Flipkart

Amazon

Amazon

Thursday, November 6, 2014

ஜில் கதைகள் - 6

‪‪#‎ஜில்‬ ‪#‎ஜில்_கதைகள்‬ ‪#‎JillStories‬ ‪#‎Jill‬

https://www.facebook.com/SHAN4Luv/posts/885759614770590

இன்றைக்கென பார்த்து ஜில் வரும் நேரமாய் அலுவலக ஸ்மோக் ப்ளேஸில் சிகரெட்டும் கையுமாய் நின்றிருந்தேன். நின்றிருந்தேனே அன்றி புகைக்கவில்லை. நண்பன் ஒருவனுக்கு பேச்சுத்துணைக்கு வந்து ப்ளாக் நல்லாருக்கும் மச்சான், அடியேன் என்றவன் ஆசை காட்ட அப்போது என் விரலிடுக்கில் அது இடம்பிடித்திருந்தது.
உதடுகளை நோக்கி கையை செலுத்திக்கொண்டே நிமிரும் போது தொலைவில் அவள் வந்துகொண்டிருப்பதை கவனித்து விட்டேன். என்னை முறைத்துப் பார்த்தபடி வேகவேகமாய் எட்டி நடந்துகொண்டிருந்தாள்.
"போடாங்க" என அவனை சபித்துக்கொண்டே, சிகரெட்டை அவன் கையில் திணித்து விட்டு, சடாலென முன் வாசல் முன் ஜில்லோடு இணைந்து நடக்க தொடங்கினேன். அவள் பேசவேயில்லை. ஆனாலும், கூட நடப்பதையும் தடுக்கவில்லை.

"ஜில்லு"

"..."

"ஜில்ல்ல்லு"

"என்ன?" நின்று முறைத்து, புருவங்களை நெறித்து கேட்டாள்.

வெறுமனே பார்த்துக்கொண்டே நின்றேன். பிங்க் நிற ஸ்லீவ்லெஸ் ட்ரஸ் ஒன்று, ஆண்களுக்கான ஜாக்கி பனியன் ஸ்லீவ்லெஸ் வரும், ட்ராக்கில் போட, அதையே ட்ரான்ஸ்பரண்ட் க்ளாத் ஐந்தை ஒன்றாக சேர்த்து தைத்தால் எப்படி இருக்கும், அது தான். பெயர் தெரியவில்லை. இல்லை. சொன்னாள். மறந்துவிட்டது. கீழே ஒரு பார்மர் ஸ்கர்ட். மிகச்சரியாய் முட்டியோடு நின்றிருந்தது.

"ப்ளாக் ஸ்கர்ட்டு.. உள்ள பிங்க் தானே"

"You'll never know, you asshole"

வெடுவெடுவென இருப்பதாய் சொல்வார்களே, தப்பு, எழுதுவார்களே, அப்படி இருக்கும் அவள் கால்கள். அதிலிருந்து மேலே நோக்கினால், என்பதுகளில் வார இதழ்களுக்கு வரைபவர்கள் எல்லாம் ஒரு டெம்ப்ளேட் வடிவம் வைத்திருப்பார்களே, பெண்களின் கழுத்துக்கு கீழ். ஸ்க்வையர் லெக் பவுண்டரியின் உள்புறம் போன்ற இடை. ஹூம் என சூடான மூச்சோன்றை வெளிப்படுத்தியபடியே நிமிர்ந்து முறைத்தேன்.

"என்ன இது ஹீல்ஸ்"

".." பேசாமல் திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.

"கேக்குறேன்ல"

"நான் சொன்ன எதையும் கேட்க மாட்ட.. Why the fuck should I care about what you say?"

தோளை பிடித்து நிறுத்தி, திருப்பி,

"சத்தியமா அடிக்கல செல்லம். அடிச்சிருப்பேன். அதுக்குள்ள நீ வந்துட்ட"

"ம்ம்க்கும்..அதெல்லாம் உனக்கா இருக்கணும் நான் சொல்லி.."

"சரி, நார்மல் ஆவு. விட்டுடுறேன் சொன்னேன்ல. ஜனவரி 1. பொறு."

"ம்ம்ம்"

                     லிப்ட்டுக்குள் நுழைந்தோம்.இந்த நேரத்தில் காலியான லிப்ட் கிடைப்பதெல்லாம் மோடி இஸ்லாமியராய் மாறுவதைப் போன்றது. ஆனாலும் அன்று மாறிவிட்டிருந்தார். மன்னிக்கவும். லிப்ட் காலியாய் இருந்தது. வலது தோளால் அவளது தோளில் இடித்து லிப்ட்டினுள் தள்ளினேன்.

                        லிப்ட்டின் டோண்ட் ஓப்பன் பட்டனை அழுத்தியபடி அவளை சட்டென என்னோடு சேர்த்தி அழுத்தினேன். எனது இன்னொரு கை அவளை மொத்தமாய் வளைத்துப்பிடிக்க போதுமானதாய் இருந்தது. ஒரு மைக்ரோ வினாடி அந்த ஸ்பரிசத்தை ரசித்தவள், சிரித்துக்கொண்டே "You, Asshole" என்று என்னை தள்ளிவிட்டாள். கொஞ்சம் கையெடுத்து விலக, மூன்றாவது ப்ளோரில் லிப்ட் திறந்து இன்னொரு ஜோடி நுழைந்தது. ஒரே சட்டைக்குள் இருப்பதை போல ஈஷிக்கொண்டே நுழைந்தவர்கள் எங்களை பார்த்ததும் சிறிது விலகி வந்தனர்.

                        அதுவரை காதல் ரசம் சொட்டியிருந்த அவள் முகம் சட்டென ஏதோ மொக்கை ஆங்கில பட பேய்காட்சியில் டூப் போடுபவன் போல் ஆனது.

"I said wear a dhuppatta whenever you wear a chudi, why can't you listen?"

                      ஜில் லேசாய் சிரித்துக்கொண்டாள். என்னோடு பழகிய ஆரம்ப கட்டங்களில் ஜில்லுக்கு சவுத் இந்தியன்ஸ் என்றால் ஆகாது. ஏகப்பட்ட ஸ்டீரியோ-டைப்புகள். இங்க வெறும் ஸ்லீவ்லெஸ்யே ஏதோ பேன்ட்டிய பாக்குற மாதிரி பாக்குறாங்க என்பாள். சிரித்துக்கொண்டே, சதவீதம் கம்மியாய் இருக்கலாம், ஆனால் இது இந்தியர்கள் பொதுக்குணம் என்பேன். நீ இருந்தது பெரிய மெட்ரோ அதனால் தெரியாது என்பேன். இப்போது ஒத்துக்கொள்வாள் என நினைக்கிறேன். ஜில்லை முதல் முறை ஊருக்கு அழைத்து சென்ற போது, ஜன்னலுக்குள் இருந்து எங்களை பார்த்து குசுகுசுத்த பெண்களை வைத்து அவள் இன்றும் தமிழகத்தை ஓட்டுவது வழக்கம்.

                "என்ன இப்படி எல்லாம் கேட்கக்கூடாது" என்று காதலிக்க ஆரம்பித்த தொடக்கத்தில் கேட்ட அவள் பின்பு இதெல்லாம் என்ன கேட்க மாட்டியா என்று கேட்ட ஆரம்பிந்திருந்தாள் இப்போதெல்லாம். பெண்களுக்கு சுதந்திரம் திடீரென கிடைத்தால், "இத வெச்சுகிட்டு ஒரு ஹேண்ட் பேக் குடுங்க" என வாங்கி வந்துவிடுவார்கள் என்பேன் அவளிடம். இதெல்லாம் சிலர் கேக்கணும் டா. சிலர் அதிகாரம் பண்ணனும். ஆனா, நான் முடியாதும்பேன் நீ கேட்டுக்கணும் என கருப்பு வெள்ளை பூக்கள் மின்ன சிரிப்ப்பாள்.

             அவர்கள் விவாதம் அடுத்த கட்டத்தை எட்டியிருந்தது. "அடேய் மாபாவி, க்ராதகா, ஒரே ஒரு முத்தம் குடுக்க உடுடா என்ன" என என் மனம் அவனை சபித்துக்கொண்டிருந்தது. இவன் இறங்க மாட்டான், சண்டைல பிசியா இருக்கறப்ப சட்டுன்னு ஒண்ணு குடுத்திடுவோம்ன்னு , ஜில்லை தாண்டி இருக்கும் பட்டனை அழுத்துவது போல ஜில்லை புறங்கழுத்தில்
முத்தமிட்டேன்.

அவர்கள் பேச்சை நிறுத்தி திரும்பினார்கள்.

"What are trying to do"

"Press 13th"

"There is no 13th in this building"

Tuesday, October 28, 2014

ஜில் கதைகள் - 5


தீபாவளிக்கு முந்தைய நாள் அனைவரையும் கலாச்சார உடை அணிந்து வரச்சொன்னபோதே சிறு மூளையில் ஒரு எல்.ஈ.டி மினுக்கத் தொடங்கி விட்டது. ஜில்லு புடவை கட்டும் ஸ்டைலை நினைத்துப் பார்த்தாலே, குண்டலினியானது விளக்கொன்று தலைகீழ் எரிந்தாற் போல், கீழ் நோக்கிப்பாயும்.
அடுத்த நாளில் இருந்து லீவ் போட்டிருந்ததால் முதுகுத்தோல் உரியுமளவு வேலை. மதியமே முடித்துவிட்டு கிளம்புவதாய் ப்ளான். வந்த போதே பதினொன்றரை இருக்கும். காலியாய் கிடந்த லிப்ட்டில் ஏறி பதினொன்றை அழுத்தி விட்டு, அசுவாரசியமாய் முத்தமிட்டுக்கொண்டிருந்த அலுமினியக்கதவுகளை பார்த்துக்கொண்டிருந்தேன்.
பண்டிகை காலமென்பதால் ஆபீஸே காலி. இல்லையென்றால் இந்த நேரத்துக்கெல்லாம், மல்லிகையை மூக்கினுள் வைத்து வாசம் காட்டுவார்கள். திருவிழாக்கூட்டமிருக்கும். முதல் தளத்தில் யாரோ நிறுத்தியிருந்தார்கள். கதவு விலகியடவுடன் ஏசி விரைத்த தரையை பார்த்துக்கொண்டு ஏதோ யோசித்துக்கொண்டிருந்தேன். அதை உடைத்துக்கொண்டு அப்சரஸின் கால்கள் லிப்டினுள் மிதந்தன. நான் கண்ணை மேலே நிமிர்த்தவே இல்லை. கடவுளின் காலை காண உங்களுக்கு வாய்ப்பு கிட்டினால் என்ன செய்வீர்கள்? நீங்கள் எப்படியோ... நிமிர்ந்து முகமிருக்கிறதா எனப் பார்க்க எனக்கு தோன்றவில்லை.
ஜில் என் மோவாயை நிமிர்த்தினாள்.
"என்ன டா ஆச்சு உன் போனுக்கு?"
"தொலைஞ்சுடுச்சு"
அவள் மார்புக் கச்சை மீது வெறித்திருந்த விழிகளில் மொத்த கவனமும் இருக்க, வாய் அனிச்சையாய் முணுமுணுத்தது.
"நாயே நிமிர்ந்து தொல டா, யாராச்சும் வந்து தொலைய போறாங்க"
Irresistible என்ற வார்த்தைக்கு உங்களுக்கு அர்த்தம் புரியாவிடில் அன்று என் நிலையை விளக்க என்னால் வேறு வார்த்தைகளே தேட முடியாது. வெளிர் நீல நிறத்தில் பட்டுப்புடவை. இடப்பக்கத்தில் இருந்து பார்த்தால் விடைத்து நிற்கும் முயல்குட்டிகளுக்கு கீழே ஸ்கீயிங்க், பனிச்சறுக்கு சாகசம் நடக்கும் க்ளிஃப். குழந்தையின் மேலுதடு போல இருக்கும் அவள் காது மடல்களில் தொங்கும் நீல நிற ஜிமிக்கி. She is goddess of beauty, I say. அலுவலகமாய் இல்லாதிருந்தால், இனி லட்சோபலட்சம் ஆண்டுகளுக்கு கவிஞர்கள் உவமையாய் எடுத்தாளும் ஒரு மகத்தான காதல், கலவி சித்தித்திருக்கும். சிவனும் சக்தியும் புணர்ந்த போது அண்டம் அதிர்வதாய் ஊர்ப்பக்கம் வாய்ப்பாட்டு உண்டு. அதை மாற்றக்கிடைத்த ஒரு வாய்ப்பை வீண்டித்த கோபத்தில் லிப்ட்டை ஓங்கி உதைத்தேன்.
"என்னாச்சு?" பதற்றம் துளியுமில்லாத செக்ஸியான குரலில் வினவினாள் ஜில் (அல்லது எனக்கப்படி தோன்றியதா?)
ஒரே வினாடி. பார்வைகள் சந்தித்து மீண்டன. இரண்டு கோள்கள் மோதியது போல. ப்ளாக் ஹோல் என்பதை நாமெல்லாம் கற்பனையில் செய்து பார்த்திருப்போமே, அதன் உச்ச நொடியைப்போல.
அனிச்சையாய் நெருங்கி இருவரும் முத்தமிட ஆரம்பித்தோம். பெரு-நெருப்பென ஆக்ரோஷமாய் தொடங்கி, இடுப்பில் புரண்டு கொண்டிருந்த விரல்களில் வியர்வை பட்டவுடன் மெல்ல குழந்தையின் முகர்தல் போல மாறி தொடர்ந்தது. வைனில் ஊறவைத்த ஸ்ட்ராபெர்ரியை போல இருந்தன அவள் உதடுகள். ஸ்ட்ராபெர்ரி மார்கிரிட்டா மாக்டெய்லின் சுவை. முத்தம் முடிந்த பிறகும், பெருமூச்சு கழுத்தில் பட உடல் உரச வியர்வை பெருக்கெடுக்க நின்றிருந்தோம்.
மூச்சின் நெடி வியர்வை கலந்து வெப்பமாய் கழுத்தறுகே ஊர்ந்தது. நெடிய பாறை மீதெரும் வெய்யில் போல நேரம் மெல்லமாய் கரைந்து கொண்டிருந்தது.
பதிமொன்றாம் மாடி.
பிரிந்ததிருந்த அலுமினியக்கதவுகளின் ஊடாக ஒரு உருவம் உள்ளே
"எக்ஸ்க்யூஸ் மீ" என்றபடி நுழைந்தது.
ஒரு கணம் என்னை கண்டு திடுக்கிட்டு, "What are you staring at?" என்றவனை பார்த்து விஷமமாய் புன்னகைத்தபடியே வெளியேறினேன். ஜில் பத்தாவது ப்ளோரில் வேலை செய்கிறாள் 

ரமணா > கத்தி - ஏன்?

குறிப்பு :  கத்தி படத்தை ஏற்கனவே பலர் கிழித்து, கொண்டாடி எல்லாம் தொங்கவிட்டாயிற்று. விஜயை பகடி செய்வதோ, வெற்றி என கொக்கரிப்பதோ, கோக்ககோலாவில் நடிச்சுட்டு இத சொல்லலாமா என பொங்குவதோ இப்பதிவின் நோக்கமல்ல. இது 'சினிமா' விமர்சனம்.

               போதிய நேரமில்லாத காரணத்தால், முதலில் கதை மற்றும் அதன் கருவை விவாதித்து விட்டு பின் திரைக்கதையை அலசலாம். வழக்கம் போல ஒரு மிக வலிமையான கரு. விவசாயம் எப்படி உலகமயமாக்கலால் அழிகிறது. ஒரு விவசாய கிராமம். அதனிடம் இருக்கும் ஒரு வளம், அதாகப்பட்டது விவசாயத்திற்கு அடிப்படையான தண்ணீர். அதை உறிஞ்ச துடிக்கும் ஒரு பன்னாட்டு நிறுவனம். உண்மையிலேயே வலுவான கதைக்கரு தான். தண்டகாரன்ய காடுகளில் தொடங்கி நக்சலைட்டுகளுக்கான அடிப்படை காரணம் வரை, உலகமயமாக்கலின் பின்னான வளச்சுரண்டலில் உரைந்திருக்கிறது.

             கத்தியின் திரைக்கதைக்கு முன் ரமணாவின் திரைக்கதையை யோசித்துப்பாருங்கள். முதல் காட்சியில் இருந்தே செட்டிங் தி ஸ்டேஜ் அது. விஜயகாந்த்தின் கேரக்ட்டரைஷேசன் மெல்லமாய், அழுத்தமாய் பதிவு செய்யப்படும். அது ஏன் என ஒரு சின்ன கேள்விக்குறி நமக்குள் விழுந்து அது விஸ்வரூபம் எடுக்கையில் ஒரு ப்ளாஷ் பேக்.  ரமணாவின் முக்கிய ப்ளஸ், அதன் திரைக்கதை தான். எல்லா கேரக்டர்களுக்கும் வேண்டிய முக்கியத்துவம் கொடுத்து, அந்த கேரக்டர் தனது குணாதிசயத்தை கடைசி வரை கொண்டிருப்பது போன்ற திரைக்கதை. எத்தனை கூஸ் பம்ப் மொமெண்ட்ஸ்? மருத்துவமனையில் பிணத்துக்கு வைத்தியம் பார்ப்பது தொடங்கி, "We are not sentimental fools" வரையில். யூகி சேது கேரக்டருக்கு எத்தனை வலு?  நீங்களே ஒவ்வொரு சீனாய் நினைத்துக்கொள்ளுங்கள். சுமாராய் நடிக்கக்கூடிய யார் நடித்திருந்தாலும் ஹிட் அடித்திருக்கும். நல்ல திரைக்கதை அது.

             ஆனால், இதையே கத்திக்கு பொருத்தி பார்த்தால் தெரியும். பார்வையாளன் தியேட்டருக்கு வந்த முதல் 10 நிமிடத்தில் அவனை கதைக்குள் இழுக்க வேண்டும் என்கிறார் சிட் பீல்ட். சமந்தா கால்ஷீட் இருப்பதற்காவும், பாட்டு படத்தில் வேண்டும் என்பதற்காவும் ஏனோ தானோவென 40 நிமிடங்களை சுட்டுத்தள்ளி இருக்கிறார் முருகதாஸ். சதீஷின் காமெடி, சமந்தாவின் லவ் சீன்ஸ் எல்லாம் விமர்சனம் செய்யக்கூட லாயக்கில்லாதவை. அப்படி வேண்டுமென்றால் கொஞ்சம் யோசித்து காதலை எழுதத்தான் உங்களுக்கு என்ன தயக்கம்? கஜினியைத் தவிர மத்த எல்லா படங்களிலும் முருகதாஸின் காதல் போர்ஷன் மொக்கை தான். காதலுக்கும், கிறுக்குப்பிடிப்பதற்கும் இருக்கும் அந்த நூல் அளவு வித்தியாசத்தை அவர் கவனிக்க தவறிவிடுகிறார் போலும்.

          இரண்டாவது விஜயையின் இன்ட்ரோ அபத்தத்தின் உச்சம். ஐந்து பேர் ஆளுக்கு நான்கு முறை சுட்டும் ஒரே தோட்டா தான் பாய்கிறது. அவரையும் காப்பாற்றி விடுகிறார்கள். அவர் ஏன் இராவில் காய்கறி எடுத்துப்போனார் என்பதற்கு லாஜிக் வேறு. படம் ஆரம்பிப்பதே அந்த ப்ளாஷ் பேக் சீனில் தான். ஆனால், அந்த ப்ளாஷ் பேக்கில் தற்கொலை கூஸ் பம்ப் மட்டும் இல்லையெனில் படமே விழுந்திருக்கும். யோசித்து பாருங்கள். 37 வயது ஆள் இன்னமும் காலேஜ் பிரண்ட்ஸோடு, ப்ரபசரோடு ஊருக்குள் சும்மா இருக்கிறாரா? இதற்கு அவர் வெளி நாடு போய் விட்டு ஊருக்கு வந்தவர் என்றாவது காட்டி இருக்கலாம். 22 வயதில் கல்லூரி முடித்திருப்பார். 15 வருடங்களாய் என்ன செய்தார்? சரி. முதல் சீனில் அவரை கிஞ்சித்தும் மதிக்காத கிராமத்து ஆட்கள் அடுத்த சீனிலேயே அவரை தலை மேல் தூக்கி வைக்கின்றனர். இதெல்லாம் விஜய் என்ற ஒற்றை மனிதனால் தெரியாமல் போனது. வேறு யாரென்றாலும் இந்தக்குறைகள் பெரிதாய் தெரிந்திருக்கும். செம்ம வீக்கான திரைக்கதை. Character establishment இன்னமும் மிக வலுவாய் செய்யப்பட்டிருக்க வேண்டிய பாத்திரம் ஜீவா.

       ஊரில் பிறந்தது முதல் இருப்பவர் கல்லூரி நண்பர்களிடம் தான் இது யார் நிலம் என்பாரா? இந்த நண்பர்கள், ஊர் இளசுகள் எல்லாம் சென்னை வந்து இவர் கேஸ் நடத்த உதவ மாட்டார்களா? கூலி வேலைக்கு போறது ஓக்கே. ஆனா ஒருத்தர் கூடவா இவர் கூட இருக்க மாட்டாங்க? அதென்ன கூலி வேலை மட்டும், ஒரு கம்ப்யூட்டர் தட்டுறவன் கூடவா ஊர்ல உருவாகி இருக்க மாட்டான், விஜயை தவிர?
         விவசாயிக்கு தெரிந்த ஒரே வழி என தற்கொலை செய்வது செம்ம சீன். இதன் பிறகு அப்படியே ஜம்ப் அடித்தால் அந்த பைப் சீக்வன்ஸ் மட்டும் தான் அடுத்த கூஸ் பம்ப் சீன். இடையில் வரும் சில்லறை தூக்கிப்போடும் சண்டை, மற்ற எல்லா சண்டைகளும் எடுக்கணுமேன்னு எடுத்தது. 90களின் டெக்னிக். இந்த சண்டை எல்லாம் பில்லர்ஸ். இதே நேரத்தில் ரமணாவில் எவ்வளவு பரபரப்பாய் திரைக்கதை சுழன்று கொண்டிருந்தது என்பதை நினைவில் நிறுத்தவும்.

     இந்த இடத்தில் இரண்டு விஷயங்கள். பெரு-நகர மக்களை நேரடியாய் தங்கள் அக்கறையின்மைக்காய் குற்றம் சாட்டியதை பாராட்டியே ஆக வேண்டும். பலர் இந்த இடத்தில் சுற்றி வளைத்திருப்பார்கள். ஆனால், வழக்கம் போல ஒற்றை மனிதத்தீர்வை முன்வைத்ததை தவிர்த்திருக்கலாம். இது வணிக சினிமா, தீர்வு எல்லாம் தரவில்லை என்பவர்களுக்கு, இதையே ஜெண்டில் மேனுக்கு சொல்லலாமா? சிவாஜிக்கு? இதெல்லாம் சமூக பிரஞ்ஞை இல்லாதவர்களுக்கு நஞ்சு. இவங்க தான் நாளைக்கு ஓட்டுப்போடப்போற மாஸ்.

   இந்த இடத்தில் பேசப்பட்டதில் முக்கால்வாசி நம்மாழ்வாருடையது. குறை சொல்ல ஒன்றுமில்லை. ஆனால், திமுகவை மட்டும் நைசா தாக்கி, ஜெவை விட்டது கயவாளித்தனம். அதே போல அந்த கம்யூனிச டயலாக் அவசியமில்லாத இடைச்செருகல். ஆனால், இதை எல்லாம் விட்டுவிடலாம். ஏன் எனில் இது பணம் செய்ய எடுக்கப்பட்ட சினிமா, மாற்று சினிமாவோ, டாக்குமெண்ட்ரியோ அல்ல என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். விவசாயத்திற்கு இது ட்ரிப்யூட் என படத்தை பார்க்க சொன்னால் அது கயவாளித்தனம். திருப்பூரில் ஞாயிறு அன்று ஒரு டிக்கெட்150 ப்ரோ. ஒரு கிலோ அரிசியோட கொள்முதல் வெலை என்ன?

திரைக்கதையை பொறுத்த வரை, தற்கொலை சீன், பேட்டி சீன் இரண்டும் இடையே திணிக்கப்பட்ட சீன்கள். அவற்றில் அவ்வளவு கற்பனை வறட்சி. எதிர்பார்த்த க்ளைமேக்ஸ்.

விஜயை தவிர்த்து ஒரு சிறு நடிகர் நடித்திருந்தால் இந்த படத்தின் நிலை என்ன? ஏன் விஜயகாந்த் என வைத்துக்கொள்வோம். என்னவாகியிருக்கும்? ஒரு சுமாரான கமர்சியல் படம், திரைக்கதையில் கவனம் செலுத்தி இருந்தால், நல்ல படமாய் இருந்திருக்கும் என்பதைத்தவிர கொண்டாட, கிண்டலடிக்க கூட படத்தில் ஏதும் இல்லை.

பிகி : செல்பி புள்ள பாடலுக்கு முந்தைய சீனுக்காவே இந்த படத்தை சுமார் படம் என கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம்.

Monday, September 29, 2014

மெட்ராஸ் - விமர்சனம்

மெட்ராஸ்

பெங்களூரு வந்து கிட்டத்திட்ட ஒரு வருடம் ஆகப்போகிறது. நேற்று இரண்டாம் ஆட்டம்  முடித்துவிட்டு வரும் போது நண்பன் ஒருவனிடம் சென்னை-பெங்களூரு ஓப்பீடு பற்றி பேசிக்கொண்டிருந்தேன். அலுவலகத்தில் எப்போதும் ஓடும் டாப்பிக். தமிழர்கள் அல்லாதவர்களிடம் மெட்ராஸ் குறித்த ஒரு பிம்பம் உண்டு. தமிழ் இல்லன்னா பிழைக்க முடியாத ஒரு ஊர் அது. சென்னை ஹீட்டுப்பா... எனக்கு பெரிதாக ஸ்டீரியோடைப்புகளில் நம்பிக்கை இல்லை என்பதால் சண்டை வராது. சிரித்துக்கொண்டே போய்விடுவேன்.

நேத்து நண்பன் சொல்லிக்கொண்டிருந்தான். இங்கு எல்லாருக்குமே தமிழோ இந்தியோ தெரியுது. பிரச்சனை இல்லாத ஊர்ண்ணே. என் ஆபிசிலும் இதே தான் சொல்வார்கள். சென்னையில் ஹிந்தி பேசி பிழைக்க முடியாது. பெங்களூரில் கன்னடாக்காரர்களை பார்க்கவே முடிவதில்லை. எல்லாம் பெயர்ந்தவர்கள். இங்கே இருந்த மண்ணின் மைந்தர்கள், வீடு நிலம் மூலம் செட்டில் ஆனவர்கள் ஆனாலும் சரி, தங்கள் மொழி சார்ந்த அடையாளத்தை முற்றிலும் துடைத்தெறிந்து விட்டு வாழ்கிறார்கள். சினிமா, இலக்கியம் என எந்தக்கன்னடத்  தொடர்பும் அவர்கள் மொழி அடையாளத்தை உயிர்ப்புடன் வைக்கும் அளவு இல்லை. இந்த தலைமுறையினருக்காவது சற்று வருத்தம் இருக்கிறது. ஒரு இருபதாண்டுகள் கழித்தால், பெங்களூரில் பெங்களூரியன்ஸ் மட்டும் தான் இருப்பார்கள்.

மன்னிக்கவும். மெட்ராஸ் விமர்சனம் இடத்தான் ஆரம்பித்தேன். முன்னுரை கொஞ்சம் லெந்த்தா போச்சு.




சென்னை பல ஊர்களில் வந்து குவிந்த மக்களின் வாழ்வாதாரம். கட்டிடத்தில் பணிபுரியும் கூலிகள் தொடங்கி ஐடியில் ஐடி கார்டோடு திரியும் கூலிகள் வரை. ஆனால், மெட்ராஸ் அது வேறு. மெட்ராஸ், மெட்ராஸ்காரர்களின் ஊர். புளியந்தோப்பு - தலித்துகள் வாழும், அல்லது அவர்கள் வாழ பணிக்கப்பட்ட பகுதி. ஒரு சுவரை மையமாக வைத்து, அதிகாரத்திணிப்பை அடிக்கோடிட்டு காட்டியிருக்கிறார் ரஞ்சித்.

தமிழ் பிரபாவின் விமர்சனத்தை கீழே பகிர்ந்துள்ளேன். வரிக்கு வரி நான் எழுத நினைத்ததையும், மேலும் சில வட சென்னை அத்தெண்டிக் அனுபவத்தையும் அவர் பகிர்ந்துள்ளதால், விடுபட்டவையை மட்டும் நான் சொல்கிறேன்.

தமிழ் பிரபாவின் விமர்சனம் : https://www.facebook.com/prabha.prabakaran/posts/807940465924748

 பொதுவாக எனக்கு கார்த்தியின் முகம் அலர்ஜி. தெலுங்கு பாணி நடிப்பு அவருடையது. இப்படத்திலும் க்ளைமேக்ஸில் ஸ்கூல் பாடம் உட்பட சில இடத்தில் சிரிப்பு வந்தாலும், ஓரளவு சமாளிக்கிற அளவு ஒன்றியிருக்கார். வட சென்னையின் முகத்தை மிக யதார்த்தமான ஒரு கோணத்தில் காட்டியிருக்கிறார் ரஞ்சித். எல்லாருக்கும் இதில் புரிந்தது மேலோட்டமாய் தலித் அரசியல் - அதிகார அடக்குமுறை மட்டும் தான். எனக்குத்தெரிந்து ரஞ்சித் நுட்பமாய் சொன்னவை/ நான் ரசித்தவை :

1. அம்மக்களிடம் பொங்கும் காதலும், கனவுகளும் - அன்பும், அவன் மனைவியும் மோகம் கொள்ளும் இடங்கள் அனைத்துமே காதலின் உச்சம். எளிய மனிதர்களின் காதலை இதைவிடச்சிறப்பாக சொல்லிவிட முடியுமா எனத்தெரியவில்லை. பையனை புட் பால் பிளேயர் (கால்பந்து வீரன் :-) ) ஆக்குவது தொடங்கி எத்தனை கனவுகள்?

2. கலை. நடனக்குழு, புட்பால், கேரம் என விளையாட்டுகள். எல்லா ஏரியாவிலும் இக்குழுக்களில் திறமைமிக்க எத்தனையோ இளைஞர்கள் இருப்பார்கள். இதைப்பெரும்பாலும் வெறும் சீன் பேக் ட்ராப்பாக மட்டுமே நம்மாட்கள் பயன்படுத்தி வந்தார்கள். ரஞ்சித் கதையோட்டத்தில் அதை இணைத்துள்ளார் - முக்கியமாய் நடனம், புட்பால், கானா.

3. அரசியல் எப்போதுமே ஆடு புலி ஆட்டம் தான். புலிகள் ஆடுகளை மோதவிட்டு வழியுமவற்றின் குருதியை நக்கிக்குடிக்கும் ஆட்டம். மேலிருக்கும் புலிகளுக்கு எல்லாருமே ஆடுகள் தான். தலித் அடையாள அரசியலைத் தாண்டி, மாரி - சேது கூட்டணி, மாரியை போட்டுத்தள்ளிவிட்டு விஜி மேலே வருவது, யார் வந்தாலும் சுவர் தன்னிடம் இருக்கவேண்டுமென நினைக்கும் சேது, அதற்கு மேல், கீழே உள்ள நிலைமை தெரிந்தும் கூட்டணி வைக்கும் தலைவர்கள் (எனக்கு விசி-பாமக ஒரு கூட்டணியில் இருந்ததை குத்தியதாக தெரிந்தது) என ஒரு படி கீழே இருப்பவன் ஆடாகத்தான் பாவிக்கப்படுகிறான்.

4. முதலிலேயே புள்ள குட்டிய படிக்க வைங்கடா என யதார்த்தமாக சொல்லும், ஜாலி இளைஞனாக, கொலை செய்து விட்டு பின் அவ்ளோ தானாடா என பினாத்தும் போதும் நன்றாகவே நடித்திருக்கிறார் கார்த்தி.

5. ஜானி பற்றி ஊரே சிலாகித்து விட்டது. தொப்பி எட்த்துக்கிரேன் பாஸூ... ஹேட்ஸ் ஆஃப் ஜானி :)

                      மொத்தமாக வட சென்னையின் கனவுகள், காதல், அவ்விளைஞர்களின் திறமைகள், அவர்கள் வாழ்க்கைப்பாதையென அவர்கள் தேர்ந்தெடுக்கும் வழி, அதன் முன் நிற்கும் வரலாற்றின் நெடிய தொடர் சங்கிலி சவால்கள் போன்றவற்றை ஆவணப்படுத்தியதால் மெட்ராஸ் மிக முக்கியமான படம்.

                 இன்னொரு பக்கம். பரபரக்கிற ஸ்க்ரீன் ப்ளே. அரசியல் சதுரங்கத்தின் சோல்ஜர்-மந்திரி ஆட்டம், மிக யதார்த்தமான ஒரு காதல், அட்டகாசமான சந்தோஷ் நாரயணின் பிண்ணனி, பாடல்கள் என ஒரு பக்கா கமிர்ஷியல் ஹிட். இதற்காக சில ட்ரேட் ஆஃப்களை ரஞ்சித் செய்திருந்தாலும் அது ஓக்கே தான்.

படம் முடிந்தவுடன் என் நண்பனிடம் இதைத்தான் சொன்னேன்

"ஆரண்ய காண்டம் ஒரு கல்ட் க்ளாசிக்காகி விட்டது, மற்றபடி சென்னை இளைஞர் பாத்திரத்தை கதா நாயகனாக கொண்ட படங்களெல்லாம் கமர்சியல், மெட்ராஸ் இரண்டுக்கும் இடையிலான பேலண்ஸ்"

பாரட்டுக்கள் ரஞ்சித், சந்தோஷ் நாராயண், முரளி. லாங்க் வே டு கோ.


Tuesday, September 23, 2014

ஜில் கதை - 4

#ஜில்_கதைகள்

FB link - https://www.facebook.com/SHAN4Luv/posts/862637873749431?notif_t=like

ஜில் சோகமாக தன் காஃபி கப்பையே வெறித்தப்படி அமர்ந்திருந்தாள். சற்று நெருங்கி அமர்ந்து அவள் தோளில் கையைப்போட்டு இடப்புற கண்ணில் வழியலாமா வேண்டாமா என யோசித்துக்கொண்டிருந்த நீரை தட்டி விட்டேன்.

தன் தோளை ஒரு முறை குலுக்கி என் கையை உதறியவள், "இந்தக் கண்ண தொடைக்கலாம்ல" என பொய்யாய் கோபப்பட்டாள்.

"என்னாச்சு ஜில்லு"

"ஒண்ணுமில்ல போ"

"என்னாச்சுன்னு கேக்கறேன்ல சொல்லு"

"பயமாயிருக்கு டா"

"ஏன்"

 மிக லேசாக தன் கருத்தை திருப்பினாள். வளர்பிறையில் நிலவு நாளுக்கு நாள் வளர்வதை பொறுமையோடு அமர்ந்து கவனித்திருக்கிறீர்களா? பதினைந்து நாள் நிகழ்வை இரண்டே நொடியில் நிகழ்த்திக்காட்டினால் ஜில். அவள் கருங்கூந்தல் இரவகன்று மெல்ல முக நிலவு உதயமானது. நிலவின் கண்களில் நீர்.

"ச்சு.... பாரு, கண்ல வெச்சுருக்கற உன் பிரண்டு கரையறா"

முறைத்தாள். அவள் தோழியின் நிறத்தை கிண்டல் செய்யும் போதெல்லாம், "இவர் அப்படியே வெண்ணிலா கலரு"ம்பா. இன்று அதீத மேக்கப்பிலிருந்தாள். அவளது மொச்சைக்கொட்டைகளை சுற்றி இடப்பட்டிருந்த ஐ லைனர் கரைந்து கன்னம் வரை கோடாய் வழிந்திருந்தது. இதிலும் அழகாய்த் தான் இருக்கிறாள். அழகான பெண்களுக்கு எது நிகழ்ந்தாலும், அதை அழகுணர்ச்சி மிக்கதாகவே பிம்பப்படுத்தி விடுகிறது மனது.

"இப்ப என்னாச்சு சொல்லப்போறியா இல்லையா?"

"இது சரிவருமா டா?"

 எனக்குப்புரிந்தது. எங்களைப்பற்றி கேட்கிறாள்.

"தெரியல ஜில்லு.... இப்போதைக்கு ஒரு இருபது லைக் வருது.... ஒரு ரெண்டு ஷேர்... நாலு டிஎம்... நீ உண்மை கேரக்டர்ன்னு வேற நம்புறாங்க... சரி வரும்ன்னு தான் நெனைக்கறேன்.."

"ஒத படுவ... நாயே... நெஜமாவே பயமாயிருக்கு டா...எங்க வீட்ட பத்தி உனக்கு தெரியாது"

"உஷ்ஷ்ஷ்..." அவள் உதட்டை என் முதல் மூன்று விரல்களால் அழுத்தி மூடினேன். நான்காம் விரலால் அவள் முகத்தை என்னை நோக்கி திருப்பினேன். என் முகம் இருந்த நெருக்கத்தை பார்ததும்  அவள் இதழ்கள் தங்களை அனிச்சையாய் ஈரப்படுத்திக்கொண்டன. எனக்கு சிரிப்பு வந்தது. லேசாய் கண்கள் சொருகி மூடினாள்.

"அடச்சீ...சீரியஸா ஒரு டயலாக் ரெடி பண்ணா சட்டுன்னு மூட ம்ம்மூடாக்கற"

"ஹா ஹா...ஷை... நீ இருக்கியே" என்றாள் கண்ணீர் சிதறி விழ சிரித்துக்கொண்டே. பெண்கள் அழுது முடித்துவுடன் குலுங்கிச்சிரிக்கும் காட்சி தான் தாய்மைக்கு அடுத்தபடியாய் மிக அழகானது. அடுத்த முறை உங்கள் காதலி அழுகையில் துடைத்து விடாமல் அவளை சிரிக்க வைக்க முயற்சி செய்யுங்கள் (முடியவில்லை எனில் ஜில்லுக்கு தெரியாமல் என்னை தொடர்பு கொள்ளுங்கள்)

"சரி... இங்க பாரு... இது ஏன் ஆரம்பிச்சு...எதுவரைக்கும் போகும் எதுவுமே எனக்குத் தெரியாது. ஆனா, நீ என்னைய விட்டு விலகணும்ன்னு நீயா நினைக்கற வரைக்கும், இங்க யாரும், யாரும், என்ன உன் கிட்ட இருந்து பிரிக்க மாட்டாங்க, நான் உட்பட"

"நெஜம்மா?"

 நான் ஒரு புன்னகையோடு அவள் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவள் கண்களில் கலவரம் மறைந்து வெட்கம் உதிப்பது தெரிந்தது. பெண்களையும் குழந்தைகளியும் ஏன் ஒப்பிடுகிறார்கள் எனப் புரிந்தது போலிருந்து. ஏன் இப்படி ஒருத்தியிடம் காதலில் விழுந்தேன் என வியப்பாய் இருந்த அதே சமயம், அவளோடு அந்த நொடியில் மீண்டும் காதலில் விழத்தயாராய் இருந்தேன்.

யோசனையை மறைக்க இதழ்களில் புன்னகையை ஒட்ட வைத்துக்கொண்டு நிமிர்ந்தேன். ஜில் அங்கு இல்லை. எதிரில் டேபிள் மின் விளக்கை பிரதிபலித்தபடி காலியாய் இருந்தது.

ஜில் கதைகள் - "நான் அழகா இருக்கேன்னு தான் என்ன காதலிக்கறியா" - 3

https://www.facebook.com/SHAN4Luv/posts/862209690458916

இன்று தாமதமாகத்தான் அலுவலகம் சென்றேன். லிப்டிற்கு வெளியேவே ஜில் நின்றிருந்தாள். கூடவே அவளது தோழி ஒருத்தி. கருப்பாய், பூசினாற் போல் உடம்பு, முடியை தோள் வரை விட்டு கத்தரித்திருந்தாள்.

இருவருக்கும் ஹாய் சொல்லியபடியே உள்ளே செல்ல எத்தனித்தேன். ஜில் தன் இடது கையை நீட்டி, என் இடுப்பை வளைத்து இருந்த இடத்திற்கே தள்ளினாள்.

"வேல இருக்கு ஜில்லு"

"என்ன விட முக்கியமா?"

"சரி, சொல்லு"

"நான் அழகா இருக்கனா?"

"இதுக்குத்தான் நிறுத்தினியா... இந்த உலகத்திலயே...ஏன் ஏலியன்ஸ் எல்லாம் சேத்திக்கூட அழகான பெண் நீ தான்"

"அப்போ அதான் இல்ல"

"எதான்?"

"நான் அழகா இருக்கேன்"

"ஆமா"

"அப்போ, அதுனால தான் என்ன லவ் பண்ற இல்ல?"

"ஏய்... என்னாச்சு உனக்கு, லூசு மாதிரி பேசற... அப்படி பாத்தா எத்தன அழகான பொண்ணுங்க இருக்காங்க.."

"இப்ப தான், நான் தான் இருக்கறதுலயே அழகான பொண்ணுன்ன"

"உஸ்ஸ்... என்னம்மா வேணும் உனக்கிப்ப"

"இவ தான் சொன்னா... நீ என்ன காதலிக்கிறது வெறும் அழகுக்காகத்தானாம்...

அவளை முறைத்தேன்.

"எல்லாமே பார்வைல தான் ஜில்லு... இப்ப நான் உன்ன வர்ணிக்கற அதே மாதிரி இவளையும் காதலோட பாத்தா இவளும் அழகு தான்.."

"எங்க என்ன அசிங்கமாவும்...இவள அழகாவும் வர்ணி பாக்கலாம்"

"ம்ம்ம்... சரி"

மறுபடியும்.. ஜில் தனது தோழியோடு நின்றிருந்தாள். ஜில்லுக்கு சற்று மெலிந்த தேகம். மெலிந்த தேகமுள்ள பெண்களுக்கே உள்ள வெட வெட சரீரம். ஜில் புடவை கட்டினால், ஏதேனும் தலைவர் பிறந்த நாள் அன்று அலங்கரிப்பட்ட கொடிக்கம்பமொன்று நடந்து வருவது போன்றே தோன்றும். முகேஷ் கன்னங்கள், ஓமக்குச்சி நரசிம்மனின் இடை...

"ம்ம்...போதும் போதும்... இவள வர்ணி"

அவள் தோழி என்னையே பார்த்தபடி நின்றிருந்தாள். கூர்மையான லேசாக மையிட்ட கண்கள். கூர் நாசி. அளவெடுத்து செய்வதில் சற்றே அம்மா பாசமாய் இரண்டு கரண்டி அதிகமாய் போட்டது போல உடம்பு. தோள் வரை புரண்ட கூந்தல் அடர் கருப்பு, பினிஷிங்க் டச்சாக லேசாய் சுருண்டிருந்தது. ஒற்றைக் கையை தன் ஸ்கேட்டிங் வித்தை ட்ராக் இடுப்பில் வைத்து இரு விழிகளையும் வலது ஓரம் கொணர்ந்து....

"ஏய் நிறுத்து நிறுத்து..."

"சொல்லு"

"அப்ப நீ அவளையும் ரசிச்சுருக்க.."

"அய்யோ...அதில்ல ஜில்லு..."

"காதலிச்சாத்தான் அவள அழகா வர்ணிக்க முடியும்ன்ன... அப்ப அவளையும் காதலிக்கற..."

"அடப்போங்கடி...."

Thursday, September 18, 2014

ஜில் கதை‬ - 2

https://www.facebook.com/SHAN4Luv/posts/860157000664185

இன்று மதியம் தான் ஜில்லை பார்க்க நேரம் வாய்த்தது. காலையில் இருவருவமே அவரவர் அமேரிக்க ஆன்சைட்டிடம் பொய் சொல்லிக்கொண்டிருந்தோம். மதியம் என் பழைய டீம்மேட் ஒருத்தனை பார்க்க செல்கையில் எதிர்பட்டாள்.


இந்த முறையும் வழியை மறித்தபடியே தான் நின்றாள். அவளை கவனியாயது போல, இயல்பாக எக்ஸ்கியூஸ் மீ சொல்லியபடியே அவள் இடுப்பை தொட்டு இன்னொரு புறம் நகர்த்த பார்த்தேன். கையை தட்டிவிட்டு விட்டு முறைத்தாள். இரு கைகளையும் தனது மணல் முகடுகளுக்கு குறுக்காக கட்டியபடி, இடப்புறமாக சற்றேறக்குறைய 60 டிகிரி கோணத்தில் கீழே பார்த்து முறைத்தாள்.


நான் அவள் முகத்தை என்னை நோக்கி திருப்ப முயன்றேன். பிடிக்கும் போது போக்கு காட்டி பின் வழுக்கும் சாரைப்பாம்பு போல, என்னை ஒரே ஒரு மைக்ரோ வினாடி தனது பார்வையால் தீண்டி விட்டு வலப்பக்கம் திரும்பிக்கொண்டாள். அவள் கூந்தல் மெல்ல என் கைகளின் மேல் உரசி விலகியது. அவற்றை லேசாக இழுத்து, கட்டை விரலுக்கும் ஆட்காட்டி விரலுக்கும் இடையில் உலவவிட்டபடியே மெல்ல தடவினேன்.


உங்களிடம் சொல்லி இருக்கிறேனா? பொதுவாகவே எனக்கு பெண்களிடம் ஈர்ப்பான விஷயம் கூந்தல் தான். புதிதாய் பிறந்த பூனைக்குட்டிக்கு மூன்றாம் வாரம் முளைக்கும் மீசை போல அவ்வளவு மென்மையான முடி ஜில்லுக்கு.. அவள் தலையை கோதி விட்டு முகர்ந்து பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சொர்க்கத்தில் இப்படித்தான் வாசனை அடிக்கும் என மனப்பூர்வமாக நம்பி வந்திருக்கிறேன்.


அடர்த்தியான கருப்பில் லேசான பழுப்பு தூவிய நிறம். அவளிடம் நான் விழுந்ததே அந்த மசுருக்காத்தான் என பல முறை சொல்லியிருக்கிறேன். அவளுக்கு "மயிர்" என்ற வார்த்தை பிடிக்காது. கிடக்கட்டும். என்ன என்றேன். இது F1 ட்ராக்காடா என்றாள் தனது செந்நிற வானவில்லை சுட்டினாள். யாரோ மொழிபெயர்த்து படித்துக்காட்டியிருக்கிறார்கள். தமிழை பொறுமையாய் எழுத்துக்கூட்டி படிக்கும் ஜாதியில்லை அவள்.


சிரித்தபடியே இன்னமும் என்னென்னவோ சொல்லலாமே என்றேன். ஏவாளின் புருவம், மாலை பீடித்த ஆறாம் விநாடி இளம் ஆரஞ்சில் தென்படும் மூன்றாம் பிறை நிலா....


ஸ்ஸ் நிறுத்து என்றாள்.


இதழோரம் புன்னகையை தேக்கியபடி, அவள் விழி முயல்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். கண்ணின் குழிக்குள்ளிருந்து தப்பிக்க வழி தேடுவது போல அவை அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தன. மீண்டும் தலையை குனிந்த படி ஏதோ முணுமுணுத்தாள்.


சிரித்தபடியே யாரேனும் கவனிக்கிறார்களா என சுற்றிலும் லேசாக தலையை திருப்பி, இமையை முழுவதாக கீழிறக்கி மீண்டும் திறக்கையில் விழியை மறுபுறம் கொண்டு சென்று பார்த்தேன். அங்குமிங்குமாக சிலர் அரைப்பார்வையும் முழு கவனத்தையும் என் மீது வைத்துக்கொண்டிருந்தார்கள்.


சட்டென கன்னத்தில் ஏதோ பாதி வெட்டிய ஸ்ட்ராபெரி பழமொன்று உரசினாற் போல் இருந்தது. திரும்பிப்பார்த்தேன், கண்ணுக்கெட்டிய தூரம் வரை கம்பளம் விரிக்கப்பட்ட தரை ஏசியில் விரைத்து கிடந்தது. ஜில்லு தென்படவில்லை.


#ஜில்_கதைகள் ‪#‎ஜில்_கதை_2‬ ‪#‎தொடரும்‬

ஜில் கதைகள் - 1

https://www.facebook.com/SHAN4Luv/posts/859717640708121

இன்று காலை அலுவலக மிஷினில் காபி பிடித்து காலை உணவை முடிக்கலாமென சக்கரை பாக்கெட்டை பிரித்து கோப்பையில் கொட்டிக்கொண்டிருந்தேன். ஜில் திடீரென எங்கிருந்தோ முளைத்து எனக்கும் மெஷினுக்குமான இடைவெளியை விண்வெளியாக்கியடி நின்றாள்.


கண்களில் நிஜக்கோபம். உதடு லேசாக சுழித்திருந்தாள். அடிக்கடி சொல்லியிருக்கிறேன். ஜில்லு உன் கோபம் தான் உன் பாவனைகளிலேயே செக்ஸியானது. அலுவலகத்தில் கோபப்படாதே, முத்தம் கூட தர முடியாமல் என் அவஸ்தை தாளது என்று. பெண்கள் என்றைக்கு என் பேச்சை கேட்டிருக்கிறார்கள். சரி, பொதுப்படுத்த வேண்டாம், ஜில்லு என்றைக்கும் கேட்டதில்லை.


மீண்டும் ஒரு முறை முன் விழுந்த முடியை கோதி, தனது எஃப். ஒன் சர்க்க்யூட் வளைவுகளில் இரு கைகளையும் வைத்து முறைப்பு மாறாமல் நின்றாள். எனக்கு புரிந்தது. கடந்த ஒரு வாரத்தில் எங்கேயோ வைத்து, விரலிடுக்கில் சிகரட்டோடொ, முகமருகே புகை பாவவோ என்னை பார்த்திருக்கிறாள். ரெட் லைட் ஏரியா சென்றால் கூட சரி, சிகரெட் ஆகவே ஆகாது என்றிருக்கிறாள் ஒரு முறை.


"என்ன?"


"என்ன?"


"என்ன, சொல்லு"


"தம் அடிக்கறியா?"


"ம்ம்.."


"தைரியமா...ம்ம்ம்ங்கற"


"ம்ம்ம்..."


"இப்ப எதுக்கு இதெல்லாம்?"


"ம்ம்.."


"இப்ப மரியாதையா காரணம் சொல்லப்போறியா இல்லையா?"


"பெரிசா காரணம் எதுவும் இல்ல, அடிக்காம இருக்க" என்றேன்.


ஒரு நொடி விட்டத்தில் இருந்து தவறி விழுந்த பூனை போல் பார்த்தவள், ஒரு கெட்டவார்த்தையோடு சேர்த்து 'நான் இல்ல' என்பதையும் முணுமுணுத்துவிட்டு, கையிலிருந்த காபிக்கோப்பையை பிடுங்கி குப்பையில் எறிந்து விட்டுப்போனாள்.


சிரித்தபடியே மீண்டும் ஒரு பேப்பர் கப்பை எடுத்து சக்கரை நிரப்ப ஆரம்பித்தேன். அதில் ஏற்கன்வே சர்க்கரை இருந்தது


‪#‎ஜில்_கதைகள்‬ ‪#‎தொடரும்‬

Monday, June 9, 2014

ட்விட்டரை விட்டு பெண்கள் ஓடுவது ஏன் - ட்விட்டர் - பெண்ணியம்?

ட்விட்டருக்கு போய் மாமாங்கம் இருக்கும். மோடி வெற்றி குறித்த அலசல் கட்டுரை ஆரம்பித்த இடத்திலேயே நிற்கிறது. போன வாரம் பேஸ்புக்கில் சோனியா அக்காவோடு லேசாக வழக்கம் போல சண்டை போட்டிருந்தேன். எதிர்வினை ஆற்றுபவர்களை பொதுவாக திட்டுவதற்கு. அவர்கள் இன்று ஒரு சுட்டியை பகிர்ந்திருந்ததை பார்க்க முடிந்தது "இப்ப என்ன என்ன செய்ய சொல்ற" என தம்பி மாதவன் ஸ்லாங்கில்.  அவசர அவசரமாய் இதை எழுதுகிறேன். படிக்கவும், வேலையும் தலைக்கு மேல் கிடக்கிறது.

ட்விட்டரில் அஜித் - விஜய், ராஜா - ரகுமான், நீயா நானா டாபிக்குகளோடு பெண்ணியம் குறித்த சண்டையும் பேமஸ். /// பெரும்பாலும் இது போல் இணையவெளியில் பெண்கள்/பெண்ணியம் பற்றி பொருமுபவர்களுக்கு சொல்லெண்ணா பல துயரங்கள் இருக்கும். வீட்டில் பெண்டாட்டியிடம் வாங்கிய விளக்குமாற்றடியின் ஈரம் காய்வதற்குள் "அவன கொல்லாம விடமாட்டேண்டீ" என கவுண்டர் பாய்வாறே, அது போல....  /// - இப்படித்தான் இதை பகடியாய் எழுதலாம் என துவங்கினேன். எரிச்சலாய் இருக்கிறது. என்னோடு பேசும் பல பெண்கள் என்னிடம் சொல்லும் ஒரே விஷயம் இது தான். எங்களுக்கு எல்லோரிடமும் எல்லாவற்றையும் உன்னிடம் பேசுவது போலவே பேசிவிட வேண்டும் என்று ஆசை தான். ஆனால், என்ன செய்ய. அவர்கள் ஆண்களாயிற்றே.

ஏன் நான் ஆணில்லையா? என்பேன். "ம்ஹூம்...சொல்லப்போனால் அவர்கள் தான் ஆண்களில்லை" என்பார்கள். நேற்றும் சேர்த்து இந்த பிரச்சனை எப்படி தொடங்குகிறது என்று பார்ப்போம். பெரும்பாலும் இது போல இவர்களின் வெறிக்கு இலக்காவது சோனியா (@raajakumaari) தான் என்பதால், நான்கைந்து வருட ட்விட்டர் குப்பை கொட்டிய அனுபவத்தில் சொல்கிறேன். இது முழுக்க முழுக்க குழு மனப்பான்மையால் வருவது.

நான் ஒரு ஜாதி வெறி பிடித்த கவுண்டனை திட்டுகிறேன் என வைத்துக்கொள்வோம். கவுண்டன் என தன்னை எண்ணும் ஒவ்வொருத்தனும் சம்மந்தமே இல்லாமல் என் மேல் பாய்வார்கள். அதே தான் இங்கும் பிரச்சனை. ஒரு குறிப்பிட்ட செயலை செய்யும் ஆண்கள் மேல் குறிப்பிட்டு போடப்படும் ட்வீட்டோ ஸ்டேட்டஸோ, சிலரால் தனக்கானதாக கருதப்பட்டு அதனால் வன்மம் வளர்ந்து, குழு மனப்பான்மை அதை ஊதி விட்டு.... உஸ்ஸ்...

இது சம்மந்தப்பட்ட சில பல ட்வீட்டுகளை தேடிப்பார்ட்ட போது கடும் ஆயாசம் தான் ஏற்பட்டது. உலக அரசியல், இஸ்ரேலிய போர் நிறுத்தம் எல்லாம் பேசி விட்டு, எதிர்வினை என வரும் போது தனிமனித தாக்குதலை எடுப்பதில் தமிழர்கள் கில்லாடிகள். ராஜா, ரகுமான் ஹெட்வெயிட் என தொடங்குவது , "இவ என்ன பெரிய இவளா" "இத சொல்ல இவ யாரு" என நீள்கிறது.

என்னுடைய தோழிகள் பெரும்பாலும் டாம்பாய்க்கள். ஒரு முறை பீச்சில் நானும் என் தோழி ஒருத்தியும் நடந்து செல்கையில் நான்கு பேர் இருந்த கும்பலில் ஒருத்தன் என் தோழியின் மாரை பார்த்து பால் குடித்தால் நன்றாய் இருக்கும் என்றான். நான் செயல்பட ஆரம்ப்பிப்பதற்குள் அவள் ரிடார்ட் என்ன தெரியுமா? "உங்கம்மா கிட்ட நின்னு போச்சா?" என பரிதாபமய் உதடு குவித்து கேட்டுவிட்டு சகஜமாகி என் தோளில் கை போட்டு என்னோடு வேறேதோ பேசிக்கொண்டு நடந்து விட்டாள்.

எத்தனை பெண்களை இப்படி இருக்க வைக்க முடியும்? தமிழ் இணையவெளி என்றாலே என்னால் பெண்களை ட்விட்டரில் சேருங்கள் என சொல்ல முடியவில்லை. கெட்ட வார்த்தைகள் பிரச்சனை இல்ல. என் தோழிகள் அனைவரிடமும் நான் ஆண்களோடும் பேசும் அதே வார்த்தைகள் தான். கேனக்கூதி உட்பட. பிரச்சனை தனி மனித தாக்குதல் தான். மிக்சர் தின்னுதல் எனத்தொடங்கும். இங்கே பேசுபவர்கள் கணவர்கள் எல்லாம் மிக்சர் தின்கிறார்களாம். சரி, இப்போது உங்கள் மனைவி, நீங்களிங்கே டைப்புகையில் யாரோடு பக்கோடா கொறிக்கிறாள் என்ற கேள்வியை தொண்டையோடு முழுங்கி விட்டு, கடக்க வேண்டி இருக்கிறது.

இங்கு பேசிக்கொண்டிருந்த பெண்கள் ஒதுங்கிவிட்டார்கள் அல்லது தங்கள் வட்டத்தை சுருக்கிக்கொண்டு விட்டார்கள். ஆக எரிச்சலாய் இருக்கிறது. அவர்கள் பேசுவது சுத்த அபத்தம் என உங்களுக்கு தோன்றினால் கூட அதை கருத்து கொண்டு எதிர்கொள்ள முடியாதா ஐயா? என்னவோ போங்க :-(  ஆனால் ஒன்று புரிகிறது. நீங்கள் எல்லாம் ஏன் உங்கள் மனைவி தங்கை தோழிகளை தமிழ் ட்விட்டருலகில் நுழைய விடவில்லை என. இணையத்துக்கான முகமூடிகள் விதவிதமான டிசைனிலானவை.

தொடர்புடைய பதிவுகள் :

தோழர் மே 17 உமரின் ட்விட்லாங்கர் : http://t.co/Yc3KOzluwW

குப்பை : Bullying - வார்த்தை வன்புணர்ச்சி


http://www.koothaadi.in/2013/01/blog-post_8.html

http://www.koothaadi.in/2013/02/blog-post_1259.html

Sunday, February 9, 2014

வெறுமையான இரவு

உறக்கமற்ற இந்த இரவை கடப்பது

அத்தனை சுலபமாய் இருப்பதில்லை

அவசர சிகிச்சை பிரிவில் நண்பனை சேர்த்து விட்டு

சிகரெட் புகையும் விரல்களோடு விழித்துக்கிடந்தது போலவோ

காதலில் விழுந்து திளைத்திருந்த நாட்களில்

அலைபேசியோடு மோகித்து கிடந்தது போலவோ

இருப்பதில்லை

வாதை நிறைந்த நிராகரிப்பை தாங்கிக்கொண்டு

செய்ய ஏதுமற்று வெறுமையாய் தூக்கத்தை எதிர் நோக்கி காத்திருக்கும்

இந்த இரவு.

எல்லோரும் உறங்குகிறார்கள் என்ற நினைவே வாதை தருகிறது.

இல்லை எங்கோ யாரோ விழித்திருப்பார்கள், வெறுமையோடு, வாதையோடு.

Friday, January 24, 2014

நாம் ஏன் வாசிப்பதில்லை?

                                  

               அகில உலக தமிழ் பெஸ்ட் செல்லரான என் புக் ஒரு காப்பி கூட விற்கவில்லை. நான் புத்தகமே போடவில்லை என்று அதற்கு ஒரு மொன்னையான சாக்கு சொல்கிறார்கள். ச்சே.... இப்படியெல்லாம் தமிழ் எழுத்தாளர்கள் புலம்பித்தீர்க்க என்ன காரணம்? பொதுவாக நாம் ஏன் வாசிப்பதில்லை? அதிலும் குறிப்பாக தமிழ் இலக்கியம் எனில் அலறி அடித்து பின்னங்கால் புட்டத்தில் பட ஏன் மக்கள் தெறித்து ஓடுகிறார்கள்?

                                  தமிழனை சிந்திக்க விடாமல் மொன்னையான கத்தி ஆக்கியதற்கு பெரும்பாலும் "இணைய மொன்னைகள்" சினிமாவின் அதிலும் குறிப்பாக மசாலா சினிமாவின் பக்கம் கையை நீட்டுவர். ஓரளவு உண்மை தான் எனினும் முழுக்க முழுக்க இது உண்மையல்ல. இது மட்டுமே தமிழக மக்கள் சிந்திக்க மறந்ததற்கு காரணியல்ல.

பொதுவாகவே நாம் மகா சோம்பேறிகள். நமக்கு இன்பம் உடனடியாய் கிடைக்க வேண்டும். இதற்கான பல சான்றுகளை என்னால் தர முடியும்.  நமக்கு ஏன் ஹாக்கியை விட, கால்பந்தை விட க்ரிக்கெட்டின் மீது ஆர்வம் அதிகம் தெரியுமா? சடசடவென விழும் பவுண்டரிகள் தான் முக்கிய காரணம். ஒரு கோல் போடுற வரைக்கும் எவன்யா உட்கார்ந்து பார்ப்பான் புட்பாலை?  20-20யின் பெரிய வெற்றிக்கு இதான் காரணம். ஓவருக்கு இரண்டு பவுண்டரியாவது நிச்சயம். எப்போது பரபரப்பிலேயே இன்பத்திலேயே இருக்கலாம்.

இன்னொரு விஷயம் சொல்லவா? உலகிலேயே மிகக்குறைந்த "செக்ஸ் பொஷிஷன்களை" மட்டும் தனது வாழ் நாளில் ட்ரை செய்பவர்கள் இந்தியர்கள் தானாம். எவ்வளவு சோம்பேறிகள் பார்த்தீர்களா நாம்? ஏனய்யா செக்ஸுக்கு கூட உங்களால் கொஞ்சம் மெனக்கெட முடியாதா?

சரி, இன்னமும் விரிவாய் பேசுவோம். நமது மக்கள் தொகையில் நிறைய ஏழைகள். அடுத்த வேளை சோற்றுக்கு உழைப்பவர்கள். எப்போதுமே உடம்பால் அதீதமாக உழைப்பவர்களின் மூளை சோர்ந்து யோசிக்கும் திறன் குறைதல் இயல்பு. இவர்களை குறிவைத்து நாம் இலக்கியம் படைப்பதில்லை. இவர்கள் கதை மாந்தர்கள் எனினும் இது இவர்களுக்கான புத்தகமல்ல ;-)

 நாம் உண்மையிலேயே Concentrate செய்ய வேண்டியது வளர்ந்து வரும் தலைமுறையினரின் மீது தான். இங்கே பிரச்சனைகள் நாம் குழந்தைகளை செக்கு மாடு போல வளர்ப்பது தான். நாமக்கல் பண்ணைகளிலும் சாரி பள்ளிகளிலும் பின் ஏதோ ஒரு உப்புமா பொறியியல் கல்லூரியிலும் பயிலும் மாணவனுக்கு இலக்கிய பரிச்சயம் அல்லது பொதுவாக வாசிப்பு பரிச்சயம் ஏற்படும் வாய்ப்பு மிகக்குறைவு.

எனக்கு இவ்விடத்தில் ஒரு நீண்ட நாள் சந்தேகம் மீண்டும் வெளிப்படுகிறது.  இலக்கியம்ன்னா என்னா சார்? "சிவகாமி தன் சபதத்தை முடித்துக்கொள்வது" ஏன் இலக்கியத்தில் சேராமல் போய் விடுகிறது. வாசகனிட்ம் உழைப்பை கோரி நிற்பது தான் இலக்கியம் எனில் அமியையும், கி.ராவையும் நாம் புறந்தள்ளி விடமுடியுமா?   சரி, வரலாற்றை விடுந்து சமகால வாழ்வை, மனிதர்களை (அதிலும் சிலர் விளிம்பு நிலை மனிதர்களை) பற்றி பேசினால் தான் இலக்கியமா? எனில் இன்றைய சம காலம் நாளைய வரலாறு ஆயிற்றே???  பொன்னியின் செல்வன் இலக்கியமில்லை எனில் அந்தமான் நாயக்கரும் இலக்கியம் இல்லை தானே?

 ஏதோ ஒரு உணர்வை நமக்கு ஊட்டும், வாழ்கையை பல்வேறு புதிய பரிணாமங்களின் மூலம் அலச்செய்யும் எல்லா புத்தகங்களுமே முக்கியமானவை தான் (இனி இலக்கியம் வேண்டாம் புத்தகமென்றே இருக்கட்டும்).  எழுத்தாளர்கள் தான் புத்தகங்களை வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதை நான் கடுமையாக மறுக்கிறேன். அவர்கள் அதைச்செய்தால் அதில் ஒன்றும் தவறில்லை. ஆனால், அவர்களால் மட்டுமே ஆகக்கூடிய காரியமே அல்ல அது.  வாசகர்களால் மட்டுமே ஓரு புத்தகத்தை பரவச்செய்ய முடியும்.

ஆனால், துரதிஷ்ட்டவசமாக, நமக்கு ஒரு ஒவ்வாமை இருக்கிறது. இலக்கியம் அல்லது பொதுவாக நிறைய வாசிக்கத்தொடங்கியவுடன் ஒரு மமதை வருகிறது. நாம் நம்மை விட நிறைய வாசிப்பவர்களிடம் பழகத்தொடங்குகிறோம். வாசிப்பு குறைந்த நம்முடைய உறவினர், நண்பர்களுக்கு அது வேறு ஏதோ அறிவாளி உலகமப்பா என்ற பிம்பத்தை நாம் தான் ஏற்படுத்துகிறோம். ஒரு வகையில் நாம் அதனை மிகவும் நேசிக்கவும் செய்கிறோம். அங்கே அவர் சொன்னார், இங்கே இவர் சொன்னார்... என கோட்டு போடாமல் ஒரு கோபியை வாழ்வது யாருக்குத்தான் கசக்கும்??

நான் இதுவரை சந்தித்த பலரும் வாசிப்பை அவர்களுக்கு நெருக்கமானவர்களிடம் திணிப்பதே இல்லை (கவனிக்க - அறிமுகம் அல்ல).  இங்கே சில பெயர்களை குறிப்பிட எண்ணி பின் கைவிடுகிறேன். நாம் பார்த்த சினிமாவையோ, பாடலையோ போல புத்தகத்தை வாசகர்கள் அல்லாதவர்களிடம் நாம் பகிர்வதில்லை. பெரும்பாலானவர்கள் சொல்லும் காரணம் அவ்வளவு உழைப்பை தர யாரும் தயாராயில்லை.

 திருப்பூர் புத்தக கண்காட்சியில் வாங்கிய நான் படித்து முடித்த புத்தகங்கள் யாரிடம் இருக்கின்றன என்றே தெரியவில்லை. எல்லாம் நானே வலிய திணித்து "படிச்சுட்டு குடுங்க" என்று கொடுத்தவை. வாசிப்பிற்கு புதியவர்களை இழுப்பது உண்மையாகவே சள்ளை பிடித்த வேலை. சிலருக்கு "அனல் காற்று".. சிலருக்கு "சுஜாதா - சொர்கத்தீவு, என் இனிய இயந்திரா" சிலருக்கு "பொன்னியின் செல்வன்" சிலருக்கு "ராஜேஷ்குமார் - பிகேபி" சிலருக்கு கி.ரா/ சிலருக்கு நேரடி வரலாறு, அரசியல் என ஒவ்வொருவருக்கான வாசிப்புத்தூண்டில் அவர்களுக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டதாக இருக்கும். இதில் மிகச்சில வெற்றிகள், நிறைய நிறைய தோல்விகளுமே எனக்கு கிடைத்துள்ளன.

ஆனாலும், முடிந்தவரை புத்தகங்களை தேடித்தேடி வாசிக்காத என் நண்பர்களிடமே கொடுக்கிறேன். கிட்டத்திட்டா மாஃபியாவுக்கு ஆள் சேர்த்தல் தான். ஆனால், மாஃபியாவுக்கு ஆள் சேரவேண்டுமல்லவா? ஆள் சேர்த்தல் கேவலமில்லையா என்ற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை.
எனக்கு தெரிந்த 100 பேரில் 60 பேர் வாசிப்பதேயில்லை. 20 பேர் நியூஸ் பேப்பர்/இணையம் மட்டும். 13 இந்திய-ஆங்கில பிக்ஷன்ஸ். மீதி உள்ளவர்கள் தான் ஜே.கே.ரவுலிங்க் முதல் ஜெயகாந்தன் வரை கலந்து கட்டி வாசிப்பவர்கள்.  நமது கடைசி காலத்திற்குள் முதல் வட்டத்தினரை கொஞ்சமாவது வாசிக்க வைத்துவிட்டால் போதும். "ருசி கண்ட கிழட்டுப்பூனை தன்னால் முடியாவிட்டாலும் தன் குட்டிகளுக்கு ருசியை காட்டி விடும்".

--  Business oritented/ Academic oriented எழுத்துக்களை  சிலாகித்தும், இலக்கியம் - பிக்ஷன் எல்லாம் குப்பை, இங்க்க்லீஷ் படிச்சாவாது வக்காபுலரி வளரும் (இது சரி எனினும், இது மிகக்கேவலமான நோக்கம் என்பது எனது துணிபு. Vocabulary should be a by-product) என்றும் இன்று கூறிய ஒருவரிடம் ஏன் நாம் வாசிக்கவில்லை என்ற வினா எழ...அவருக்கு சொன்ன பதில் பதிவாக.

கொசுறு - தோழிக்கு (அந்த ஒருவர் - நாம ஆம்பளைங்க கிட்ட எப்ப பாஸ் பேசினோம்) அராத்து தெரியும். அவர் போட்ட டீசர் நல்ல ஓப்பனிங்க் தானே என்றாள். சரி ட்ஹான், ட்வீட்ஸ் எல்லாம் மக்களிடம் இதை எடுத்து செல்லும். ஆனால் பஞ்ச் மட்டுமே வாசிப்பு அல்ல. அது மீண்டும் நம்மை சோம்பேறி தான் ஆக்கும். ஆனா, ஓப்பனிங்குக்கு ஓக்கேன்னேன். அவர் அந்த பார்ல அராஜகம் ஆயிரத்துக்கு பதிலா தற்கொலை குறுங்கதைகள குடுத்து படிக்க சொல்லி இருக்கணும்... :-))))



Friday, January 10, 2014

ஜில்லா ஜில்லா ஜில்லா!

ஜில்லா இயக்குனர் வேலாயுதத்துல அசிஸ்டென்ட்டு. சைடு கேப்புல விஜய் அண்ணன்ட்ட கத சொல்லி ஓக்கே ஆனது தான் ஜில்லா. கொஞ்சம் ரீவைண்ட் பண்ணி அந்த சீனுக்கு போவோம்.



விஜய் சேரில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருக்காரு. எதிர்ல நம்ம டைரக்ட்டரு.

டை : "அண்ணே ஓப்பன் பண்ணோம்ன்னா"

விஜய் : "பைட் இருக்குல்ல"

டை : "அண்ணே.. நீங்க அப்ப சின்ன பையன்"

விஜய் : "அப்ப சின்ன பைட்டா வைய்யு"

டை : "ண்ணே... கேளுங்க... உங்க அப்பா வேல பாக்கற வீடு ஒரு தாதாவோடது.. உங்க அப்பா அவருக்கு கார் ஓட்டிட்டு போகும் போது கூட டிக்கில ஏறி போறீங்க... அப்ப பாதி வழில வர வில்லன் க்ரூப்பு  கர்பமா இருக்கற அந்த பெரிய மனுஷன் வைஃப..."

விஜய் : "வைஃப்ப..."

டை : "கொல்லப் பாக்குறாங்கன்னு சொல்ல வந்தேன்ணே"

விஜய் :"இந்த இடத்தல கார விட்டு எறங்காமலே ஒரு பைட்டு ஓக்கேயா?"

டை : (மனசுக்குள் "உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்") ண்ணே நீங்க சின்னப்பையன்ணே... கேளுங்க.. அப்ப உங்க அப்பா இறந்துடுறாரு... அந்த பெரிய மனுஷன் உங்கள தத்து எடுத்துக்கறாரு..."

விஜய் : "இங்க நான் அழுகணுமா??"

டை : (அதெல்லாம் ஜனங்க செய்வாங்க...)  அடுத்து நீங்க வளர்ரீங்க... ஓப்பனிங் பைட்டு...  ஒரு ரவுடிய பிண்றீங்க"

விஜய் தலைவா ஸ்டைலில் இரண்டு கையையும் கோர்த்து மூக்கில் விரலை வைத்து ம்ம் என்கிறார். "அந்த பெரிய மனுஷன் கேரக்டர் மோகன்லால் பிக்ஸ் பண்ணிக்கங்க.. மங்காத்தா ஸ்டைல்ல கொஞ்சம் நெகட்டீவ் ரோல்.. டையலாக் எதாச்சும்"

டை : "இந்தா இப்ப வெச்சுருவோம்.. இப்ப உங்கள ஒருத்தன் நல்லவன்னு சொல்ல.. நீங்க தப்பு பண்ணணும்.. ஆனா அத நான் தான் பண்ணுவேன்னு சொல்றீங்க... இப்ப ஓப்பனிங்க் சாங்க்... மாஸா.. "

வி : "மூசிக் இமான் போட்ருங்க"

டை : "அடுத்த சீன்ல காஜல் இன்ட்ரோ.. உங்கப்பா போலீஸ கொன்னதுனால உங்களுக்கு போலீச புடிக்காது... "

வி : "எங்கப்பா செத்துட்டாரா?"

எஸ்.ஏ.சி சைடிலிருந்து கணைக்கிறார்.

டை : "அவர் எங்க (முணுமுணுப்பு).. பர்ஸ்ட்டு சீனே அதான சார்.. இப்ப காஜல் ரோட்டுல ஒரு போலீச அடிக்கற பாத்து உங்களுக்கு லவ் வந்துருது.."

விஜய் : "இப்ப ஒரு சாங்கு..."

டை: " கொஞ்சம் போகட்டுமே... இன்ட்ரோ பாட்டுக்கு தம்மடிக்க போனவங்களே இன்னும் உள்ள வரல.. அடுத்து வீட்டுல அம்மா, மோகன்லால்ல காட்டுறீங்க.. இப்ப நீங்க உங்க தம்பி தங்கச்சி எல்லாம்.."

வி "தம்பி தங்கச்சி.."

டை : " மோகன்லால் பசங்க... போய் பொண்ணு கேக்க காஜல் வீட்டுக்கு போறீங்க.. இங்க ஒரு ட்விஸ்ட்டு.. ஆடியன்ஸ் எதிர்பாக்காத மாதிரி.."

விஜய் எஸ்.ஏ.சியை திரும்பி பார்த்து சிரிக்கிறார்.

டை : "காஜல் போலீஸ்... இப்போ கட் பண்ணா.. சிட்டிக்கு புதுசா வர கமிஷனர் உங்கப்பா அதாவது மோகன்லால கூட்டிட்டு போய் நடு ரோட்ல வெச்சு அவமானப்படுத்தறார்.. நீங்க கோபப்பட்டு அவர் கைய வெட்டீர்றீங்க... இப்ப ஒரு ட்விஸ்ட்டு"

விஜய் : "அந்த கமிஷ்னர் பொண்ணு தான் காஜல் கரெக்ட்டா?"

டை : (மண்ணாங்கட்டி) மோகன்லால் உங்கள போலீஸ் ஆக சொல்றாரு. தப்பு பண்றவனே போலீஸா இருந்துட்டா? " ஃபீல் பண்ணி சிரிக்கிறார் டை.

விஜய் : "அந்த இந்த பொங்கல் நமக்கு..."

டை " நீங்க போலீஸ் ஆனவுடனே... யாரும் மொகன்லால் ஆளுங்கள தடுக்க கூடாதுன்னு தடை போடுறீங்க... இப்ப ஒரு பிரச்சனைல மோகன்லால் ஆளுங்க பண்ண அலப்பறைல ஒரு கேஸ் குடோன் வெடிச்சுடுது...  அந்த ஸ்பாட்டுக்கு போற நீங்க... அங்க எரிஞ்சு கெடக்கற சடலங்கள பாத்து ரைஸ் ஆவறீங்க... ஆஸ்பத்ரில ஒரு அஞ்சு நிமிஷ சென்டிமென்ட் சீன்... இப்ப சிங்கம் ல அனுஷ்கா பீச்சுல வெச்சு கேக்குறா மாதிரி காஜல் உங்கள சீண்டி விடுறாங்க..."

விஜய் வெட்கப்படுகிறார் ..

டை : "அட அந்த சீண்டுறது இல்லங்க...  அடுத்து நீங்க ஸ்டேஷன் போறீங்க அங்க உக்காந்து சிவனோட ஆளுங்க.."

வி : "சிவன்??"

டை "மோகன்லால். அவரோட ஆளுங்க ஒருத்தன வெட்டி கொன்னுட அந்த பொண்ணு கம்ப்ளெய்ன் குடுக்குது...   நீங்க கேக்க மாட்டேங்கற தைரியத்துல  அவனுங்க அந்த பொண்ண அடிக்கறாங்க.. அப்ப நீங்க இத்தன நாள் போடாத காக்கி ட்ரஸ்ஸ போட்டுட்டு வந்து பின்றீங்க... ரெண்டு மூணு ப்ரீஸ் வெக்கறோம்... புருஷன் செத்தத கூட மறந்துட்டு அந்த பொண்ணு.."

வி : "அந்த பொண்ணு..."

டை : (அடேய்ய்..) உங்கள நன்றியோட பாக்குது"

வி: " நன்றியா"

டை : "(பின்ன என்ன பன்றியா?) இப்ப நீங்க போய் மோகன்லால திருத்தறதா சவால் விட்டுட்டு வரீங்க.. இப்ப ஃபேட் அவுட் பண்ணி இன்ட்ரவல் போடுறோம்.."

வெளியில் அய்யய்யோன்னு ஒரு சத்தம் கேட்க ஓடிப்போய் பார்க்கின்றனர்... டீ கொணர்ந்த பையன் காதில் ரத்தம் ஒழுக விழுந்து கெடக்கறான்...

எஸ்.ஏ.சி துள்ளிக்குதிக்கிறார். " நல்ல சகுனம். இத நாம பண்றோம்... "

டை : "மீதி கத"

எஸ் : " அட அதெல்லாம் என்னைக்குய்யா இவனுங்க பாக்குறானுங்க... பேரு தமிழ் நாடுன்னு வெச்சுக்க... "எங்கிட்ட ஒரு தடவ வாங்குனா தமிழ் நாட்டுலையே இருக்க மாட்டான்"ந்னு ஒரு பஞ்ச்ச்சு செரியா??"

டை : 'அம்மா நம்மள தமிழ் நாட்டுல இருக்க விட மாட்டாங்க"

எஸ் " அட.. சரி பாத்துக்கலாம். அப்படியே இந்த மங்காத்தா நடிச்சாங்கள்ள... சம்பத்து, அந்த பையன் எல்லாத்தையும் சேத்துக்க...  அதான் இப்ப எல்லாத்துக்கும் பிடிக்குது..."

கலைகிறார்கள்.

Thursday, January 2, 2014

"பிஃப்டி ஷேட்ஸ் ஆஃப் க்ரே படிச்சுட்டீங்களா ண்ணா"

அந்த பெண்ணுக்கு பதிமூன்று வயது தானிருக்கும். நான் கடைசியாய் அவளை பார்த்த போது தொட்டிலில் இருந்தாள். நீண்ட நாட்கள் க்அழித்து அவளை பார்க்க நேர்ந்தது. பயங்கரமாய் பேசுகிறாள்.

ஜர்னலிஸ்ட் ஆக வேண்டும் என்கிறாள். அவளுக்கு ஓர் அற்புதமான ஆசிரியை அமைந்திருப்பார்கள் போல. நூல்கள் குறித்து அவ்வளவு பேசுகிறாள்.

"பிஃப்டி ஷேட்ஸ் ஆஃப் க்ரே படிச்சுட்டீங்களா ண்ணா"

"இல்லம்மா... இனிமே தான்"

"இந்தியன் ஆத்தர்ஸ் படிப்பீங்களா? டூ ஸ்டேட்ஸ் சேத்தன் பகத்??"

"ம்ம்ம்..."

"எனக்கதுல அந்த பொண்ணு கேரக்ட்டர் தான் சுத்தமா பிடிக்கல"

"ஏன்ம்மா"

"ஐயர் பொண்ணா இருந்துட்டு பீர் குடிக்கறா.."

 நான் இதற்குள் பெண்ணிய விசரணைகள், சமூக விழுமியங்கள், இந்து ஞான மரபெல்லாம் எடுத்துக்கொண்டு வைப்சைட் பேனரில் உள்ள ஜெமோ போல் முகத்தை வைத்துக்கொண்டு பேச ஆரம்பித்தேன்.

"பொண்ணுங்க குடிக்கறது தப்புன்னு எல்லாம் பிரிக்க..."

அடிச்சா பாருங்க சிக்ஸர்.

"அதென்ன பீர் குடுக்கறது... தொப்ப போடும்ல... வைன் குடிக்க வேண்டியது தான..யாரு வேண்டாம்ன்னா.."

கொஞ்சம் வெட்கமாக கூட இருந்தது. ரைட்டர் நேற்று போட்ட ட்வீட் "வாசிப்பின் போதாமையை உணரும் தருணங்கள் அவமானகரமானவை" கண்முன் நிழலாடியது அத்தருணம்.

ஹ்ம்ம்ம்...  எப்படியாச்சும் தமிழ் இலக்கிய உலகிற்குள் இழுத்து வந்துவிட வேண்டும். கைக்காச போட்டோ இல்ல கடன் வாங்கியோ "பொன்னியின் செல்வன்" (இது இலக்கியமான்னு கேக்காதீக..ஸ்டார்ட்டர்)  வாங்கி தரேன் பாப்பாட்ட குடுத்துடு