அவனும் என்னனென்னவோ பண்ணிப்பாத்தான் நடக்கல. ஒரு காலத்துல ஸ்கூலுக்குள்ள தண்ணி ஒழிப்பு, திருட்டு ரப்பர் அழிப்புன்னு நல்ல காரியங்க பண்ணிகிட்டு இருந்தவன், (எங்களுக்கு லன்ச் அவர்ல வேப்பமரத்தடி "இடஒதுக்கீடு" எல்லாம் வாங்கி தந்தவன்) திடீருன்னு "க்ளாஸ்" ரீதியா எங்கள பிரிச்சான். எங்க கிட்ட பேசும் போதெல்லாம், "நாமெல்லாம் க்ளாஸ் லீடரா இல்ல ஸ்கூல் லீடரா இருக்கறதுக்கே பொறந்தவங்க, நம்ம முப்பாட்டன் எல்லாம் பிரின்சிபல்லு, ஏன் கடவுள் வாழ்த்து பாடுறமே அந்த கடவுளே நம்ம க்ளாசுல மூணாவது பெஞ்சு கோமளாவ சைட் அடிச்சுகிட்டு கிடந்தவர் தான்"ன்னு பேசுவான். அதோட அந்த எடத்துலையே இல்லாத மத்த க்ளாஸ் பசங்கள பாத்து "உங்கம்மா கிட்ட போயி கேட்டுட்டு வாடா நீ எந்த க்ளாஸ்ன்னு, தேர்டு ஏ ல அவன் கண்ண அசைச்சா என்ன ஆகும் தெரியுமா? பிப்த்து பீல இவன் கால உட்டா என்ன ஆகும் தெரியுமான்னு" பீலா உடுவான். இவனுக்கு ஒரு அடியாள் வேற. அவன் பேரு பென்சில் வெட்டி மரு ( இயவன் எவ்வளவு கேவலவாதின்னா, இவன் பேச ஆறம்பிச்சா பொண்ணுங்க எல்லாம் காத மூடிக்குவாங்கன்னா பாருங்களேன். சில பொண்ணுங்க மூக்கையும் மூசிக்கும், பயபுள்ள குளிக்கவே மாட்டான், பாக்க நல்லா புளி மூட்ட மாதிரி இருப்பான்) நாங்களும் வெறி புடிச்ச வேங்கையா எங்க க்ளாஸ் வீரத்தை மானத்தையும் நிலை நாட்டனுமின்னு முடிவு பண்ணினோம்! எங்களுக்கு புத்தி வந்துச்சு. எங்க க்ளாஸ்லயே இருந்துகிட்டு எங்க க்ளாஸ் பசங்க எல்லாத்தையும் ஒண்ணு சேத்துனோம், அவங்க கிட்ட நம்ம க்ளாஸோட பெருமை எல்லாம் சொன்னோம். அவங்களும் எங்க கூட சேந்தாங்க, க்ளாஸ் உணர்வு இல்லாதவனையும், எங்கய்யா (இனி பீமதாச அப்படித்தான் கூப்பிடணுமின்னு அவரே சொன்னாரு).
ஒரு நாள் நாங்க கூட்டத்துக்கு போறப்ப நடந்த பிரச்சனைல, கொஞ்சம் அடிதடி ஆகிடுச்சு. இதுக்கு இடையில ஸ்கூலுக்குள்ள கலவரத்த தூண்டி உட்டான்னு அவன் மேல காண்டாயி, பிரின்சிபல் அவன லெப்ட் ரைட் வாங்கீட்டாரு. நாங்க எங்க தலைவனுக்கு வந்த அவமானத்த எங்களோடதா நினைச்சு ஸ்கூல் போர்ட ஒடைக்கறது, மிஸ் முந்தானைய புடிச்சு இழுக்கறது போன்ற அற வழி போராட்டங்கள்ல ஈடுபட்டோம். இதை என்னபோ நாங்க மட்டும் தான் பண்ற மாதிரியும், மத்த க்ளாஸ் பசங்க மேல தப்பே இல்லாத மாதிரியும் எங்களையே குத்தம் சொன்னாங்க எல்லாரும்.
ஒரே ஒரு பையன் மட்டும் எங்க க்ளாசுல எங்க கூட சேர மாட்டான். அவனை அன்னைக்கு ஒரு நாள் புடிச்சு வற்புறுத்தி கேட்டப்ப சொன்னான், "ஏன் டா அந்த லூசுக்... தான் அப்படி பண்றான்னா நீங்க ஏன்டா புத்தி கெட்டு அலையறீங்க. நாம நல்லா படிச்சா, நல்லா வெளையாண்டு ஒழுக்கமாவும் இருந்தா நம்மள்ள ஒருத்தர் ஸ்கூல் பீப்புள் லீடரா வரலாம். அத விட்டுட்டு அவன் சொல்றத கேட்டுட்டு ஆடுறீங்க. அவங்க இங்க நம்ம கிட்ட இப்படி எல்லாம் சொல்லீட்டு வெளிய போயி, நம்ம க்ளாஸ் வஞ்சிக்கப்பட்ட க்ளாசு, இந்த க்ளாசுல தான் லேடீஸ் டீச்சரே இல்ல, படிக்கிற யாருக்கும் டவுசரே இல்லன்னு சோகக்கத சொல்றான். உண்மையிலேயே எல்லா க்ளாசுலையும் நல்லவன், கெட்டவன், படிக்கறவன், சாதிக்கறவன் எல்லாரும் இருக்காங்க டா. அந்த சொட்டக்க்... தான் பையன ஸ்கூல் லீடராக்கறதுக்காக உங்களை எல்லாம் தூண்டி விடுறான். நல்லா யோசிச்சு பாருங்க, இப்ப பிரச்சன வந்தா மேல் லெவல்ல இருக்கற அவன் தப்பிச்சுருவான், கீழ் லெவல்ல இருக்கற பசங்க தான் எல்லா க்ளாஸ்லையும் பாதிக்கப்படுவாங்க. ஏன்னா, எல்லா க்ளாஸ்ல இருக்கற மேல் லெவல் பசங்க, பாதுகாப்பா தான் இருப்பாங்க. நமக்கு மரியாத, நாம ஒரே ஸ்கூலா இருந்தா தான் டா, இப்படி க்ளாஸ் க்ளாஸா பிரிஞ்சா இல்ல"ந்னான் ஒரே மூச்சுல.
எங்க எல்லாத்துக்கும் செருப்பால அடிச்சா மாதிரி ஆயிடுச்சு. அவன் ஒரு காலத்துல நானோ என் பையனோ, பதவிக்கு வந்தா செப்பலால அடிங்கன்னு சொல்லீட்டு, போர்ட் அழிக்கற சுகாதார பதவிக்கு வந்தது எல்லாம் கண்ணுல நிழலாடுச்சு. "ஏன் டா பாடு, எங்க க்ளாசுக்கு நல்லது பண்ணுறேன்னு எங்கள தூண்டி உட்டு நீயும் உன் புள்ளையும் பதவிக்கு வறீங்கங்களா"ன்னு அவன அரச மரத்தடியில வெச்சு குமுறு குமுறுன்னு குமுறுனது வேற கத!
நாங்க திருந்தீட்டோம் - அப்ப நீங்க?
No comments:
Post a Comment
போறாது தான் போறீங்க.. இங்க ஒரு தரம் எதுனா சொல்லீட்டு போங்க..