காதல் ஜாதியை/மதத்தை ஒழிக்குமா? - ஆம்.
காதல் மட்டும் ஜாதியை/மதத்தை ஒழித்துவிடுமா? - இல்லை.
தமிழனத்தின் ஆதர்ச தலைவர், தமிழ் குடிதாங்கி, தமிழகம் கண்ட தன்நிகரற்ற ஒப்பற்ற தலைவர், வன்னியர் குல வைரம் மருத்துவர் அய்யா திரு ராமதாஸ் சொல்வது போல காதலால் மட்டுமே ஜாதியை ஒழித்து விடுதல் சாத்தியமில்லை தான்.
இன்றைய பொருளாதார சூழ்நிலையில் மத்தியதர வர்க்கமும் அதற்கு மேற்பட்ட பணக்காரர்களும் 17 சதவீத இடத்தை பிடிக்கிறார்கள். மீதமிருப்பவர்கள் ஏழைகள் மற்றும் லோயர் மிடில் க்ளாஸ். இதில் பெரும்பாலும் மேல் நிலையில், வெளி மா நிலங்களில்/ நாடுகளில் இருப்பவர்கள் ஸ்டேட்டஸ் தான் பார்க்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும், தமிழன் என்ற இனத்தை மட்டுமே பார்க்கிறார்கள். முக்கிய காரணம், தாழ்த்தப்பட்ட மக்களில் வெகு சிலரே இந்த நிலைகளை அடைந்திருப்பர். இவர்களிடம் "யாருங்க இப்பெல்லாம் ஜாதி பாக்குறா?" என்ற கேள்வியை கூட நீங்கள் எதிர்பார்க்கலாம். ஆனால், இவர்களின் எண்ணிக்கை மிகச்சொற்பமே.
மீதமுள்ளவர்கள் சொந்த ஊரில் இருக்கும் மத்திய தர வர்க்கத்தினர் + பணக்காரர்கள் + ஏழைகள். இவர்கள் தம் சமுதாயத்தோடு நெருங்கிய தொடர்பிலிருப்பார்கள். ஒரு காதல் நிகழ்ந்தது என்றால், ஒரு வேளை அதில் ஆண் ஆதிக்க சாதியாகவும் பெண்
தாழ்த்தப்பட்டவராகவும் இருந்தால் பல நேரங்களில் அது கடுமையான எதிர்ப்போடு நின்று விடுகிறது. அதற்கான காரணம், பெரும்பான்மையில் கணவனின் சாதியே மனைவியிடம் வருங்கால சந்ததியிடமும் திணிக்கப்படுகிறது. (ஆனால், இது சமீபத்திய மாற்றமே, முன்னாலெல்லாம், சண்டாளன் என்ற அடைமொழியில் கலப்பு மண வழி பிறந்தவர்களை அழைத்து வந்தது வரலாறு).
ஆண் தாழ்த்தப்பட்ட சமூகமாக இருந்து பெண் ஆதிக்கஜாதியாக இருந்தால், மிகப் பெரும்பாலும் அந்தக் காதல் காதலர்களோடு மட்டும் முடிவதில்லை. நகர்புறகமாக இருந்தால் குடும்ப உறுப்பினர்களின் கடுமையான புறக்கணிப்பை, எதி்ர்ப்பை சந்திக்க வேண்டிவரும். கிராமப்புறங்களில், இன்னமும் மோசமான வாழ்வியலை கேள்விக்குறியாக்கும் தாக்குதல்கள் நிகழும்.
காதலர்களில் பெரும்பாலனவர்கள் தங்கள் தந்தை தாய் சமூகத்தினரை சமாதானம் செய்யும் பொருட்டும், வேறு பல்வேறு காரணங்களுக்காவும் ஏதோ ஒரு ஜாதிச்சாயத்தை தன் குழந்தை மீது பூசுகின்றனர். பகுத்தறிவோ, ஜாதி மறுப்போ பெரும்பான்மையான காதலர்களின் தேர்வாக இருப்பதில்லை.
சரி, காதல் தான் ஜாதியை ஒழிக்காதே, அப்புறம் ஏன், கலப்பு மணத்தை எதிர்த்து இந்த ஜாதி சங்கங்கள் களமிறங்குகின்றன. காதல் ஜாதியை சட்டென ஒழிக்காது என்பது உண்மை தான். ஆனால், மெல்ல மெல்ல இந்த மாற்றம் ஜாதிக்கட்டமைப்பை உடைத்து விடும். எப்படி? ஏன் இந்த ஜாதி அமைப்புகள் கலப்பு மண எதிர்ப்பை வலுவாக முன்னெடுக்கின்றன? பார்ப்போம்.
ஜாதி சங்கங்கள் - அமைப்புகள் :
கும்பல் மனப்பான்மை ஒரு மோசமான மன-நிலை. ஆங்கிலத்தில் Mob-attitude என்பார்கள். குழுவாய் இருப்பது ஒருவனுக்கு எதிர்பாராத அசுர பலத்தை தரும். ஆனால், இது சீழ்ப் பிடித்த இடத்தில் சொறியும் சுகத்தை போன்றது. வெறித்தனமாய் சொறிந்து முடித்த பின் ரணம் தான் மிஞ்சும். ஜாதி அமைப்புகளிலும் இதே தான் நடக்கிறது. தர்மபுரியிலோ, கீழ்வெண்மணியிலோ தவறு செய்த எல்லாரும் மிருகங்கள் அல்ல, ஓரிரு மிருகங்களால் ஒருங்கிணைக்கப்பட்ட, போதையேற்றப்பட்ட, வெறியூட்டப்பட்ட மதி கழன்ற மனிதர்கள்.
இது போன்ற ஜாதி ரீதியிலான அமைப்புகளின் மூலத்தை இங்கு ஆராய அவசியமில்லை. இன்று அவற்றின் நிலை குறித்த தெளிதல் போதுமானது. இன்று ஜாதி சங்கங்கள், ஜாதி கட்சிகள் எல்லாம் வெறும் கும்பல்கள். சரி, இத்தனை தலைகள் எதற்கு, எதற்காக? ஒற்றை வரி பதில், அரசியல். நீட்டி முழக்கிச் சொல்வதாய் இருந்தால் அதிகாரம், பணம், சமூக அந்தஸ்து, புகழ் ஆகியற்றோடு இவைதரும் போதை ஜாதி வெறியர்களை அவ்வாறே வைத்திருக்க துணை புரிகின்றன.
எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான். உங்கள் ஊரின் மைய ஜாதி ஆளைத்தான் எந்தக்கட்சியாக இருந்தாலும், சட்டசபை தேர்தலின் போது நிறுத்தும். ஏன்? ஓட்டு அரசியல். புழுத்து நாறிப்போன ஓட்டு அரசியல். ஜாதி முழுக்க முழுக்க அரசியலாகி விட்டது.
மணிகண்டன் சுத்தமாக காதிலியே போட்டுக்கொள்ள தேவை இல்லாத பல முட்டாள்தனமான விஷயங்களை பேசி இருந்தாலும் ஒரு விஷயம் கவனிக்கத்தக்கது. திமுகவை விடுங்கள், எந்த கட்சிக்காவது, சாதி தவிர்த்த மாற்று முறைகளில், வேட்பாளரை தேர்வு செய்ய தைரியம் இருக்கிறதா? அந்தந்த பகுதியில் அந்தந்த சாதிக்காரனை நிறுத்தி விட்டு ஜாதியை ஒழிக்க முனைவது சாக்கடைக்குள் அமர்ந்து சந்தனம் உரைப்பது போல.
காதல் - ஏன் ஜாதி மதம் பார்ப்பதில்லை? :
பெரும்பாலும் வேற்று மதத்தாரோடு காதல் அரும்புவதில்லை. மதக்கலப்புகள் வெகு சொற்பமே. ஆனால், சாதி இந்துக்களின் பெண்கள் தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் மேல் காதல் கொள்வதற்கு பல்வேறு உளவியல் ரீதியிலான காரணங்கள் உள்ளன. பல ஆண்டுகளாக சினிமாக்களில் காட்டப்பட்டது போல, (சமீப உதாரணம் சுந்தரபாண்டியன்) பெண்களுக்கான மரியாதை இந்த "சாதீ இந்துக்களிடம்" மிகக்குறைவாகவே கிடைக்கிறது. கும்பல் மனப்பான்மையும், கொஞ்சம் பகட்டும், சில வெளியுலக தொடர்புகளும் இந்த ஆண்களுக்கு சிறு வயது முதலே ஆணாதிக்க மனோபாவத்தையும் , "இவளுக்கு என்ன தெரியும்? பொட்டக்களுத வீட்டுல தானெ கெடக்கா?" என்ற ஆழ்மன எண்ணத்தையும் ஏற்படுத்தி விடுகின்றன.
இயல்பாகவே உழைத்து உண்டு, தாய்க்கு பல நேரங்களில் சமையற்கட்டிலும் கூட உதவி, அன்பாக அனுசரணையாக பேசியே பழக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட ஆண்கள் இந்த மாதிரி ஆணாதிக்கத்தை சிறு வயதிலிருந்தே பார்த்த, அனுபவித்த பெண்களை ஈர்ப்பது இயற்கை தானே. ஆனால், பெரும்பாலான காதல்களில், ஆண்கள் விலகிச்சென்றாலும் கூட, பெண்கள் தான் தைரியமூட்டி காதலிக்கச்செய்கின்றனர்.
ஜாதி சங்கங்களும்/கட்சிகளும் காதலும் :
தொடங்கிய இடத்திற்கே வந்துவிட்டோம். ஏன் இவர்கள் எதிர்க்கிறார்கள்? முதலிலேயே சொன்னதைப்போல, ஆண் ஆதிக்க சாதியை சேர்ந்தவர் என்றால், பெரிய அளவில் பிரச்சனை இருக்காது. ஆனால், பெண் ஆதிக்க சாதியை சேர்ந்தவர் என்னும் போது, கணவனின் ஜாதி அவளது அடையாளமாக மாறிப்போக அதிக வாய்ப்புகள் இருப்பதாலும், "நமக்கு கீழ வாழ்ந்தவன் இப்படி நம்ம வீட்டுப்புளைய கட்டிக்கற நிலைமைக்கு வந்துட்டானே" என்ற காழ்ப்பு உணர்ச்சியின் வெளிப்பாடும் வெறியாய் வெளிப்படுகின்றன. இதற்கு காரணம், திருமணத்தின் போது பெண்ணே புகுந்த வீட்டிற்கு வருபவள் என்பதனை நினைவில் கொள்க.
சரி, எதற்காக ஜாதி தேவை இவர்களுக்கு? இதை எல்லாம் களைந்து விட்டு "மனிதனாய்" வாழ முடியாதா? இவர்கள் சாக்கடையில் உழலும் பன்றிகளாய், மலத்தை அண்டும் பூச்சிகளாய்த்தான் வாழ்நாள் முழுக்க இருப்பார்களா?. ஒற்றை வரி பதில், ஆம்.
சரி, அப்படியெனில் ஏன்? முதலிலே குறிப்பிட்டது போல அரசியல் ரீதியில் ஒரு பகுதியில் பலம் பெற, எதேனும் ஒரு ஒற்றுமை தேவை. இருக்கவே இருக்கு ஜாதி. இன்றைய சினிமாக்களின் ப்ரோஜக்ஷனும், சிறு வயது முதலில் ஊட்டி வளர்க்கப்பட்ட ஜாதி நஞ்சும் ஒவ்வொரு தலைமுறையையும் ஜாதி வெறிக்குழியில் தள்ளுகிறது. அப்பனை, சிற்றப்பனை, பெரியப்பனை, அவர்கள் தோரணைகளையும், பகட்டையும் கண்டு மயங்கிய இவர்கள் ஜாதி சிறப்பானது என்ற மாயையில் சிறு வயதில் ஊறி, பின் வயது வந்த பின் அது சாக்கடை என்றே கண்டு கொண்டாலும் அது அளிக்கும் போதை நிமிர்த்தமாக, அதில் கிடந்து ஊறவே விரும்புகின்றனர்.
இன்று உலகமயமாக்கலும், நட்பு வட்டத்தின் பெருக்கமும், அறிவின் வளர்ச்சியும் மெல்ல மெல்ல ஜாதி சாக்கடையை மீறிய காதலுக்கு, திருமணத்திற்கு வாலிபர்களை/இளம் பெண்களை இட்டுச்செல்வதை, இவர்களால் பொறுக்க முடியவில்லை. எங்கே, தங்களது ஒட்டுண்ணி ஓட்டுப்பொறுக்கி அரசியலுக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று இவர்கள் அஞ்சும் நிலை வந்துவிட்டது. காதல் ஜாதியை ஒழிக்காது, பெற்றோர் சம்மதம் வேண்டும், இன்னபிற அறிக்கைகளும் அச்சத்தின் விளைவாய் வந்த குளிர் காய்ச்சலின் பதற்ற பிதற்றல்களே.
நாம் என்ன செய்ய வேண்டும்? :
ஒவ்வொரு தனி மனிதனும் தன் துணையை தானே தேர்ந்தெடுக்க அரசியலமைப்புச்சட்டம் அடிப்படை உரிமை என இடமளிக்கிறது. அதை மனதளவில் நேர்மையாய் செய்தாலே போதுமானது. காதல், பகுத்தறிவை நோக்கி திருப்பப்பட வேண்டும். திருமணமான பின் அடுத்த தலைமுறையை எதோ ஒரு ஜாதியின் கீழ் பதிவதன் மூலம், ஜாதி மாற்றப்படுமேயன்றி ஒழிக்கப்படாது. சில நேரங்களில், இட ஒதுக்கீடு கட்டாயம் பெறப்பட்டாக வேண்டும் என்ற சூழ் நிலையில் ஜாதியை குறிப்பிட வேண்டி வந்தாலும் கூட, வாழ்க்கையில் உயர்ந்த பின் எக்காரணம் கொண்டும் ஜாதியை குறிப்பிடக்கூடாது என்பதிலும், தன் பிள்ளைகளுக்கும் தன் துணையை தானே தீர்மானிக்கிற உரிமையை கொடுக்க மனவுவந்து முன் வர வேண்டும்.
ஜாதிக்கு எதிரான அரசியல் மன நிலை தான் ஜாதியை ஒழிக்கும். ஒரு வேளை ஜாதிக்கட்சிகளை சீண்ட ஆளில்லாமல் போய்விட்டால், எந்தத்தொகுதியிலும் ஜாதியை பார்க்காமல் கலப்பு மனம் செய்தவர்களைத்தான் நிறுத்துவேன் என திமுகவும் அதிமுகவும் அறிக்கை வெளியிட்டால், ஒரே கணம் கனாக்கண்டு பாருங்கள். ஜாதியை விட்டுவிட்டு இவர்கள் எல்லாரும் ஓடி வந்துவிட மாட்டார்கள்? ஆம், சாதிக்கு எதிரான அரசியலே அதை ஒழிக்க வல்லது.
தனி நபராக, அரசியல் கலப்பில்லாதவராக உங்கள் கடமை என்ன? மன்சாட்சி சொல்வதை கேளுங்கள். ஜாதீயம் பேசிக்கொண்டு உங்களோடு எவனவாது திரிந்தால், கத்தரித்து விடுங்கள். உங்கள் குழந்தைகளை ஜாதியத்தின் மலம் தோய்ந்த கரங்கள் தீண்டாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அவசியமில்லை என்று பட்ட அடுத்த நொடி, உங்கள் ஜாதி அடையாளத்தை துறந்து விடுங்கள். நட்புகளை உறவுகள் ஆக்கிக்கொள்ளுங்கள். மனிதராய் வாழுங்கள்.
தொடர்புடைய இடுகைகள் : http://www.koothaadi.in/2012/11/4.html
நண்பரே, பல விஷயங்களில் உங்கள் எண்ணங்களுடன் ஒத்துப்போகிறேன், இது குறித்த என் கேள்விகளை நான் பகிர்ந்து கொண்ட நேரத்தில் நீங்கள் பதிலளித்துள்ளீர்கள், இருந்தும் எனக்கு சரியான முடிவு கிட்டவில்லை, தற்காலத்தில் சாதி/மதம் தாண்டிய நட்புகள் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது, இருந்தும் இப்பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுப்பதன் காரணம் என்ன?
ReplyDeleteஎன் கேள்விகள் இதோ?
https://www.facebook.com/Malaiccaral இந்த லிங்கில் இருக்கும் காதல் திருமணங்கள் சாதியை ஒழிக்குமா? எனும் கட்டுரையை படிக்கவும்
அவர் என் பதிவை எல்லாம் படிப்பார் என்றால் அதற்கு விரிவாய் பதில் எழுத தயாராய் இருக்கிறேன். :-) அவரின் பெரும்பாலான கேள்விகளுக்கு இதிலேயே பதில் சொல்லி இருக்கிறேன், ஆனால் சில முக்கியமான விஷயங்களை சுரு(று)க்கமாக சொல்லி விடுகிறேன்.
Delete1. காதலை விட்டால் ஜாதியை ஒழிக்க பெற்றோர் சம்மதத்துடன் கூடிய ஜாதி மறுப்பு திருமணங்கள் தான். இங்கு எத்தனை பேர் அதற்கு தயார்?? நான் தெளிவாக குறிப்பிட்டு உள்ளேன், காதலோடு அவர்களுக்கு ஜாதி மறுக்கும் (அடுத்த தலைமுறைக்கு) தைரியமும் தேவை. அதோடு, சாதிக்கெதிரான அரசியல் நிலைப்பாடும் அவசியம்
2. கலாச்சார சீர்கேடு என ஒதுக்கிவிட முடியாது. உங்களுக்கே தெரியும் ஒருவனுக்கு காமம் துணிகிற வயது என்ன என்று. நாம் ஆண்-பெண் நட்பிற்கான இடைவெளியை முறையாக கொடுத்தால் ஏன் இனக்கவர்ச்சி ஏற்படப்போகிறது??
3.////10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போல் இல்லாமல் இப்பொழுது இணைய பயன்பாடு அதிகம் பெருகிவிட்டது, எங்கு எது நடந்தாலும் பத்திரிக்கையில் வருவதற்கு முன்னரே மக்களிடையே பரவி விடுகிறது. ////
குழந்தைத்தனமான வாதம் இது. தமிழகத்தில் எத்தனை பேர் இணையம் பயன்படுத்துகிறார்கள். இன்னமும் ஆண்ட பரம்பரகளை நம்பியே சீரழிபவர்கள் எத்தனை பேர் என கணக்கெடுத்து பாருங்கள்.
ஜாதியை ஒழிக்க நம் துணையை நாமே தேர்ந்தெடுக்க சொல்லும் எழுத்தாளருக்கு முதலில் வாழ்த்துக்கள்.இந்த விஷயத்தில் ஜாதியை தவிர்த்து, மன முதிர்ச்சி ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது
ReplyDeleteதன் துணையை தானே தேடிக்கொள்ளும் திறன் இல்லாத சிலரால் எவ்வாறு காதலிக்க முடியும்.
அழகு, அந்தஸ்து,படிப்பு, பணம், வாழ்க்கை முழுதும் வருமானம், வரதட்சனை என்று பல படிகள்பெண்களாகிய எங்களை தடுக்கிறது. ஜாதியை மட்டும் பார்த்தல் உங்கள் வாதம் சரியே.
மனப்பூர்வமாக ஒப்பு கொள்கிறேன், ஆனால், இன்றைய சமுதாயத்தில், இளைஞர்களே, நான் மேற்கோள் காட்டிய விஷயங்களை விரும்பும் பொழுது, பெண்கள் சமத்துவமும், புரட்சியும் பேசி சாதிப்பது குறைவே, அதற்கு ஒரு வழியோ இல்லை இன்னொரு பதிவை நீங்கள் எழுதினாலும் எமக்கு சந்தோசமே நண்பரே.
நெற்றியடி போன்று வார்த்தைகள் உமது, இந்த போராட்டம் தொடர வாழ்த்துக்கள்
முதலில் இது வெறும் அறிவூட்டலே அன்றி போராட்டம் அல்ல. இப்போது பதில்கள்.
Delete///தன் துணையை தானே தேடிக்கொள்ளும் திறன் இல்லாத சிலரால் எவ்வாறு காதலிக்க முடியும். ////
இப்படிப்பட்ட ஒருவனுக்கு/ஒருத்திக்கு திருமணம் தேவை இல்லை. துணையை தேடிக்கொள்ளும் பக்குவம்/திறன் வரும்வரை காத்திருக்கவேண்டும்.
///ஆனால், இன்றைய சமுதாயத்தில், இளைஞர்களே, நான் மேற்கோள் காட்டிய விஷயங்களை விரும்பும் பொழுது, பெண்கள் சமத்துவமும், புரட்சியும் பேசி சாதிப்பது குறைவே, ///
பெரும்பாலான ஆண்கள் ஆணாதிக்க மனோபாவம் கொண்டுள்ளனர் என்றே நீங்கள் கூற விரும்புவதாக கருதுகிறேன். இது உண்மை தான் என்றாலும், இந்த குறிப்பிட்ட பதிவுக்கு சம்மந்தம் இல்லாதது. நான் இதில் குறிப்பிட்டதை போல, நிச்சயம் ஒரு தாழ்த்தப்பட்ட ஆணுக்கும் , காதலித்து திருமணம் செய்த அவன் மனைவிக்கு பிறந்த ஒரு மகன் அப்படி இருக்க மாட்டான். காரணம், தன் தந்தை தன் தாயிடம் காட்டும் அனுசரணையை அவன் கவனித்திருப்பான்.
இன்று (பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட) திருமணம் என்பது தன் மகன்/மகளுக்கு செய்விக்கும் ஒரு சடங்கு என்பதை தாண்டி தனது செல்வாக்கையும், பணபலத்தையும் மற்றவர்களுக்கு தெரிவிக்கும் ஒரு வாய்ப்பாகவே பார்க்கின்றனர். குறைந்தபட்சம் "என் மகள்/மகனை எவ்வளவு *நல்லவனாக,*ஒழுக்கமுள்ளவனாக(வளாக) வளர்த்துள்ளேன் பார்" என்று தன குழந்தை வளர்ப்பை பறைசாற்றும் ஒரு வாய்ப்பாகவேனும் பார்க்கின்றனர்
ReplyDelete*(கல்யாணத்திற்கு முன்பு) காதலிப்பவர்கள் கெட்டவர்கள்,ஒழுங்கீனமானவர்கள் என்பது அவர்கள் எண்ணம்
விருப்பப்பட்ட துணியை தேர்தெடுக்க சட்டம் அனுமதித்தாலும் சமுதாயம் அனுமதிப்பதில்லை
-gollum@smeogol
we never hate love but we never allow the mix marriage .....
ReplyDeleteமொதல்ல பேரோட வந்து பதில் சொல்லுங்க.... ஏங்க காதலிக்கும் போது ஜாதி எல்லாம் கேட்டுட்டு காதலிச்சா அது அசிங்கம்...
ReplyDeletethambi Shan Shylesh Koothaadi kanda karumanthiratha(saanan,sakaliyan) ha vida caste keatu love pannarathu thappa theariyala.....
ReplyDeleteintha samuga serthirutham ellam innam 100 years aanalum othu varathu thambi.....
becoz problems with low caste peoples thaan.....
innam hz many yrs ku thaaltha patta caste nu solli education la , job la scholarship la ellathulaiyum eda othikidu....
monthly 1 lak earning vaanguranugu ellam kidaikum.....
paavam higher caste nu solli monthly 4k or 8 k la vaalikai nadathura engaluku ???
enna kidachuthu onnum ella.....
etha keata PCR podu veengala..... PCR ellam 90's thambi...
ungaluku eappadi social media's ha use panna theariyumo same lik that we also able to make it....
the thing which we want to do.... we do better and effective. :)
eappa caste adipadilaana othikiidu ooliyumoo appa..... annual earing ha poruthu othikidu mattrum ellam erunthaa paakalaam.....
ReplyDeletewe also human....
அனாமதேயமா போடாம பேரோட வந்து பேசுங்க... பதில் சொல்லுறேன்.
Deleteஇட ஒதுக்கீடு, அடக்கப்பட்ட, ஒடுக்கபட்ட மக்களுக்கு அவங்க உரிமையை மீட்கறத்துக்கான நிவாரணம்.
கண்ட கருமம் , அப்படி இப்ப்டின்னு இஷ்ட்டத்துக்கு பேசாதீங்க.
நன்றி
unna ellam naatama panna vitta enga maanam enna pa aarathu....
ReplyDeleteshyleshananth@gmail.com nallathu :)
etha 5oo rs blog la sollama 50rs spend panni tiruppur or cbe vanthu solu okay ha nu paakalam thambi... :P
ReplyDeleteமகேஷ், எழுத்தின் மூலமாக பரப்புதலும் ஒரு பணி தான். நீங்க இப்ப படிச்சீங்க இல்ல, ஒரு நாலு பேர் கிட்ட சொல்லுங்க..
Deleteஇப்ப நான் கூட திருப்பி கேக்கலாம், உங்க வெப்சைட் எதுக்கு இங்க, அது என்ன டெக் க்ரஞ்ச்ச விட நல்லா இருக்குமா என்று. நீங்கள் ஏன், கிராமங்களில் சென்று டெக்னிகல் நாலேட்ஜை வளர்க்கக்கூடாது என்று. ஆனால், எனக்குத்தெரியும், இதுவும் ஒரு தேவை என்று. தயவு செஉஞ்சு உங்கள Offend பண்றதா நினைக்க வேண்டாம். பதில் சொல்ல உங்களிடமே உதாரணம் எடுத்துக்கிட்டேன். தப்பா நினைச்சுக்காதீங்க.
nalla karuthal but entha karuthukal varaveandiya edathil varaveandum...........
ReplyDeleteungaluku vealaoyeaa e;;aiyaa
Deleteஉங்களுக்கு பேரே வெக்கலியா?
Delete