருவனா, மும்தாஜோ, மல்லிகா ஷெராவத்தோ ஒரு சிறிய ஐட்டம் சாங்கில் ஆடுவதை பார்த்து கெட்டு விடப்போகிறான். இங்கே "கெட்டுவிடப்போகிறான்" என்ற சொல்லே அபத்தமாக படுகிறது. ஒரு ஆண் ஒரு பெண்ணின் உடலை ரசிப்பது போலவே, சூர்யாவின் சிக்ஸ் பேக் உடலும் பெண்ணால் ரசிக்கப்படும் என்பதே என் கருத்து. பெண்ணை வெறும் பதுமையாக பார்ப்பதாக என்னை பெண்ணியவாதிகள் தூற்றக்கூடும். ஆனால், பெண்கள் அப்படி ஆண் நடிகர்களை ரசிப்பார்களா இல்லையா என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

பாலியல் கல்வியை எதிர்க்கும் அமைப்புகள், அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடும் அமைப்புகளே அன்றி வேறில்லை. மேற்கத்திய நாடுகளில், ஒரு பெண்ணோ ஆணோ பிடித்த வரை சேர்ந்து வாழக்கூடிய நடைமுறை உள்ளது. ஆனால், இந்தியாவில் குடும்ப அமைப்பு சிதைந்து, விவாகரத்தை நோக்கி எல்லாரும் ஓடும் நிலை வந்த போது, இந்தியா மேற்கத்திய மோகம் கொண்டு அலைவதாக கொக்கரித்தன இதே இந்து அமைப்புகள். ஆனால், இதே போன்றதொரு நிலை, பண்டைய தமிழ் நூல்கள் பலவற்றில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளதை வசதியாக மறந்து/மறைத்து விட்டார்கள்.

காதலர் தினத்தில் காதலர்களின் மீது வன்முறையை ஏவி விடும் அமைப்புகளையும், அதை கண்டும் காணாமல் விட்ட போலீஸாரையும்  கண்டிக்காத உங்களுக்கு, மெரீனாவில் காம சரசம் நடத்துபவனை காறித்துப்ப மட்டும் என்ன உரிமை இருக்கிறது. உலகில், எல்லா இடங்களிலும் கள்ளக்காதல், இணைக்கு துரோகம் இழைத்தல் ஆகியவை உண்டு. ஆனால் இந்தியாவில் மட்டும் தான், தன் கணவனை கொலை செய்யும் நிலைக்கு அது இட்டுச்செல்கிறது. காரணம், இந்த கலாச்சாரத்தின் அமைப்பு அப்படி. பிடிக்கவில்லை எனில் பிரிந்து விடலாம் என்ற நிலை இருப்பின், இது போன்ற கொலைகள் நிகழ வாய்ப்புண்டா?

ப்ராய்ட் (Freud) சொல்லுவார், "ஆண்- பெண் உறவு காமம் கலப்பில்லாததாக இருக்க வாய்ப்பே இல்லை". தந்தை-மகள், அம்மா-மகன், தோழி என எந்த உறவாக இருந்தாலும் சரி. இதை நான் ஒரு பொதுவெளியில் உரையாடும் போது, என் தாய்-தந்தை முன் சொல்ல முடியுமா? நிச்சயம் வாய்ப்பில்லை அல்லவா? அப்படியே நான் துணிந்து சொன்னாலும், என்னை தவறாக வளர்ந்த்து போல சித்தரிக்கபடுவேன் அல்லவா?

பள்ளி (உயர் நிலை) , கல்லூரி என்ற அமைப்புகள் வெறும் கல்வி கொடுக்கவா உருவாக்கப்பட்டது? இங்கே உள்ள கல்வி முறை குறித்து காறித்துப்ப ஆயிரம் உண்டு அதை பிறகு வைத்துக்கொள்வோம். ஆனால், மிக முக்கியமாக கல்லூரி என்ற அமைப்பு உருவாக காரணம், பல்வேறு  சூழ்நிலைகளை சேர்ந்த மாணவர்கள் ஒன்றிணையும் போது, ஒருவன் பண்படுவான். பல்வேறு கலாச்சாரங்களையும், பல குணம் உள்ள மனிதர்களையும் அவன் எதிர்கொள்ளும் போது அவன் பக்குவமடைவான். இது அவனை எதிர்கால வாழ்க்கைக்கு தயார்படுத்தும் என்பதே. இன்று பெரும்பாலான பெற்றோர் நாடும் பொறியியல் கல்லூரிகளிலும், பிரபல பள்ளிகலும் நிலை எப்படி உள்ளது என உங்களுக்கு தெரியும் தானே! நன்றாக சிந்தித்து பாருங்கள், நாங்கு வருடங்களாக எதிர் பாலினத்தின் அருகிலேயே இருந்தும் பேசாத பழகாத ஒருத்தன்/ஒருத்தி சட்டென மென்பொருள் நிறுவனத்தில் வேலை, கை நிறைய சம்பளம் திடீர் சுதந்திரம் எல்லாம் கிடைத்தால் என்ன செய்வான்/செய்வாள்?

என்ன சொல்ல வர்ர? அப்ப எல்லாத்தையும் அவுத்து விட்டுடலாமா? ஒரு நெறி முறையே வேணாமா? விலங்கு போல எல்லாரோடும் புணரலாமா? என கேள்விக் கணை தொடுக்கும் சகோதர சகோதரிகளே, உங்களிடம் ஓரே ஒரு கேள்வி "இப்ப மட்டும் இங்க என்ன வாழுதாம்?". இன்றைய பிரச்சனை என்னவென்றால், நான் (ஒரு ஆணோ பெண்ணோ) திருமணத்திற்கு முன்னோ பின்னோ உறவு வைப்பது அல்ல. அது குறித்து வெளிப்படையாக பேசுதல் மட்டுமே. வெளிய சொல்லாம வெச்சுகிட்டே , ஓக்கே!!

இப்போதைய தேவை, காமம் குறித்த கல்வி. காமம் குறித்து பேச மேடை. காமம் குறித்த விழிப்புணர்வு. இதோடு நின்று விடாமல், காமத்துக்கும் காதலுக்கு உண்டான வேறுபாட்டையும் வளர் இளம் பிராயத்தில் விளக்குதல் வேண்டும். தனக்கான துணையை தானே தேர்ந்தெடுக்கும் உரிமை, சுதந்திரம் ஆகியவற்றோடு அது குறித்த தெளிவும் அவர்களுக்கு இருக்க வேண்டும். இதைச் செய்யும் வரை, ஆயிரம் மதவாதிகள் வந்தாலும் ஒண்ணும் புடுங்க முடியாது :)

- கிளறுவோம்

5 comments:

  1. ஜெய்சா3:09 AM, November 19, 2012

    சரிதான்,எனக்கு தெரிந்து நான் கடந்து முடித்த காலங்களில் என்னுடன் நட்புக் கொண்டிருந்த நபர்களில் 80%(ஆண்கள்) திருமணத்திற்க்கு முன்பே உடலுறவு கொண்டவர்கள்தான்.இதில் சிலர்தான் விபச்சாரியிடம் பலர் பழகிய / உறவுக்கார பெண்களிடமே இந்த அனுபவத்தை பெற்றவராவர். இதில் கல்வியறிவு குறைந்தவர்களே அதிகம்.
    குறிப்பாக அலைபேசி பறவலான பிறகு ஆணோ,பெண்ணோ தான் விரும்பும் இணையுடன் எளிதாக நெருங்க முடிகின்றது என்பது என கருத்து.

    ReplyDelete
  2. நீங்கள் சொல்லும் அனைத்து கருத்துக்களையும் நான் ஏற்கிறேன் தோழரே, சமிபத்தில் கேபிள் சங்கரின் சில கதைகளை படித்து விட்டு அதை பற்றி நண்பர்களிடம் விவாதிக்கும் போது பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன், அதில் எனக்கு தெரிந்து ஒருவருடன் மட்டும் தனது காதலையோ, காமத்தையோ நிறுத்தி கொண்டவர்கள் யாருமில்லை என தெரிய வந்தது, அதற்கு அவர்கள் சொன்ன காரணமும் ஆச்சர்யமாய் இருந்ததது, இதை பற்றி நான் எழுதலாம் என நினைப்பதற்குள் நீங்கள் எழுதி விட்டீற்கள், பரவாயில்லை, உங்களது விருப்பம் போல் இதை பற்றி அனைவரும் விவாதிப்போம்.

    ReplyDelete
  3. Shan Shylesh - கூத்தாடி3:50 PM, November 19, 2012

    எல்லாருக்கும் இப்படி நடப்பது தெரியும். ஆனால், பொது வெளியில் இது குறித்து பேசத்தான் யாரும் தயாரில்லை!

    ReplyDelete
  4. Shan Shylesh - கூத்தாடி3:50 PM, November 19, 2012

    அது குறித்து நீங்கள் எழுதினால், இங்கே அந்த இடுகைக்கான சுட்டியை பின்னூட்டமிடுங்கள்.

    ReplyDelete
  5. நல்ல முயற்சி !!!!

    ReplyDelete

போறாது தான் போறீங்க.. இங்க ஒரு தரம் எதுனா சொல்லீட்டு போங்க..