அன்னா ஹசாரே... அப்பா என்ன ஒரு பேராதரவு,கூட்டம். கிரிக்கெட் வோர்ல்ட் கப்புக்கு அப்பறம்,தேசிய உணர்வு இந்த ஒரு மாசமாத்தான் பொங்கி வழியுது.முதலில் இந்த போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் யூத்துகளுக்கு ஒரு கேள்வி "டேய்..உங்களுக்கு வெக்கமே இல்லையா டா"... எவனோ ஒரு 70 வயசு தாத்தா சொன்னாத் தான் நீங்க ஊழல எதிர்ப்பீங்களா? ஏன் உங்க அம்ம ரேஷன்காரன் மண்னெண்ணை அடிச்சத பத்தி சொன்னதே இல்லயா? இல்ல நீங்க ஆர்.டி.ஓ ஆபிஸ்ல காசு குடுக்காம தான் லைசென்ஸ் வாங்கினியா? அப்ப எல்லாம் வராத தேசிய உணர்வு உனக்கு இப்ப மட்டும் பொங்கி வழியுதா?
அன்னா இப்போதைக்கு நடுத்தர வர்கத்த பார்வையாளர்களா வெச்சு இருக்கற தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கைகளோட ஒரு Brand அவ்வளவுதான்.நல்ல விளம்பர வருவாய்ங்க உண்மையாவே. நம்பிக்க இல்லன்னா இத படிங்க.. http://goo.gl/B7A5L
நான் இராணுவத்துக்கு எதிரா எதையும் சொல்லல..இவங்க மணிப்பூர்ல 1974ல இருந்து இப்ப வரைக்கும் நடைமுறைல இருக்கற Armed Forces (Special Powers) Act, 1958 (AFSPA), ரத்து பண்ண சொல்லி போராடிகிட்டு இருக்காங்க.
அன்னா இவ்ளோ பாப்புலர் ஆக காரணம் ரொம்ப சின்னது.இதை படிக்கும் நீங்கள் ஒரு நடுத்தர வர்க்க பெரும்பான்மை சுய-நலவாதி. அட ஆமாங்க, இந்தியாவின் பெரும்பான்மையாக பார்க்கப்படுவது நடுத்தர வர்க்கம் தான்(Middle and upper-middle class).சரி,எப்படின்னு கேக்குறீங்களா? ஒரு மார்க்கெட்டிங் நுட்பம் (Marketing Stratergy) சொல்றேன் கேளுங்க. நீங்க நம்ம இந்தியாவின் தேசிய சேனல் என்.டி டீவிலயோ இல்ல டைம்ஸ்லயோ இந்த அன்னா பத்தின நியூஸ் வரும் போது வரும் விளம்பரங்கள பாருங்க, எல்லாமே நடுத்தர வர்க்கதினர குறி வெச்சு எடுக்கப்பட்டது.இவங்களுக்கு யாரு செத்தாலும் கவல இல்ல, நந்திக்கிராம் நிலம் பத்தி கவல இல்ல,விவசாயிக்கு நியாயமான கூலி கிடைக்காதத பத்தி கவல இல்ல,ஆனா தன்னை பாதிக்கிற விஷயம் ஊழல்ன்னு ஒரு எண்ணம்!தன் வீட்டுக்கு கீழ ரோடு இல்லாத்துக்கு காரணம் அந்த கான்ட்ராக்டர் செஞ்ச ஊழல்.. அதனால தான் இவங்களுக்கு ஊழல்வாதிகள் மேல கோவம். ஆனா,பணத்துக்கு பின்னாடி ஓடுறதாலயோ என்னவோ,ஊழல ஒழிக்க ஒரு 7 பேரு போதும்ன்னு நெனச்சுட்டாங்க.
சரி.. அப்படி என்ன எனக்கு அன்னா மேல கோவம்றீங்களா? ஒண்ணும் இல்லங்க.. அது செரி உங்களுக்கு என்ன அவரு மேல அவ்வளவு பாசம்?அவரு ஊழல ஒழிக்க பிறந்த மகான் இல்ல? இத்தன நாள் அவரு பண்ண போராட்டங்களுக்கு நீங்க ஏன் ஆதரவு தெரிவிக்கல??ஒண்ணு நல்லா தெரிஞ்சுக்குங்க.. ஊழல்ன்னால வாழ்றது அரசியல்வாதிங்க மட்டும் இல்ல, அம்பானிக்களும் தான்.நினைச்சு பாருங்க என்ன ஒரு அசுர வளர்ச்சி அம்பானி காட்டினாரு? லஞ்சம் கொடுத்து இருக்கவே மாட்டாருன்னா நினைக்குறீங்க? 2ஜி ஊழல் மாட்டின ரிலையன்ஸ் அன்னாவோட உண்ணாவிரத்த ஸ்பான்ஸர் பண்ணுது தெரியுமா?
அன்னாவுக்கு ஆதரவா குரல் எழுப்பற எத்தன பேரு கீழ உள்ள தகவல்களை எல்லாம் படிச்சீங்க?
விக்கிபீடியாவில் அன்னா பற்றி! |
இத்தன குரல் குடுக்கற அன்னா பண்ண தப்புங்கள விக்கிபீடியால யார் யார் படிச்சீங்க?
1.அஞ்சா நெஞ்சன் ,காந்தியவாதியின் பிறந்த நாள் கொண்டாட்டம் 2 லட்ச ரூபாய் செலவில்
2.அவரு ஊர்ல பஞ்சாயத்து தேர்தலே நடந்தது இல்ல.. அன்னா தான் அன்னப்போஸ்ட்டு!
3.இவருக்கு நம்ம பாஜக ஆட்சில கொடுத்த விருதுகள் கீழ..
4.இந்தியாவின் சேவகர்,இந்தியாவின் ஊழலுக்கு எதிரான முகமான இவர், குஜராத் அண்ணன் மோடிய ரொம்ப நல்லவர்ன்னு சொல்லி மாட்டி பின்னால பல்டி அடிச்சாரு.
5."மாரத்தியர்களுக்கு தான் மும்பை"ன்னு நம்ம தாக்ரே தாக்குன கருத்துக்கு அன்னா ஆதரவு உங்களுக்கு தெரியுமா? (அப்ப அவனவன் ஊர பிரிச்சு விடியறதுக்குள்ள அவஅவன்ட்டயே குடுத்தறலாமா?)
சரி,நீ என்ன புடுங்குன இவர பத்தி பேசன்னு கேக்கறீங்களா? இதே கேள்விய நான் திருப்பி உங்க கிட்ட கேட்டா?
ஐரோம் ஷர்மிள்'னு ஒரு பொண்ணு.உங்களுக்கு ஆயிரம் வேல இருந்தாலும் பரவாயில்ல தயவு செஞ்சு இத படிங்க. "The worlds longest hunger Striker" இவங்க தெரியுமா?? காரணம் தெரிஞ்சா ஒரு இந்தியன் சொல்லிக்க அசிங்கப்படுவீங்க..
இத பாருங்க...
போராட்டம் |
IROM Sharmila - ஐரோம் ஷர்மிளா |
விக்கிபீடியாவில் -- http://en.wikipedia.org/wiki/Irom_Chanu_Sharmila (தயவு செஞ்சு படிங்க)
வீரப்பன புடிக்கப் போன போலீஸ் பண்ண அட்டூழியங்கள் தெரியுமா?
நம்மள பாதிக்கற ஊழல்ன்ன உடனே வலிக்குதா?? செரி இப்ப என்ன பண்ணனும்ன்றீங்களா? இத்தன நாள் இருந்த மாறி மூடிகிட்டு இருங்க இல்லன்னா மத்த பிரச்சனைகளுக்கும் குரல் கொடுங்க.எல்லாத்துக்கும் முதல்ல லோக்பால் பத்தி தெரிஞ்சுகிட்டு அப்பறம் எவனுக்காவது ஆதரவு நிலைப்பாட்டை எடுங்க.
நல்ல விஷயங்கள் - Blue கெட்ட விஷ்யங்கள் - வறுமையின் நிறம்! |
அதுக்காக எல்லாரும் போராட்டத்த தூக்கி போட்டுட்டு போங்கன்னு சொல்லல.தெரிஞ்சுசுகிட்டு பேசுங்க. ஜன்-லோக்பால்லயும் நிறைய ஓட்டைங்க இருக்கு.என்னென்னன்னா..
1)NGO -அதாவது இந்த Trust எல்லாம் லோக்பாலுக்கு கீழ வராதாம் - அன்னா வரைவுப்படி. கருப்புப் பணத்த வெள்ளையா மாத்தறதே இவனுங்க தான். சா(நா)ய் பாபா, நம்ம ராம்தேவ் எல்லா நாயிங்களும் இந்த வரம்புல வராதாம்!
2)லோக்பாலே தான் அது பத்துன புகாருங்கள எல்லாம் அவங்களே தான் விசாரிப்பாங்களாம்
3)லோக்-ஆயுக்தா எல்லாம் மாநிலங்கள் எடுக்கும் முடிவாம்!
நல்லா யோசிச்சு பாருங்க..ஒரு 7 பேரு குழு,எத்தன பேர விசாரிக்க முடியும்? எத்தன ஆர்.டி.ஓ,எத்தன ஹெல்த் இன்ஸ்பெக்டர்ஸ்,எத்தன வி.ஏ.ஓ எத்தன???
அப்ப என்ன தான் பண்ணனும்றீங்களா? எல்லாருக்கும் கற்பிக்கனும்.மனிதாபிமானம்,தனி மனித ஒழுக்கம் வளரனும்.அத கல்வி சொல்லி குடுக்கனும். அதுக்கான ஒரு அரசு அமையனும். சுரண்டல்கள் நிக்கனும்.ஒருத்தன் வாழ ஊரே உழைக்கறது புரியனும்!
ஜெய் ஹிந்த்,ஆகஸ்ட் யுத்தம் எல்லாம் ஒரு வார்த்தை,மாய வார்த்தை , உங்களை முட்டாளாக்கும்,நடைபெறாததை நடந்து விட்டதாக,எழுச்சியை உண்டு பண்ணக்கூடிய ஒரு வார்த்தையே ஒழிய அப்படி சொல்வதால் மட்டும் ஊழல் ஒழிந்து விடாது!
இந்த இரண்டுக்கும் பொதுவாக,மக்களால் தேர்ந்து எடுக்கப்படும் நபர்கள் விசாரிக்க கூடிய ஒரு அமைப்பு தான் லோக்பாலாக இருக்க வேண்டும். ஆனால் மறுபடியும் சொல்றேன், நம்ம நீதிபதி வேதனையோட சொன்னாரே "ஊழல வேணும்னா சட்டப்பூர்வமா ஆக்கிறலாம்..".கல்வி தான் ஊழலை ஒழிக்கும்..
திருடனா பார்த்து திருந்தாவிட்டால்...
No comments:
Post a Comment
போறாது தான் போறீங்க.. இங்க ஒரு தரம் எதுனா சொல்லீட்டு போங்க..